ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்தியா&am

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய எரிபொருள்!

ணவு... பசித்தால் சாப்பிடும் வஸ்து அல்ல; நம் ஆயுளை, ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்தியாவசிய எரிபொருள். ஆனால், ஸ்மார்ட் போன்களில் சார்ஜை எப்படித் தேக்கிக்கொள்வது என யோசிப்பதில் காட்டும் அக்கறையின் ஒரு சதவிகிதத்தைக்கூட, உணவிலும் உணவுக்கான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நாம் காட்டுவதே இல்லை!

'எங்க காலத்துல நாங்க ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் என்ன எல்லாம் கைப்பக்குவம் காட்டினோம் தெரியுமா?’ என வீட்டில் பெரியவர்கள் ஆரம்பித்தால், அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்து ஓடுகிறோம். 'ஒரு போன் பண்ணா சாப்பாடு வருது. இதுக்குப்போய் வறுத்து, பொடிச்சு, அரைச்சு, தாளிச்சுனு அதகளம் பண்ணுவாங்களா? நாலு இட்லிக்காக நாலு மணி நேரம் சமையல் அறையில் இருக்க முடியுமா?’ என்ற நம் பதில், மேலோட்டமாகச் சரியானதாகக்கூடத் தோன்றலாம். ஆனால், கொஞ்சம் உற்றுப் பாருங்கள். இன்றைக்கு 70 வயதிலும் முடி நரைக்காமல், கண்ணாடி அணியாமல், ஆட்டோவுக்காகக் காத்திருக்காமல் மைல் கணக்கில் அவர்களால் நடக்க முடிகிறது என்றால், இளமையில் அவர்கள் சாப்பிட்ட உணவுகளே அதற்குக் காரணம்.

'யூத்’ பட்டத்துடன் வளையவரும் நம்மில் பலருக்கும் மூன்று மாடி ஏறினாலே மூச்சுவாங்குகிறது. அவ்வளவு ஏன்... ஐந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல் நடந்தால், 'கால் வலிக்குது, தூக்கிக்கோ’ என கை நீட்டுகிறார்கள் குழந்தைகள். அவர்கள் வயதில் நம்மை யார் தூக்கிச் சுமந்தார்கள்? காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பினால், மாலை வரை தெருக்களில்தான் ஓடியாடிச் சுற்றிக்கொண்டிருந்தோம். இப்போது டி.வி முன் அமர்ந்து பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடும் கொழுக்மொழுக் குழந்தைகள் சோர்ந்து இருப்பதைப்போல நம் குழந்தைப் பருவம் இல்லை. காரணம்... புஷ்டி, போஷாக்கை அள்ளிக்கொடுக்கும் பெருந்தீனி உணவுகளை நாம் சாப்பிட்டதே இல்லை. வெளிநாட்டு சாக்லேட்கள், பாக்கெட் உணவுகள் என எதையும் நம் நாவு ருசித்தது இல்லை.

தேங்காய்ப் பால் முறுக்கு, ஓலை பக்கோடா, வெல்ல அதிரசம்... என மணக்க மணக்க மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் பொரித்த வீட்டுப் பண்டங்களைத்தான் நாம் சாப்பிட்டோம். அடுக்குப் பானையிலும் அடுக்களைப் பரணிலும் ஒளித்துவைத்து நம் அம்மாக்கள் தந்த இந்தப் பண்டங்களின் அருகில், காற்று அடைத்த இன்றைய சிப்ஸ் பாக்கெட்கள் வர முடியுமா? இப்படி அன்பும் அக்கறையுமாகத் தயாரிக்கப்பட்ட சிறுதீனிகள் குழந்தைகளுக்குப் பெரும் பலம் கொடுக்கும்.

'அட... ஆரம்பிச்சுட்டாங்களா பாரம்பர்ய உணவுப் பெருமை பாடுறதை? முன்னாடி எல்லாம் பெண்கள் வெளியே வேலைக்குப் போறதே இல்லை. அதனால கிச்சன்லயே கிடந்து சமையல் பண்ணாங்க. ஆனா, இன்னைக்கு நிலைமை என்ன? என் அப்பா ஆட்டோ காசு 50 ரூபாயை மிச்சப்படுத்த, 30 நிமிஷம் நடந்தார். நான் 30 நிமிஷத்தை மிச்சப்படுத்த, ஆட்டோவுக்கு 150 ரூபாய்கூடக் கொடுப்பேன். அந்த அளவுக்கு நேரம் இல்லாம பரபரனு எல்லாரும் ஓடிட்டு இருக்கோம். அதனாலதான் குழந்தைகளுக்கு நல்லதுன்னு விற்கிற ஊட்டச்சத்து பானங்களை, உணவுப் பொருட்களை வாங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கிறோம். இந்த அவசர யுகத்தில் இதுவே பெருசு’ எனப் பொங்கிப் பொருமுவார்கள் பலர்.

ஒரு தனிமனிதனையே இந்த அளவுக்கு நிர்பந்திக்கும் இந்த அவசர உலகம், கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டும் சும்மா விட்டுவைக்குமா? வியாபாரத் தந்திரமே தாரக மந்திரமாகக்கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உணவு அரசியலில், இன்னும் எத்தனை எத்தனை சூழ்ச்சிகள் மறைந்திருக்கின்றன என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. குழந்தைகளின் உடல் எடையை அதிகரித்து, எதிர்ப்பாற்றலைக் குறைத்து, உடலின் உப்புத்தன்மையை அதிகப்படுத்துவது எல்லாம்... கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் குப்பை உணவுகளே! குழந்தைகளை அதற்கு அடிமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கலகல விளம்பரம் முதல் கலர்ஃபுல் அலங்காரம் வரை, அனைத்து அம்சங்களிலும் ஈர்த்து இழுக்கின்றன அந்த உணவுகள்.

அதனால் அந்த வகையான உணவுகளை அடையாளம் கண்டு குழந்தைகளிடம் இருந்து அவற்றை ஒதுக்கிவைப்பது அவசியம். அந்த உணவின் தீமைகளையும் பாதிப்புகளையும் எடுத்துக் கூறி, குழந்தைகளுக்கான தின்பண்டங்களை ஆரோக்கியமானதாக மாற்றுவதே புத்திசாலித்தனம்.

நம் அடுப்படியில், நம் கைப்பக்குவத்தில் சமைப்பதைக் காட்டிலும், எங்கோ தயாரான, ஏதோவொரு சான்றிதழ் பெறப்பட்ட எந்த உணவும் சிறந்தது அல்ல. இந்த எண்ணத்தை மட்டும் மனதில் இருந்து அகற்றாமல் இருப்போம்!
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அத்திய&#3006

Super sharing ji :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.