ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு முறைகள&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு முறைகள்ஆஸ்துமா எனப்படும் நீண்ட கால நுரையீரல் பாதிப்பு நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்களை குறுக்கி விடுகின்றது. இது அடிக்கடி ‘வீஸிங்’ எனப்படும் சத்தமான மூச்சு (விசில் சத்தம் போல), மூச்சுத் தவிப்பு, நெஞ்சிருக்கம், இருமல் போன்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. இருமல், இரவிலும், விடியற்காலையிலும் ஏற்படும்.

ஆஸ்துமா எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும், குழந்தை பருவத்திலேயே அநேகமாக ஆரம்பித்து விடுகின்றது. ஆஸ்துமாவை அறிந்துக்கொள்ள முதலில் நாம் மூச்சுக் குழாய்களைப் பற்றியும், நுரையீரலைப் பற்றியும் ஓரிரு செய்திகளை அறிய வேண்டும். மார்பகக் கூட்டில் அடைந்துள்ள நுரையீரல் காற்றிலிருந்து ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவினை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடு எனப்படும் கரியமில வாயுவினை வெளியேற்றுகின்றது.

இதுவே மூச்சு விடுவதாகும். இந்த மூச்சு உயிர் வாழ்விற்கு முதல் அவசியமான ஒன்று. சில நேரங்களில் ஆஸ்துமா பாதிப்பு சிறிய அளவில் ஏற்பட்டு சிறிய அளவிலான சிகிச்சையிலேயே மறையும். சிலசமயம் அதிகமான தொந்தரவினை ஏற்படுத்தும். ஆஸ்மாவிற்கு தீர்வு என்பது கிடையாது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் நன்றாகவே இருந்தாலும், எந்த நிமிடத்திலும் பாதிப்பு ஏற்படலாம். இன்றைய மருத்துவத்தில் ஆஸ்துமா பாதிப்பிற்கு முன்னேற்றமிக்க சிகிச்சைகள் உள்ளன.

ஆஸ்துமா ஏன் ஏற்படுகின்றது?

இதுதான் குறிப்பிட்ட காரணம் என்று இல்லை. ஆய்வில் சில காரணங்களை பாதிப்பின் அடிப்படையாக கூறியுள்ளனர்.

* எளிதில் அலர்ஜிகளால் பாதிக்கப்படுபவர்

* பெற்றோர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருத்தல்

* சிறு வயதில் ஏற்படும் சில நுரையீரல் பாதிப்புகள்

* வைரஸ் கிருமிகள் பரம்பரரை காரணம், இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்படும்பொழுது சிலரது இடங்களில் (அ) பக்கத்தில் யாராவது சிகரெட் பிடித்தால், அந்த புகை அவருக்கு அதிக பாதிப்பினை கொடுக்கும். பொதுவில் சுகாதாரமான சூழ்நிலையினை கடைப்பிடிக்கும் பொழுது சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா பாதிப்பு பெரும் அளவில் கட்டுப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே அதிக பாதிப்பு காணப்படுகிறது. ஆனால், வளர்ந்த ஆண்களை விட வளர்ந்த பெண்களுக்கே இப்பாதிப்பு அதிகம் காணப்படுகின்றது. ரசாயனப் பொருட்கள் காரணமாக, தொழில் காரணமாகவும் சிலருக்கு ஆஸ்துமா ஏற்படுகின்றது. சிலருக்கு ஆஸ்துமா அதிகரிக்க சில காரணங்கள் இருக்கின்றன. அவை...

* தூசு, மிருகத் தோல், கரப்பான் பூச்சி, மகரந்ததூள், புல், பூக்கள்
* சிகரெட் புகை, தூசு, மாசு மிக்க காற்று, ரசாயனப் பொருட்கள், ஸ்ப்ரே (தலை ஸ்ப்ரே போன்றவை)
* ஆஸ்ப்ரின், வலி வீக்க நிவாரண மாத்திரைகள்
* வைரஸ் தாக்குதல், சளி
* அதிக உழைப்பு, உடற்பயிற்சி ஆகியன. உங்கள் மருத்துவர் உங்களை பரிசோதனை செய்த பிறகே, சிகிச்சை முறைகளை முடிவு செய்வார்.

