ஆலயம் அறிவோம் !---நட்சத்திரக்காரர்கள் வழி&#29

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
மூலவர்: அருள்மிகு பூமீஸ்வரர்

அம்பிகை: அருள்மிகு கிரிஜாம்பிகை

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சோி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ளது புராதனமான மரக்காணம் பூமீஸ்வரா் திருக்கோயில். சென்னை திருவான்மியூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 8:30 மணி வரை.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India



தத்புருஷ தரிசனம்!

கருணைக் கடலான பூமீஸ்வரா் இந்தத் திருத்தலத்தில் கிழக்கு திருமுக மண்டலத்தில் அருள்பாலிக்கின்றாா்.


ஈசனின் கிழக்கு நோக்கிய `தத்புருஷ' வடிவிலான இந்தத் திருக்கோலத்தைப் பணிந்து வணங்குபவா்கள், என்றும் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று ஏற்றம் பெறுவாா்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
திருப்பங்கள் தரும் திரிசக்கர தரிசனம்!

மூன்று அம்பாள்கள்... மூன்று மஹான்கள்... மூன்று தலங்கள்

1529204513845.png

சக்தியை வழிபட்டால், இக்கலியுகத்தில் வரும் சங்கடங்களை எதிர்கொண்டு விலக்கிக்கொள்ள முடியும் என்பது பெரியோர்களின் அறிவுரை. அந்த சக்தியை வழிபடுவதற்கும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று, தான் பாடிய சௌந்தர்யலஹரியில் ‘ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி’ என்ற வாக்கி யத்தால் உணர்த்தி இருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

முற்பிறவி கர்மவினையின் காரணமாக இப்போது நமக்கு மனிதப்பிறவி வாய்த்திருக்கிறது. இப்பிறவியில் நமக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு கைகளால் இறைவனுக்குத் தீபங்கள் ஏற்றி வைக்கவேண்டும். மலர்களை எடுத்து பூஜை செய்தல் வேண்டும். இரண்டு கால்களால் இறைச் சக்திகள் உறைந்திருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று திருச்சுற்று வந்து வணங்குதல் வேண்டும். அவன் நமக்குப் பேசும் சக்தியைக் கொடுத்திருப்ப தால், இறைவனின் திருநாமத்தை உச்சரித்துப் பிரார்த்திக்க வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் ஆலய தரிசனங் களில், நவகிரகத் தலங்கள் தரிசனம், சிவத் தலங்கள் தரிசனம், சக்தி தேவியர் தரிசனம் என்று பலவகை தரிசனங்கள் உள்ளன. இத்தகைய தலங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய தலங்களாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரிசைக்கிரமத்தில் அமைந்தி ருக்கும் தலங்களாகவோ அமைந்திருக்கும்.

அந்த வகையில் ‘திரிசக்கர தரிசனம்' என்று பக்தர்களால் போற்றப்படும் - ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் மூன்று அம்பாள் கோயில்கள், அவசியம் நாம் தரிசிக்க வேண்டியவை ஆகும்.

திரிசக்கர தரிசனம்

வள்ளலார் சுவாமிகளால், ‘தருமமிகு சென்னை’ என்று போற்றப்பட்ட சென்னை யில், ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள மூன்று சக்தித் தலங்களை ஒரே நாளில் தரிசித்து அருள்பெறும் விசேஷ வழிபாடுதான் திரிசக்கர தரிசனம் ஆகும்.

திருவேற்காடு ஸ்ரீகருமாரி அம்மன், மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் ஆகிய மூன்று சக்தி ஸ்தலங்களும், சுமார் 12 கி.மீ. தூரத்துக்குள் ஒரே வரிசையில், 12 ராசிகளைச் சேர்ந்த வர்களும் தரிசித்து பலன் பெறும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சக்திகளின் அருட் கோலங்களைப் பற்றி அகத்தியர் நாடியின் ருத்ர சம்வாத சருக்கப் பகுதியில் கலியுக க்ஷேத்திரப் பரிகார காண்டப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





சக்தியின் மகிமையைக் கூறும் நூல்களில் ரேணுகாதேவியின் திருக்கதையில் ஸ்ரீகருமாரி அம்மன் சிறப்புகளும், ஸ்ரீசண்டிகா வழிபாட்டு முறையில் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகிமைகளும், தேவி மகாத்மியப் பகுதியில் ஸ்ரீகாத்யாயனி தேவியின் புகழும் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

லலிதா சகஸ்ரநாமத்தில் திரிசக்கர சக்திகள்

பெண்கள் திருவிளக்கு பூஜை செய்யும் போது, அவர்கள் கூறும் சகஸ்ரநாம அர்ச்சனையில் திரிசக்கர தரிசன சக்திகள் இடம்பெற்றுள்ளனர். அதில், 616-வது நாமாவளியில் ‘ஆதிசக்தியை நம:' என்று தேவி கருமாரி அம்மனையும், 63-ம் நாமாவளி யில் ஸ்ரீகாமாட்சி தேவியையும், 557-வது நாமாவளியில் ஸ்ரீகாத்யாயனி தேவியையும் போற்றுவதாக உள்ளது.

அத்துடன்... முச்சக்தி தரிசனம், முச்சக்தி வேட்டல் என்று பக்தர்கள் கொண்டாடும் இந்த திரிசக்தி தரிசனத்தின்போது, மூன்று தேவியரின் பேரருளுடன் மூன்று குரு தேவர்களின் திருவருளும் நமக்குக் கிடைப்பது மிகவும் விசேஷம் ஆகும்!

காக்கும் தேவி கருமாரி

திருவேற்காடு கோயிலுக்குள் சென்றதும் முதலில் விநாயகரை வணங்கி, திரிசக்கர தரிசனம் விக்கினம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, கருவறைக்குச் சென்று கருமாரி அம்மனைத் தரிசித்து மூன்று நெய் தீபங்கள் ஏற்றி மாரியின் தியானத்தை மும்முறை கூறுதல் வேண்டும்.

