ஆளி விதை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆளி விதை


ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே இங்கு பிரபலமாகி வருகிறது. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) .

நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான்.இப்போதும் பல கிராமங்களில் இந்த விதையை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்தும் பழக்கம் உண்டு. ‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம்.

அவர்கள் பாஷையில் அதை ‘லினியம் யுஸிடாட்டிஸஸிமம்’ (Linum usitatissimum) என்று கூறுவர். உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு. பழங்கால எகிப்து, சைனாவில் அதிகம் பயிரிடப்பட்டது.

இதனுடைய பயன்கள் அளவிட முடியாதவை. லத்தீனில் அரசர் சார்லே மாக்னே என்பவர் 8ம் நூற்றாண்டில் இதனுடைய முக்கியத்துவத்தை அறிந்து தனது அரசவையில் இருப்பவர்களுக்கு தினமும் கொடுத்தார். பிறகு தனது நாட்டில் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று சட்டத்தையே கொண்டு வந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைப் பற்றி இப்போது பலநாடுகளில் பலவிதமாக ஆராய்ச்சிகள் செய்தும் வருகிறார்கள். பல விஞ்ஞானி கள் இதைப் பலருக்கும் கொடுத்து ஆய்வு செய்து முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர்.

தமிழில் ஆளி விதை எனப்படும் இந்த விதை தெலுங்கில் ‘அவிஸி கிற்சலு’, மலையாளத்தில் ‘செருவுசான வித்து‘, கன்னடத்தில் ‘அகஸி’, ஹிந்தியில் ‘அல்ஸி‘, பெங்காலியில் டிஷி (ஜிவீsலீவீ) என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் இடாஸி. ஆனால், நம் நாட்டில் ‘லின் சீட்ஸ்’ என்பதே ஆங்கிலத்தில் பழக்கத்தில் இருந்தது. இப்போது பலரும் பெயர் தெரியாததால் வேற்றுநாட்டு மொழியில் கூறப்பட்டதையே ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள்.

100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்

புரதச்சத்து - 20.3 கிராம்
கொழுப்பு - 37.1 கிராம்
நார்ச்சத்து - 40.8 கிராம்
மாவுச்சத்து- 28.9 கிராம்
சக்தி - 530 கி.கலோரிகள்
கால்சியம் - 170 மி.கிராம்
பாஸ்பரஸ் - 370 மி.கிராம்
இரும்புச்சத்து - 2.7 மி.கிராம்
இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன.
இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.
நமது ஆரோக்கியத்தில்ஆளி விதையின் பங்கு

*இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்‘ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.

*பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர். உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர். இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.

*இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.

*இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

*தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.

*இந்த ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும் போது அது சுரக்கும் பாலும் அதிக சத்துள்ளதாக இருக்கும்.

இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை நாம் பலவிதமாக உணவில் சேர்க்க இயலும்.

*ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.

*இதைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டால் பழங்களில் இருந்து செய்யும் ‘ஸ்மூத்தி’, மில்க் ஷேக், தயிர், லஸ்ஸி, கஞ்சி போன்றவற்றில் சேர்க்கலாம்.

*கேக், பிஸ்கெட், பிரெட், பன் போன்றவற்றிலும் சேர்க்க இயலும்.

*இதில் துவையல், பொடி வகைகள், கலவை சாதங்கள் செய்தால் ருசியாக இருக்கும்.

*வெல்லம் சேர்த்து செய்யும் சில இனிப்பு களோடு சேர்த்தும் செய்யலாம். உலர்பழ லட்டு, எள் பர்பி, எள் உருண்டை போன்றவற்றுடன் சேர்க்கலாம்.

*சாண்ட்விச், தோசையின் மேல் பூசும் மசாலாவின் மீது, ஸ்டஃப்டு சப்பாத்தி என்று பலவற்றிலும் சேர்க்க இயலும்.

*உலர்பழ வகைகளில் பேரீச்சம்பழம், திராட்சை, அக்ரோட், அத்தி, பாதாம் போன்றவற்றுடன் சேர்த்து வெல்லமே சேர்க்காமல் பர்பி, லட்டு செய்யலாம்.நான் செய்து ருசித்த, பின்வரும் உணவுகளை செய்து பாருங்கள்.

