ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்


ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்

மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.
பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார்.

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
[h=1]திரவத் தங்கம் ஆலிவ் எண்ணெய் ?[/h][h=1]நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை.

அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை.

சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும்.

இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம் ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன. வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது.


இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது. தோலினை மினுமினுப்பாக்கும் இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது.

100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது
[/h]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
[h=1]குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம்.குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம்[/h][h=1].உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும். [/h][h=1]விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும்.

ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும்

ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய்

மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம்.

ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.
[/h]
இதயநோயை தடுக்கும் இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
சத்துப் பட்டியல் :ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் தன் நறுமணத்தாலும், சுவையாலும், சத்து பொருட்களாலும் உலகலாவிய புகழ் பெற்றது. இந்த எண்ணெய், அறுவடை செய்யப்படும் ஆலிவ் காய்களின் முதிர்ச்சிக்கு ஏற்ப நிறம் மாறும். ஆலிவ் எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் ஆலிவ் எண்ணெய் சுமார் 884 கலேரிகள் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

அதிக கொதிநிலை கொண்டது ஆலிவ் எண்ணெய். 210 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில்தான் ஆவியாகும் என்பதால் உணவுப் பண்டங்கள் விரைவில் சமைக்க உதவியாக இருக்கிறது. அதிக அளவில் லிப்பிடுகள் இதில் உள்ளன. இவை பூரிதமான கொழுப்பு, ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு, பலபூரிதமாகாத கொழுப்புகளை ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாக மாற்றி வழங்கும்.

கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ஆலிவ் ஆயில்கள் எளிதில் கெடுவதில்லை. நல்ல குளிர்ச்சி கொண்டது. நீண்ட காலம் வைத்திருந்து சமைக்கப் பயன்படுத்தலாம். ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்புகள் இதய பாதிப்புகள் மற்றும் முடக்குவாதம் ஏற்படாமல் காப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஆலிவ் எண்ணெயில் உள்ளன. இவை மூளைத்திறனுக்கு அத்தியவாசியமாகும். ஏராளமான நோய் எதிர்ப்பு பொருட்களும் ஆலிவ் எண்ணெயில் இருக்கின்றன. ஆலிரோபின், ஆலோகேன் தால் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் குறிப்பிடத்தக்கவை.

இவை வைட்டமின்களுடன் இணைந்து புற்றுநோய், உடல்எரிச்சல், கரோனரி தமனி பாதிப்பு, நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு எதிராக செயலாற்றக் கூடியது. ஆலிவ் எண்ணெயில் 'வைட்டமின் இ' உள்ளது. 100 கிராம் ஆலிவ் எண்ணையில் 14.39 மைக்ரோகிராம் அளவு உள்ளது.

இது தினமும் உடலில் சேர்க்க வேண்டிய அளவான ஆர்.டி.ஏ. அளவின்படி 96 சதவீதமாகும். இது செல் சவ்வுகள் உறுதியாக இருப்பதற்கும், தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து தற்காப்பு பெறவும் உதவியாக இருக்கும். வைட்டமின் கே, ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு உள்ளது. இது எலும்பின் எடையை அதிகரிக்க அவசியமாகும். நரம்பு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கும்.

பயன்பாடுகள்:

ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. பொறித்தெடுக்கும் எண்ணெய்ப் பண்டங்கள் தயாரிக்க உகந்தது ஆலிவ் எண்ணெய். ஸ்பெயின் நாட்டில் 'ஆன்டலுசியன் சாலட்', ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய், வெங்காயம் மற்றும் நறுமண இலைகளுடன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. இத்தாலியில் 'எக்பிளான்ட் பிரை' பிரசித்தி பெற்றது. கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவை ஆலிவ் எண்ணெயில் பொறித்து தயாரிக்கப்படுகிறது இந்த உணவு.

பிரான்சில் 'ஆலிவ் டபனேட்' விரும்பி சுவைக்கப்படுகிறது. அக்ரோட்டுக் கொட்டைகள், வெங்காயம், பூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவை ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்து சுவைக்கப்படுகிறது.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கு ஆலிவ் ஆயில்..!


இதன் சிறப்பம்சம் மோனோ சாச்சுரேடட் ஃபேட்டி அமிலம் (Mono Unsaturated Fatty Acid) சுருக்கமாக - MUFA) 72% என்ற அளவில் இருப்பது. மேலும் வைட்டமின் E அதிக அளவில் இருகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL (Low-density lipoprotein லோ டென்சிடி லைபோபுரோடீன்) அளவை கார்டியா ரீஃபைன்ட் எண்ணை குறைக்கிறது. HDL(High-density lipoprotein ஹை டென்சிடி லைபோபுரோடீன்)என்னும் நன்மை செய்யும் கொழுப்பின் விகிதம் உடலில் அதிகரிக்கிறது.