அருணமணி நியாங்கம் அக்னி கெசம் கரண்டம்
டமருக துதசூலம் கட்க ஹஸ்தம் கபாலம்
அநல நயன நாகம் ஆஸனம் பத்ம பீடம்
அகில புவன மாதர் சீதனா தேவி மீடே!

பின்னர் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, புற்று மண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, பிராகார வலம் வந்து பரிவார மூர்த்திகளையும் வணங்கவேண்டும். பின்னர், கருமாரி அம்மன் துதிப் பாடல்களைப் பாடியபடி புஷ்கரணிக்குச் சென்று சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ளவேண்டும். அங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வேதபுரீஸ்வரரையும், அவருக்கு எதிரில் தலத்தின் குருநாதரான மூர்க்க நாயனாரையும் வணங்கி அருள் பெறவேண்டும்.





திருவேற்காடு தலத்துக்கும் குன்றத்தூர் தலத்துக்கும் நெடுங்காலமாகவே ஓர் ஆன்மிகத் தொடர்பு உண்டு, இந்த தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்த அநபாயச் சோழனும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் பாதயாத்திரையாகச் சென்று ஆலயப் பணிகளைச் செய்து வந்ததைக் குறிப்பிடும்படியாக வேதபுரீஸ்வரர் சந்நிதிக்குப் பின்புறம் உட்பிராகாரத்தில் லிங்கோத்பவ மூர்த்திக்கு எதிரில் தெய்வச் சேக்கிழாரையும் அநபாயச் சோழனையும் சிலையாக வைத்திருக்கிறார்கள்.

கருணை நாயகி காமாட்சி

திருவேற்காடு தரிசனத்துக்குப் பிறகு, அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள மாங்காடு - தேவி ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.கோயில் கொடி மரத்தில் மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து கருவறைக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மகாமேருவை தரிசித்து, சப்த மாதர்களையும் வணங்கி, மஞ்சள் குங்குமத்துடன் எலுமிச்சங்கனியை அருட் பிரசாதமாகப் பெற்று காமாட்சி தேவியின் தியானத்தை மூன்று முறை கூற வேண்டும்.

ஓம் சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே
குங்கும ராக சோனே புண்ட்ரேஷு பாசாங்குச புஷ்ப
பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத:

இத்தலத்தில் அர்த்த மகாமேருவைத் தரிசிக்கும்போது ஆதிசங்கரரின் குருவருளைப் பெறுகிறோம்.

கல்யாண தேவி ஸ்ரீகாத்யாயனி

மாங்காடு தரிசனம் முடிந்ததும், அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் குன்றத்தூரின் தென் பாகத்தில் உள்ள கல்யாண வரம் தரும் ஸ்ரீகாத்யாயனி அம்மன் சந்நிதிக்குச் செல்லவேண்டும். குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து திருநீர்மலைக்குப் பிரியும் தார்ச் சாலையில் அரை கி.மீ தூரத்தில் ஸ்ரீகாத்யாயனி சந்நிதி அமைந்துள்ளது.

இங்குள்ள தோரண கணபதியையும், மங்கள மாரி, கிருஷ்ண மாரி தேவியரையும் தரிசித்துவிட்டு, சூல மண்டபத்தில் மூன்று நெய் தீபங்களை ஏற்றி வைத்து வணங்க வேண்டும். பின்னர், கமலவிமானக் கருவறையின் கீழ் மகாமேருவோடு காட்சி தரும் ஸ்ரீகாத்யாயனி அம்மனை தரிசித்து மஞ்சள் பொடியும் குங்குமமும் அருட்பிரசாதமாகப் பெற்று வழிபட வேண்டும். இத்தலத்தில் அம்மன் கருவறைக்கு பின்புறமாக தார்ச் சாலையில் பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழார் அருள் தருகிறார். இவரே இத்தலத்தின் ஆதி குருநாதராக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

காத்யாயனி சந்நிதியில் திருச்சுற்று முடித்த உடன் அம்மன் துதியாக

ஓம் காத்யாயனி மகாமாயே பவாநி புவனேஸ்வரி
ஸம்ஸார சாகரே மக்நாத் உத்தர ஸ்ரீ க்ருபாமயி
நமோதேவ்யை ப்ரக்ருத்யைச விதாதர்யை நமோநம:
கல்யாண்யை காமதாயைச விருத்யை சித்யை நமோநம:

என்ற துதியைக் கூறி வழிபட வேண்டும். தற்போது, இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால் பாலாலயம் அமைத் துள்ளனர். ஆகவே, அம்பிகையின் உற்ஸவ மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டு வரலாம்.

திரிசக்கர தரிசன பலன்கள்

வாழ்க்கையின் முன் வினைகளைத் துடைத்து முன்னேற்றங்களைத் தரும் சக்தி உடையது இந்த திரிசக்கர தரிசனம். பொதுவாக பௌர்ணமி, அமாவாசை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று பிரார்த்திக்கின்றனர். வெள்ளி, செவ்வாய், சனிக்கிழமைகளிலும் சிறப்பு பிரார்த்தனை தினமாக நினைத்து தரிசிக்கும் வழக்கமும் உள்ளது.

காரியத் தடைகள் விலகி நலம் பெற பௌர்ணமி அன்றும், சூன்யாதி தோஷங்கள் விலக அமாவாசை அன்றும், வியாபார தொழில் முயற்சிகளில் வெற்றிபெற ஞாயிற்றுக் கிழமையிலும், கடன் தீர்ந்து சொந்த இல்லம் அமைய செவ்வாய்க்கிழமையிலும், குழந்தைப் பேறு தடைகள் நீங்க சனிக்கிழமையிலும், பொன் பொருள் சேர்ந்து லட்சுமி கடாட்சம் பெற வெள்ளிக்கிழமையிலும், நவக்கிரக தோஷங்கள் விலகி, தம்பதியர் ஒற்றுமையுடன் வாழவும், தீராத கோர்ட் வழக்குகளில் தீர்வு பெறவும் சனிக்கிழமையிலும் திரிசக்கர தரிசனம் சென்று வர வேண்டும்.

