ஆலயம் அறிவோம் !---நட்சத்திரக்காரர்கள் வழி&#29

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
திருவாவினன்குடி (பழநி)

கந்தனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் அமைந்துள்ளது திருவாவினன்குடி ஆலயம். திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த தலம். மலை உச்சியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர் சித்தர்களில் ஒருவரான போகர்.

சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் நவபாஷாண சிலையை, இங்கு போகர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. எனவே அக்னி நட்சத்திர நாட்கள் இங்கு விசேஷமாக உள்ளது. ஆண்டி கோலத்தில் மேற்கு நோக்கி அருளும் இத்தல இறைவன், இங்கு பாலகனாக வீற்றிருக்கிறார்.

இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. இந்த ஆலயத்திற்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது.

1527055023602.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
திருவேரகம் (சுவாமிமலை)

முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கே உப தேசம் செய்த தலமான சுவாமிமலை. இது அறுபடை வீடுகளில் நான்காவதாக குறிப்பிடப்படுகிறது. சுவாமி என்பது இங்கு எல்லோருக்கும் பெரியவனாகிய சிவபெருமானையேக் குறிக்கிறது. இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேலே உயரத்தில் சன்னிதியும், கீழே சிவனுக்கு சன்னிதியும் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில் 60 படிகள் 60 ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும்காட்சி சுதை சிற்பமாக உள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர்.

இங்கு வழிபடும் பக்தர் களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும். குரு மூர்த்த சன்னிதி என்பதால், இங்கு உபநயனம் எனப்படும் பூணூல் விழாக்கள் நடத்துவது பிரசித்தமாகும்.

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள இத்தலத்திற்குச் செல்ல வசதியாக பேருந்துகள் இயங்குகின்றன.

1527055107753.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
பழமுதிர்சோலை (அழகர்மலை)

அறுபடைவீடுகளில் முருக பக்தர்களின் மனம்கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

தொடக்கத்தில் முருகனின் அம்சமாக வேல் வைத்து வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

தமிழ்க் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.

இதன் அருகே உள்ள நூபுரகங்கை எனும் தீர்த்தம் மிக பிரசித்தி பெற்றது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங் களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

1527055256740.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
திருத்தணி

சூரபதுமனையும், அவனது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரையும் முருகப்பெருமான் வதம் செய்தார். அவர்களின் அழிவு வழி போர்க் கோலத்துடன் ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. ‘செரு’ என்றால் கோபம் என்றும், ‘தணி’ என்றால் ‘குறைதல்’ என்றும் பொருள். முன்காலத்தில் ‘செருத்தணி’ என்று அழைக்கப்பட்டு வந்த ஊரே தற்போது ‘திருத்தணி’ என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள்.

முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு இது. முருகப்பெருமான், குறத்திப் பெண்ணான வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான். சுமார் 400 அடி உயரமுள்ள சிறிய மலைமீது பக்தர்கள் செல்ல வசதியாக 365 படிகள் உள்ளன. வருடத்தின் நாட்களை இப்படிகள் குறிப்பதாக சொல்லப்படுகிறது.

தணிகைநாதன், தணிகேசர், தணிகைவள்ளல் என்றெல்லாம் புகழப்படும் இந்த தல நாயகனுக்கு ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்படி பூஜையும் இங்க நடைபெறுகிறது.

அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சிதர், ராமலிங்க வள்ளலார், கச்சியப்ப தேசிகர் போன்ற மகான்கள் இங்கு வந்து தணிகைநாதனின் அருட்பார்வை பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அருகே உள்ள இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

1527055385566.png
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
வளையலுக்கு ஆசைப்பட்ட அம்மன்

1527056053025.png

கும்பகோணம்-திருவாரூர் வழிப்பாதையில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருநறையூர். இத்தலத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன், தனது திருவுருவ வடிவில் இல்லாமல் அரூபமாக ஒளிவடிவில் அருள்பாலிக்கிறாள்.