1. ஆளி விதை சாதம்

1 ஆழாக்கு சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும். 4 சிவப்பு மிளகாய், 1லு டேபிள் ஸ்பூன் உளுந்து, 1லு டேபிள் ஸ்பூன் ஆளி விதை தனித்தனியாக வறுத்து ஒன்றாக பொடி செய்யவும். சாதத்தில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இந்தப் பொடியைத் தூவி தகுந்த உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும். மிக ருசியாக இருக்கும்.

2. எள், ஆளி விதை லட்டு

1/4 ஆழாக்கு எள்ளை நிறம் மாறும் வரை தனியே வறுக்கவும். 1/4 ஆழாக்கு ஆளி விதையை பொரிந்து, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு விட்டு இயக்கவும். பொடியானதும் சம அளவு துருவிய வெல்லம், ஏலத்தூள் சிறிதளவு சேர்த்து ஒரு தடவை மிக்ஸியை இயக்கி சேர்ந்து கொண்டதும் தட்டில் கொட்டவும். சிறிய உருண்டைகளாகச் செய்யவும். தினமும் 2 உருண்டை எல்லோரும் சாப்பிட இயலும்.

3. ஆளி விதை துவையல்

ஆளி விதை 2 டேபிள்ஸ்பூன் வறுத்து எடுத்துக் கொள்ளவும். சம அளவு கொள்ளைத் தனியே வறுக்கவும். 5 சிவப்பு மிளகாயை ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வறுக்கவும். ஆற விட்டு இதோடு சிறிது ஊற வைத்த புளி, 3 பல் பூண்டு, தகுந்த உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கலாம். சாதத்துடனும் பரிமாறலாம். இட்லி, தோசைக்கு சட்னியாகவும் கொடுக்கலாம்.

இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்கிற முக்கிய கொழுப்புச்சத்து, ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்கச் செய்யும்.
அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும்.

ஒரு முக்கியக் குறிப்பு

கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம். முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.

இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளது.இதில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனை போன்ற ஒன்று இருப்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என சொல்ல இயலாது. ஒரு சிலருக்கு ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை (Flax seed/linseed)

பார்பதற்கு ஆளி விதை, கொள்ளு போன்று பிரவுன் நிறத்தில் இருக்கும் .
பண்டைய காலத்தில் இந்த ஆளிவிதையை உடையாக பலர் அணிந்து வந்திருக்கின்றனர்.

பருத்தி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு லினன் துணிகள் இந்த ஆளி விதையில் இருந்து உற்பத்தி செய்யபட்டிருகின்றன.

பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான lignans ஆளி விதையில் உள்ளன.

ஆளி விதையில் எளிதில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன .

ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவை

ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் …இவை இதயத்திற்கு உகந்தவை
உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து /குறைத்து எடையை சீராக வைக்க உதவுகின்றன .

ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.
லிக்னான்ஸ் (Lignans)ஆளி விதையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் உள்ளன .

மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது ஆளி விதை . மேலும் அந்நாட்களில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல் hot flash ஆகியவற்றை குறைக்கவும்இந்த விதைகள் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

anti inflammatory குணம் என்பது நாளங்களில் கட்டிகள் வாதம் அழற்சி உருவாகாமல் தடுப்பது ..

மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

ஆளிவிதையின் சிறப்பு !

இதனை ஒன்றிண்டாக உடைத்து மாவாக சமையலில் சேர்த்து சாப்பிட வேண்டும்

அப்படியே சாப்பிடக்கூடாது .இதனை சமைக்கும்போது பிசுபிசுவென கொழ கொழப்பு தன்மையுடன் வரும்

இந்த தன்மை குடலுக்கு மற்றும் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. எளிதில் சீரணமாகி மலசிக்கல் ஏற்படாமல் மற்றும் கழிவுகளை துப்புரவு செய்து விடுகின்றது .

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது .

இதனை புளியோதரை மற்றும் வற்றல் குழம்பு செய்யும்போது சற்று வறுத்து பொடியாக கலந்து சமைக்கலாம் .

மேலும் ப்ரெட் செய்யும்போது இதன் அரைத்த மாவை ப்ரெட் மாவுடன் கலந்து ப்ரெட் செய்யலாம் .வெளிநாட்டில் இந்த ரொட்டி பிரபலம் .linseed bread என்பார்கள் .

சத்து மாவு கஞ்சி செய்யும் போது ஒரு கரண்டி ஆளிவிதைகளை வறுத்து அரைத்து சேர்க்கலாம் .

முக்கிய குறிப்பு
எந்த உணவாக இருந்தாலும் அளவுடன் உண்ண வேண்டும் ..புதிய உணவுகளை உண்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது .
மேலும் கர்ப்பிணிகள் ,குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை ஆல்டர் செய்யும் குணமுள்ள உணவுகளை தவிர்த்தல் நலம்.
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Hi

Wonderful information. Thanks for sharing

Bhuvana Ahilan
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
மூட்டுவலியை சரிசெய்யும் ஆளி விதை


மூட்டு வலியை சரிசெய்ய கூடியதும், சிறுநீர் பெருக்கியாகவும், உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டதும், தாய்பால் சுரப்பை அதிகரிக்க கூடியதும், சீத கழிச்சல், மூலத்துக்கு மருந்தாக இருப்பதுமான ஆளி விதை பற்றி நாம் இன்று பார்ப்போம். ஆளி விதை பல்வேறு நன்மைகளை கொண்டது.

இது அற்புதமான மருந்தாகி, உள் உறுப்புகளுக்கு பலம் தரக்கூடியது. உயிரணுக்களை அதிகப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. ஆளி விதை உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. இது சிவப்பு அரிசியை போன்று இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆளி விதையை வாங்கி சுத்தப்படுத்தி பொடி செய்து வைத்துக் கொண்டு மருந்துக்கு பயன்படுத்தலாம்.

ஆளி விதையை பயன்படுத்தி சிறுநீர் சுருக்கு, சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியுடன், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். இது சிறுநீர் பெருக்கியாகிறது. கழிச்சல், விக்கல், வயிறு பொருமல் போன்றவை குணமாகும்.


ஆளி விதையானது மூட்டு மற்றும் கணுக்காலில் ஏற்படும் வீக்கம், வலியை குறைக்கும். மாதவிலக்கை சீர்செய்யும். தாய்பால் சுரப்பதற்கு இது பயன்படுகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆளி விதையை பயன்படுத்தி தாய்பாலை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: ஆளி விதை பொடி, நெய், சர்க்கரை, காய்ச்சிய பால். அரை ஸ்பூன் நெய் எடுத்து உருக்கியதும்,

அதனுடன் ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை சேர்த்து லேசாக வறுக்கவும். நீர்விட்டு வேக வைக்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பின்னர், காய்ச்சி பால் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.இது பால் சுரப்பை அதிகரிக்கும். விந்தணு குறைபாட்டை சரிசெய்யும். கருவுற்ற தாய்மார்கள் ஆளி விதையை தவிர்ப்பது நல்லது. கருச்சிதைவு ஏற்படும் என்பதால் முதல் 3 மாதங்கள் இதை எடுத்துக்கொள்ள கூடாது.