இத்தனை மகிமை மிக்க தரிசனத்தை, அம்பிகைக்கு உரிய நவராத்திரி திருநாட்களில் மேற்கொள்வது இன்னும் சிறப்பு. ஆகவே, நாமும் நலம் தரும் நவராத்திரி தினங்களில், திரிசக்கர தரிசனம் மேற்கொண்டு, வாழ்வில் நல் திருப்பங்கள் காண வரம் பெற்று வருவோம்.

படங்கள்: தே.அசோக்குமார்






காலை 6 மணிக்கு திருவேற்காட்டில் தரிசனம் முடித்து, 9 மணிக்கு மாங்காடு தரிசனம் கண்டு, 11 மணிக்குக் குன்றத்தூரில் திரிசக்கர தரிசனத்தைப் பூர்த்தி செய்யலாம்.

பெரும்பாலான பக்தர்கள் இந்த திரிசக்கர தரிசனத்தை திருவேற்காட்டில் தொடங்கி குன்றத்தூரில் நிறைவு செய்கின்றனர். ஒரு சிலர், குன்றத்தூரில் ஆரம்பித்து திருவேற்காட்டில் நிறைவு செய்கின்றனர்.


குன்றத்தூர் திருநீர்மலை சாலையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணிமனை உள்ளது. எனினும், குன்றத்தூர் ஸ்ரீகாத்யாயனி அம்மன் கோயிலைத் தரிசித்துவிட்டு, அங்கிருந்து மாங்காடு மற்றும் திருவேற்காடு சென்று ஆலய தரிசனம் செய்ய ஆண்களும் பெண்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். ‘திரிசக்கர தரிசனப் பேருந்து’ பௌர்ணமி, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை தினங்களில் இயக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
105,401
Likes
20,836
Location
Germany
முக்திதரும் மூர்த்தியாக முருகப்பெருமான் அருள்பாலிக்கும் குமரக்கோட்டம்!

டைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக் கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, பிரணவத்தைக்கொண்டே தாம் படைப்புத் தொழிலைச் செய்வதாக பிரம்மன் கூறினார். பிரணவத்தின் பொருளை முருகன் கேட்க, நான்முகன் விழித்தார். பொருள் தெரியாமல் தலைகுனிந்தார். சுட்டிக் குழந்தையான முருகன், படைக்கும் கடவுளான பிரம்மன் தலையில் குட்டி, அவரைச் சிறையில் அடைத்தார். அதுமட்டுமா? தானே படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார்.







நான்முகனின் இந்த நிலையை தேவர்களின் வழியே அறிந்துகொண்ட சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் 'சேனாபதீஸ்வரர்' என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் 'சேனாபதீஸ்வரம்' என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் 'மாவடி கந்தன்' எனப் பெயர் பெற்றார்.





ஈசனை, தவ வேடத்தில் முருகப்பெருமான் வழிபட்டதால் இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. முருகப்பெருமானும் நான்கு கரங்களுடன் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். குமரக்கோட்ட முருகப்பெருமான் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன.





தேவசேனாபதீஸ்வரர், சந்தான கணபதி, தண்டபாணி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உள்ளம் உருகும் பெருமாள் சந்நிதி, மார்க்கண்டேய முனிவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள், நவகிரகங்கள், கச்சியப்ப முனிவர், அருணகிரிநாதர், வள்ளலார் சந்நிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். நவகிரகங்கள் எதிரெதிரே இருப்பதும், சூரிய பகவான் தனது தேவியோடு காட்சி தருவதும் சிறப்பானது.





வைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டித் திருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. தீபாவளி நாளைத் தவிர இங்கு எல்லா நாள்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அதில் தேன் அபிஷேகம் விசேஷமானது. இந்தக் கோயிலின் சிறப்பான அம்சம் இங்குதான் கந்தபுராணம் அரங்கேறியது என்பதுதான். காஞ்சியில் வாழ்ந்த கச்சியப்ப சிவாசார்யார் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தன்னைப் பற்றிப் பாடுமாறு பணித்தார். 'திகட சக்கரச் செம்முகம்' என்று முதலடி எடுத்துக் கொடுத்து, தமிழின் அழகான காவியமான கந்தபுராணத்தை அரங்கேற்றச் செய்தார் ஆறுமுகப்பெருமான். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. அதுமட்டுமா? சிறுவனின் வடிவில் வந்து பாம்பன் ஸ்வாமிகளுக்கு வழிகாட்டி ஆட்கொண்ட தலமும் இதுதான்.


காஞ்சிபுரத்தின் நடுநாயகத் தலமாக விளங்கும் குமரக்கோட்டம் அருணகிரிநாதர், வள்ளலார் என்று பல ஞானியர்கள் தொழுது, பாடிப் பணிந்த புண்ணியத் தலம். முருகப்பெருமானே இங்கு ஞானியின் வடிவில் அமர்ந்துள்ளதால், வாழ்வில் நிம்மதி, ஞானம், தெளிவு பெற வேண்டுவோர் இங்கு வந்து அமர்ந்து சற்று நேரம் தியானித்தால் போதும். தெள்ளிய ஞானம் பெற்று, தெவிட்டாத இன்பம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. சிவசக்தி மகிழ்ந்து கொண்டாடிய ஞானமூர்த்தியான முருகப்பெருமானின் தவ வடிவை காஞ்சிபுரத்தின் ராஜவீதியில் அமைந்திருக்கும் குமரக்கோட்டத்தில் கண்டு தரிசிக்கலாம்.

அறிவால் அறிந்து உன்னிரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே! ஆறுமுகனே உன் தாள் சரணம்!
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
வெற்றியும், மோட்சமும் தரும் விஷ்ணு ஆலயம்

1529304748889.png

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இங்குள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.

தல வரலாறு :

இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.

அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.

அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.

அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.

அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.

உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.

அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.

இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக் கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.

மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு:

இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.

கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.

கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இப்பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார். அவர் வந்த வேளையில் கோவில் நடை மூடப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த வாயிற்காப்பாளன் வந்திருப்பது அரசர் என்று தெரியாமல், அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு, கோவில் நடையைத் திறந்துவிட்டானாம். அதனால் அந்த வாயிற்காப்பாளன் கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அதை நினைவுபடுத்தி எச்சரிக்கும் நோக்கத்தில் இங்கு கழுமரத்தில் மனிதன் படுத்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.


அற்புத நாராயணர், நரசிம்மர்

வழிபாடுகள்:

ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திரு வோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.

இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்ற ருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.

வழிபாட்டுப் பலன்கள் :

இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.

குடக்கூத்த அம்மான்:

திருக்கடித்தானத்து இறைவன் ‘அற்புத நாராயணர், அமிர்த நாராயணர்’ என்று போற்றி வழிபடப்படுகிறார். இந்தநிலையில் நம்மாழ்வார் இங்குள்ள இறைவனை, ‘குடக்கூத்த அம்மான்’ என்று போற்றிப் பாடியிருக்கிறார். குடக்கூத்த அம்மான் என்று அவர் குறிப்பிடுவது ஏன்? என்று சில விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இந்திரனின் சீற்றத்தால் உருவான பெருமழையில் இருந்து கோகுலவாசிகளைக் காக்கக் கிருஷ்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்திருந்து அருளினார். அதனை நினைவு கொள்ளும் விதமாக, பெண்கள் குடை பிடித்தபடி நடனமாடும் ‘குடைக் கூத்து’ என்றழைக்கப்பட்ட நடனம் இந்த ஆலயத்தில் நடந்திருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.

குடத்தினைச் சுமந்துகொண்டு செல்லும் கோபியர்கள், ஒவ்வொருவருக்கும் தன் மீது தான் கிருஷ்ணனுக்கு அதிக அன்பு என்ற நினைப்பு இருந்தது. அவர்கள் கர்வத்தைப் போக்க விரும்பிய கிருஷ்ணன் அவர்கள் சுமந்து சென்ற குடங்களைப் பந்துகள் போல மேலெழும்பித் தன்னிடம் வரவழைத்து, மாயச் செயல்களை நிகழ்த்தினான். அப்போது கோபியர்கள் கிருஷ்ணனை மறந்து, குடங் களைப் பிடிக்க அங்கும், இங்குமாக ஓடத் தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்த வெறும் குடத்துக்காகக் கிருஷ்ணனை மறந்து தாவித்தாவிக் கூத்தாடியதைத் தான், ‘குடக் கூத்து’ என்று உருவாக்கியிருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

அமைவிடம்:

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,411
Likes
553
Location
chennai
வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்!

இம்மை அம்மை என இரண்டும் இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே


- திருநாவுக்கரசர்

இந்தப் பிறவியிலும் முற்பிறவியிலும் நாம் செய்த வினைகள் யாவற்றையும் தீர்த்து, நமக்கு நற்கதி அளிக்கும் நாயகன், எத்தனை எத்தனை ரூபங்களில், பெயர்களில், கோயில்களில் குடிகொண்டிருக்கிறார். தேடத் தேடத் தீராத ஆன்மிக ஆனந்தம் அது.





நம்முடைய அந்தத் தேடலின் அடுத்த ஆலயம், காவிரியின் தென்கரையில் இருக்கும் அன்னியூர். திருவன்னியூர் என ஒரு காலத்தில் அழைக்கப்பெற்று, பின்னர் மருவி ‘அன்னியூர்’ என ஆகியுள்ளது.

திருஅன்னியூர் என்ற பெயரில் காவிரியின் வடகரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. பலர் இந்த இரண்டு தலங்களின் பெயர்களையும் கேட்டு, குழப்பம் அடையலாம். அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் தலமான அன்னியூர், திருவீழிமிழலைக்கு அருகே உள்ளது. இந்த இரண்டு ஊர்களுக்கும் மிக முக்கியமான சம்பந்தம் ஒன்றும் உள்ளது. அதைப் பிறகு பார்ப்போம்.

மிக மிகச் சிறிய கிராமம் அன்னியூர். கோயிலும் மிகச் சிறியதுதான். இரண்டு நிலைகள் கொண்ட ராஜகோபுரம், ஒரே ஒரு பிராகாரம். ஒரே மகா மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர்... அம்பாள் ஸ்ரீ கௌரி பார்வதி. கோயிலுக்கு அருகேயே இருக்கும் அர்ச்சகர் கணேச குருக்கள், மூன்று தலைமுறைகளாக அக்னிபுரீஸ்வரருக்குப் பூஜை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறிய ஊராக இருந்தாலும், இங்கே குடிகொண்டிருக்கும் சுவாமியின் சக்தியையும் அருளையும் அறிந்த மக்கள், பிரார்த்தனைக்காக வந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

சும்மாவா பின்னே... இன்றைக்குப் பெரும்பாலான மக்களைப் பாடாய்ப்படுத்தும் ரத்தக்கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) நோயைத் தீர்த்து வைக்கும் தலமல்லவா! தலத்தின் பெருமையையும் புராணத்தையும் எடுத்துச் சொல்கிறார் கணேச குருக்கள்.

திருக்கதைகள்...

‘‘எல்லாக் கோயில்களுக்கும் ஒரு தல வரலாறு இருக்கும். எங்க கோயிலுக்கு இரண்டு தல வரலாறுகள் உள்ளன’’ என்று ஆரம்பித்தார் குருக்கள். ஆர்வமுடன் செவிமடுத்தோம்.

