ஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்- Spiritual informations and stories

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
எல்லா தெய்வப் படங்களிலும் பாம்பு இடம் பெற்றிருக்கிறதே.... ஏன்?
நாகாபரணம் என்று இதற்குப் பெயர். தெய்வ அணிகலன்களில் மோதிரம், கங்கணம், ஹாரம்(மாலை), பூணூல் ஆகிய அணிகலன்களில் பாம்பு முத்திரை இடம் பெற வேண்டும் என்று சிற்ப சாஸ்திர இலக்கணம் கூறுகிறது. சிவனுடைய ஆபரணங்களில் முக்கியமானது நாகம். ஜடாமுடி, கழுத்து, இடுப்பு என உடம்பில் நாகங்களையே ஆபரணமாக அவர் அணிந்திருப்பார். நாம் எதையெல்லாம் ஒதுக்குகிறோமோ, அவற்றை தன்னிடம் வைத்துக் கொண்டு அவற்றிற்கும் பாதுகாப்பும் பெருமையும் தந்து அருள்புரிகிறார்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
ஏலத்தில் எடுத்த அம்மன் புடவைகளை பெண்கள் கட்டுவது சரிதானா?

அம்மனுக்கு சாத்திய சந்தனம், பூமாலை ஆகியவற்றை பிரசாதமாக பெற்று உபயோகிப்பது போல புடவையையும் வாங்கி உபயோகிக்கலாம். அதற்காக நாம் செலுத்தும் தொகையும் கோவிலுக்கு சேரும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
திருவுளச்சீட்டை குழந்தைகள் எடுக்கச் சொல்லி பார்ப்பது பலனளிக்குமா?

தெய்வத்தின் திருவுள்ளம் என்ன என்பதை இயல்பாக அறிந்து கொண்டு நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளும் ஒரு விஷயம் தான் திருவுளச்சீட்டு. நாமே எழுதிப் போட்டு எடுத்தால் நமக்கு சாதகமான சீட்டை எடுத்து விட வாய்ப்பு இருப்பதால் அதன் இயல்பு போய் விடும். அதற்காகத் தான் தெய்வத்துக்கு சமமான குழந்தைகளைக் கொண்டு எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
பராமரிப்பு இல்லாத இடிந்த கோவிலில் வழிபாடு செய்யலாமா?

அவசியம் செய்ய வேண்டும். இதை விட புண்ணியம் எதுவும் கிடையாது. இது போன்ற கோவில்களை காணும் ஒவ்வொருவரும், எப்படியாவது முயற்சி செய்து தினமும் ஒரு வேளையாவது தீபம் ஏற்றி பூஜை நடைபெற வழி செய்யுங்கள். இதனால் உங்கள் குலம் தழைக்கும். எல்லா மக்களுக்கும் நன்மை உண்டாகும். வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்படாது. நம் பாதுகாப்பிற்காக ஏற்பட்ட கோவில்கள் கவனிப்பாரற்று கிடக்கும் நிலையில் தான், நம் பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
வீட்டு பூஜை குறிப்புகள்


கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அருமையான வீட்டு பூஜை குறிப்புகளை கீழே பார்க்கலாம்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]1. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

2. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

3. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

4. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாறே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

5. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும் போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

6. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

7. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

8. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

9. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

10. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

11. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உடுத்தலாம்.

12. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

13. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

14. கஷ்டங்கள் நீங்க, நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

15. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

16. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

17. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

18. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.

19. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

20. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
[/FONT]
[/FONT]
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
புத்தரின் புன்னகை


‘நான்’ என்ற அகந்தையை பற்றி புத்தர் தன்னை தரிசிக்க வந்தவரிடம் விளக்கியதை கீழே பார்க்கலாம்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]புத்தரின் புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. அவர் ஒவ்வொரு இடங்களாகச் சென்று தனது போதனைகளை எடுத்துரைத்து மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு முறை அவரைப் பார்ப்பதற்காக ஒருவர் வந்தார். அவரது கைகள் இரண்டும் மலர்களை ஏந்தியிருந்தது. அந்த மலரை புத்தருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வந்திருந்தார்.

அவரைப் பார்த்ததும் புன்னகைத்த புத்தர், ‘கீழே போடு!’ என்றார்.

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எதைக் கீழே போடச் சொல்கிறார்?’ என்று குழம்பிப் போனார். ‘நம்முடைய கையில் இருப்பது மலர்கள்தான். மலரை யாராவது தரையில் வீசச் சொல்வார்களா?. ஒரு வேளை நான் இடது கையிலும் மலர்களை வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி தான் இப்படிச் சொல்கிறாரோ. இடது கையால் ஏந்தி வந்த மலர்களால் அர்ச்சிக்கக் கூடாது என்று நினைக்கிறாரோ, என்னவோ?’ என்று நினைத்தார்.

உடனே இடது கையில் வைத்திருந்த மலர்களை தரையில் எறிந்து விட்டு, வலது கையில் மலர்களுடன் நின்றார். அப்போது அவரைப் பார்த்து ‘கீழே போடு!’ என்றார் புத்தர்.

இப்போது வலது கையில் இருந்த மலரையும் தரையில் வீசிவிட்டு வெறும் கையுடன் நின்றார் அந்த நபர்.

மீண்டும் அதே புன்னகையுடன் ‘கீழே போடு!’ என்றார் புத்தர்.

வந்தவரோ திகைப்புடன், ‘இரண்டு கைகளில் இருந்ததையும் கீழே போட்டு விட்டேன். இனி கீழே போடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்றார்.

புத்தர் கூறினார். ‘நான் கீழே போடச் சொன்னது மலர்களை அல்ல. நீ மலர்களோடு சேர்த்துக் கொண்டு வந்த ‘நான்’ என்ற எண்ணத்தைத் தான். நான் இதைச் செய்தேன். அதைச் செய்தேன் என்று கூறும்போது, அங்கு ‘நான்’ என்ற அகந்தையே பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறது’ என்றார்.
[/FONT]
[/FONT]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டுமா?

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[/FONT]
[FONT=TAUN_Elango_abiramiregular][FONT=taun_elango_abiramiregular]சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.

அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.
[/FONT][/FONT]
[FONT=TAUN_Elango_abiramiregular]
[/FONT]
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,658
Location
chennai
முக்தி தரும் புரட்டாசி சனிக்கிழமை

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆனால் ஏழுமலையான் எனக்கு உகந்த மாதம் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார்.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் இன்று (சனிக்கிழமை) பிறந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதம் என்றாலே ஏடுகுண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா!’ என்ற பக்தி கோஷம் திருப்பதி மலை முழுக்க எதிரொலிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைக்கு இருக்கும் தனித்துவமும் மகத்துவமே இதற்கு காரணமாகும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பது பேருந்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே இருந்தது.

சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் தொடர் வதுதான் வேங்கடவனின் மகிமைக்கு சான்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆனால் ஏழுமலையான் எனக்கு உகந்த மாதம் புரட்சி மாதம்தான் அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

[/FONT][/FONT]
[FONT=TAUN_Elango_abiramiregular][FONT=taun_elango_abiramiregular]அந்த கதை வருமாறு:--[/FONT][/FONT][FONT=TAUN_Elango_abiramiregular][FONT=taun_elango_abiramiregular]

மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது மற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர் களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.

அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.

இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.

அக்கனவில் வெங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்‘ என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.

தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டை மன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.

உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.

அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு மகத்துவம் இருக்கிறது.
[/FONT]
[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.