ஆவாரம்பூவின் ஆயுர்வேத நன்மைகள்!

#1


ஆவாரம்பூ என்றால் கடவுளுக்கு பூஜைக்கு படைக்கும் பூவாக தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆவாரம்பூவை பெண்கள் விரும்பி தலையில் சூடுவதும் இல்லை.

ஆனால், இயற்கையாக இதை பூவாக கண்டாலும், இது ஒரு மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து என்று தான் கூற வேண்டும். தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ உதவுகிறது.

தலைமுடி வளர!
நெல்லிக்காய், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, நல்லெண்ணையில் காய்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.

உடல் எரிச்சல் குறைய!
ஆவாரம்பூ, காய், பட்டை, இலை, வேர் அனைத்தையும் காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் குறைந்த நல்ல தீர்வுக் காண முடியும்.


உடல் பலம்!
உடல் பலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புவோர், ஆவாரம்பூவை பாலில் கலந்து குடித்து வரலாம்.


மின்னும் சருமம்!
மினுமினுப்பான சருமம் பெற வேண்டும் எனில், ஆவாரம்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

நீரிழிவு நோய்!
ஆவாரை கொழுந்து, ஆவாரம்பூ, ஆவாரை இலை, கீழாநெல்லி, நெல்லி வற்றல் ஆகியவற்றை ஐந்து கிராம் அளவு எடுத்து, மோர் விட்டு நன்கு அரிது, அதை உலர்த்தி காலை, மாலை அரை கிராம் அளவு மோரில் கலந்து உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும்.

ஆவாரம்பூ, கறிவேப்பிலை, நெல்லிக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் தாக்கம் குறைய வாய்ப்புகள் உண்டு.

மலச்சிக்கல்!
அவாரம்பூவின் நடுவில் இருக்கும் பகுதியை 50 கிராம் அளவு எடுத்து, இரவு நீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிக்கட்டி அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

மாதவிடாய்!
அசோகமட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ, திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் பொடி செய்து, சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு சீராகும்.