‘‘புராண காலத்தில் தட்சன் என்ற அரசன், சிவபெருமானைப் புறக்கணித்துவிட்டு பெரிய யாகம் நடத்தினான். அந்த மாபெரும் யாகத்தில், அவன் கொடுத்த அவிர்பாகங்களை அந்தந்தத் தேவதைகளுக்குக் கொண்டு போய்க் கொடுக்கும் பணியைச் செய்தார் அக்னி பகவான். இதனால் சினம் கொண்ட சிவபெருமான், வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்து, அக்னி தேவனின் கைகளையும் நாக்கினையும் துண்டித்தார். ‘இப்படிப்பட்ட சிவப்பழி யையும் சிவ அபராதத்தையும் சுமந்தோமே!’ என்று மனம் நொந்த அக்னி தேவன், அந்தப் பழி நீங்கி, பழைய உருவம் பெறவும், தன் தவற்றை மன்னிக்கும்படியும் மனம் உருகி வேண்டினார். அதேநேரம், அக்னி தேவன் செயல்படாத நிலையில் இருந்தபடியால், யாகங்கள் நடத்த முடியாமல் தேவர் களும் முனிவர்களும் அந்தணர்களும் தவித்தனர். அக்னி பகவானுக்கு ஏற்பட்ட சிவ அபராதத்தால், மழை வளம் இன்றி கருகியது பூலோகம். அனைவரின் துயரமும் நீங்க சிவனைத் தியானித்தார் அக்னி பகவான்.

அப்போது அவருக்குக் காட்சி தந்த இறைவன், ‘‘வன்னியூர் என்ற தலத்தில், சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, என்னை வணங்கிட, இழந்த கைகளும் நாவும் மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளாசி தந்தார்.

சிவபெருமான் கூறியபடி வன்னியூர் (வன்னி என்றால் அக்னி) வந்த அக்னி தேவன், இங்கிருந்த வன்னி மரக்காட்டில், சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதன் எதிரே அக்னி தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி இறைவனை வழிபட்ட போது, இழந்த கைகளும் நாக்கும் அக்னி தேவனுக்கு மீண்டும் கிடைத்தன.

உலகுக்கே வெப்பத்தை வழங்கும் அக்னி தேவனுக்கே, இழந்த சக்தியை மீண்டும் கொடுத்த தலம் என்பதால், இங்கிருக்கும் இறைவன், அக்னிபுரீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார். உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது ஏற்படும் வெப்ப நோய்கள் மற்றும் ரத்தக்கொதிப்பு நோய் தீர இங்கு வந்து வழிபட்டால், அந்நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை'' என்ற கணேச குருக்களிடம் மற்றொரு தல புராணத்தையும் கேட்டோம்.





‘‘முற்காலத்தில், காத்யாயன முனிவரின் மகளாக, பார்வதி என்ற திருநாமத்தோடு பிறந்த உமையவள், எம்பெருமானைத் திருமணம் செய்ய வேண்டும் என்று தவமிருந்த தலமும் இதுதான். அதனால் இது ‘பெண் வீடு’ ஆகும். அவருக்குக் காட்சி கொடுத்த இறைவன், இறைவியை திருவீழிமிழலை தலத்தில் மணந்து கொண்டார். மணமுடித்த மாப்பிள்ளை சுவாமி, இங்கிருந்து 3 கி .மீ தூரத்தில் உள்ள திருவீழிமிழலை யில் இருக்கிறார். அவருக்குப் பெண் கொடுத்த தலம் என்பதாலும், இந்த அன்னியூர் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்துவிட்டு, திருவீழிமிழலையிலும் தெய்வத் தம்பதியை வணங்கிப் பிரார்த்திக்க, தடை நீங்கி, விரைவில் திருமணம் நிகழும் என்பது கர்ண பரம்பரை ஐதீகம்’’ என்று மற்றொரு புராணத்தையும் கூறி முடித்தார்.

பிரார்த்தனை முறை

அக்னி தீர்த்தத்தில் இப்போது தண்ணீர் இன்றி வறண்டிருப்பதால், அதில் நீராட முடியாது. எனவே, உஷ்ணரோகத்தால் அவதிப்படும் அன்பர்கள், ஸ்ரீ அக்னிபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தைச் சேகரித்து வைத்துக்கொண்டு, சிறிது விபூதியோடு தினமும் காலையில் 11 நாள்கள் அருந்திவர, அக்னிபுரீஸ்வரர் அருளால், பூரண ஆரோக்கியம் பெறுவர் என்பது நம்பிக்கை. ரத்தக்கொதிப்பு மற்றும் உஷ்ண உபாதைகள் உள்ளவர்கள், சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின், தயிர்சாதம் நைவேத்தியமும், திருமணத் தடை மற்றும் பிற தடைகள் விலகவேண்டும் என்று விரும்புவோர், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, கோதுமையால் செய்த சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும் என்பது இங்குள்ள வழக்கம்.

ஸ்தல விருட்ச மகிமை!

அக்னி பகவானுக்குச் சாபம் நீங்கிய தலம். அக்னிக்கு மேல் நோக்கிச் செல்லக்கூடிய ஆற்றலைக் கொடுத்த தலம். பிரம்மா, அகத்தியர், சனத்குமாரர், சனாதனர் ஆகியோர் வழிபாடு செய்த திருத்தலம் இது. நாவுக்கரசரால் பாடப் பெற்றதுடன், கந்த புராணத்திலேயே இந்தத் திருத்தலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகள் பழைமையான வன்னி மரம் இங்குள்ளது. இன்னும் பசுமையாக, இளமையாக இருக்கும் இந்த மரத்தின் திசுக்களைக் கோவை வேளாண் பல்கலையிலிருந்து வந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துச் சென்றுள்ளனராம்.

தேவகோட்டை நகரத்தாரால் பராமரிக்கப்படும் இக்கோயில், மிகச் சிறியதாக இருந்தாலும் அமைப்பாக, அழகாக இருக்கிறது. லிங்கத் திருமேனியாக ஸ்ரீ அக்னிபுரீஸ்வரரும், அருகிலேயே அம்மை ஸ்ரீ கௌரி பார்வதியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில், மகா கணபதி, பால சுப்ரமண்யர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறுகின்றன. தட்சிணாமூர்த்திக்கு அருகே, தல வரலாற்றுச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்க ளாகக் காணப்படுவது மிக அரிய, இனிய காட்சி.