ஆஸ்மாவினை நல்ல கட்டுப்பாட்டில் வைப்பது என்பது...

* இருமல், சளி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது

* நுரையீரல் நன்கு செயல்படும்படி தன்னை கவனித்துக் கொள்வது

* முறையான மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது உங்கள் ஆஸ்துமா கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது என்பதனை எப்படி அறிவது?

* வாரத்திற்கு சிறிய பாதிப்பு இரண்டு முறைக்கு மேல் இல்லாவிடில்

* இரவில் சிறிய மூச்சுத் தொந்தரவு மாதத்திற்கு 1-2 முறைக்கு மேல் இல்லாவிடில்

* உடனடி நிவாரண மருந்துகளை வாரத்திற்கு 2 முறைக்கு மேல் நீங்கள் பயன்படுத்தாவிடில்

* சற்று கூடுதலான பாதிப்பு வருடத்திற்கு ஒருமுறைக்கு மேல் ஏற்படாவிடில் உங்கள் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் உள்ளது என அறியலாம். சிறு குழந்தைகளுக்கு 5 வயது வரையில் ஆஸ்துமாவினை நிர்ணயம் செய்வது சற்று கடினமே. அதுபோல் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி ஆஸ்துமா மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

* உங்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டாலோ

* உங்கள் அன்றாட வேலை செய்யமுடியாமல் போனாலோ

* உடனடி நிவாரண மருந்துகளால் பயனற்று இருந்தாலோ

* அடிக்கடி வாயில் ‘இன்ஹேலர்’ பயன்படுத்த வேண்டி இருந்தாலோ

* அவசர சிகிச்சை தேவைப்பட்டாலோ ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். உங்கள் மருந்துகளை மருத்துவ ஆலோசனைப்படி மாற்றுங்கள். தினமும் ஒரு ஆப்பிள் உங்கள் நுரையீரலுக்கு நல்லது. இதனைப் பற்றி பிரிட்டன் மருத்துவம் ஆய்வு நடத்தியுள்ளது.

* வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்த பழங்கள், தக்காளியும் நுரையீரலுக்கு நல்லது.

* காரட் சாறு, காரட் உணவு மிகவும் சிறந்தது.

* காபி, கருப்பு டீ இவை இரண்டும் காற்று குழாய்களை சீராய் வைப்பதில் உதவுகின்றது. இருப்பினும், இவைகளை ஓரிரு கப் எடுத்துக்கொள்வதே நல்லது.

* ஓமேகா 3 - இதனை மாத்திரையாகவோ அல்லது ப்ளாஸ்க் விதைகளையோ எடுத்துக் கொள்ளலாம்.

* பூண்டு மிக சிறந்த உணவு.

* முதலில் பாலினை ஆஸ்துமா நோயாளிகளை தவிர்க்கச் செய்தனர். இன்றைய ஆய்வுகள் பாலில் உள்ள வைட்டமின் ‘டி’ ஆஸ்மாவிற்கு நல்ல நிவாரணம் என்றே நிரூபித்துள்ளது.

* உப்பு குறைவாக பயன்படுத்துவது ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

உங்கள் நுரையீரலைப் பாதுகாக்க:

* பீடி, சிகரெட் இவற்றினை விட்டு விடுங்கள்.

* சுகாதாரமான சூழ்நிலையில் இருங்கள்.

* உடற்பயிற்சி பழகுங்கள்.

* தூசு வாய்ந்த இடத்தில் மூக்கு, வாய் இவற்றினை பாதுகாக்கும் முகமூடிகளைப் பயன்படுத்துங்கள்.

* ப்ளூ ஜூர வாக்சின்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

* தொடர் இருமல், சிறிய உடற் பயிற்சியில் அதிக மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சனைகளை உடனடி கவனியுங்கள்.

* இஞ்சியை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கோபம், சிரிப்பு, அழுகை, கத்தல், மன உளைச்சல் இவை ஆஸ்துமா பாதிப்பினை அதிகரிக்கும். ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களில் 12 சதவீத மக்கள் கூடுதல் எடை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆஸ்துமா பாதிப்புடையோருக்கு சைனஸ், ப்ளூ, ஜீரம் இரண்டும் பாதிக்கும்பொழுது ஆஸ்மா பாதிப்பு கூடுகின்றது.