ஆளி விதை பொடியை, நெய்யுடன் வறுத்து சர்க்கரை சேர்த்து எள் உருண்டை போன்று செய்து சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும். மாதவிலக்கு சரியாக வராதவர்கள் ஆளி விதையை எடுத்துக்கொண்டால் மாதவிலக்கு தூண்டப்படும். வாதத்தினால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஆளி விதை பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் சிறிது நீர்விட்டு பேஸ்ட் போன்று தயாரிக்கவும். வலி, வீக்கம் உள்ள இடங்களில் பத்துபோன்று பூசினால் வலி சரியாகும்.ஆளி விதையை பயன்படுத்தி மூலத்துக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணையுடன் ஆளி விதை பொடி சேர்த்து தைல பதத்தில் காய்ச்சவும். இதை துணியில் வடிகட்டிய பின், ஆசனவாயில் பூசும்போது மூலம் குணமாகும். -
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
ஆளி விதை செய்யும் அற்புதங்கள்! ஹெல்த் ஸ்பெஷல்
தற்போது கிடைக்கும் கொட்டைகள், விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் (Flaxseed அல்லது Linseed) எனப்படும் ஆளி விதை. இது லினன் (Linen) எனப்படும் நூலிழையைத் தரும் தாவரத்தின் விதை. எள் என்பது விதைகளின் நாயகன் என்று சொல்லலாம். அதேநேரம், மனித இனம் சாப்பிட்ட மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று இந்த ஆளிவிதை. பாபிலோனியர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன் இதைப் பயிரிட்டுப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட பயிர் இது.

பயன் நிறைந்தது

இதன் லத்தீன் பெயரான linum usitatissimum என்பதற்கு மிகவும் பயனுள்ளது என்று அர்த்தம். அது உணவுப் பொருளாக மட்டுமின்றி, துணிகளை நெய்வதற்கான நூலிழையாகவும் பழங்காலத்தில் பயன்பட்டிருக்கிறது. பழங்காலப் பாய்மரக் கப்பல்களில் பயன்பட்ட துணிகள் இதைக் கொண்டே நெய்யப்பட்டன. ஆளி விதை எண்ணெய் தற்போது வரை மரத்தை மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது.

ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.

இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid - EFA). ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா 6-ம் இருப்பதால், செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருளும் இருப்பதால் பாலிஃபீனால், ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் போன்றவை உடலுக்குக் கிடைக்கின்றன. இது பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது, மேலும் இந்த வேதிப்பொருட்கள் ஆன்ட்டி ஆக்சிடண்ட், பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்சை தொற்று எதிர்ப்பு, வைரஸ் தொற்று எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டி ருப்பதால், மார்பகம், குடல், புராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும் தன்மையைத் தருகிறது.

Flax Seedsயில் Omega-3 அதிகம் இருக்கின்றது. மீன் சாப்பிடாதவர்கள் இதனை அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

மற்றும் இதில், அதிக அளவு Magnesium, Phosphorous, Copper, Thiamine, Maganese and Dietary Fiber (நார் சத்து ) அதிக அளவில் இருக்கின்றது.

ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று நன்மைகள் உறுதியாக உண்டு.

முதலில் இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

இந்த லிக்னன்ஸ் இருப்பதால் ஆளிவிதை உடலில் சேர்ந்ததுமே உயர் இரத்த அழுத்தமும், இதய நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க்காரணிகள் எங்கே இருந்தாலும் லிக்னன்ஸ் அதைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. பரிசோதனைச் சாலையில், விலங்குகளுக்கு 7 வாரங்கள் தினமும் ஆளிவிதை கொடுத்ததில் 50% மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கி குணமாகியி ருந்ததை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.
மீனில் கிடைக்கும் அதே தரத்துடன் ஒமேகா-3 இந்த விதைகள் மூலம் எளிதில் கிடைப்பதால் நரம்பின் நுண்ணறைகள் மிகவும் பலம் பெறுகின்றன. இதனால் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு மன இறுக்கமோ அ ல்லது ஞாபக சக்தி குறைபாடோ வராது. மூளையின் ஞாபகசக்தி செல்கள் சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் இந்த விதை முதலிடத்தில் இருக்கிறது.

அதிக சக்தியும் அதிகக் கொழுப்பும் உள்ள இந்த அரிய உணவை, சுண்டலாகச் சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையும் வேண்டாம்.இதயத்திற்கும் மூளைக்கும் நன்மை தரும் கொழுப்புதான் இவை.அதிக சக்தியால் குறைவான உணவையே உண்போம். காராமணி, கொண் டைக்கடலை போல் அதிகப் பசியையும் இந்த ஆளி விதை கட்டுப்படுத்துகிறது. கடைகளில் ஃப்ளாக்ஸ் சீட், லின்சீட், அல்ஸி என்ற பெயர்களில் இந்த விதை விற்பனையாகிறது.