ரத்த நாளங்களில் கொழுப்புப் படலம் படியாது. இதனால் இதயத்தின் தசைகளின் அழுத்தம் குறையும். சிரமப்பட்டு ரத்தத்தை இதயம் பம்ப் செய்யவேண்டி இருக்காது. ரத்தத்தின் அழுத்தமும் அதிகரிக்காமல் சீராக இருக்கும். இதனால் ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகின்றன. மாரடைப்புக்கான சாத்தியங்களும் குறையும்.

வைட்டமின்கள் A, D, E மற்றும் K ஆகியவற்றை உட்கிரகிக்க இந்த எண்ணெய் உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடென்டுகள் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை வெகுவாகக் குறைக்கின்றன.

சூரியனில் இருந்து வரும் தீமை விளைவிக்கும் கதிர்கள் தோலைக் கருப்பாகவும் தடிமனாகவும் மாற்றும். ஆனால் இந்த

ஆலிவ் எண்ணெய் தீமை செய்யும் கதிர்களின் பாதிப்பில் இருந்து தோலைக் காக்கிறது. கருமை நிறம் படிப்படியாகக் குறைந்து தோல் இயல்பு நிறத்துக்குத் திரும்பும்.தோல் மென்மையாகவும் இளமையாகவும் தோற்றம் அளிக்கும்.

தினந்தோறும் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு (28 கிராம்)ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி வந்தால் நல்லது
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
ஆலிவ்” வின் அற்புதம்

ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தைப் பொடி செய்து போட்டு அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.

கடுகு எண்ணெய் ஆலிவ் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள் மாசு மரு நீங்கி விடும்.

சிறிது பன்னீர் இரண்டு அல்லது மூன்று துளி எலுமிச்சம் பழச்சாறு சிறிது ஆலிவ் ஆயில் இவற்றை ஒரு பாட்டிலில் போட்டுக் குலுக்கி முகத்தில் தடவி வர முகம் பிரகாசமாக இருக்கும்.

செம்பட்டை முடி இருப்பவர்களுக்கு ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
சூடு செய்த ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ மாத்திரைகள் இர்ண்டு வைட்டமின் ஏ—1 டி—1 ஆகியவற்றை சேர்த்து முகத்தில் வட்டமாக தேய்த்து பின் பத்து நிமிடங்கள் கழித்து டவலால் வென்னீர் ஒத்தடம் கொடுத்து பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் உலர்ந்த சருமத்தின் வறட்சியை நீக்குவதோடு ஊட்டத்தைக் கொடுத்து பளபளப்பாக வைத்துக் கொள்ளும்.

ஆலிவ் எண்ணெய் விட்டமின் ஈ எண்ணெய் கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் சருமம் பொலிவு பெறும்
ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து கொண்டு ஊறிய பின் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

கைகள் அழகு பெற ஆலிவ் எண்ணெயைத் தடவி நீவி விட்டுப் பிறகு சோப்போ சிகைக்காயோ போட்டுக்கழுவி விடலாம்.
தலையில் பொடுகு காணப்படுபவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன் படுத்தினால் குணம் பெறலாம்.

எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் ஆலிவ் பழங்களின் முதல் பிரஸ்ஸிங்கிலிருந்தும் வர்ஜின் ஆலிவ் ஆயில் இரண்டாவது பிரஸ்ஸிங்கிலிருந்தும் ப்யூர் ஆலிவ் ஆயில் பில்டர் செய்து ரீபைன் செய்தும் எடுக்கப்படுகின்றன,

கால்கள் வறண்டு சொரசொரப்பாக இருந்தால் ஆலிவ் ஆயிலை கால்களில் பூசி மசாஜ் செய்து வந்தால் வழ வழப்பாகிவிடும்


ஆலிவ் எண்ணெய் நல்ல கொழுப்பை நமக்குக் கொடுக்கிறது கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது

அல்சர் வாயுக்கோளறைச் சரி செய்யும் மூளை எலும்பு வளர்ச்சியை வேகப்படுத்தும். கேன்ஸர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கிறது.

குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும்போது அவர்களுடைய கொழுப்பின் அளவு கட்டுப்பாட்டிலிருக்க நன்மை செய்யும் ஆலிவ் ஆயில்

சிலவகை புற்று நோய்கள் வராமல் காக்கும் குணமுடையது ஆலிவ் ஆயில். மோனோ சாச்சுரேட்டட் ஃபேட் வகையைச் சேர்ந்த ஆலிவ் எண்ணெயானது இரத்த அழுத்தத்தை குறைக்கும் விஷயத்தில் பலே கில்லாடி,
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.