ஆ... நெஞ்செரிச்சல்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆ... நெஞ்செரிச்சல்!


விருந்தும் மருந்தும்

உணவு விஷயத்தில் எல்லா நேரங்களிலும் நிதானமாகவே இருப்பது நல்லதுதான். சில நேரங்களில் கல்யாண விருந்தோ, நண்பர்களின் ட்ரீட்டோ நடக்கும்போது Break the rules என்று வெயிட்டாக சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை.

இதுபோல விருந்து சாப்பிட்ட பிறகு எதுக்களிக்கும் பிரச்னையும் நெஞ்சுஎரிச்சலும் பாடுபடுத்துகிறதா? தப்பிக்க சில எளிமையான வழிகள் இருக்கின்றன. பின்பற்றிப் பாருங்கள்...

* காரமான உணவுகள், சிட்ரஸ் அமிலம் கொண்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகள், பொரிக்கப்பட்ட உணவுகள், மதுபானங்கள் போன்றவை எதுக்களிப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் என்ன உணவு காரணமாக எதுக்களிப்பு ஏற்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அந்த உணவைத் தவிர்த்துவிடுங்கள். முடிந்தால் அந்த உணவுக்கு முற்றிலும் தடா போடுங்கள்.

* அதிக எடையால் ஆயிரம் பிரச்னைகள்... அதில் ஒரு பிரச்னைதான் இந்த எதுக்களிப்பு. அதிக எடையின் காரணமாக, வயிற்றுப் பகுதிக்கு அதிக அழுத்தம் கிடைத்து கேஸ்ட்ரிக் அமிலம் உணவுக்குழாய்க்கு நகர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். அதனால், உங்களின் எடையை கவனியுங்கள்.

* இது ஒரு ஜாலியான தந்திரம்தான். உணவுக்குப் பிறகு ஒரு சூயிங்கம் மெல்லுங்கள். அது சுகர் ஃப்ரீ சூயிங்கமாகவோ, 30 நிமிடங்களுக்கு மெல்ல முடிந்தாலோ, இன்னும் நல்லது. இதன்மூலம் உணவுக்குழாய்க்குள் அமிலம் செல்லாமல் தவிர்க்க முடியும்.

* உங்களின் தூக்கத்துக்கும் உணவுக்கும் 3 மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதுக்களிப்பால் அவதிப்படுவதைத் தவிர்க்க முடியாது.

* உடலை முறையில்லாமல் வளைப்பது, கனமான எடைகளை தூக்கு வது, படுத்தே இருப்பது போன்ற உடல்செயல்பாடு சார்ந்த காரணங்களாலும் எதுக்களிப்பு வரலாம். அதனால், உடலை முறையாக பயன்படுத்துங்கள்.உங்களின் தூக்கத்துக்கும் உணவுக்கும் 3 மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.