ஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்- Spiritual informations and stories

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#1
அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்
1. கஜலட்சுமி:-

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#2
2. ஆதிலட்சுமி:-

ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள். குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின் எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும் சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம் அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#3
3. சந்தானலட்சுமி:-

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில் பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள் அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில் நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான லட்சுமியின் திருஅம்சமாகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#4
4. தனலட்சுமி:-

மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள் அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு, தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும் அணிந்தவள் தனலட்சுமி.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#5
5. தானியலட்சுமி:-

எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப் போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர், வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில் சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும் பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#6
6. விஜயலட்சுமி:-

உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம் தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம் பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம் இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின் இயல்பு ஆகும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#7
7. வீரலட்சுமி:-

எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில் ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில் அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில் வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#8
8. மஹாலட்சுமி:-

தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில் பேரானந்தம் பெறுவோம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#9
சிவலிங்கத்தின் அர்த்தம்....
ஒவ்வரு குருவும் ஒவ்வரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள் .

நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில் இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது .அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம் .இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .

எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாகபிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன் ,நடுபக்கம் விஷ்ணு ,அடிப்பக்கம் பிரம்மா .என்று சிவலிங்கத்தை கூறுவர் .அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புபகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம் . உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும் ,வாசியோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம் . அதனால் தான் கபாலம் வலியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது . நன்றாக பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும் ,சிருநாக்கு லிங்கபாகம் போலவும் இருப்பதை காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறமோ அன்று நாம் சிவனாகவே மாறிவிடுவோம் . மற்ற படி ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்றுகூறுவர் .அது தவறு.
contd..​
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
#10
ஆதியும்அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக்கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.
அவ் வடிவங்கள்,
அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது- >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும்-இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை-இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது, உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர்போன்றவை. இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 ) வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள்-மகேசுவர மூர்த்தங்கள் என்றுசொல்லப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே -சிவலிங்கம் எனப்படும்.
"
இலிங்கம்" - என்பதற்கு குறி என்பது பொருள்," குறி " - என்றால் = ஒரு அடையாளம்
ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம் எனப்படும்.
contd..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.