கொலஸ்டிரால், சக்கரையின் அளவினை அதிகம் குறைக்க உதவுக்கின்றது.

Flax Seedsயின எப்பொழுதும் அப்படியே சாப்பிட கூடாது. அதனை முழுவதாக அப்படியே சாப்பிட்டால், அது ஜீரணம் ஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனை சாப்பிட பலனும் கிடையாது. அதனால், கண்டிப்பாக அதனை பொடித்து தான் சாப்பிடுவது நல்லது.

இனி இதனை கொண்டு உணவு வகைகள் எவ்வாறு உண்டாக்குவது என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் – 2 கப்

Flax Seeds பொடி செய்ய :

ப்ளாஸ் ஸுட்(Flax Seeds) – 2 மேஜை கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
தனியா – 2 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கடுகு – 1/2 தே.கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்ட
உப்பு – 1/2 தே.கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு – 3 பல் தோலுடன் (வறுக்க வேண்டாம்)

(குறிப்பு : இதில் காய்ந்த மிளகாயினை நீக்கி சிறிது மிளகினை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.)

தாளித்து கொள்ள :
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
கடுகு, கடலை பருப்பு, கருவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை :


பொடி செய்து கொள்ள :

முதலில் flax Seeds + தனியா + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு என ஒவ்வொரு பொருட்களாக தனி தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு காய்ந்த மிளகாய் + கடுகு, வெந்தயம் + புளி என்று ஒவ்வொன்றாக மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

மிக்ஸியில் முதலில் தனியா போட்டு பொடிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து பொடிக்கவும்.

அத்துடன் கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு + கடுகு, வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.பிறகு Flax Seeds + புளி + உப்பு + பெருங்காயம் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 1 – 2 முறை Pulse Modeயில் இத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு பொடியினை சேர்த்து கிளறவும்.

சுவையான சத்தான சாதம் ரெடி.

குறிப்பு :

புளியினை கடாயில் வறுப்பதால் சூட்டில் சிறிது இளகிவிடும். மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொழுது ஈஸியாக இருக்கும்.

ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். அதே மாதிரி அரைக்கும் பொழுதும் தனி தனியாக அரைத்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.

இந்த பொடியினை இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

அதிகம் பொடி செய்து கொள்வதாக இருந்தால், இதே மாதிரி செய்து வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது புளியினை சேர்க்க வேண்டாம்.

ஆளி விதை இட்லி பொடி

தே.பொருட்கள்
ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் - சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்

செய்முறை
பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.

சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.

அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

பி.கு

இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

மலச்சிக்கல் குறைய (ஆளி விதை)

2 மேஜைக்கரண்டி ஆளி விதை எண்ணெயை எடுத்து அதிகமான தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

கோழைக்கட்டு குறைய - ஆளி விதை , எள் ., தேன்

செய்முறை:

ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து 1 தேக்கரண்டி அளவு பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

புற்றுநோய் எதிர்ப்பு

மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. உடலில் உள்ள துடிப்பு மிக்க ஹார்மோன்களை தாக்கும் புற்றுநோய்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சாப்பிடும் மருந்தான டாமோக்ஸிபென்னின் (Tamoxifen) பாதையில் குறுக்கிடாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ்கள் செயல்படுகின்றன.

இதயத்தின் நண்பன்

எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது.

நீரிழிவு

ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று முன்னோடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஹீமோகுளோபின் A1c ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன)

எரிச்சலும், எதிர்ப்பும்

ஆளி விதையில் உள்ள ALA மற்றும் லிக்னான்ஸ் ஆகிய இரண்டு பொருட்களும் பர்கின்ஸன் நோய் (Parkinson's Disease) மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் வரக் கூடிய எரிச்சலை தவிர்க்கும் குணத்தை கொண்டுள்ளன. இந்த விதைகள் எரிச்சலைத் தூண்டக் கூடிய சில பொருட்கள் வெளிப்படுவதைத் தவிர்க்கின்றன என்று பிட்ஸ்பாட்ரிக் (Fitzpatrick) குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு ஏற்படும் எரிச்சலை தவிர்க்கும் குணம் ALA-விற்கு உண்டு.

