இட்லி மிருதுவாக இருக்க

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,042
Likes
9,439
Location
puducherry
#4
முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி முதல் 5 மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில் அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.

பிறகு அரிசியை அரைத்து அதனுடன், கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும். அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும்.

இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும். காலையில் புளிக்க வைத்துள்ள மாவை அப்படியே எடுத்து, இட்லித் தட்டுக்களில் மென்மையான வெள்ளைத் துணி போட்டு அதன் மீது ஊற்றவேண்டும்.

இவ்வாறு செய்வதால் மிலவும் வெண்மையான மற்றும் மிருதுவான இட்லியை பெறலாம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,909
Location
Bangalore
#5
1. இட்லி மிகவும் மெத்து மெத்து என்று மல்லிகை பூப்போல் இருக்க, ஊறவைக்கும் அரிசியோடு, ஒரு கைப்பிடி கெட்டி அவலும் சேர்த்து ஊற வைத்து அரைத்து , இட்லி செய்தால், அவ்வளவு soft ஆக இருக்கும்.2. இட்லி, தோசைக்கு அரைக்கும்போது, முதலில் உளுத்தம் பருப்பை அரைத்து விட்டு, பின்பு அரிசியை அரைத்தால் , grinder ல் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.