சமயபுரத்தாளை ‘ஆகாச மாரியம்மன்’ என்று இங்கு அழைக்கிறார்கள். சமயபுரத்தாள் எப்படி ஆகாச மாரியம்மனாக, திருநறையூர் வந்தாள் என்பதைக் கூறும் கதை ஒன்று உள்ளது. அது சுமார் 650 ஆண்டு களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோவில் எனும் திருநறையூர் பகுதியில் உள்ள வளையல் விற்கும் ஒரு வாணிபக் குழுவினர் இருந்தனர். அவர்கள் ஒரு நாள் இரவு, திருச்சி சமயபுரத்தில் தங்கள் வளையல் வியாபாரத்தை முடித்து, சமயபுரம் மாரியம்மனை தரிசித்து விட்டு, பிறகு அங்கேயே தங்கி இருந்தனர். அன்று இரவில் அந்த வளையல் விற்கும் குழுவில் இருந்த பெரியவர் ஒருவரின் கனவில் கன்னிப்பெண் வடிவில் வந்தாள் சமயபுரம் மாரியம்மன்.

தூக்கத்தில் இருந்த பெரியவரை தட்டி எழுப்பிய அந்தப்பெண் தமக்கு வளையல் போட்டுவிடும்படி கூறி, தமது திருக்கரங்களை பெரியவர் முன்பு நீட்டினாள். அப்பெண்ணின் தெய்வீக முக ஒளியின் தாக்கத்தால் கவரப்பட்ட அந்த பெரியவரும், உடனே தமது வளையல் பொதியை பிரித்து விரித்து, ஒவ்வொரு வளையலாக அப்பெண்ணின் கைகளில் மாட்டி விட்டார். ஆனால் அந்த வளையல்களில் ஒன்றுகூட பொருந்தாமல் அனைத்தும் உடைந்து போயின. உடனே அந்தப் பெண் மறைந்து போனாள்.

இதையடுத்து கனவு கலைந்து எழுந்த பெரியவர், கனவில் கண்டது போலவே பொதி மூட்டை பிரிக்கப்பட்டு, வளையல்கள் அனைத்தும் உடைந்து கிடப்பதைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார். அதோடு அவரோடு வந்திருந்த அத்தனை பேருக்கும் உடம்பில் அம்மை முத்துக்கள் வந்திருந்தன. திகைப்புற்று நின்ற பெரியவரின் கண்களில் நேற்று இரவில் கனவில் வந்து தம்மிடம் வளையல் மாட்டிவிடச் சொன்ன அந்தப் பெண்ணின் முகம் வந்துபோனது.

‘வந்தது யார்?’ என்று பெரியவர் குழம்பி இருந்த அதே வேளையில், அவர் முன்பாக சமயபுரம் மாரியம்மன் கோவில் பூசாரி, கையில் பெரிய தாம்பாளத்துடன் நின்றிருந்தார். அவர் பெரியவரைப் பார்த்து, ‘அய்யா! இன்று அதிகாலை என் கனவில் வந்த சமயபுரத்தாள், உங்கள் இருப்பிடத்தையும், அடையாளங்களையும் சொல்லி, தம்முடைய தங்க நகைகள் சிலவற்றைக் குறிப்பிட்டு அதனை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள். அன்னை உங்களின் வளையல்கள் அனைத்தையும் உடைந்து போகத் செய்ததாகவும் கூறினாள். தாம் வந்து போனதற்கு அடையாளமாக உங்கள் குழுவினருக்கு அம்மை முத்துக்கள் பதித்ததாகவும் தெரிவித்தாள். தவிர அவர்களின் அம்மை நோய் நீங்க தமது விபூதியையும், உடைந்து போன வளையல்களுக்கு ஈடாக அன்னையின் தங்க நகைகளையும் உங்களிடம் ஒப்படைத்து வர என்னை இங்கு அனுப்பி வைத்துள்ளாள்’ என்றார்.

தொடர்ந்து கோவில் அர்ச்சகர், அங்கிருந்த அனை வருக்கும் சமயபுரத்தாளின் விபூதியைக் கொடுக்க அனைவரின் அம்மை நோயும் அகன்றது. அனைவரும் சமயபுரத்தாளின் ஆலயம் நோக்கி வான் பார்த்து தொழுதனர். அப்போது வானில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, ‘உங்கள் பக்தியால் உங்களுடன் சிறிது விளையாடி உங்களை ஆட்கொள்ளவே யாம் வந்தோம்' என்று கூற, உடனே அங்கிருந்த வளையல் விற்கும் குழுவினர் அனைவரும், ‘மகமாயி! எங்களுக்கு இங்கு கிடைத்த இந்த பெரும்பேறு, எங்கள் சந்ததிகளுக்கும், உலகத்தவருக்கும் வரும் காலத்தில் கிடைக்க வேண்டும். அதுமட்டுமல்ல எங்கள் ஊரான திருநறையூர் நாச்சியார்கோவிலிலும் தாங்கள் எழுந்தருளி, எங்களை எப்போதும் காத்துநிற்க வேண்டும்' என்று இறைஞ்சினர்.

அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட அன்னை சமய புரத்தாள், ‘ஆண்டு தோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 13 நாட்கள், சமயபுரத்தில் இருந்து ஆகாய வழியாக யாம் எழுந்தருளி, உங்களது ஊருக்கு வடக் கிலுள்ள அரசலாற்றில் எலுமிச்சைப் பழமாக வந்து இருப்பேன். அப்பழத்தினைக் குடத்தில் இட்டுத் தண்ணீருடன் எடுத்துச்சென்று பத்து நாட்கள் விழா நடத்துங்கள். அந்த நாட்களில் உங்கள் ஊரான திருநறையூர் நாச்சியார்கோவிலில் யாம் இருப்போம். 14-ம் நாள் அங்கிருந்து மீண்டும் சமயபுரம் வந்திருந்து அருள்வேன்' என்று அருளினாள்.

அன்று முதல் இன்று வரை சமயபுரம் மாரியம்மன் ஆண்டு தோறும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 13 நாட்கள் சமயபுரத்தில் இருந்து ஆகாய வழியாக நாச்சியார்கோயில் எழுந்தருளுதலும், பின்பு 14-ம் நாள் நாச்சியார்கோயிலில் பக்தர்கள் அன்னையை வழியனுப்பி வைக்க மீண்டும் சமயபுரத்தில் வந்தமர்ந்து அருளுவதாக ஐதீகம். சமயபுரத்தில் இருந்து அம்மன் ஆகாய மார்க்கமாக நாச்சியார்கோயிலுக்கு எழுந்தருளியதால் நாச்சியார்கோயிலில் சமயபுரத்தாளை ‘ஆகாச மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள்.

வைகாசி மாதம் திருவிழா சமயம் தவிர, மற்ற நாட்களில் இங்கு கருவறையில் அணையா ஜோதி வடிவிலேயே சமயபுரத்தாள் காட்சி கொடுத்து அருள்கிறாள். வைகாசி அமாவாசைக்கு அடுத்துவரும் வெள்ளிக் கிழமை அன்று தொடங்கி, தொடர்ந்து பதினான்கு நாட்கள் நடைபெறும் விழாவுக்காக சமயபுரம் மாரியம்மன் திருவுருவம் செய்து வழிபடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சமயபுரத்தில் இருந்து அம்மன் வருகையை ஒட்டி உற்சவம் ஆரம்பிக்கிறது. சமயபுரத்தில் இருந்து அம்மன் இங்கு வந்து தங்கும் நாட்களில் அம்மனுக்கு வளையல் காணிக்கையே பக்தர்கள் செய்கிறார்கள்.

இங்கு வைகாசி பெருவிழா நாட்களில் அன்னைக்கு கண்ணாடி வளையல் சாத்தி வழிபட்டால் திருமணம், குழந்தைபாக்கியம், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை. உடல்நோய், மன நோய், பில்லி, சூன்யம் அகல்வதாக ஐதீகம். அம்பாளுக்கு வளையல் காணிக்கை செலுத்தி எந்த வேண்டு தலை வைத்தாலும், அது உடனடியாக நிறைவேறுகிறதாம்.

