ஆலயம் அறிவோம் !---நட்சத்திரக்காரர்கள் வழி&#29

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்

1527140431616.png

திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலய தல வரலாறு

காசிப முனிவரின் பத்தினிகளாக கர்த்துரு, விநதை இருவரும் சிவபெருமானை வழிபடுகின்றனர். இருவரின் பக்தியில் இறைவன் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றி இருவருக்கும் ஒவ்வொரு அண்டத்தைக் (முட்டையை) கொடுக்கிறார்.

இதனைக் குறிப்பிட்ட காலமான ஒரு வருடம் பூஜை செய்து பாதுகாத்து வந்தால், உலகம் பிரகாசிக்கும் சத்புத்திரன் பிறப்பான்” என்று கூறி மறைந்தார். இருவரும் அண்டத்தைப் பாதுகாத்துப் பூஜை செய்து வந்தனர்.

ஒரு வருடம் கழித்து விநதை யின் அண்டத்திலிருந்து ஒரு பட்சி பிறந்தது. உடனே விநதை ஈஸ்வரனை நினைத்து, “என்ன இறைவா! எனக்குத் சத்புத்திரன் பிறப்பான் என்று கூறினாய். ஆனால் பட்சி பிறந்துள்ளதே” என்று வருந்தி வேண்டுகிறாள்.

இறைவன், “நான் கூறியது போல் அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாய் கருடன் என்ற பெயரில் உலகமெங்கும் பிரகாசிப்பான்” என்றார்.விநதைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஏக்கத்தில் அவசரப்பட்டு கர்த்துரு தான் பாதுகாத்துப் பூஜை செய்து வந்த அண்டத்தை பிட்டப் பார்த்தாள். அதிலிருந்து தலை முதல் இடுப்பு வரை வளர்ந்த அங்கஹீனனாய் ஒரு குழந்தை பிறந்தது.

அவளும் இறைவனை நினைத்து, “இப்படி ஆகி விடடதே!” என்று இறைஞ்சினாள். இறைவன், “நான் கூறியது போலவே இவன் சூரியனுக்குச் சாரதியாய் இருந்து உலகம் முழுவதும் பிரகாசிப்பான்” என்றார்.

அங்கஹீனனான அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியனோ, “நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது” என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான்.
மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான்.

இறைவன் அருணனுக்குக் காட்சியளித்து அருள் புரிந்தான். சூரியனிடம் “என்னைத் தரிசனம் செய்ய நினைத்த அருணனைத் துன்புறுத்திய உன் மேனி கிருஷ்ண வர்ணமாய்ப் போகக் கடவது” என்று சாபமிட்டார். இதன் விளைவாக உலகமே இருண்டு போனது.

பரமேஸ்வரி சிவபெருமானிடம் “இப்படி சாபமிட்ட வீட்டீர்களே! உலகமே இயங்காது போகுமே” என்று வினவ, “அருணன் தவ பலத்தால் உலகம் பிரகாசமடையும்” என்றார். தன் தவறை உணர்ந்த சூரியன் இறைவனிடம் வேண்ட, “நீ எம்மை ஏழுமாத காலம் பூஜை செய்தால் உனது உருவம் கருமை நிறத்திலிருந்து விடுபட்டுக் குணமடையும்” என்றார்.

தான் சாபவிமோசனம் அடை வதற்காக சூரியன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை ஏழு மாதம் பூஜை செய்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட பின்னரும் தன் கருமை நிறம் மாறாது போகவே வருந்தி, “ஹேமிகுரா” என்று கதறுகிறார்.

அப்போது சுவாமியுடனிருந்த அம்பாள் தங்களது ஏகாந்தத்தில் குறுக்கிட்ட சூரியன் மேல் கோபம் கொண்டு மீண்டும் சபிக்க முற்பட்டாள். சிவபெருமான் தடுத்து, “நான் கொடுத்த சாபம் நீங்கவில்லையென்ற வருத்தத்தில் என்னை அழைத்துள்ளான். மீண்டும் நீ சாபமிட்டால் உலகம் மறுபடியும் இருண்டு போகும்.

நீ பரமசாந்தையாயும் உலகம் பிரகாசிக்கவும் தவமிருப்பாயா” என்று அம்பாளைச் சாந்தப்படுத்தி, அம்பாளின் கோபம் தணிய தவமிருக்கப் பணிந்துவிட்டு, சூரியனுக்கு சாபவிமோசனம் அளித்தார். அம்பாள் சாந்த நாயகியாகிறார். அன்னை பராசக்தியின் திருவாயிலிருந்து வசினீ என்ற வாக்தேவதைகள் தோன்றி அவர்கள் திருவாய் மலர்ந்ததுவ சகஸ்ர நாம ஸ்தோத்திரம் எனப்படுகிறது. அம்பாளே அருளியதால் அவரின் பெயர் கொண்டு லலிதா சகஸ்ர நாமம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்வர்.

இத்தலத்தில் பூஜை செய்து சூரியன் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்படையிலேயே மீயச்சூர் எனப்பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி முடிய சூரிய கிரணங்கள் உதயமாகும் நேரத்தில் இவ்வாலயக் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும்.

சூரியன், அருணன், காசிப முனிவரின் மனைவி களான கர்த்துரு, விநதை ஆகியோர் இத்தலத்திலிருந்து சிவபெருமானை வழிபட்ட தோடல் லாமல் எமன் இத்தலத்தில் பிறந்து எந்நேரமும் சிவ சிந்தனையுடன் இருந்து பூஜித்ததாகவும், அகத்திய முனிவரும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பூஜை செய்தார்.

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளைக் கெட்டிப்படுத்தும் தெய்வீக சக்தி உண்டு. சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன் ஆயுளைத் தரவல்ல சங்கு கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, மிகவும் சக்தி வாய்ந்த மூலிகையும், எமலோகத்தின் ஸ்தல விருட்சங்களில் ஒன்றானதுமான பிரண்டை கலந்த அன்னதானம் செய்து சிவபெருமானை வழிபட்டார் என்பது ஐதீகம்.

ஸ்ரீ ஹயக்கிரீவர் (பரிமுகப் பெருமான்) அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தை உபதேசம் செய்கையில், “லலிதாம்பாளை எங்கு தரிசனம் செய்யலாம்?” என்று அகத்தியர் வினவ, “அருணனும் சூரியனும் பூஜை செய்த ஸ்தலம் பூலோகத்தில் மீயச்சூர் எனும் ஊரில் உள்ளது. அங்கு சென்றால் அன்னை ஸ்ரீ லலிதாம்பாளைத் தரிசிக்கலாம். அந்த லலிதா சகஸ்ரநாமம் வாசிப்பதனால் பெற வேண்டிய பலன்களையும் அங்கு சென்றால் நிச்சயம் அடையலாம்” என்றார்.

அகத்தியரும் இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ மேகநாத சுவாமியையும் அன்னை லலிதாம்பாளையும் வணங்கி, பூஜை செய்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையின் பூரண பலனைப் பெற்றார் என்பது வரலாறு. பவுர்ணமி தினத்தன்று இவ்வர்ச்சனை செய்து அம்பாளை வழிபட்டால் சகல நன்மைகளும் அடையலாம்.

அகத்தியர், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை இவ்வன் னைக்காக அழகிய தமிழில் இயற்றியுள்ளார். இதனை தினமும் பாராயணம் செய்ய சகல செல்வமும், நற்பலன்களும் கிட்டும்.

