ஆன்லைனில் அசந்து போகலாம் வாருங்கள்.

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
ஆன்லைனில் அசந்து போகலாம் வாருங்கள்.
ஒரு நிமிடம் கண்களை நன்றாக துடைத்துக்கொள்ளுங்கள்.இப்போது நீங்கள் பார்க்கப்போகும் இணைய விளையாட்டுக்கள் கண்களுக்கு தான் அதிக வேலை கொடுக்கப்போகின்றன. உண்மையில் இந்த விளையாட்டுக்கள், நாம் பார்ப்பது நிஜம் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்து மீண்டும் மீண்டும் உற்று பார்க்க வைத்து கண்களை கசக்கி கொள்ள வைத்து விடும்.

அப்ப*டியே மூளைக்கும் வேலை கொடுத்து யோசிக்க வைக்கும். அதே நேரத்தில் படு ஜாலியாகவும் இருக்கும். அது மட்டும் அல்ல அறிவியலின் அடிப்படையான விஷ*யத்தையும் கற்றுத்தரப்போகின்றன.

அப்படி என்ன விளையாட்டுக்கள் என்று கேட்கிறீர்களா? காட்சிகளை வைத்துக்கொண்டு கண்ணா மூச்சி காட்டும் விளையாட்டுக்கள்.அதாவது கண்ணால் காண்பதும் பொய் என்பார்களே, அதை 100 சதவீதம் உண்மை எனநினைக்க வைப்பவை.

மேலோட்டமாக பார்த்தால் ஒரு தோற்றத்தையும், அதையே உற்றுப்பார்த்தால வேறொரு தோற்றத்தையும் தரக்கூடியவை. தொடர்ந்து உற்றுப்பார்த்தால் இரண்டில் எது நிஜம் என்று மலைக்க வைக்க கூடியவை.

இதற்கு அழகான ஒரு உதாரணத்தை பார்க்கலாம். இந்த படத்திற்கு ஆறு பென்சில் ஏழு உருவம் என்று பெயர் கொடுக்கலாம். காரணம் பென்சிலின் மேல் பகுதியை பார்த்தால் ஏழு இருப்பது போல தோன்றும். அதாவது ஏழு கூர் முனைகளை பார்க்கலாம். ஆனால் அப்படியே கீழே வந்தால் ஆறு தான் இருக்கும்.எத்தனை முறை எண்ணிப்பார்த்தாலும் கீழே ஆறு தான் இருக்கும். ஆனால் மேலே பார்த்தால் ஏழு கூர் முனைகள் இப்போதும் இருக்கும்.

அதெப்படி ஒரே படத்தில் ஆறு பென்சில்கள் ஏழு பென்சிலாகவும் தோன்ற முடியும்? இந்த அதிசயத்திற்கு தான் ஓளியியல் மாயை என்று பெயர்.ஆங்கிலத்தில் ஆப்டிகல் இல்லுஷன் என்று சொல்லப்படுகிறது.

அதாவது உண்மையாக இருப்பதற்கு மாறாக காட்சிரீதியாக வேறொன்றாக உணரப்படும் தோற்றம் என்று சொல்லாம். வேறு விதமாக சொல்வதானால் கண்னுக்கு ஒன்றாகவும் மூளைக்கு வேறாகவும் தோன்றும் காட்சிகள். கண்ணில் தோன்றும் உருவத்தில் உள்ள விவரங்களை மூளை புரிந்து கொள்ளும் விதத்தில் அந்த தோற்றம் வேறொன்றாக தோன்றுகிறது.

இதற்கு எண்ணற்ற சுவாரஸ்யமான உதாரணங்கள் இருக்கின்றன. சில மிகவும் எளிமையானவை. அருகருகே இரண்டு முகங்கள் இருக்கும். ஆனால் உற்றுப்பார்த்தால் அவற்றின் அதுவே பூக்குடுவை இருக்கும். இன்னும் சில மிகவும் சிக்கலானவை. ஒரு படத்தில் வெறும் மரக்கிளைகளாக தோன்றும். கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அந்த கிளைகள் ஒவ்வொரு விலங்காக காட்சி அளிக்கும்.

இதே போல் சிட்டுக்குருவிகள் பறப்பது போல இருக்கும். ஆனால் உற்றுப்பார்த்தால் அதுவே அழகான இளம் பெண்ணாக இருக்கும். இது போன்ற படங்களை அவப்போது பத்திரிகைகளில் பார்த்து ரசித்திருக்கலாம். இது போன்ற மாய தோற்றங்களை இன்டெர்நெட்டில் சலிக்காமால் பார்த்து வியந்து கொண்டே இருக்கலாம். அதற்கென்றே பிரத்யேக இணையதளங்கள் இருக்கின்றன.

ஆப்டிகல் இல்லுஷனிஸ்ட் (Optical Illusions - Eye Tricks - Mind Puzzles ) என்ற இணையதளம் இத்தகைய தோற்றங்களை வரிசையாக பட்டியலிட்டு தருகின்றது. ஒவ்வொரு படத்துடனும் அதற்கான விளக்கமும் இருக்கிறது.

அதே போல பிரைன் பேஷர்ஸ் (BrainBashers : Puzzles and Brain Teasers )தளத்திலும் மாயத்தோற்றம் சார்ந்த விளையாட்டுக்களை பார்க்கலாம்.இந்த தளத்தில் வேறு இணைய விளையாட்டுக்களும் இருக்கின்றன. சீட்வெல் இனையதளமும் (Optical Illusion Puzzles - Cheatwell Games)இத்தகைய விளையாட்டுக்களை வண்ணமயமாக தந்து மலைக்க வைக்கிறது.

ஆர்கமிடிஸ் லேப் (What is an optical illusion? )என்னும் தளத்திற்கு போனால் இந்த விளையாட்டுக்களை ஆடி மகிழ்வதோடு இவற்றின் பின்னே உள்ள அறிவியல் உண்மைக்கான விளக்கத்தையும் தெரிந்து கொள்லலாம். நமது ஐம்புலன்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது கண்கள் தான் என்று துவங்கி அருமையான விளக்கத்தை தருகிறது இந்த தளம்.

கண்ணால் பார்க்கும் காட்சியை புரிந்து கொள்ளும் போது மூளை அவற்றுடன் இரண்டு கூடுதல் மட்டத்தில் தகவலை சேர்த்து கொள்கிறது.நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளுதல் ஆகிய அந்த திறன்களே காட்சியை புரிய வைக்கிறது. சில நேரங்களில் மூளை கண்ணால் பார்க்கப்படும் காட்சியால் ஏமாந்து போய் விடுகிறது. அப்போது தான் ஒளியியல் மாயை உண்டாகிறது. மேலும் விவரமாக புரிந்து கொள்ள இந்த தளத்தின் விரிவான விளக்கத்தை படித்துப்பாருங்கள்.

ஆப்டிகல் பார் கிட்ஸ் (Optics For Kids - Optical Illusions)தளத்திலும் இதற்கான விளக்கத்தை உதாரனங்களோடு படித்துப்பார்க்கலாம். இதனடைப்படையில் சிலவற்றை நீங்களே செய்தும் பார்க்கலாம்
—–
நன்றி சுட்டி விகடன்
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.