ஆர்கானிக்கை அறியமுடியுமா

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆர்கானிக்கை அறியமுடியுமா?

“ஆர்கானிக் பழங்கள், காய்கறிகள், தானியங்களை எப்படிக் கண்டுபிடிப்பது? பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்டிருப்பதை எப்படிக் கண்டறிவது?”

நந்தனி சுப்பிரமணியம், சித்தமருத்துவர்.



“பூச்சிமருந்து தெளிக்கப்பட்டு விளைவித்த பழங்கள், காய்கறிகளையும் இயற்கைமுறையில் உற்பத்தி செய்யப்பட்டபழங்களையும் பிரித்து அறிவது எளிதே. தோல் பளபளப்பாக இல்லாமல் இருந்தால், அவை இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்டவை. மேலும், முகர்ந்து பார்க்கும்போது, அந்தந்தக் காய்கறிகள், பழங்களின் தனிப்பட்ட வாசனையை உணரலாம். பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட காய்கறிகள் அள*விலும் எடையிலும் சற்று கூடுதலாக இருக்கும்.
ஆர்கானிக் பழங்களின் நிறம் வெளுத்துப் போய் இருக்கும். ஆனால், செயற்கைமுறையில் விளைந்தவற்றின் நிறம், அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் காணப்படும். செயற்கைமுறையில் விளைந்தவற்றில் புழு, பூச்சி, வண்டு போன்றவை இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், ஆர்கானிக்முறையில் விளைந்தவற்றில் பூச்சி அரிப்பு, சொத்தை போன்றவை காணப்படும். கீரைகளில் சிறுசிறு ஓட்டைகள் இருக்கும். காய்கறி மற்றும் பழங்களை உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்தத் தண்ணீரில் கழுவிய பின்பு பயன்படுத்தினால், அதில் தெளிக்கபட்டிருக்கும் பூச்சி மருந்துகளின் பாதிப்புக் குறையும். பெரும்பாலும், சிறுதானியங்களுக்குப் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால், சிறுதானியங்களை உணவுப் பட்டியலில் பிரதானமாக்குவது நல்லது.”
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.