மேலும், விலங்குகளின் மேல் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஆளி விதையின் லிக்னான்கள் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களின் அளவை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமனிகளின் எரிச்சலை தவிர்ப்பதன் மூலம் அவற்றில் கழிவுகள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆளி விதைகள் மாரடைப்பு ஏற்படுவதையும், வலிப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும் அருமருந்தாக உள்ளது.

ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)

2007-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மாதவிடாயின் இறுதி பருவத்தில் உள்ள பெண்கள், தினமும் 2 தேக்கரண்டிகள் ஆளி விதையை உணவு, பழரசம் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தங்கள் உடலில் உள்ள ஹாட் ஃப்ளாஷ்களை (Hot Flashes) குறைத்திட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 57% அளவிற்கு ஹாட் ஃப்ளாஷ்களை குறைத்திட முடியும். இந்த வகையான பலன்களை குறைந்தபட்சம் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களிலோ பெண்கள் அடைந்து, ஆச்சரியப்படும் சூழலை ஆளி விதை உருவாக்கும்.

முட்டைக்கு மாற்று

ஆளி விதைக்கு மற்றொரு சிறந்த பண்பும் உண்டு. அது பிசுபிசுப்பாக மாறிவிடும் தன்மை. திரவப் பொருளுடன் ஆளி விதை சேர்ந்தால், அது ஜெல்லியைப் போல மாறிவிடும். இது குடலுக்கு நல்லது. குடலைத் தூய்மைப்படுத்தி, மலம்கழித்தலை இலகுவாக்கி, நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க வைக்கிறது. இதன் மூலம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைக் கிரகிக்க, அதிக வாய்ப்பு கிடைக்கும்.

அதேபோல ஆளி விதையை பேக்கிங்கில் முட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். மூன்று மேசைக்கரண்டி ஆளி விதையை நன்றாக அரைத்து, அரை கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். அது முட்டையின் வெள்ளைக் கரு போல மாறும் வரை இப்படிக் கலக்க வேண்டும். மாவு போன்ற பொருட்களைப் பிசைந்து சேர்க்க இது உதவும்.

சூட்டிலும் குறையாத சத்து

ஆளி விதையை நன்கு அரைத்து, இட்லி-தோசை மாவு, சப்பாத்தி மாவு போன்றவற்றை மென்மையாக்கப் பயன்படுத்த லாம். பொதுவாக, இதை அதிகம் பயன்படுத்தும் முறை இதுதான். ஆளி விதையைக் கொண்டு ஒமேகா 3 மேம்படுத்தப்பட்ட பீட்சா, தோசை, மஃபின், பிஸ்கட் போன்றவற்றைச் செய்யலாம். ஒமேகா 3-ல் ஒன்றான ஆல்பா லினோலிக் அமிலம் (Alpha linoleic acid - ALA) 150 டிகிரி செல்சியஸுக்குச் சூடேற்றினால்கூட எதுவும் ஆகாது. மகாராஷ்டிராவில் ஆளி விதையில் செய்யப்படும் சட்னி பிரபலம்.
அதேநேரம், ஒரு நாளில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆளிவிதையின் அளவு ஒன்று முதல் இரண்டு மேசைக்கரண்டிதான். அதாவது 30 கிராம். ஆளி விதைத் தூளை வாங்குவதைவிட, ஆளி விதையை வாங்கித் தேவைக்கேற்ற அளவு அவ்வப்போது நாமே அரைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஆளிவிதை சீக்கிரம் சத்துகளை இழக்கக்கூடியது.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
நமது ஆரோக்கியத்தில் ஆளி விதையின் பங்கு

ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று.
[FONT=TAUN_Elango_abiramiregular]

[FONT=taun_elango_abiramiregular]ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds) .

நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான்.இப்போதும் பல கிராமங்களில் இந்த விதையை செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து சமையலுக்கு உபயோகப்படுத்தும் பழக்கம் உண்டு. ‘ஃப்ளெக்ஸ் சீட்’ என்பதற்கு லத்தீனில் ‘மிகவும் பயனுள்ளது’ என்று அர்த்தம்.