அமர்ந்த திருக்கோலத்தில் கலையழகு மிளிர வடிவமைக் கப்பட்டுள்ள அன்னை ஸ்ரீ லலிதாம்பாள் சிலையின் கால்களில் கொலுசு அணிவதற்கு ஏற்ப இடைவெளிகளோடு அமைக் கப்பட்டுள்ளதை அண்மையில் அறிந்து, பக்தர்கள் சிலர் சேர்ந்து கொலுசு செய்து அணிவித் துள்ளார்கள்.

இத்தலத்தில் தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட் சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் சிவபெருமானை பூஜித்து, அத்தாமரை இலையிலே அன் னத்தை படைத்து, ஏழைகளுக்கு அன்னதானமளித்து தாமும் உண்டால் எக்கடுமையான நோய்களால் துன்பப்பட்டாலும் அந்நோயிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ காலனும், சிவபெருமானும் அருள் புரிவர் என்பது நம்பிக்கை.

இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவைகளைச் செய்தால் பூரண ஆயுளோடு ஆரோக்கியமாய் வாழ்வர்.

வேளாக்குறிச்சி ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அஜபா நடேஸ்வர பண்டார சன்னதிகள் அவர்கள் இத்தலத்தின் பரம்பரை அறங்காவலராக இறைபணியாற்றி வருகிறார்கள். ஆதீன இளவரசு சீர்மிகு சத்திய ஞான மகாதேவ சுவாமிகள் தம் தந்தையாரோடு இணைந்து இறைபணியை நிறைவுடன் ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு :

திருமீயச்சூர் கோவிலின் ராஜகோபுரம் 5 நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும் கோவிலின் இரண்டாவது உள் கோபுரம் 3 நிலைகளுடன் 5 கலசங்களுடன் காணப்படுகின்றன.

முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தில் உள்ளது. அதனை அடுத்து பெருங்கோவிலின் 2-வது உள் கோபுரத்தில் நுழையும்போது விநாயகர் நம்மை வரவேற்கிறார்.

முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட்பிரகாரத்தின் தென் பகுதி பிரதிஷ்டைகள், சேக்கிழார் போன்றோரது திருஉருவங்களும், சப்த மாதாக்கள் பூதலிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில் அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், லிங்கங்களும் உள்ளனர்.

இக்கோவில் சிற்பக் கலையில் சிறப்போடு விளங்குகிறது என்பதற்கு உதாரணமாக அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தில் சேத்திர புராணேஸ்வரர் திருஉருவம் அமைந்துள்ளது.

இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் புறத்தில் இருந்து பார்க்கும் போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து பார்க்கும்போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிற்பத்தை காணும்போது நம் தினப்படி வாழ்வில் நடக்கும் விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக் கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு. இவ்வாறு இறைவன் அவர்களை காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்ற ஈஸ்வரனுக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்.

இப்பெருமானைப் பார்த்து விட்டு அப்படியே சுற்றிவரும்போது தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர் ஆகியோர் திருஉருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோவிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், தூண்களும் அழகு சேர்க்கின்றன. இக்கோவிலின் வடப்பக்கத்திலே இளங்கோவிலை தரிசனம் செய்யலாம்.

இத்திருக்கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று கவனித்தால் 5 கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

கோபுர தரிசனத்திற்கு பின்னர் அங்கேயே சற்றுதள்ளி, இளங்கோவிலின் சுற்று லிங்கோத்பவர், பிரம்மா, மகா விஷ்ணுவாகிய மும்மூர்த்திகளின் தரிசனம் நமக்கு கிடைக்கிறது.

இக்கோவிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, சது சண்டிகேஸ்வரர் உள்ளனர். தல விநாயகர், சண்டிகேஸ்வர், அருணாசலேஸ்வர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

இத்திருக்கோவில் அன்னை லலிதாம்பிகை இவ்வுலகில் வேறெங்கும் காணமுடியாத வண்ணம் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இப்பூமியில் வாழும் எல்லா மனிதர்களும் உயர்வு தாழ்வின்றி வாழ வேண்டும். இக்கோவிலில் காணும் சிற்பங்களில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் :

சர்வலாங்கார அம்பிகையாக கைகளில் வளையல்களும் அமர்ந்த நிலையில் கால்களில் கொலுசும் இடுப்பில் ஒட்டியானமும் கழுத்தில் சகல விதமான ஆபரணங்களும் அணிந்து அற்புதமாக காட்சி அளிக்கின்றாள் திருமீயச்சூர் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.

சிறப்பு வாய்ந்த ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மாசி மாத அஷ்டமி நவமி இணைந்த நாளில் ஆதி சைவ சிவாச்சார்யர்களும் அன்னையின் பக்தர்களும் அம்பாள் உபாசகர்களும் கூடி இணைந்து ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் பள்ளயம் எனப்படும் அன்னப்பாவாடை மகா நைவேத்தியம் போன்ற வழிபாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

லட்சார்ச்சனையின் போது 10 காலத்திற்கும் 10 விதமான பிரசாதங்கள் காலம் ஒன்றிற்கு 10 கிலோ வீதம் 100 கிலோ பிரசாதம் நைவைத்தியம் செய்யப்படுகின்றது. உச்சிகாலத்தில் விசேஷமாக பிரண்டை சாதம் 10 கிலோ நைவேத்தியம் செய்யப்படுகின்றது.

அர்ச்சனையின் போது காலை முதல் மாலை வரை 10 ஆயிரம் ஆவர்த்தி ஹோமமும் அதன் அங்கமாக ஆயிரம் ஆவர்த்தி தர்ப்பணமும் நடைபெற்று அம்பிகைக்கு மகா அபிஷேகமாக பால், பழம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்றவை செய்விக்கப்பட்டு கலசாபிஷேகம் செய்து சர்வலாங்கார பூஷிதையாக அலங்காரம், மலர் கிரீடம் தரித்து காட்சி தரும் அம்பிகைக்கு மஹா நைவேத்தியம் செய்யப்படும்.

அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் 50 கிலோ சர்க்கரை பொங்கல், 50 கிலோ புளியோதரை மற்றும் 50 கிலோ தயிர் சாதம் படைக்கப்படும் மற்றும் பஞ்ச பட்சணங்களான அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும்.

சர்க்கரை பொங்கலில் நெய் ஊற்றி நெய்க்குளம் உருவாக்கி அதில் அம்பாளின் பிம்பத்தை விழ வைத்து தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த காட்சியை காண பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருந்து கண்டுகளித்து மீண்டும் மீண்டும் தரிசித்து இன்புறுவர்.



சூரியன் அருள்புரிந்த திருமீயச்சூர் :

அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அருளும் அற்புதத்தலம் திருமீயச்சூர். அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர். இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ள தலம். திருமீயச்சூர் மற்றும் இளங்கோவில் இரண்டும் ஒரே ஆலயத்துககுள் திகழ்கின்றன. இவை சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்றன.

மூலவர் சுயம்புலிங்கத் திருமேனி (மேகநாதர்), அம்பாள் சவுந்தரநாயகி, லலிதாம்பிகை, கோபுரங்கள் கஜப்பிருஷ்ட விமான அமைப்பில் உள்ளன. இக்கோவிலின் வடக்குப் பிராகாரத்திலுள்ள இளங்கோவில் இறைவன் ஸ்ரீசகலபுவனேஸ்வரர். அம்பிகை மின்னல் மேகலாம்பாள்.

