ஆரோக்கியத்தின் பெஸ்ட் ரூட்!

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1

தலைப்பை பார்த்தவுடனே அனைவருக்கும், அதன் காரணம் புரிந்திருக்கும். பீட்ரூட்டின் சிவந்த நிறத்தின் கவர்ச்சிக்காகவே பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அதில் உள்ள சத்துக்குள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பீட்ரூட்டில் இல்லாத சத்துக்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்து சத்துக்களும் உள்ளன.
குறிப்பாக, பீட்ரூட்டில் தண்ணீர், புரோட்டின், கொழுப்பு, தாதுசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பு, வைட்டமின் சி, ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், குளோரின், அயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால், இது விரைவில் ஜீரணமாகி ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், பீட்ரூட்டை வாரத்திற்கு இரண்டு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். கல்லீரல் கோளாறுகளுக்கும், பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால் அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக்கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாற்றை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரை கலந்து தடவினால் பிரச்னை தீரும். புற்றுநோயினால் துன்பப்படும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால், புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும். பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.
குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.