இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டக் குழந்த&

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர், உங்கள் பிள்ளைக்கு இதயத்தின் நடுப்பகுதியில் அல்லது பக்கங்களில் ஒரு (உள்வெட்டு) காயம் இருக்கலாம், குழாய்கள் மற்றும் இழைகள் போடப்பட்ட இடங்களில் சிறிய காயங்களும் இருக்கலாம்.

இந்தக் காயங்களில் நோய்த் தொற்று ஏற்படலாம் என்பதால் பின்வரும் அடையாளங்கள் தோன்றுகின்றனவா என்று ஒவ்வொரு நாளும் கவனித்துப் பார்க்கவும்:

* சிவந்த நிறம்
* வீக்கம்
* காயத்திலிருந்து நீர் வடிதல்
* வலி

* இவற்றுள் ஏதாவது அடையாளத்தை நீங்கள் கண்டால், உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அல்லது உங்களுக்கு நோய் சம்பந்தப்பட்ட வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், இதய நோய் மருத்துவமனைத் தாதியை வழக்கமான வேலை நேரத்தில் அழையுங்கள் அல்லது குழந்தை மருத்துவ வல்லுனரை சந்தியுங்கள்.

* உங்கள் பிள்ளையின் காயத்தில் நீர்க்கசிவு இல்லாவிட்டால் கட்டுபோடவேண்டிய அவசியமில்லை. உங்கள் பிள்ளையின் காயத்தில் தையல்கள் இருக்கலாம். இருந்தால், அவை நீக்கப்பட வேண்டுமா, எப்போது என்று உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள்.

* உங்கள் பிள்ளையின் மார்பிலிருந்து குழாய்(கள்) வெளியே எடுக்கப்பட்ட இரண்டு நாட்களின் பின், அந்தப் பிரதேசத்திலுள்ள பன்டேஜும் அகற்றப்பட்வேண்டும்.

* காயத்திலுள்ள பொருக்கு முழுவதும் வீழ்ந்து அந்தப் பிரதேசம் முழுவதும் ஆறியது போல தோற்றமடையும் வரை உங்கள் பிள்ளையின் காயத்தை நனைக்கவேண்டாம். அதுவரை, மேலோட்டமான குளியல் அல்லது காயம் நீரில் ஊறாத ஷவர் குளியல் எடுக்கவேண்டும்.

* ஒரு மெல்லிய துணி, சுத்தமான தண்ணீர், மற்றும் மிகவும் வீரியம் குறைந்த சமநிலைப்படுத்தப்பட்ட பேபி சோப்பினால் காயங்களை ஒவ்வொரு நாளும் கழுவவும். பின்னர் மெதுவாக ஒற்றி உலரவைக்கவும்.

* காயத்தின் மேலுள்ள பொருக்குகள் வீழ்ந்து போக கொஞ்சக் காலம் எடுக்கலாம். விரைவாக வீழ்ந்து போவதற்காக அவற்றைப் பறித்து எடுக்கவேண்டாம். இது உறுத்தல் மற்றும் நோய்த் தொற்றை உண்டாக்கலாம்.

* காயத்தின் மேலுள்ள எல்லாப் பொருக்குகளும் வீழ்ந்து அந்தப் பிரதேசம் முழுவதும் ஆறியது போல தோற்றமடையும் வரை காயத்தின்மேல் எந்த க்ரீமையும் தடவவேண்டாம். காயம் ஆறியபின், விட்டமின் ஏ போன்ற வீரியம் குறைந்த க்ரீமை தழும்பின் மேல் தேய்க்கலாம்.

* உங்கள் பிள்ளையின் மார்புக்காயம் விரைவாக ஆறவேண்டும். தழும்பு காலப்போக்கில்தான் மறையும். சில சமயங்களில் ஒரு தழும்பு மேடு போல் உயர்ந்தும் விரிவாக்கப்பட்டதாகவும் மாறும்.

*உங்கள் பிள்ளையின் காயத்தழும்பு உங்களுக்கு கவலையை உண்டாகினால், தயவு செய்து, உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

* காயத் தழும்புகள் முழுமையாக வீழ்ந்தும் அந்தப் பிரதேசம் நிவாரணமடைந்ததைப் போல தோற்றமளிக்கும் வரை சூரிய ஒளி உட்புகாதவாறு காய(ங்கள்)த்தை துணியினால் மூடிவைக்கவும்.

*உங்கள் பிள்ளையின் சூரிய ஒளி படக்கூடிய தோற்பகுதி முழுவதற்கும் சன்ஸ்க்றீன் போடவும். காயம்(ங்கள்) ஆறியபின் விசேஷமாக, புதிய தழும்புகளின் மேல் சன்ஸ்க்றீன் போடுவதில் கவனமாயிருங்கள்.

* உங்கள் பிள்ளைக்கு அறுவைச்சிகிசைக்குப்பின் பல வாரங்களுக்கு வலி இருக்கலாம். நாட்கள் செல்ல வலியின் கடுமை குறையலாம்.

* உங்கள் பிள்ளை மருத்துவமனையை விட்டுச் செல்லும்போது, வழக்கமாக வலி நிவாரண மருந்துகள் மருந்துக் குறிப்பில் எழுதிக்கொடுக்கப்படும். காலப்போக்கில் உங்கள் பிள்ளை இந்த மருந்தின் அளவைக் குறைத்துக்கொண்டே போகவேண்டும்.

உங்கள் பிள்ளையின் வலி அதிகரித்துக்கொண்டே போனால், உங்கள் பிள்ளையின் குழந்தை மருத்துவ வல்லுனரை அல்லது குடும்ப மருத்துவரை சந்திக்கவும். உங்கள் பிள்ளையின் வலியை எப்படி மதிப்பிடுவது என்று உங்கள் பிள்ளையின் தாதியிடம் கேளுங்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.