ஆழ்மன சக்திகள்- Powers of Sub conscious mind

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1

நம்மில்
ஒவ்வொருவரும்ஒருசிலசந்தர்ப்பங்களில்ஆழ்மனதின்அற்புதசக்தியைநம் வாழ்க்கையிலேயேகண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால்இந்தவிஷயங்கள்மிகச்சாதாரணமானவையாகஇருப்பதாலும், நம்மைஆழ்மனசக்தியாளராகநினைக்காததாலும்அவற்றைநாம்பெரிதாகநினைப்பதில்லை.
அதுவேமிகவும்அசாதாரணமானநிகழ்ச்சியாகஇருந்தால்மட்டுமேஅந்தசக்தியின்தன்மைநம்மால்உணரமுடிகிறது.உதாரணத்திற்குவின்ஸ்டன்சர்ச்சில்வாழ்வில்நடந்தஒருசம்பவத்தைசொல்லலாம். இரண்டாம்உலகப்போர்சமயத்தில்ஒருநாள்தன்காரைநோக்கிச்செல்ல, டிரைவர்வழக்கமாகஅவர்அமரும்இடத்தின்கார்க்கதவைதிறந்துநின்றார். வின்ஸ்டன்சர்ச்சில்அந்தஇடத்தில்அமரமுற்படாமல்சுற்றிச்சென்றுமறுபக்கக்கதவைத்திறந்துஅந்தப்பக்கமேஉட்கார்ந்துகொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோஒருஉள்ளுணர்வுவழக்கமானஇடத்தில்என்னைஉட்காரவிடாமல்தடுத்ததுஎன்றுசர்ச்சில்சொன்னார்.

அதுஉயிரைக்காப்பாற்றியசம்பவமானதால்அதுஇன்றும்பேசப்படுகிறது. அதுவேஉப்புசப்பில்லாதஒருநிகழ்வைப்பற்றியதாகஇருந்தால்யாரும்அதைநினைவுவைத்துக்கொள்வதில்லை. ஆனால்உண்மையில்ஒருவரைப்பற்றிநினைத்தசிறிதுநேரத்தில்அவர்நம்எதிரில்வந்துநிற்பதும், சர்ச்சிலின்வாழ்க்கையில்நடந்தஅந்தசம்பவமும்ஆழ்மனசக்தியின்சிலவெளிப்பாடுகள்தான். ஆழ்மன சக்தியின்வெளிப்பாடுகள்பலதரப்பட்டவை. அவை :– 1. Psychokinesis எனப்படும்வெளிப்பொருள்கள்மீதுஇருக்கும்கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம்ஐம்புலன்களின்துணையில்லாமல்தகவல்கள்அறியமுடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும்ஒருமனதிலிருந்துஇன்னொருமனதிற்குசெய்திகளைஅனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும்வெகுதொலைவில்உள்ளதையும்காணமுடியும்சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.

5
. Psychometry என்பதுஒருபொருளைவைத்துஅதன்சம்பந்தப்பட்டவிஷயங்களையும், மனிதர்களையும்அறியமுடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும்நடப்பதைமுன்கூட்டியேஅறியும்சக்தி.

7. Post cognition
என்னும்என்னநடந்ததுஎன்பதைநடந்தபின்னர்அறியமுடிந்தசக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலைவிட்டுவெளியேறிபலவற்றையும்காணும்சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும்மருந்துக்களின்உதவியில்லாமல்நோய்களைக்குணப்படுத்தும்சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்மனசக்திகள்முழுவதையும்இந்தஒன்பதுவகைகளில்அடக்கிவிடமுடியாதுஎன்றபோதிலும்இவையேமிகமுக்கியமானவைஎன்றுசொல்லலாம்.
 

Attachments

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Jayakalaiselvi, very interesting to know about the details aboutஆழ்மன சக்திகள்! Really amazing! thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
அருமையான பகிர்வு ஜெயா .
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4
Hi Jayakalaiselvi, very interesting to know about the details aboutஆழ்மன சக்திகள்! Really amazing! thank you!
Welcome sis......
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.