ஆலயத்தை வலம் வந்தபின், நமது உடலும் உள்ளமும் குளிர்கிறது. உடல் வெப்பத்தையும் மன வெப்பத்தையும் கொடுப்பதும் அவனே... எடுப்பதும் அவனே! அந்த அக்னிபுரீஸ்வரர் திருவடியில் நம்மிடம் தகிக்கும் அக்னிகளை அர்ப்பணிப்போம். அகமும் புறமும் குளிர்ந்து ஆரோக்கியம் பெறுவோம்.

எப்படிச் செல்வது?

அன்னியூர் அமைந்திருப்பது திருவாரூர் மாவட்டம் என்றாலும், கும்பகோணத்தில் இருந்து செல்வதுதான் எளிதானது.

கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், காரைக்கால் செல்லும் வழியில், திருநாகேஸ்வரம் தாண்டியதும் எஸ்.புதூர் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது அன்னியூர். ‘‘காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் வந்து தரிசனம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால், மிகச் சிறிய ஊராக இருப்பதால், கோயிலுக்கு அருகே கடைகள் எதுவும் இல்லை. பூஜைக்கான தேங்காய், பழம், மற்றும் அபிஷேகப் பொருட்களைப் பக்தர்களே கையோடு கொண்டு வந்துவிடுவது நல்லது’’ என்கிறார் கணேச குருக்கள்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்

1529381056384.png

இந்தியாவில் தென்பகுதியில் இருந்து வடபகுதி வரையில் அமைந்திருக்கும் எட்டு சிவாலயங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும், ஆச்சரியமாக இருக்கிறது.

கேதார்நாத் பனிலிங்க ஆலயம், காளஹஸ்தி வாயுலிங்க ஆலயம், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், கலேஸ்வரம் முக்தீஸ்வரா ஆலயம்.இவை அனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி ராமேஸ்வரம் வரை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்கள்.

இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது என்பதை அந்த இறைவன் ஒருவரே அறிவார். இவை அனைத்தும் 79டிகிரி தீர்க்க ரேகையிலேயே அமைந்துள்ளன.

இந்த கோவில்களில் உள்ள இடைவெளி பல மாநிலங்களை கடந்து, பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி துல்லியமாக அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம் தான்.

1. கேதார்நாத் 79.0669 டிகிரி

2. காளஹஸ்தி 79.7037 டிகிரி

3. காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் 79.7036 டிகிரி

4. திருவானைக்காவல் 79.0747 டிகிரி

5. திருவண்ணாமலை 78.7108 டிகிரி

6. சிதம்பரம் நடராஜர் 79.6954 டிகிரி

7. ராமேஸ்வரம் 79.3129 டிகிரி

8. காலேஸ்வரம் 79.9067 டிகிரி
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
ஆறு முகங்கள், பன்னிரு கரங்கள், மயில் வாகனம்... அழகன் முருகனின் அழகுக் கோயில் குன்றக்குடி!

வ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, `சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது `சக்தி யாத்திரை!'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம், நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.








முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.


ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்படி வந்தவர்கள் வணங்கிவிட்டு மட்டும் சென்றிருக்கக் கூடாதா? ஒரு கலகத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். ஆம். அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலிடம் ``முருகப்பெருமானின் வாகனமாக மாறவேண்டி சூரபதுமன் தனது தம்பியருடன் காஞ்சிபுரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்’’ என்ற விஷயத்தை கூறிச் சென்றுவிட்டார்கள். எங்கே தனக்கு பதிலாக சூரர்கள் முருகப்பெருமானை சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிடுவார்களோ என்று தேவமயில் வருந்தியது. இதனால் தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும்விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.






சூரனும் அவனுடைய சகோதரர்களும், முருகப்பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினைத் தாங்கள் அடையவிடாமல் மயில் மூலம் தடுத்துவிட்ட தேவர்கள் மீது சினம் மிகக் கொண்டனர். அவர்களைப் பழிதீர்க்கும் நாளை எதிர்நோக்கினர். அந்த நாளும் வந்தது. ஒருநாள் சூர சகோதரர்கள் மயிலிடம் சென்று, ``மயிலே! உன்னால் தங்களைவிட விரைவாகச் செல்ல முடியாது என்று திருமாலின் கருடனும், நான்முகனின் அன்னமும் இழிவாகப் பேசிக்கொண்டன” என்று ஏளனமாகப் பேசினர். இதனால் தேவமயில் கோபம்கொண்டு சிறிதும் யோசிக்காமல் கருடனையும் அன்னத்தையும் விழுங்கிவிட்டது. தங்களது வாகனங்கள் இல்லாத நிலையில் திருமாலும் நான்முகனும் முருகப்பெருமானிடம் முறையிட்டனர். நடந்ததை அறிந்த முருகப் பெருமான் மயில் விழுங்கிய கருடனையும் அன்னத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முருகனின் உத்தரவு கேட்டு கருடனையும் அன்னத்தையும் விடுவித்தது மயில்.

திருமாலையும் நான்முகனையும் வருத்தமுறச் செய்த மயிலின் மீது சினம்கொண்ட முருகப்பெருமான், மயிலை மலையாகும்படிச் சபித்தார். `கோபத்தால் அறிவிழந்தோமே..!’ என்று வருந்திய மயில், முருகப்பெருமானிடம் சாப விமோசனம் கேட்டது. மெய்யாகவே தவறு உணர்ந்து வருந்திய மயிலிடம் பரிவுகொண்ட முருகப்பெருமான், ``தென் பகுதியில் பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்குக் கிழக்கே உள்ள அரசவனம் எனும் குன்றக்குடி தலமடைந்து மலையாக இருப்பாயாக. அங்கு நான் வந்து உனக்குச் சாப விமோசனம் தந்து ஆட்கொள்கிறேன்” என்று வரமருளினார். அதன்படியே, குன்றக்குடிக்கு வந்துசேர்ந்த மயில், முருகப்பெருமானை தியானித்து வணங்கியதால் மயிலுக்கு அருள்புரியச் சித்தம்கொண்டார் முருகன். குன்றக்குடிக்கு எழுந்தருளி, மலை வடிவில் இருந்த மயிலை இரு பகுதிகளாக மாற்றி, ஒன்றுக்கு சாரூப்ய பதவி அளித்தவர், மற்றொரு பாகத்தைத் தொடர்ந்து மலையாகவே இருக்குமாறு கூறினார். சாபம் நீங்கப் பெற்ற மயில், `முருகப் பெருமான் தொடர்ந்து அதே இடத்தில் எழுந்தருளி, வேண்டி வந்து வணங்குபவர்க்கு எல்லா வரமும் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது. அதன்படி, முருகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராகக் குன்றக்குடி மலையின் மீது கோயில்கொண்டார் என்கிறது கோயில் வரலாறு.






காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலிருக்கிறது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், தெற்கு நோக்கி அமைந்திருக்கும் ராஜகோபுரம் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இந்தத் திருக்கோயில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, கீழ்க்கோயில். இங்கு தேனாற்றுநாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி அருளாசி தருகிறார்கள். மலைக்கோயிலில்தான் முருகப்பெருமான் அருள்கிறார். குடைவரைக் கோயிலான குன்றக்குடிப் பெருமான் ஆலயம் அழகானது.


மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, அழகிய மயில்மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறான் முருகப்பெருமான். ஆறுமுகன் அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கிறார்கள். இதுபோன்ற மூன்று மயில் வாகன தரிசனம் காண்பதற்கரியது என்கிறார்கள். முருகனின் மயில் வாகனமும், முருகப்பெருமானை சூழ்ந்திருக்கும் திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது.






அழகே வடிவான குன்றக்குடி பெருமான் அருளாசி வழங்குவதிலும் தாராளச் சிந்தனைகொண்டவர். ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக பாதித்த பெரிய மருதுபாண்டியரை காத்து ரட்சித்தவர் இந்த முருகனே. சிதம்பரம் அருகேயுள்ள கீழ்ப்பரப்பை என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு முதலியார் என்பவரின் மகன் செந்தில்வேலு என்பவருக்குப் பேசும் சக்தியை அளித்து அருள் செய்தவரும் இந்த முருகப்பெருமானே. இப்படி இன்றும் பல அற்புதங்களைச் செய்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை எந்நாளும் காத்து வருகிறான் முருகப்பெருமான்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
அடியார் இடர்நீக்கும் திருநெல்வாயில் திருவட்டத்துறை திருத்தலம்

1529467512343.png
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம், மூவரால் பாடல் பெற்ற நடுநாட்டின் முதலாவது திருத்தலம், மகாவிஷ்ணு, ஆதிசேஷன், வான்மீகி முனிவர், செவ்வாய், சனி பகவான், ஜனக மன்னர் முதலானவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்தங்கள் அமைந்த தலம், நீவா நதிக்கரையோரம் அமைந்த தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.

புராண வரலாறு :

ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது. இத்திருக்கோவிலின் அருகே ஓடும் வெள்ளாறு நதியில், பிரளய காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறைவனின் ஆணைக்கிணங்க, நந்திதேவர் ஆற்றினை திரும்பிப் பார்க்க, வெள்ளத்தின் வேகம் கட்டுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஐதீகமாகவே இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி சிலை, ஆற்றின் திசைநோக்கி பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதேபோல், இப்பகுதியில் சப்தரிஷிகள் ஏழு துறைகளில் தவம் இயற்றினர். அவை ஆதித்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை, திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை, திருச்சந்துறை. இந்த ஏழு துறைகளில் அரத்துறைநாதர் ஆலயம் ஆறாவது துறையாக அமைந்துள்ளது.

திட்டக்குடியில் ஓடிய வெள்ளாற்றை, திருஞானசம்பந்தர் இத்தலம் நோக்கி ‘நீ வா’ என்று அழைக்க, வெள்ளாறு, திட்டக்குடியில் இருந்து அருகில் வந்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் இந்நதி ‘நீவா நதி’ என்று பெயர் பெற்றது.

இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவிலும் இத்தலம் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீர்த்தபுரீஸ்வரர் :

மூலவர் திருப்பெயர் தீர்த்தபுரீஸ்வரர். இவரே ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் கிழக்கு முகமாய் வட்ட வடிவ ஆவுடையாரில் ஒளிவீசும் திருமுகத்துடன் காட்சி அளிக்கின்றார். திருவட்டத்துறை உடைய மகாதேவர், திருவட்டத்துறை மகாவேதர், திருவட்டத்துறை உடைய நாயணார் என கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை திரிபுரசுந்தரிக்கு, ஆனந்தநாயகி, அரத்துறை நாயகி என்ற திருப்பெயரும் உண்டு. அன்னை அரத்துறை நாயகி, மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில், அபய வரத முத்திரை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

மகம் வாசல் :

இக்கோவிலில் கருவறைக்கு இடதுபுறம் மகம் வாசல் அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஓராண்டு முடிந்த பிறகு, இத்தல ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு, மகம் வாசல் வழியே ஆலயத்திற்குள் சென்று இறைவனை தரிசிப்பார்கள். பின்னர் அந்த வாசல் வழியாகவே மீண்டும் வெளியில் செல்வது ஐதீகமாக உள்ளது. இப்படிச் செய்வதால், இறந்த தன்னுடைய கணவர் நற்கதி பெறுவார் என்று அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.


தீர்த்தபுரீஸ்வரர், திரிபுர சுந்தரி

கல்வெட்டுகள் :

இவ்வாலயத்தில் கி.பி. 1949-50 இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), வீரராஜேந்திர தேவன் (கி.பி 1067), முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1107), விக்கிரம சோழதேவன் (கி.பி. 1120), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1190) மூன்றாம் ராஜராஜன் (கி.பி. 1226) ராஜகேசரிவர்மன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விருதராஜ பயங்கர வளநாட்டு, மேற்கால நாட்டு, முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் என, இன்றைய திருவட்டத்துறை நெல்வாயில் அழைக்கப்பட்டுள்ளது.

நிலக்கொடை, பசுதானம், பொற்காசு வழங்கியது போன்ற பல்வேறு விதமான கொடைகள் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள், சிவ பிராமணர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் பூஜைகள் நடத்தப்பட்ட விவரங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.