* கடுகு எண்ணெய் சிறிது சூடு செய்து அதில் கற்பூரம் கலந்து நெஞ்சு, முதுகில் நன்கு மசாஜ் செய்யுங்கள். இதனை நாள் ஒன்றுக்கு பலமுறை செய்யலாம்.

* உலர்ந்த அத்திப்பழம் 3-4 எடுத்து நன்கு நீரில் சுத்தம் செய்து பின் சிறிதளவு நீரில் நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலை ஊறிய பழத்தினை சாப்பிடுங்கள், நீரினையும் குடியுங்கள்.

* 10-15 பூண்டு பல்லினை அரை கப் பாலில் கொதிக்க வைத்து அப்படியே நசுக்கி குடித்து விடுங்கள்.

* யூக்லிப்டஸ் எண்ணெயினை டிஷ்யூ பேப்பரில் தொட்டு தூங்கும் பொழுது தலை அருகே வைத்துக்கொள்ளுங்கள். இதே எண்ணையினை சிறிதளவு சுடுநீரில் போட்டு ஆவி பிடியுங்கள்.

* ஒரு டீஸ்பூன் தேனை ஒரு கப் சுடுநீரில் கலந்து தினமும் மூன்றுமுறை குடியுங்கள்.

* பச்சை வெங்காயம் (அ) சமைத்த வெங்காயம் உண்ணுங்கள்.

* பப்பாளி காய், பழம் இரண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் புரத அளவில் 10 சதவீதம் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புரதம், சைவ உணவிலிருந்து இருப்பது நல்லது.

* ஆலிவ் எண்ணெய் நல்லது.

* நிறைய தண்ணீர் குடியுங்கள்.

* மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள்.

* நெஞ்செரிச்சல் இருப்பது ஆஸ்துமாவினை அதிகப்படுத்தும். நெஞ்செரிச்சலினை சரி செய்துக் கொள்ளுங்கள். வெற்றிலை இலையினை நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதுகாப்பிற்கு கை வைத்தியமாக நம் நாட்டில் செய்து வந்தனர். சற்று குளிர் அதிகமாகும் காலத்தில் இதனை உணவு முறையிலும் பயன்படுத்தி உள்ளனர்.

நுரையீரலே சுவாசிப்பதற்கும் உடலின் கழிவுப்பொருளினை கரிமில வாயுவாக வெளி யேற்றுவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. 70சதவீத கழிவினை நுரையீரல் வெளியேற்றுகின்றது. நாளென்றுக்கு சுமார் 17,000 முறை மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடுகின்றது. நாம் உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவீதம் மூளைக்கே செல்கின்றது.

எனவே, நுரையீரல் சரிவர இயங்காகவிடில் கவன இன்மை, மறதி, சோர்வு போன்றவை ஏற்படுகின்றது. நுரையீரல் பாதிப்பு உடையோருக்கு ஜீரண கோளாறும் ஏற்படுகின்றது. அதிக கொழுப்பு, சர்க்கரை, மைதா, அதிக எண்ணை உணவு, அதிக குளிர்ச்சியான உணவுகள் ‘சளித்தொல்லையை ஏற்படுத்துவதால்’ இவைகளைத் தவிர்ப்பதே நல்லது.

அதிக மசாலா, மாமிசம், முட்டை, ரெடிமேட் உணவுகள், மது, புகை இவை நுரையீரலின் திசுக்களை பாதிக்கக் கூடியவை. இவைகளையும் தவிர்ப்பதே சிறந்தது. அதிக காபி மற்றும் நெஞ்செரிச்சல் கூட்டும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், முழு தானியம், அடர் பச்சை கொண்ட கீரை, காரட் போன்றவை நுரையீரலுக்கு ஏற்ற உணவு. நிமிர்ந்த உடல்வாகு, அளவான ஏரோபிக்ஸ் பயிற்சியும் நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#2
Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு முறைக&#299

Useful info.
 

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#3
Re: ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் உணவு முறைக&#299

நல்ல பயனுள்ள குறிப்பிற்கு நன்றி.............
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.