உட்பிராகாரத்தில் விநாயகர், வில்லேந்திய முருகர், பஞ்ச பூதலிங்கங்கள் தனித்தனியே அஷ்ட திக் பாலகர்கள், சப்த மாதர்கள் பூஜித்த லிங்கங்கள், சேத்ர புராணேஸ்வரர், கல்யாண சுந்தரர், துர்க்கை, சூரியன் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோவி லின் உட்பிராகாரங்களில் மொத்தம் 25 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்கே 12 ராசிகளுக்கான 12 நாகர்களையே அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். அருணனும் சூரியனும் வழிபட்ட தலம். சூரியன் சுவாமியையும் அம்பாளையும் யானை மீது வைத்து மேக மண்டலத்திலிருந்து பூஜை செய்ததால் சுவாமிக்கு மேகநாதர் என்று பெயர். எமனும், சனிபகவானும் இத்தலத்தில் சூரியனுக்கு மகன்களாகப் பிறந்தனர். சங்கு புஷ்பங்களை தாமரை இலையில் வைத்து அர்ச்சனை செய்தும், வஸ்ரவள்ளி எனப்படுகின்ற பிரண்டையால் சாதம் செய்து நிவேதித்துவம் எமன் வழிபட்டாராம்.

இன்றும் இங்கே பக்தர்கள் தங்களின் தேக ஆலோக்கியத்துக்காக, 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்தும், சங்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தும், பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்தும் கோவிலில் விநியோகித்து வழிபடுகிறார்கள்.

கிளியை தூது அனுப்பும் துர்க்கை :

திருமீயச்சூர் தலத்துக்கு நாம் எதை வேண்டி ஸ்ரீ லலிதாபர மேஸ்வரியை வழிபட வந்துள்ளோமோ அதனை ஸ்ரீ துர்க்கையிடம் “தாயே நான் இன்ன கோரிக்கையாக வந்துள்ளேன். நீதான் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் சிபாரிசு செய்ய வேணும்” என பிரார்த்தித்தால், ஸ்ரீ துர்க்கை தன் கையில் உள்ள கிளியை நமக்காக தூது செல்ல அனுப்பி வைக்கிறாள். ஸ்ரீலலிதா பரமேஸ்வரி சந்நிதி எதிரிலுள்ள கொடி மரத்தில் அந்தக் கிளி அமர்ந்து நமது கோரிக்கைகளை அம்பாளிடம் சமர்ப்பிக்கிறதாம்.

ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் சாந்தம் :

சூரியன் இங்கே மேகநாதரை வழிபட்டு கருமை நீங்கிச் செவ்வொளி பெற்று இன்புற்றார். மேகநாதர் சந்நிதி கோஷ்ட தெய்வமாக விளங்குவது சேத்திர புராணேஸ்வரர் சிற்பம். சிவசாபத்திலிருந்து விமோசனம் பெற சூரியன் திருமீயச்சூரில் தங்கினான்.

சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து, சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். சுவாமி அம்பாளின் முகவாயைப் பிடித்து நான் ஏற்கனவே கொடுத்த சாபத்தினால் இவ்வுலகம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது. நீயும் சபிக்காதே என்றார்.

இந்தக் காட்சி சேத்திர புராணேஸ்வரர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் சாந்தமாகவம் தெரியும்.

7 பிறவிகள் பாவம் தீரும் :

இங்கு ரதசப்தமி ஏகதின உற்சவம் தை அன்று நடைபெறுகிறது. பீஷ்ம பிதாமகர் முக்தி அடைந்த தினம். பரமேஸ்வரனால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் (கருமை நிறம்) நீங்கி மேகநாதரையும், லலிதாம்பிகையையும் சூரியன் வழிபட்டு சாப விமோசனம் அடைந்து முழுமையான பிரகாசம் அடைந்த தினம் இது.
ரதசப்தமி நண்பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்து அருள்கிறார். அப்போது, எருக்கம் இலை, அருகம்புல், பசுஞ்சாணம் மூன்றையும் சிரசில் வைத்து சங்கல்ப ஸ்நானம் செய்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கப் பெறும் என்பது முன்னோர் வாக்கு.

பிரண்டை சாத நைவேத்தியம் :

100 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக்காலம் உள்ளது என்பதால், சத்ய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளை சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தல விருட்சமான பிரண்டை கலந்து சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இந்த கோவிலின் ஐதீகம்.

மென்மையானவள் :

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தை அன்றாடம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்வதால் எல்லா நலன்களையும் அடையலாம். லலிதா என்பதற்கு மென்மையான என்று பொருள். லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலப மானவள் என்றும் அர்த்தம்.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
நள்ளிரவில் லலிதா சகஸ்ரநாமம்...ஸ்ரீஜோதி பால பத்ரகாளியம்மன் கோயில். !

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது கோவிலாங்குளம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், வயல்களும் பனைமரங்களும் சூழ அழகுடன் அமைந்திருக்கிறது ஸ்ரீஜோதி பால பத்ரகாளியம்மன் கோயில்.


கோவிலாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் மக்களுக்கு பத்ரகாளியம்மன்தான் இஷ்டதெய்வம், குலதெய்வம் எல்லாமே! விவசாயம் சிறப்புறத் திகழ வேண்டும் என்பதில் துவங்கி, வழக்கில் வெற்றி கிடைக்க வேண்டும், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள், பக்தர்கள்.


ஆலயத்தில் ஸ்ரீசர்வ சக்தி விநாயகர், ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீவீரபத்திரர் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.





ஆலயத்தின் ஸ்ரீசர்வ சக்திவிநாயகர், தன்னைத்தானே நிர்மாணித்துக் கொண்டதாக ஐதீகம். அதாவது, யானையானது தன் துதிக்கையால் ஸ்ரீவிநாயகரின் விக்கிரகத் திருமேனியை எடுத்து வைத்ததாகச் சொல்வர். இவரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வணங்கினால், சங்கடங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர், பக்தர்கள்.




இங்கு சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கையும் விசேஷமானவர். தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு எலுமிச்சை மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், திருமணத் தடை அகலும்; விரைவில் கல்யாண வரம் கைகூடும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.


ஸ்ரீஜோதி பாலபத்ரகாளியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. வேப்ப இலை, கீழாநெல்லி இலை, அரச இலை ஆகிய மூன்று இலைகளையும் அம்மனின் திருப்பாதத்தில் வைத்து எடுத்து, பிறகு சாறு எடுத்து அருந்தினால், விரைவில் பிள்ளை பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். தாமரைப் பூவால் அம்மனை அர்ச்சித்து வேண்டினால், விரைவில் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.


வெள்ளிக்கிழமைகளில், இங்கு நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் தங்கும். லட்சுமி கடாட்சத்துடன் வாழலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.


மாசி மகமும் மகா சிவராத்திரி நன்னாளும் இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. மகா சிவராத்திரி நாளில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகுறக் காட்சி தருவாள், தேவி. அப்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து நடைபெற, அர்ச்சனை நடந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கத்தில், அரிசியை வடித்து நைவேத்தியத்துக்கு வைத்திருப்பார்கள்.





