ஆவி பிடித்தால் சளி போகுமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆவி பிடித்தால் சளி போகுமா?


அறிவோம்

ஒரே தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம் என்று கண்ணீருடன் நின்றால், உடனே ‘ஆவி பிடி... எல்லாம் சரியாகிடும்’ என்பார் அம்மா. இது பாரம்பரியமாக பின்பற்றிவரும் எளிய சிகிச்சை முறை என்றாலும், அனைவருமே எடுத்துக் கொள்ளலாமா?விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர்அனந்த பத்மநாபன்.

‘‘சளித்தொல்லை, தலை பாரம், நாள்பட்ட காய்ச்சல், உடல் வலி என எல்லாவற்றுக்குமே ஒரு நல்ல தீர்வு - ‘ஆவி பிடிப்பது’. வயதானவர்களும் சிறுகுழந்தைகளும் பெரியவர்கள் துணையுடன் இச்சிகிச்சையை மேற்கொள்வதே பாதுகாப்பானது. முதலில் வாயகன்ற பாத்திரத்தில் மிதமான சூட்டில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வைத்து கொள்ள வேண்டும்.

பின்னர், கனமான துணி அல்லது போர்வையால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு, முன்பக்கமாக குனிந்த நிலையில், சுடுதண்ணீரில் இருந்து வெளியேறும் ஆவியை முகம், முன்நெற்றி, கழுத்துப்பகுதி ஆகிய இடங்களில் படும்படி, வலது மற்றும் இடது பக்கம் முகத்தைத் திருப்பித் திருப்பி காட்ட வேண்டும். கண்களில் ஆவி படாமல் பார்த்து கொள்ள Eye pack என்ற உபகரணத்தைப் பயன்படுத்தலாம்.

ஆரம்பத்தில் சாதாரண சுடுதண்ணீரில் மூலிகை அல்லது தைலம் எதுவும் சேர்க்காமல் ஆவி பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. பின்னர், Tincture Benzoin மருந்தை சுடுதண்ணீருடன் கலந்து பயன்படுத்தத் தொடங்கினர். வேப்பிலை, யூகலிப்டஸ் இலைகளை தண்ணீருடன் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கும் வழக்கமும் உள்ளது. ஆவி பிடிப்பதற்கு மின் உபகரணங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக கையாள வேண்டும்.மழை, பனிக்காலம் மட்டுமல்ல...

கோடைகாலத்திலும் நீராவி பிடிப்பதில் தவறில்லை. ஒரு நாளில் 3 வேளைகள் இதை செய்யலாம். சாப்பிடுவதற்கு முன் செய்வது நல்லது. சாப்பிட்ட பிறகு ஆவி பிடித்தால், சிலருக்கு குமட்டல் மற்றும் வாந்தி வரலாம். தலையில் கோர்த்துள்ள நீரையும், மார்புச் சளியையும் கரைத்து வெளியே கொண்டு வந்து புத்துணர்வும் அளிக்கும்.4-5 வயது குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சையை தாராளமாக அளிக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்குக் கூடாது. ஏனென்றால், அவர்கடைய சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். அவர்களால் பெரியவர்களுடன் ஒத்துழைக்கவும் முடியாது”.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#2
oh good @chan, we used to do in our home.... quite true... sali, thummal ellaame poi vidum... imediate relief!!!
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
oh good @chan, we used to do in our home.... quite true... sali, thummal ellaame poi vidum... imediate relief!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.