ஆபத்தாகும் `சைஸ் ஜீரோ’ உடல்வாகு!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
images1.jpg

எல்லாப் பெண்களுக்குமே எப்போதும் ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், சிலநேரங்களில் எக்குதப்பாக எடை கூடிவிடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. அவர்களது உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும். இப்படி உடல் எடை குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அதிர வைக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்…


இன்றைய பெண்கள், `சைஸ் ஜீரோ’ என்கிற குறைவான எடை அளவில் தங்களது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்போதுதான், தாங்கள் `ஸ்லிம்’ ஆக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கடுமையான டயட்டில் இருக்கிறார்கள். நான் `டயட்’டில் இருக்கிறேன்… என்று சொல்வதைக்கூட இன்றைய பெண்கள் பேஷனாக கருதுகிறார்கள்.


பெரும்பாலும், இன்றைய தலைமுறை இளம்பெண்கள் பேஷன் ஷோக்களில் `கேட் வாக்’ வரும் மாடல் அழகிகளைப் பார்த்துதான் `சைஸ் ஜீரோ’ உடல் எடையைப் பெற முயற்சி செய்கிறார்கள்.


இப்படி ஸ்லிம் உடல்வாகுக்கு ஆசைப்பட்டு கண்டபடி `டயட்’டில் இருக்கப்போய் சில பெண்கள் எலும்பும் தோலுமாக மாறிப்போய் விடுகிறார்கள். இந்த திடீர் உடல் எடை குறைப்பு அவர்களை உடல் ரீதியான பல தொந்தரவுகளுக்கு ஆளாக்குவதுடன் அவர்களது அழகையும் பாழாக்கிவிடுகிறது.


இது ஒருபுறம் என்றால், திருமணத்திற்குப் பிறகு இப்படி எலும்பும் தோலுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கருத்தரிப்பதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. காரணம், மெலிந்த உடல் வாகுடன் கூடிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாக சுரப்பதில்லை என்பதுதான். இதனால் அவர்கள் கருத்தரிப்பதும் சிரமமாகிவிடுகிறது.


அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் ரிச்சர்ட் ஷெர்பான் இதுபற்றி கூறும்போது, “நான் இதுவரையில் சுமார் 2,500 பேருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை செய்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள். என்னுடைய அனுபவத்தில் `சைஸ் ஜீரோ’ உடல்வாகு பெண்கள்தான் கருத்தரிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அதேசமயம், குண்டாக இருப்பவர்கள், அதிலும் அளவுக்கு அதிகமான உடல் எடையில் இருப்பவர்களுக்கு கூட பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை” என்றார் அவர்.


நீங்களும் சைஸ் ஜீரோ உடல்வாகை பெற முயற்சிக்கும் பெண் என்றால், இப்போதே உஷாராகிவிடுங்கள்…!


-Senthilvayal
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
nice information....sumathi sis.....
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#4
உணவை குறைத்து ஸ்லிம்மாகி நோஞ்சான் மாதிரி இருக்கிறத விட சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, நம்ம வீட்டு வேலைகளை நாமே செஞ்சிட்டு ஆரோக்கியமா இருக்கிதே அழகு..
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#5
Lakshmi,

Thanks for giving details about anorexia nervosa.. very useful information..

This is where they become anorexic. They are concerned about their body weight and do any extent to maintain it.. even sticking their hands in the mouth and attempt force vomitting as soon as they eat.
You can read more about anorexia here
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#6
Sure Anitha,
Now a days, many girls are going towards becoming anorexic, but parents think its just she is in diet and also they are proud of being slim. They are ignorant of a very serious problem which will lead to many problems in their girl's life.
 

myworld

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 3, 2011
Messages
3,181
Likes
6,924
Location
Tirunelveli
#7
ya lakshmi.. you are correct..
the real beauty definitely not depends on the size of the person.. It depends only on the healthy and energy level of the person..
diet erukaama nalla saaptu adhukku equala house work or exercise, yoga pannaley pothum. super girla aakidalam.. Parents idha kandippa thannoda pillaikal kitta etuthu sollanum..
parents chinna kuzhanthaikalai mattum illa ipa dietngra perla udambai spoil pannikra periya kuzhanthaikalaiyum compel panni healthy fooda correct timeku sapda vaikanum..

Diet + Exercise = Slim + Many problems

Good food at
correct time + Execrcise = Perfect look + Healthy body
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.