அதிகாலை 3 மணிக்கு மகா சிவராத்திரி பூஜைகள் முடிந்து, பிறகு பிரம்ம முகூர்த்த வேளையில் அனைவருக்கும் சுடச்சுட அன்னதானம் நடைபெறும். மகா சிவராத்திரியன்று, அம்மனை தரிசித்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டால், வழக்கில் வெற்றி, கல்வியில் மேன்மை, குடும்பத்தில் நிம்மதி உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
குழந்தைப்பேறு அடைய பரிகார தலங்கள்

1527236776950.png


மனித வாழ்வில் துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் குழந்தைப்பேறு அடைய எந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

* ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம்.

* சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

* சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

* பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.

* மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

* முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.

* நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

* விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
கல்வியில் மேன்மை தரும் ஹரிப்பாடு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில்

1527237396808.png

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு எனும் இடத்தில் உள்ளது, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கேரளாவின் தென்பழனி என்று போற்றப்படுகிறது.

தல வரலாறு :

பரம்பொருளாக விளங்குபவர் ஈசன். அவரது நெற்றிக் கண்ணில் இருந்து வெளியேறிய நெருப்புப் பொறிகளில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். இவர் சிறுவனாக இருந்தபோதே, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் தொல்லைகளைக் கொடுத்து வந்த சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் எனும் மூன்று அசுரர்களையும் அழித்து வெற்றிவேலனாக வலம் வந்தார்.

சூரர்களை வதம் செய்தபிறகு பூலோகத்தை தன்னுடைய மயிலில் வலம் வந்த முருகப்பெருமானை, ஓரிடத்தில் மகாவிஷ்ணு வரவேற்றார். அப்போது முருகப்பெருமானை வாழ்த்திப் பாடல்களும் பாடினார். பின்னர் மகாவிஷ்ணு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்த இடத்திலேயே முருகப்பெருமான் கோவில் கொண்டார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

மகாவிஷ்ணு முருகப்பெருமானை வரவேற்றுப் பாடிய பாடல்கள் ‘ஹரிப்பாடல்கள்’ என்றும், அவர் பாடிய இந்த இடத்திற்கு ‘ஹரிப்பாடு’ என்றும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் பற்றியும், கோவில் அமைக்கப்பட்ட விதம் குறித்தும் மற்றொரு செய்தி சொல்லப்படுகிறது.

முன்னொரு காலத்தில் முருகப்பெருமான் சிலை ஒன்றை வைத்து, பரசுராமர் பூஜை செய்து வழிபட்டு வந்தார். அதன்பிறகு அந்தச்சிலையை ஏதோ ஒரு காரணத்தால் கந்தநல்லூரில் உள்ள கோவிந்தமட்டம் உப்பங்கழியில் விட்டுச் சென்றுள்ளார். அந்தச்சிலை பிற்காலத்தில் காயம்குளம் ஏரிப்பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

காயம்குளம் ஏரிப்பகுதியில் முருகன் சிலை இருப்பது குறித்த தகவல், அப்போதைய ஏகச்சக்கரா (ஹரிப்பாடு) நில உடைமையாளர்கள் அனைவருக்கும், ஒரே நேரத்தில் கனவாகத் தோன்றியிருக்கிறது. அதனையடுத்து அவர்கள், காயம்குளம் ஏரிப்பகுதிக்குச் சென்று அந்தச் சிலையைத் தேடியிருக்கின்றனர். அந்தத் தேடுதல் வேட்டையில் நெல்புரவுக் கடவு என்னும் இடத்தில் அந்தச் சிலை கிடைத்திருக்கிறது.

அந்தச் சிலையை நிரந்தரமான இடமொன்றில் வைக்கும் வரை, அருகிலிருந்த ஓரிடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்தச்சிலை அருகில் இருந்த கிறித்தவக் குடும்பம் ஒன்றுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் தற்போதுள்ள இடத்தில் புதிதாக ஆலயம் கட்டப்பட்டு, அந்த முருகர் சிலையை நிறுவியதாக அந்த வரலாறு சொல்கிறது.

புதியதாக கட்டப்பட்ட ஹரிப்பாடு கோவிலுக்கு முருகர் சிலையை எடுத்துச் செல்வதற்கு முன்பாக, ஆலமரத்தின் அடியில் இருந்த அந்த சிலைக்குச் சிறிது நேரம் வழிபாடு செய்யப்பட்டது. இப்படி வழிபாடு செய்யப்பட்ட இடத்திலும் ஒரு சிறிய கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை மலையாளத்தில் ‘அரை நாழிகை அம்பலம்’ (அரை மணி நேரம் கோவில்) என்கின்றனர்.



கோவில் அமைப்பு :

கேரளாவில் ‘தென்பழனி’ என்று போற்றப்படும் ஹரிப்பாடு சுப்பிரமணியசாமி கோவில், நான்கு கோபுரங்களுடன் வட்ட வடிவக் கருவறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமான் சிலை ஒரு முகத்துடன் கிழக்கு நோக்கிய நிலையில் நின்ற கோலத்தில் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். நான்கு கரங்களுடன் அருளும் இத்தல இறைவன், ஒரு கையில் வேல், மற்றொரு கையில் வஜ்ராயுதம் ஆகிய ஆயுதங் களுடனும், ஒரு கை அபய முத்திரையுடனும், மற்றொரு கையை இடுப்பில் வைத்திருப்பது போன்றும் அருள்கிறார்.

இங்குள்ள முருகப்பெருமான் ‘சுப்பிரமணிய சுவாமி’ என்று அழைக்கப்படுகிறார். இந்தச் சிலை சிவ பெருமான், மகாவிஷ்ணு மற்றும் பிரம்மன் எனும் முப்பெருங்கடவுள்களின் அருளாசிகளுடன் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இக்கோவி லில் முருகப்பெருமான் தனித்து காணப்படுகிறார். இந்த ஆலயம் திரு மணத்திற்கு முன்பாக அமைந்தது என்பதால், இங்கு வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிலைகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இக்கோவில் வளாகத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா, யட்சி, குருதிக்காமன், பஞ்சமி போன்றவர்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலில் மலையாள ஆண்டு 1096- ல் ஏற்பட்ட தீவிபத்தில் கோவிலின் பெரும்பான்மையான பகுதிகள் சேதமடைந்தன. அதன் பின்னர், அப்போதைய அரசர் சித்திரைத் திருநாள் ராம வர்மா என்பவரால், இக்கோவில் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது என்கின்றனர்.

வழிபாடுகள் :

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளிலும், முருகப்பெருமானுக்குரிய பிற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இது தவிர மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதத்தில் ஆவணிப் பெருவிழா, தனு (மார்கழி) மாதத்தில் மார்கழிப் பெருவிழா, மேடம் (சித்திரை) மாதத்தில் சித்திரைப் பெருவிழா என்று பத்து நாட்கள் கொண்ட திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. மேலும் விருச்சிகம் (கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திருநாள், இடவம் (வைகாசி) மாதத்தில் சிலை நிறுவப்பட்ட நாள், துலாம் (ஐப்பசி) மாதத்தில் கந்தாஷ்டமி, கன்னி (புரட்டாசி) மாதத்தில் நவராத்திரி மற்றும் மகரம் (தை) மாதத்தில் தைப்பூசம் போன்ற விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இக்கோவிலில் வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு கிடைத்தல், கல்வியில் மேன்மை போன்றவை கிடைக்கும் என்கின்றனர். சிறப்பு மிகுந்த இந்த ஆலயம் தினமும் காலை 4 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து திருவனந்த புரம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஹரிப்பாடு நகரம். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆலயத்தைச் சென்றடைவதற்கு ஆட்டோ வசதி உள்ளது. ஆலப்புழையிலிருந்து ஹரிப்பாடு செல்ல அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
குறைவில்லா வாழ்வருளும் குழந்தை வேலன்!--பூம்பாறை குழந்தை வேலன் ஆலயம் !!