விழாக்கள் :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் எளிமையாக நடத்தப்படுகின்றன. பிற சிவாலய விழாக்களும் எளிய முறையில் நடைபெறுகின்றது.

நீவா நதியின் கரையோரம், கிழக்கு முகமாய் ஐந்துநிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. எதிரே, தலமரமான ஆலமரம், பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், விநாயகர், சமயக்குரவர்கள், வான்மீகி முனிவர், சப்தமாதர்கள், லிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஜோதிர்லிங்கம் உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன.

இதனையடுத்து, அண்ணாமலையார், ஆதிசேஷன், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, சரஸ்வதி, சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என மூவேந்தர்களுக்கும் லிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சந்தானக் குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அமைவிடம் :

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில், கடலூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில், கடலூருக்கு மேற்கே 90 கி.மீ., திட்டக்குடிக்கு கிழக்கே 5 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வாயில் அரத்துறை என்ற பெயர் இன்று, திருவட்டத்துறை என வழக்கில் உள்ளது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,705
Likes
3,187
Location
India
மங்கலம் தரும் மடப்புரம் மாரியம்மன் கோவில்

1529562427561.png

வீர உணர்வுக்கு காளியையும், பகைவரை வெல்ல துர்க்கையையும், கல்வி பெருக கலைமகளையும், செல்வம் செழிக்க திருமகளையும், மழை வளம் பெருகவும், நோய் நொடிகள் அகலவும் மாரியம்மனையும் வழிபடுதலை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மகமாயி, சீதளாதேவி, கருமாரி, ரேணுகாதேவி என பலப் பெயர்களால் மாரியம்மனை மக்கள் பக்தியுடன் பூஜை செய்து வணங்குகின்றனர். காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் விளங்கும் மாரியம்மனுக்கு மடப்புரம் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது.

இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே ஆல், வேம்பு மரங்களும் அதன் கீழ் விநாயகர், நாகர் சிலைகளும் காணப் படுகின்றன. ஆலய முகப்பின் மேல்புறம் மகிஷாசுரமர்த்தினியின் திருமேனி சுதை வடிவில் உள்ளது. ஆலயத்தின் உள்ளே கருவறை எதிரில் சூலமும் அடுத்து கழுமரமும் இருக்கிறது. அடுத்து பித்தளை உலோக சூலமும், மின்னடையான் என அழைக்கப்படும் பலிபீடமும் உள்ளது. அருகே தல விருட்சமான வேப்பமரம் உள்ளது.

திருச்சுற்றில் தெற்கில் பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, ஓம்சக்தி அம்மன் சன்னிதிகள் உள்ளன. வடக்கில் காத்தவ ராயன் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் காத்தவராயன், கருப்பண்ணசாமி, மாரியம்மன் ஆகியோரது மரச்சிலைகள் உள்ளன. மேற்கில் கஜ லட்சுமியின் திருமேனி காணப்படுகிறது.

அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் விநாயகர், அம்பாளின் உற்சவர் சிலைகள் உள்ளது. கருவறையில் அன்னை மாரியம்மன் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன், அமர்ந்த நிலையில் கீழ்திசை நோக்கி இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் கருணை அளப்பரியது என்கின்றனர் ஊர் மக்கள்.

அடிக்கடி நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை அம்மனுக்கே தத்து கொடுத்துவிடுகின்றனர். குழந்தையை பெற்றவர்கள் குழந்தையுடன் அம்மன் சன்னிதிக்கு வருகின்றனர். அர்ச்சகர் ஒரு மரக்காலில் தவிட்டை நிரப்பி, குழந்தையின் பெற்றோர்களிடம் கொடுக்க, அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தங்களது குழந்தையை, அம்பாளுக்கு தத்துக் கொடுக்கின்றனர். அன்று இரவு அந்தக் குழந்தை பெற்றோர்களுடன் தங்குவது கிடையாது. வேறிடத்தில் தங்க வைக்கப்படும். இப்படி தத்துக் கொடுக்கப்படும் குழந்தை சில நாட்களில் பரி பூரண குணமடைவது கண்கூடான உண்மை.

குழந்தைக்கு நோய் குணமானதும், அந்தக் குழந்தையின் பெற்றோர், அம்பாளின் சன்னிதிக்கு சென்று இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, குழந்தையை திரும்பப் பெறும் வைபவம் அடிக்கடி நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

இந்த ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆரம்பத்தில் கீற்றுக்கொட்டகையில் இருந்த அன்னை, தற்போது அழகிய ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலேயே ஆலயம் திறக்கப்பட்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை சுமார் 200 பெண்கள் கலந்து கொள்ளும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கும் திருவிழாவில், முதல் நாள் கரகம் புறப் படுவதுடன் அன்ன வாகனத்தில் அன்னை வீதியுலா வருவாள். இரண்டாம் நாளும் அன்னவாகனத்தில் வீதியுலா வரும் அன்னை, மூன்றாம் நாள் வேப்பிலை அலங்காரத்திலும், நான்காம் நாள் பல்லக்கிலும், ஐந்தாம் நாள் சப்பரம் எனும் தெருவடைச்சானிலும், ஆறாம் நாள் ஓடத்திலும், ஏழாம் நாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 8-ம் நாள் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ம் நாள் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்று காப்பு களைதலுடன் உற்சவம் நிறைவு பெறும்.

இங்கு அருள்பாலிக்கும் ஓம்சக்தி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அன்னையின் பின்புறம் உள்ள வேப்பமரம் இயல்பாகவே தோன்றி, அன்னையின் சக்தியை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.

ஆலயம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தன்னை நாடும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அறிந்து அருள்பாலித்து அவர்களை குறையின்றி வாழ வைக்கும் மடப்புரம் மாரியம்மனை நாமும் ஒரு முறை தரிசித்து பயன்பெறலாமே.

அமைவிடம்

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவிலுக்கு கிழக்கே காளஹஸ்திநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மடப்புரம் கிராமம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.