அவர்கள் பாஷையில் அதை ‘லினியம் யுஸிடாட்டிஸஸிமம்’ (Linum usitatissimum) என்று கூறுவர். உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு. பழங்கால எகிப்து, சைனாவில் அதிகம் பயிரிடப்பட்டது.

100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள்

புரதச்சத்து - 20.3 கிராம்
கொழுப்பு - 37.1 கிராம்
நார்ச்சத்து - 40.8 கிராம்
மாவுச்சத்து- 28.9 கிராம்
சக்தி - 530 கி.கலோரிகள்
கால்சியம் - 170 மி.கிராம்
பாஸ்பரஸ் - 370 மி.கிராம்
இரும்புச்சத்து - 2.7 மி.கிராம்
இது மட்டுமல்ல கரோட்டீன் (வைட்டமின் - ஏ) தயாமின், ரிபோஃப்ளோவின், நயாஸின் (4.4 மி.கி.), ஃபோலிக் ஆஸிட் மிகச்சிறந்த அளவில் உள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.

இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் பல முக்கிய சத்துகளைக் கொண்டது. இதில் உள்ள ‘லிக்னன்‘ என்னும் கொழுப்பு உதவி புரியும் என்பதை பல விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர். அதில் முக்கியமானது ‘பிட்ஸ் பேட்ரிக்’ என்னும் விஞ்ஞானி செய்த ஆய்வு.

பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் உணர்வர். இதை ஆங்கிலத்தில் ‘ஹாட் ஃப்ளஷஸ்’ என்று கூறுவர். உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படும் போது இதைப்போல உணர்வர். இந்த ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் இதைப் போல வருவதைக் குறைக்கும் என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு பல விதமாக உணவுகளில் சேர்க்கும் போது பாதிக்குப் பாதி குறைகிறது என்பதை 2007ல் நடந்த ஆய்வு கூறுகிறது.

இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். கொலஸ்ட்ராலை குறைக்கும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. சர்க்கரை வியாதியைக் குறைக்கும். க்ளைஸிமிக் இன்டெக்ஸ் குறைவு.

இதில் அதிக அளவு உயிர்வளித் தாக்க எதிர்க்காரணிகள் (Anti Oxidants) உள்ளதால் பிராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும். தினமும் உட்கொண்டால் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாது. வந்தவர்கள் உட்கொண்டால் கட்டிகள் மேலும் பெருகாது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும்.

இந்த ஆளி விதையையும் அதன் செடியையும் பசுக்களுக்கு உணவாகத் தரும் போது அது சுரக்கும் பாலும் அதிக சத்துள்ளதாக இருக்கும்.

இத்தனை நற்குணங்கள் கொண்ட இந்த ஆளி விதையை நாம் பலவிதமாக உணவில் சேர்க்க இயலும்.

ஆளி விதையை வெறும் கடாயில் மிதமான தணலில் நல்ல மணம் வரும் வரை வறுத்தால் நாம் அப்படியே உண்ண முடியும்.

கர்ப்பிணிகள் இதை உணவில் அதிகம் சேர்க்க வேண்டாமென கூறியுள்ளார்கள். அதிக நார்ச்சத்து இருக்கும் போது சரியாகத் தண்ணீர் அருந்தாவிட்டால், குழந்தை அழுத்தும் போது குடலில் இருந்து சீக்கிரம் வெளித்தள்ளப்படாமல் போகலாம். முன்பிருந்தே சாப்பிடாமல் திடீரென தினமும் உட்கொண்டால் வயிறு உப்புசம், வயிற்றில் சிறு வலி, ஒரு சிலருக்கு வாந்தி, பேதி அல்லது மலச்சிக்கல் வரலாம்.

இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்டுள்ளது.இதில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோனை போன்ற ஒன்று இருப்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என சொல்ல இயலாது. ஒரு சிலருக்கு ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.[/FONT]
[/FONT]
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.