சித்தர் போகர் மக்கள் அனைவரும் பயனுரும் வகையில் நவபாஷாணத்தால் பழிநி பாலதண்டாயுதபாணியை உருவாக்கினார்.

அப்படி உருவாக்குவதற்கு கொடிய விஷத்தன்மை கொண்ட பாஷாணங்களை ஒன்று திரட்டி, ஒரு குறிப்பிட்ட கலவையில், குறிப்பிட்ட நாளில் அவற்றை சேர்த்து செய்தார். முதலில் தச (பத்து) பாஷாணங்களைச் சேர்த்து ஓர் அழகான தசபாஷாணச் சிலையை உருவாக்கினார்.

அதன் வேகம் (உக்ரம்), சூட்டுத் தன்மை, எதிர்பார்த்ததைவிட கடுமையாக இருந்தது. தான் வசித்து வந்த பழநிமலை வனப் பகுதியில் இதனை நிறுவிவிட முடிவு செய்தார்.

ஆனால் இவ்வளவு சூட்டுத் தன்மை கொண்ட சிலையை பொது இடத்தில் வைத்தால் ஏதேனும் தவறு நேர்ந்துவிடும் என்பதால் இந்த தசபாஷாண முருகனை, வருடம் 365 நாள்களும் 15 முதல் 20 டிகிரி வெப்பமே உள்ள பழநி மலையில் மிக உயரமான, பூம்பாறை என்ற கிராமத்தை தேர்வு செய்து, அங்கு இச்சிலையை பிரதிஷ்டை செய்தார். அதன் பின்னரே, நவபாஷாண சிலையை செய்து பழநி மலையில் நிறுவியுள்ளார்.

பூம்பாறையில் குழந்தை வேலன் ஆலயம் என்ற பெயரில் உள்ள முருகன் ஆலயம், பழநி முருகன் தேவஸ்தானத்தின் நேரடி நிர்வாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தைப்பூசம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு தம்பதி, தனக்கு வேலப்பனே மகனாகப் பிறக்க வேண்டுமென தவமிருந்தனர். அவர்களின் வேண்டுதல் பலித்து ஓர் அழகான ஆண் மகன் பிறந்தான். இதனை கொண்டாடிய அந்த தம்பதி அனைவருக்கும் சாக்லெட்டை தந்து மகிழ்ந்தனர்.

அன்றிரவு அவர்களின் கனவில் வந்த குழந்தை வேலன் "எல்லோருக்கும் சாக்லெட்டை தந்தாயே எனக்கு தரவேண்டுமென்று தோன்றவில்லையா?' எனக்கேட்டு மறைந்தாராம். உடனே அவர்கள் சாக்லெட்டை வாங்கி படைத்துள்ளனர். அன்று தொடங்கிய சாக்லெட் நிவேதனத்தை பக்தர்கள் இன்றும் தொடர்கின்றனர்.

இப்போது உலகளவில் பேசப்பட்டு வரும் அக்குபஞ்சர் வைத்திய சிகிச்சை முறையை போகர் தான் ஏற்படுத்திக் கொடுத்தவர் என்றும்; அதற்கு சான்றாக இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது சிலையினை கூர்ந்து கவனித்தால் சின்ன சின்ன புள்ளிகள், துவாரங்கள் இருப்பதையும் காணலாம்.
பூம்பாறை குழந்தை வேலன் ஆலயக்குருக்கள், பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் அபிஷேக சந்தனத்தையும், தீர்த்தத்தையும் பிரசாதமாகத் தருகிறார். சிலர் அதனை கண்ணாடி பாட்டிலில் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை சாப்பிட்டால் அது மாமருந்து.

அதுவே ஏதேனும் ப்ளாஸ்டிக் பாட்டிலில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்திருந்தால், விஷத்தன்மை பெற்றுவிடும் என அறிவுறுத்தி சொல்லிய பிறகே கொடுக்கிறார்.

28.5.2018 - அன்று வைகாசி விசாகம் . அன்றைய தினம் பூம்பாறை குழந்தை வேலனை தரிசித்து அருள் பெறலாம்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கொடைக்கானலில் இருந்து பூம்பாறை வழியாகச் செல்கின்றன.
தொடர்புக்கு: 94441 51068 / 94423 98231.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்!--வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்!!

ரன் வாசல் தேடி வர... கெட்டிமேளம் கொட்ட.. வள்ளியூருக்கு வந்து வள்ளிமணாளனை தரிசிப்போம்.

'இல்லறமல்லது நல்லறமன்று' என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், பலருக்கும் பல்வேறு காரணங்களினால் திருமணம் தடைப்படுகிறது. திருமணத் தடை நீக்கி, இனிய இல்லற வாழ்க்கை அருளும் பல திருத்தலங்கள் இருந்தாலும், அவற்றுள் தனிச் சிறப்பு மிக்கதாகத் திகழ்கிறது வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 'தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயது வந்தும் திருமணம் தடைப் பட்டுக்கொண்டே வருகிறதே' என்று கலங்கும் பெற்றோர்களின் மனக்குறையைத் தீர்க்கவென்றே அழகன் குமரன் கோயில் கொண்ட தலம் வள்ளியூர் திருத்தலம்.

தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய குகைக் கோயில் இது. வள்ளியூர்க் குகையில் அமைந்திருக்கும் இந்தக் குடைவரைக் கோயிலில்தான் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக அருளாட்சி செலுத்துகிறார்.

இந்தத் தலத்தில் அருளும் கந்தக் கடவுளை இந்திரன், அகத்தியர், இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். 'வண்ணச்சரபம்' தண்டபாணி தேசிகர், வள்ளியூர் வள்ளி மணாளனிடம் மனதைப் பறிகொடுத்து, மனமுருகி பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.





அகத்தியருக்கு குருவாகி நின்ற முருகப் பெருமான்...

தென் பகுதிக்கு வந்த அகத்திய முனிவர், இந்தக் குன்றில் வள்ளி பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டார். முருகப்பெருமான் குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று உபதேசிக்க, அகத்திய முனிவர் சீடரின் நிலையிலிருந்து மேற்கு முகமாக நின்று உபதேசம் பெற்ற தலம். உபதேசம் பெற்ற பிறகு, அந்தக் குன்றை பிரதட்சிணமாக கிரிவலம் வந்து கந்தக் கடவுளை வழிபட்டார்.

கிரிவலம் வரும் வழியில், குகையின் தென் பகுதியில் ஒரு பெண் சோகத்துடன் நிற்பதைக் கண்டு, அருகில் சென்று பார்த்தார். அங்கே நின்றுகொண்டிருந்தது தெய்வானை பிராட்டி என்று தெரிந்துகொண்ட அகத்தியர், 'தாயே, ஏன் சோகமாக நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்.

