இஞ்*சியு*ம் மரு*த்துவ குண*மு*ம்

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#1
இஞ்சியும் மருத்துவ குணமும்

மணத்திற்காகவும், சுவைக்காகவும், மருத்துவக் குணங்களுக்காவும் நம்முடைய சமையல் பலவற்றில் இஞ்சியைப் பயன்படுத்துகிறோம். இஞ்சியின் மேல் உள்ள மணலை நீக்கி நன்றாகச் சுத்தம் செய்து வேக வைத்து வெயிலில் உலர்த்திய பின் கிடைப்பதுதான் சுக்கு!

100 கிராம் இஞ்சியில் தண்ணீர் 80.9 விழுக்காடும், புரோட்டீன் 2.3 விழுக்காடும், கொழுப்பு 0.9 விழுக்காடும், தாதுக்கள் 1.2 விழுக்காடும், நார்ச்சத்து 2.4 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 12.3 விழுக்காடும் உள்ளன. மற்றும் கால்சியம் 20 மில்லிகிராமும் பாஸ்பரஸ் 60 மில்லி கிராமும் இரும்பு 2.6 மில்லிகிராமும் வைட்டமின் சி 6 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் `பி'யும் உள்ளன.

ஆயுர்வேதா, சித்தா, யுனானி முறைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் பலவற்றில் இஞ்சி முக்கிய இடத்தைப் பெறுகிறது. வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் இஞ்சி ஒரு நல்ல நிவாரணி. வயிற்றுவலி, வாந்தி, பித்தம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் இஞ்சி நிவர்த்தி செய்யும். சாப்பிட்ட பின்பு சிறிது இஞ்சியைச் சாப்பிட உமிழ்நீரின் அளவை அதிகப்படுத்தி வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.

அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய நான்கினையும் ஒன்றாகக் கலந்து தினம் மூன்று வேளை சாப்பிட பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மசக்கையினால் ஏற்படும் வாந்தி, மஞ்சட்காமாலை, மூலம், மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சரி செய்யும்.

அடிக்கடி இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இஞ்சிச் சாறும் தேனும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சளியில் இருந்து விடுபடும் வரை சாப்பிட வேண்டும். இஞ்சியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடிகட்டி சிறிது சர்க்கரையுடன் சூடாக பருக மூக்கில் நீர் வடியும் பிரச்சினை சரியாகும். சளியினால் ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்துகளுடன் இஞ்சி டீ சாப்பிட மனதிற்குப் புத்துணர்வு கிடைக்கும்.

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கஷாயத்துடன் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும் சிறிது தேனும் கலந்து பருக நுரையீரல் போன்றவற்றில் அடைத்துக் கொண்டிருக்கும் சளி தானாகவே வெளியேறிவிடும். வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஷாயத்தைக் கொடுக்கக் கூடாது. சளியினால் தலைவலி ஏற்பட்டால் சுக்கை சிறிது நீர் விட்டு உறைத்து வலி இருக்கும் இடங்களில் லேசாகத் தடவவேண்டும்.

அரை ஸ்பூன் இஞ்சிச் சாற்றை அரை வேக்காடு முட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து தினம் ஒரு முறை இரண்டு மாதங்கள் சாப்பிட உணர்வு நரம்புகளைப் புதுப்பித்து ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்குவதுடன் உடலிற்கு புதுப்பலத்தையும் அளிக்கும். தற்பொழுது ஜிஞ்சர் பிரட், ஜிஞ்சர் கேக், இஞ்சி ஊறுகாய், ஜிஞ்சர் வைன், ஜிஞ்சர் பீர் போன்ற எண்ணற்ற பொருட்கள் இஞ்சியைத் துணைப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.