ஆஸ்பெஸ்ட்டாஸ் ஆபத்து

chan

Well-Known Member
#1

ஆஸ்பெஸ்ட்டாஸ் ஆபத்து?

ஆஸ்பெஸ்ட்டாஸ் மேற்கூரை பொருத்திய வீட்டில் வசித்தால் அது அளவுக்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதோடு, புற்றுநோயைக் கூட விளைவிக்கும் என்கிறார்களே... உண்மையா?

விளக்கம் தருகிறார் புற்று நோய் மருத்துவர் பெல்லாரமைன்...‘‘ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையின் கீழ் வசிப்பவர்கள் அதன் வெப்பத்தை நேரடியாகவே உணர்ந்திருப்பார்கள். அந்த வெப்பத்தின் காரணமாக எழும் பிரச்னைகள் தனிப்பட்டவை. ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையிலிருந்து அதன் நார்கள் தன்னிச்சையாகவே உதிரும் தன்மையுடையவை. அவை காற்றில் கலந்து நமது சுவாசம் மூலம் சுவாசக் குழாய் வழியாக நுரையீரலுக்குச் சென்றுவிடும்.

நுரையீரலில் தங்கி அதன் சுவர்களைக் குத்தி சேதப்படுத்துவதன் காரணமாக Malignant Mesothelioma எனும் புற்றுநோய் ஏற்படுகிறது. நுரையீரலில் இருக்கும் நார் வயிற்றுப்பகுதிக்கு வந்து விட்டால் வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும். ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை பொருளாதார ரீதியில் ஏற்புடையதாக இருந்தாலும் மருத்துவ ரீதியில் உடல்நலத்துக்கு விரோதமானது. அதைத் தவிர்ப்பதே நல்லது’’.
 

Important Announcements!