வைகாசி அமாவாசைக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை, அரசலாற்றில் எலுமிச்சைப் பழ வடிவில் சமய புரம் மாரியம்மன் எழுந்தருளும் போது, ஒரு மந்திர ஒலி சத்தம் முதலில் தோன்றுமாம். பின்னர் அந்த ஒலி எழுந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு எலுமிச்சைப் பழம் மிதந்துவருமாம். அந்த எலுமிச்சையில் உறைந்துதான் ஆகாய மார்க்கமாக சமயபுரம் மாரியம்மன் இங்கு எழுந்தருள்கிறாள். அதுசமயம் ஆலயத்தில் தர்ப்பையால் உருவாக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மனை வழிபடுகிறார்கள். விழாவின் கடைசி நாள் அன்று அம்மனுக்கு விடையாற்றிக் கொடுத்து, மீண்டும் சமயபுரம் மாரியம்மனை சமயபுரத்துக்கு வழி அனுப்புவதோடு அந்த ஆண்டுக்கான விழா நிறைவடைகின்றது.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 27-5-18 (ஞாயிற்றுக்கிழமை) பெருவிழா நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் மாவிளக்கு பிரார்த்தனை, காவடி நேர்ச்சைக்கடன் செலுத்தி வழிபடுவர். 30 மற்றும் 31-ந் தேதிகளில் அம்மன் தேர் திருவிழாவில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி விட்டு, மீண்டும் சமயபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்

1527074302778.png

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள். தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ''நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்'' என்றாள்.

ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார். எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள். கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.

அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை.

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும். ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள். ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒருவருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள். இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில் கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய்சிலிர்த்தது! பத்மாசன தோற்றம்-நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன. சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார்.

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளிவிட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார். அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார். ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
மூகாம்பிகை திருக்காட்சியளித்தல்

1527074428341.png

கொல்லூர் ஆலயத்தில் ஆதிசங்கரர் தங்கி இருந்த நாட்களில் தினசரி சுயம்புலிங்க சன்னதிக்கு நேர் பின்புறம் ஒரு மேடையில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்.

ஒருநாள் தியானத்தின் போது அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் கீழிரு கரத்தில் அபயவரத முத்திரையுடன் அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.

ஆதிசங்கரர் மிகவும் மனம் நெகிழ்ந்து தாயை வணங்கி துதித்துள்ளார். அதன்பிறகே ஆதிசங்கரர் அங்கு அமர்ந்து அன்னையைப் புகழ்ந்து சவுந்தர்ய லகிரியை இயற்றினார்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
அதிசய சிவன் கோவில் !
1527108429735.png

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள பரன் ஏலக்கோட்டை பொது ஆவுடையார் கோயில், நள்ளிரவு மட்டுமே திறக்கப்படும்; சூரிய உதயத்துக்கு முன்னதாக சந்நிதி அடைக்கப்பட்டுவிடும்.

எனினும், தட்சிணாயன புண்ணிய காலத்தில், சூரியக் கிரணங்கள் ஸ்வாமியின் திருமேனியில் படர்ந்து வழிபடும் காட்சியைத் தரிசிப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகாக் கருதப்படு கிறது.

இந்தக் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனமும், வெற்றிலை -பாக்கு தாம்பூலமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மற்றபடி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற எந்த வைபவங்களும் இங்கே கொண்டாடப்படுவதில்லை

. இந்தக் கோயிலில் இங்கு சிவன் ஆலமரமாக காட்சித் தருவது சிறப்பம்சம்!
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,802
Location
Germany
ஆலயம் குமாரக்கோவில் ...ஈர ஆடை வழிபாடு !!

பொதுவாக ஈர ஆடையுடன் இறைவனை வழிபடக்கூடாது என்பது, நம் முன்னோர்களும் ஞான நூல்களும் வகுத்துவைத்திருக்கும் நெறிமுறையாகும். இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ள ஆலயம் குமாரக்கோவில்.

குமரி மாவட்டம், தக்கலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில். வேளிமலைச் சாரலில் இயற்கைப் பொலிவுடன் திகழும் இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் இறைவனை வழிபடுவதைக் காணலாம்.

இங்கு அருள்பாலிக்கும் மூலவர் முருகன், சுமார் 8 அடிக்கும் மேலான உயரத்துடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்; வள்ளிதேவியின் விக்கிரகம் சுமார் 6 அடி உயரம்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,212
Likes
3,171
Location
India
சந்தனத்தால் நோய் தீர்க்கும் திருத்தலம் ---உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்

1527140214479.png

கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில். உலகை காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ என்றும் அழைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப்பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். அப்போது ஊர் பெரியவர், சுவாமியின் அருளால் அருள்வாக்கு கூறினார்.

ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் எனக்கூறி, அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார். அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து சந்தனத்தை ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தைப் பூசியதும் ரத்தம் நின்று விட்டது.

உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.