ஆரோக்கிய வாழ்வுக்கு 5 வழிகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆரோக்கிய வாழ்வுக்கு 5 வழிகள்
ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசைதான். இதைச் சாப்பிடக் கூடாது, அதைச் செய்யக் கூடாது எனப் பல கூடாதுகள்தான் அதில் இருப்பதால், தொடக்கத்தில் தயக்கம் ஏற்படுவது வழக்கம்தான். கடைசியில், எதையுமே கடைப்பிடிக்காமல் நாட்கள், கழியும். செய்யக்கூடாதவைகளைப் பட்டியலிடுவதற்குப் பதில், செய்ய வேண்டியவற்றை முதலில் பட்டியலிட்டுப் பழகிப் பார்க்கலாமே!

ஆரோக்கியமான உணவு
தினமும் ஆரோக்கிய உணவின் மீது ஆர்வம்காட்ட விரும்பினாலும், அதைப் பின்பற்ற முடிவது இல்லை. ஆயிரக்கணக்கான ரெசிப்பிகள், சமையல் குறிப்புக்கள், உணவுப் பட்டியல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதில், நமக்கு ஆரோக்கியம் தரும் ஒரு மெனுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த உணவுப் பழக்கத்துக்கு, குழந்தைகளையும் பழக்கப்படுத்த வேண்டும். இளம் வயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், முதுமையிலும் இளமையாக இருக்க அது உதவும்.

எப்போதும் துடிப்புடன் இருத்தல்
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது தெரிந்ததுதான். ஆனால், நம்மால் ஜிம்முக்குச் செல்ல முடியவில்லையே என்ற காரணத்துக்காக உடற்பயிற்சியைச் செய்யத் தவறக் கூடாது. அதேபோல், நேரம் இல்லை என்ற சாக்குக்போக்கு கூடவே கூடாது. உடற்பயிற்சிக்கு எனச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். தொடக்கத்தில் அது சிரமமாக இருக்கலாம். கொஞ்ச நாட்களில் அதை செய்யவில்லை என்றால், அன்றைய நாளே முழுமை பெறாதது போன்ற உணர்வு வந்துவிடும். உங்களுக்கு நடனம் பிடிக்கும் என்றால், நடன வகுப்புக்குச் செல்லுங்கள். டென்னிஸ் பிடிக்கும் என்றால் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். வெவ்வேறு வடிவங்களில் உடலுக்கு வேலைகொடுங்கள். உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தையும் போக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர் மருத்துவப் பரிசோதனை
நோய் வராமல் தடுப்பதற்கு முதலில் அதைப் பற்றித் தெரிந்துகொள்வது, திட்டமிட்டுச் செயல்படுவது மிகவும் அவசியம். என்னதான் முழுக் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், அவ்வப்போது தொடர் மருத்துவப் பரிசோதனை செய்து, உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும். 40 வயதைக் கடந்தவராக இருந்தால், குடும்ப மருத்துவரை அணுகி, என்ன மாதிரியான பரிசோதனைகள் இருக்கின்றன என்று கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சரியான முடிவுகள் எடுத்தல்
இருசக்கர வாகனம் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிவது, கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது போன்ற சின்னச் சின்ன சரியான முடிவுகளும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாக வாகனம் ஓட்டுங்கள். ஆனால், அந்த நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள். சிகரெட், மதுப் பழக்கங்களை எந்த வயதினராக இருந்தாலும், கைவிடுவது உடல்நலம் பேண உதவும்.

மனநலத்துக்கு முக்கியத்துவம்
வேலைக்கும் சென்று, வீட்டையும் நிர்வகிக்கும் பெண்களுக்கான விஷயம் இது. மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மூச்சுப் பயிற்சி அல்லது ஸ்ட்ரெச்சிங் பயிற்சி, நல்ல இசை கேட்பது அல்லது நண்பருடன் நடை போன்றவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். இது எதிலும் மன அழுத்தம் குறையவில்லை என்றால், மன அழுத்தத்தால் தூக்கம், மன மாற்றம், அன்றாட வாழ்க்கை, இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற
வேண்டியது அவசியம், அவசரம்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.