ஆரோக்கியமான உணவு உடலுக்கு நல்லது….ஏன்?

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
ஆரோக்கியமான உணவு உடலுக்கு நல்லது….ஏன்?

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது என்பது சரிவிகித உணவான பழங்கள், காய்கறிகள். முழுத் தானியங்கள், ஆரோக்கியமான எண்ணெய் வகைகள், குறைந்த கொழுப்புள்ள பால், மாமிசம், தாவரப் புரதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய உணவுப் பொருட்களைக் குறிக்கும்.
இந்த சரிவிகித உணவு ஐக்கிய அமெரிக்கத் திணைக்களத்தின் விவசாய ஆரோக்கிய உணவுப் பிரமிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் உடலை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும் உணவு வழிகாட்டியாக இந்தப் பிரமிட் செயற்படக்கூடும்.

இருப்பினும் இது உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடவும் கூடும்.

ஆனால், இதே உணவுக் கொள்கையானது மாமிச உணவு உண்பவராக இருந்தாலும் ஏனையோராக இருந்தாலும் பொருந்தும்.

அதாவது, கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்பு, புரதங்கள் அடங்கிய உணவுக் கலவை உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதது.

எடை கட்டுப்பாடு:
சரிவிகித உணவை உண்பதில் உள்ள மிகப்பெரிய பயன்பாடு உடல் எடை கட்டுப்பாடு மூலமாக உடல் ஆரோக்கியத்தை பேணுவது தான்.

நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் அறிக்கைப் படி 2006ஆம் ஆண்டில் மாத்திரம் 72 மில்லியன் அமெரிக்கர்கள் 20 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அதிக எடையுடையவர்களாக உள்ளனர்.

இந்த உடற்பருமன் அளவானது உடற் தெளிவு சுட்டெண்ணில் 30இற்கும் அதிகமான எண்ணிக்கையைப் பொருத்து கணக்கிடப்பட்டது.

ஆரோக்கியமாக உண்பது உடற்பருமனைப் பல வழிகளில் கட்டுப்படுத்துகிறது.

ஆரோக்கியமாக உண்பவர்கள் உணவில் குறைந்த கலோரியை உட்கொள்கின்றனர்.

இரண்டாவது விஷயம், ஆரோக்கியமான உணவில் அதிக நார் சத்து அடங்கியிருப்பது.

இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஆற்றலை செலுத்தக்கூடியது.

இதய ஆரோக்கியம்
ஆரோக்கியமான சரிவிகித உணவு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை நீக்குகிறது.

உடலில் அதிக கொழுப்பானது இரத்த நாளங்களில் குருதித் தட்டுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது.

இது இதய நோய்களுக்கு வழிகோலும்.

கொலஸ்ட்ரோலானது தேவையற்ற கொழுப்பினை இரத்த ஓட்டத்திலிருந்து நீக்கிவிடுகிறது.

ஆரோக்கியமான உணவில் நார்சத்து அதிகம் காணப்படுகிறது.

இந்த நார்சத்தானது இரத்தத்தில் தேவையற்ற கொழுப்பு உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இரத்த சர்க்கரை
ஆரோக்கியமான உணவினை உட்கொள்வது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் மட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டினை உட்கொள்வதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

சர்க்கரை அதிகமுள்ள உணவுப்பொருட்களை உண்பது மற்றும் சுகாதாரமற்ற கார்போஹைட்ரேட்டினை உண்பது உடலின் இரத்த ஓட்டத்தில் குளுக்கோசின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

உங்கள் உடல் செல்களுக்கு சக்தியை மீட்டெடுக்க குளுக்கோஸ் தேவைப்படுகின்ற போதும் அதிக குளுக்கோசானது சர்க்கரை நோயை உண்டாக்கும்.

இறுதியில் பயங்கர பாதிப்புகளுக்கு இரத்த நாளங்கள் முகங்கொடுக்க நேரும்.

நோய்த்தடுப்பு – ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் நோய்த் தடுப்பிற்கும் உதவி புரியும்.

இந்த ஆரோக்கிய உணவில் அதிகளவு பிட்டோகெமிக்கல் அடங்கியுள்ளது.

இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

குறைவான கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் ஒரு சில புற்றுநோய்களைக் கூட தடுக்க முடியும்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் இதய நோய்கள், சர்க்கரை வியாதி, பக்க வாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.