முருகப் பெருமானைக் காண வந்த தன்னை, வள்ளி அனுமதிக்காததால், தான் வெளியில் நிற்பதாக மனவருத்தத்துடன் கூறினார் தெய்வானை பிராட்டி. அதைக் கேட்ட அகத்தியர், தெய்வானை பிராட்டியை சமாதானப்படுத்தி, முருகப் பெருமானிடம் அழைத்துச் சென்றார். வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்த முருகப் பெருமான், அவர்களிருவரும் திருமாலின் கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் சகோதரிகள் என்பதை உணர்த்தினார். மேலும், அவர்களே தற்போது தெய்வானையாகவும் வள்ளியாகவும் தோன்றி தன்னைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று தெரிவித்து, அவர்களுக்கு சடாட்சர மந்திரத்தை உபதேசித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சமாதானமாகி முருகப்பெருமானுக்கு இரண்டு புறங்களிலும் நின்று அகத்தியருக்கு அருள்புரிந்தனர். அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தினால் முருகப் பெருமான், 'ஞானஸ்கந்தன்' என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியர், இந்த அற்புதக் காட்சியை தரிசித்தது பங்குனி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம் கூறும் செய்தி.





கோயிலில் அருளும் தெய்வ மூர்த்தங்கள்

ஒளி பொருந்திய திருமுகத்துடன், நான்கு திருக்கரங்களில் மேலிரு கரங்களில் வஜ்ஜிரம், சக்தி ஆயுதங்களையும், கீழிரு கரங்களில் வலக் கரத்தில் மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் காட்சி அருளும் முருகப்பெருமானின் பேரழகை தரிசித்தபோது, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனின் அழகில் மனதைப் பறிகொடுத்ததில் வியப்பொன்றும் இல்லையென்றே சொல்லலாம். மேலும் வள்ளி, தெய்வானையும்கூட இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள். இதுவும் இந்தக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்பு. கருவறைக்கு அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுக நயினார் காட்சி தருகிறார். அருகில் கன்னிமூல விநாயகர், வீரபாகு, வீரமகேந்திரனும் காட்சி தர, எதிரில் மயிலும் வலப் புறத்தில் ஒரு குகையும் காணப்படுகின்றன.

குகையின் வாயிலில் விநாயகப் பெருமான், மலைதாங்கி சாஸ்தா, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. முன்புறத்தில் இடைக்காடரும், எட்டு சக்திகளின் பீடங்களும் உள்ளன. உற்சவ மூர்த்தியாக சுப்பிரமணியர், வள்ளி ஆகியோரின் மூர்த்தங்கள் இருக்கும் சந்நிதிக்கு அருகில், வள்ளி நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். அருகிலேயே பள்ளியறை அமைந்திருக்கிறது. மூலவர் சந்நிதிக்கு இடப்புறம் ஜயந்தீஸ்வரர், சௌந்தரநாயகி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் காட்சி தருகின்றனர்.

முருகன் சந்நிதியையும், வள்ளி சந்நிதியையும் இணைத்து மயில் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் வள்ளியின் திரு அவதாரக் காட்சியின் சில பகுதிகள் கல்தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன.





சரவணப் பொய்கை

வள்ளி பிராட்டி கேட்டுக்கொண்டபடி முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை ஊன்றி உருவாக்கிய தீர்த்தக் குளம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடுவதுடன், தங்கள் வீடுகளுக்கும் புனித நீர் எடுத்துச் செல்கின்றனர். சாபத்தால் நாயாகப் பிறந்த கனகவல்லி என்ற பெண்ணும், ஒரு வேடனும் இந்த சரவணப் பொய்கையில் நீராடி முக்தி அடைந்ததாக தலவரலாறு.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று கொடியேற்றத்துடன் 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 9-ம் நாள் தேரோட்டம் நடைபெறும். வைகாசி மாதம் 10 நாள்கள் வசந்தத் திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 10 நாள்கள் நடைபெறுகிறது. 8-ம் நாள் இரவு தாரகாசுர வதம் நடைபெறுகிறது. மற்ற தலங்களில் தெய்வானை திருமணம் நடைபெறும். ஆனால், இந்தத் தலத்தில் வள்ளித் திருமணம் நடைபெறுகிறது. ஊரின் பெயரே வள்ளியின் பெயரால் அமைந்த வள்ளியூர் என்பதால், வள்ளிக்குத்தான் இந்தத் தலத்தில் மிகுந்த முக்கியத்துவம் போலும்! கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்று இரவில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

பிரார்த்தனைச் சிறப்பு:

செவ்வாய், கார்த்திகை, வளர்பிறை சஷ்டி ஆகிய நாள்களில் மூலவர் சுப்பிரமணியருக்கும் தனிச் சந்நிதியில் அருளும் வள்ளி பிராட்டிக்கும் பாலபிஷேகம் செய்து, சுவாமிக்கு வெண்பட்டும் பிச்சிப் பூ மாலையும், வள்ளி பிராட்டிக்கு மஞ்சள் பட்டும் சிவப்பு அரளி அல்லது ரோஜாப்பூ மாலையும் அணிவித்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் விலகும் என்பது ஐதீகம். மூலவர் சுப்பிரமணிருக்கு ருத்ராபிஷேகம் செய்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் வழிபட்டால் குஷ்டம் மற்றும் தோல் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.

மலையைக் குடைந்து குகைக்குள்ளே காட்சி அளிப்பதால், மூலவரைச் சுற்றி வர வேண்டும் என்றால் மலையைத்தான் சுற்றி வர வேண்டும். இதனால் கிரிவலம் வந்த புண்ணியமும் கிடைப்பது சிறப்பு. பெளணர்மிதோறும் ’ஓம் சரவண பவ’ என்ற சரவண மந்திரத்தை சொல்லிக்கொண்டே பக்தர்கள் கிரிவலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.



கோயிலைப் பற்றிய சின்னச் சின்ன செய்திகள்:

பரசுராமர் தவம் செய்த மகேந்திரமலை இந்த ஊருக்கு மேற்கில்தான் அமைந்திருக்கிறது.

திருமாலின் வாமன அவதாரம் எடுத்த ‘வாமன க்ஷேத்திரம்’ என்ற திருக்குறுங்குடியில் வரம் தந்து வாழ வைக்கும் 'திருப்பாற்கடல் நதி' என்ற 'நம்பி ஆறு' இந்த ஊருக்கு வடக்கில்தான் பாய்ந்து ஓடுகிறது.

புராணக் காலத்தில் அகத்தியரின் சாபத்தால் 'கிரௌஞ்ச அசுரன்' மலையின் உருவத்தில் இருந்தான். முருகப்பெருமானின் வேல் பட்டதும், அந்த மலை மூன்று துண்டுகளாகச் சிதறியது. அதில் தலைப் பகுதி விழுந்த இடம்தான், 'வள்ளியூர் குன்று' என்கிறது தலபுராணம்.

குன்றின் மீது முருகப் பெருமானுடைய வேலின் ஒளிபட்டு பூரணம் பெற்றதால், இந்த மலைக்கு 'பூரணகிரி' என்ற பெயரும் உண்டு.
திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் மகேந்திரகிரி மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இவ்வூர் ’வள்ளியூர்’ என்றானது.

வள்ளியூரை ஆண்ட 'அற்பகன்' என்ற அரசன், தன் மனைவி மகாபாகையுடன் மகேந்திரகிரி மலையில் குழந்தை வரம் வேண்டி தவம் இருந்தபோது, அங்கு வந்த பரசுராமர், வல்லிக்கொடி ஒன்றை அரசனிடம் கொடுத்தாராம். அந்தக் கொடி பெண் குழந்தையாக மாற, வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தாராம். இந்த நகரை வள்ளி ஆண்டதால், 'வள்ளி மாநகரம்' எனவும் அழைக்கப் படுகிறது.

