ஆஸ்பிரின் மாத்திரைகளால் பார்வையிழப்பு &#

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
இருதய நோய்களுக்கு தினப்படி எடுத்துக் கொள்ளும் 'ஆஸ்பிரின்' மாத்திரைகளால் வயதான காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐரோப்பாவின் புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு 'ஆப்தால்மாலஜி' (Opthalmology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்பிரின் மாத்திரைகளால் நேரடியாக கண்பார்வை பாதிப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்படவில்லை. ஆனால் கண்கோளாறுகள் ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் ஆஸ்பிரின் அதனை துரிதப்படுத்தி பார்வையில் கோளாறுகளை அதிகப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"வயதானவர்களுக்கு ஏற்கனவே கண் பரிதி வட்டத்தில் உள்ள கரும்புள்ளியில் பழுது இருந்தால் அவர்களை ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வது உகந்ததல்ல" என்று வில்லியம் கிறிஸன் என்ற பாஸ்டன் மருத்துவர் ஒருவர் இந்த ஆய்வு குறித்து கேட்டதற்கு கூறினார்.

ஹாலந்து நரம்பு விஞ்ஞானக் கழகத்தைச் சேர்ந்த டார்கர் பௌலஸ் தலைமையிலான குழு 65 வயதுக்கு மேற்பட்ட 4,700 பேரை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

ஆஸ்பிரின் மாத்திரைகளை தினப்படி எடுத்துக் கொள்ளும் 839 பேர்களில் 36 பேருக்கு 'மேக்யூலர் டிஜெனெரேஷன்' (Macular degeneration) என்ற கண் பரிதிவட்ட கரும்புள்ளி பழுதடைந்திருப்பது தெரியவந்தது.

இது பரிதி வட்ட கரும்புள்ளியில் ஈரம் அதிகரித்திருக்கும், பரிதி வட்ட கரும்புள்ளியில் வறண்ட தன்மையும் உள்ளது இது மிகவும் சகஜமானது, கடுமை குறைவானது.

ஆனால் கண்ணின் காட்சிப்புல மையத்தில் ஈரமயமாவது ரத்த நாளத்தில் கசிவு ஏற்படுவதால் நிகழ்வது.

தினப்படி ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளும் 100 பேர்களில் நாலு பேருக்கு மேற்கூறிய கண்பார்வை இழப்பு நிலை ஏற்படுகிறது. மேலும் ஆஸ்பிரினை தினப்படி எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டு எடுத்து கொள்ளும் 100 பேர்களில் இருவருக்கு மேற்கூறிய பார்வை இழப்பு நிலை ஏற்படுவதாகௌவ்ம் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இன்றைய தேதியில் அமெரிகாவில் வறண்ட மற்றும் ஈரமய கண் மேக்யுலாவினால் 60 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு பார்வையிழப்பு அதிகம் இருப்பதற்கு காரணம் ஆஸ்பிரினாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

இது குறித்து ஆய்வுகள் மேலும் வெளிவந்தா ஆஸ்பிரினுக்கும் கண்பார்வை இழப்புக்கும் உள்ள தொடர்பை மேலும் ஐயமற நிரூபிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் பௌலஸ் தெரிவித்துள்ளார்.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
Re: ஆஸ்பிரின் மாத்திரைகளால் பார்வையிழப்ப&#3009

new information Saranya....
thanks 4 sharing....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.