எப்படிச் செல்வது..?

நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது வள்ளியூர்.

வள்ளியூர் ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது, வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

கோயில் நடை திறப்பு நேரம் :

காலை - 5.30 மணி முதல் 12.30 மணிவரை
மாலை - 5.30 மணி முதல் 8.30 மணி வரை
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
ஆரூரா... தியாகேசா கோஷத்துடன் தொடங்கிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆரூரா... தியாகேசா முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.








உலகப் புகழ்பெற்றதும் சைவ ஸ்தலங்களின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகப் பிரசித்திப் பெற்றதும் பிரமாண்டமானதும் தமிழகத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோவில்களில் உள்ள ஆழித்தேர்களில் முதன்மையானது திருவாரூர்தியாகராஜர் கோயில் தேர். மன்னார்குடி மதிலழகு; திருவாரூர் தேரழகு என்பது பழமொழி. 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடைகொண்டது திருவாரூர் ஆழித்தேர். ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பிறகு ஆழித்தேரோட்டம் நடப்பது வழக்கம்.

இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு திருவாரூர் சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடரந்து காலை 6.30 மணிக்கு சன்னதி தெரு எதிரே அமைந்துள்ள தேரடியிலிருந்து ஆழித்தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆருரா, தியாகேசா என்று விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்தனர். ஆழித்தேர் அலங்கார தொம்பைத்துணி அசைந்தாட வந்ததைக் கண்டு, பக்தர்கள் மெய்சிலிர்க்கத் தரிசனம் செய்தனர். தேர் வருகையில் அதிர்வேட்டுகளும், ஆரூரா தியாகேசா முழக்கங்களும் ஒலிக்க நான்கு வீதிகளிலும் ஆழித்தேர் வலம் வந்து கொண்டுடிருக்கிறது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் - களக்காடு

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக் களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர்.


தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் 'சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.


சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, 'சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு 'சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு.


ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு 'சத்திய தீர்த்தம்’ என்று பெயர்.





பக்தர்களால் பெரியகோயில் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர், ஸ்ரீகோமதி, ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீ துர்கை, ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசிவிசுவநாதரச்ர்


ஸ்ரீ விசாலாட்சி ஆகியோருடன் சனீஸ்வரர், பைரவர், சந்தன நடராஜர், ஆடல்வல்லான், கஜலட்சுமி, விநாயகர், ஆஞ்சநேயர், சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம்.


சிற்பங்களும், இசைத் தூண்களும்...


சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.





கோயில் வெளிப் பிராகாரத் தில் அந்நாளில் பயன்படுத்தப் பட்ட தானியக் கூடம் ஒன்று இன்றைக்கும் வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.இத்திருத்தலத்தில் மகாபாரதக் காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை மூலிகை வண்ணக் கலவைகளால் தீட்டப்பட்டவை ஆகும். இத்தகைய வண்ண ஓவியங்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களை நிகர்த்தவை என்று கூறப்படுகிறது. கோயிலின் முன் வாயிலில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த வீரமார்த்தாண்டவர்மனுடன், சுந்தரரும் சேரமான் பெருமானும் உள்ளனர்.





அற்புதம்...


தொன்மையான இக்கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 20, 21, 22
ஆகிய மூன்று நாட்களிலும், கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத் திருமேனி மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுகின்றன.


சுரங்கப் பாதை...


இக்கோயிலில் சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. இந்தப் பாதை திருப்புடைமருதூர் கோயிலுக்கும், களக்காடு 'நினைத்ததை முடித்த விநாயகர்' கோயிலுக்கும் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுரங்கப் பாதையில் ரகசிய அறை ஒன்றும் உள்ளது. இந்த அறைக்குக் காற்றும், வெளிச்சமும் நன்றாக வருகிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. பண்டைய கட்டடக் கலையின் உன்னதத்துக்கு எடுத்துக்காட்டாக இதைக் கூறலாம்.


புன்னை மரம் தலவிருட்சமாகவும், பச்சையாறு தீர்த்தமாகவும் அமையப் பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு, மகாசிவராத்திரி, மாசிமகம் முதலான புண்ணிய தினங்களில் வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
வேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர்!

ங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள புதுச்சேரி நகரத்துக்கு வேதபுரி, வேதவனம் ஆகிய பெயர்களும் உண்டு. பழைமையான இவ்வூரின் பெயரையே தனது திருப்பெயராகவும் ஏற்று, இங்கே திருக்கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வேதபுரீஸ்வரர். அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி.





சித்தர்கள் மற்றும் ஞானிகளால் போற்றப்பட்ட திருத்தலம் என்கிறார்கள் பக்தர்கள். கந்தப்ப முதலியார் என்ற சிவபக்தர் கொடையாக அளித்த இடத்தில், 1788-ம் ஆண்டில் ஆலயம் எழுப்பினர் பொதுமக்கள். அங்கே எழுந்தருள்விக்கும் பொருட்டு, சிவலிங்கம் செய்வதற்கும் ஏற்பாடு ஆனது. இந்த நிலையில் ஆலயத் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுயம்பு மூர்த்தியாக வெளிப்பட்டார் ஸ்ரீவேதபுரீஸ்வரர். அவரையே கருவறையில் எழுந்தருளச் செய்தனர் பெரியவர்கள்.

ஒருசில தினங்களில், ஏற்கெனவே செய்யச் சொல்லப்பட்டிருந்த சிவலிங்க மூர்த்தமும் வந்துசேர, அவரை ஸ்ரீபக்தபுரீஸ்வரர் என்ற பெயரில் ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.

`` கருணைப் பொழியும் கடைக்கண்ணாள் அன்னை ஸ்ரீதிரிபுரசுந்தரியுடன், அப்பன் ஸ்ரீவேதபுரீஸ்வரப் பெருமான் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலித்து வருகிறார். பக்தர்களின் மனக் குறைகளை நிவர்த்தி செய்து, அவர்களின் மனதில் சாந்தத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தும் அற்புத தெய்வம் இவர்'' என்று சிலிர்ப்பும் சிலாகிப்புமாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். சிவராத்திரி, திருவாதிரை, சோமாவாரம் மற்றும் பிரதோஷ தினங்களில் இந்த ஆலயத்துக்குச் சென்று வில்வம் சமர்ப்பித்து ஸ்வாமியையும் அம்பாளையும் வணங்கி வழிபட்டு வர, சகல காரியங்களும் ஸித்திக்கும்; நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.





இத்தகு மகிமை மிகுந்த சிவாலயத்தில்தான் சக்தி விகடன் - ஸ்ரீதீபம் ஆயில் நிறுவனம் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. சிவாலயச் சந்நிதியில், அணையும் நிலையில் இருந்த தீபத்தின் திரியைத் தூண்டிவிட்டதாம் ஒரு எலி. அதன் பலனாக மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியம் கிடைத்தது என்கின்றன ஞானநூல்கள். அறியாமல் திரியைத் தூண்டிவிட்டதற்கே இத்தகைய பேறு வாய்த்தது எனில், சிவ மகிமையை அறிந்து உள்ளம் நிறைந்த பக்தியோடு நாம் செய்யும் திருவிளக்குப் பூஜைக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்?! வாருங்கள்... புதுச்சேரி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவோம்; சிவனருளால் சிந்தை மகிழ வரம் பெறுவோம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,174
Likes
3,170
Location
India
காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

அஷ்ட பைரவர்கள் லிங்கங்களாக அருளும் வயிரவி வனம்!

திருப்புகழில் ஒரு பாடல், வயிரவி வனம் எனும் திருத்தலத்தைப் போற்றுகிறது. `வாசனை மலர்களால் நறுமணம் வீசும் மரங்கள் சூழ்ந்துள்ள ஊர் இது. வயல்களின் அருகில் நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகள் உள்ளன. இப்படியான வளப்பம் மிகுந்த கரைகளுடன்கூடிய சரஸ்வதி எனும் நதிதீரத்தில் விளங்கும் வயிரவி வனம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே’ என்று அங்கு அருளும் முருகனைத் துதிக்கிறது அந்தப் பாடல்.





அருவரை எடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊனும்
அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே
அலைகடல் அடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரும்
அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே.



பருதியின் ஒளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோன்ப
னிருகர மிகுத்த பார முருகா நின்
பதமலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே



சுருதிகள் உரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி
சொலுவென உரைத்த ஞான குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்துமீள
துணிபட அரக்கர்மாள விடும்வேலா



மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு பெருமாளே.


இதில் விளக்கப்படும் வயிரவிவனம் எனும் ஊர், பஞ்சாப் மாநிலத்தில் சரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகத் தெரிகிறது என்று தணிகைமணி அவர்கள் திருப்புகழ் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சரஸ்வதி நதி என்பது நெடுங்காலத்துக்கு முன்பே பூமிக்குள் (அந்தர்வாகினி) சென்றுவிட்டது. வட இந்தியாவில் வயிரவி என்பதை பைரவி என்றே அழைப்பர். நமது தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் வயிரவன், வயிரவி என்றுதான் காணப்படும். ஆக, இப்பாடலின் பொருளை நோக்கும்போது, இத்தலம் தமிழகத்திலேயே இருக்கலாம் என்ற சிந்தனையில் வயிரவிவனத்தின் அமைவிடத்தை ஆய்வு செய்தபோது சுவையான பல தகவல்கள் கிடைத்தன.





காஞ்சிபுரத்தில் பிள்ளையார்பாளையம் பகுதி யில் ஸ்ரீசோளீச்வரர் - வயிரவேச்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திசைக்கு ஒருவராக... சம்ஹாரர், அதிசாங்கர், சண்டர், குரு, குரோதனர், உன்மத்தர், கபாலர், பிட்சணபைரவர் ஆகிய அஷ்ட பைரவர் களும் எட்டுத் திக்குகளிலும் லிங்க வடிவில் சந்நிதி கொண்டிருப்பது, இக்கோயிலின் சிறப்பம்சம்.

`பைரவர்' என்ற சொல்லுக்கு தன்னை வழிபடு பவர்களின் துக்கத்தையும் அதற்குக் காரணமான பாவங்களையும் நீக்குபவர் என்றுபொருள்.

இத்திருக்கோயிலில் நுழையும்போது, இடது புறம் விநாயகரும் வலப்புறம் மயில்மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமானும் அருள்பாலிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மிகப்பெரிய பரப்பில் அமைந் திருந்த இக்கோயில் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப் பட்டு, தற்போது மிகவும் குறுகி காணப்படுகிறது. மேலும், அருணகிரிநாதர் விவரிக்கும் வயிரவி வனத்தின் வளமும் செழுமையும் இங்கே நிறைந்து திகழ்ந்தன என்பதையும் இப்போதும் தென்படும் செழிப்பைக் கண்டு யூகிக்க முடிகிறது. கோயில் அருகிலேயே வேகவதி நதியும் பாய்கிறது என்பது முக்கியமான செய்தியாகும்.

`ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகள்’ எனும் மகான் இப்பகுதியில் உள்ள திருவாவடுதுறை ஆதின திருமடத்தில் தங்கியிருந்து காஞ்சி புராணத்தை எழுதினார் என்பர். அதில் காஞ்சியில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களின் விவரங் கள் காணக் கிடைக்கின்றன.

காஞ்சியில் நான்முகன் மிகப்பெரிய வேள்வி செய்ய முற்பட்டார். அதை விரும்பாத சரஸ்வதி, தன் வடிவை மாற்றி நதியாகப் பெருக்கெடுத்து பாய்ந்துவந்தாள். இதை நாரதர் மூலம் அறிந்த பிரம்மன் சிவனாரைச் சரணடைந்தார். சிவபிரான் திருமாலை அழைத்து, ``சரஸ்வதியை (நதியை) தடுத்து பிரம்மனின் யாகத்தைக் காப்பீராக’’ எனக் கேட்டுக்கொள்ள, அதன்படி சரஸ்வதி நதியைத் தடுத்து கடல்நோக்கிச் செல்லும்படி செய்தார் திருமால். அதனால் அவருக்குச் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ எனும் திருப்பெயர் வந்தது (விஷ்ணு பக்தன் கணிகண்ணன் தொடர் பான வேறொரு வரலாறும் உண்டு).





மேலும், ``சரஸ்வதி நதி, வலிய வினைகளை அழிக்கும் விதம் `வேகவதி நதி’ என்ற பெயரில் இந்நிலத்தில் ஏற்றமுற்று, தன்னில் மூழ்கி நீராடும் அன்பர்களுக்கு இன்ப வாழ்வளிக்கும்’’ என்றும் சிவனார் வாழ்த்தினார். மேற்படி செய்திகள் அனைத்தும் காஞ்சி புராணம் - சிவாத்தானப் படலத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.


`மேற்படு கலைமகள் நதி யென வேற்றுரு வுறுசால்பிற்(கு)
ஏற்புற அவயவம் அவைகளும் ஏத்தெழில் உருமாறித்
தோற்றிய வென அறல் மிசைவரு தூத்திரள் மணிமலர்கள்
போற்றுறு பலகொடி யுடன் எழில் பூத்தண வது நதியே’

`வேள்வி நீவரதராச உயர் வேள்வி இறைநாம்
வாழி அம்மகம் அழிப்பநதி வாணி வரலால்
காழ றக்கடிது காத்திடுதி என்று கருதார்
யாழி மும்மதில் அழித்தவர் பணித்தருளலும்’

`சொன்ன வண்ணம் செய்த நீ சொன்ன வண்ணம் செய்தவன்
என்ன என்றும் ஓங்குதி இத்திருப் பெருநதி
வல்வினை எலாம் விட்டு வேகவதி என
இந்நிலத்தினிற் சிறந் தின்ப வாழ் வளிக்கவே'


மேற்கண்ட புராணப் பாடல்களை நோக்கும் போது, அருணகிரியார் பாடிப்பரவிய ‘சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவிவனம்’ எனும் தலம், காஞ்சி யிலுள்ள வயிரவேஸ்வரர் திருக்கோயில் என்பதை உணர்ந்து வழிபட திருவருள் கூட்டியுள்ளது.

திருப்புகழ்த் தல வரலாற்றில் விளக்கம் காண முடியாமல் இருந்த `சரஸ்வதி நதிக்கரை வயிரவி வனத்’தைப் பற்றிய தெளிவான விளக்கத்தை, காஞ்சிபுராணம் நமக்கு உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி திருப்புகழ் அடியார்கள் காஞ்சிபுரம் செல்லும்போது வயிரவி வனத்தில் மேவும் வடிவேலனையும் வழிபட்டு பேறு பெறலாமே!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.