இதில் யார் மீது குற்றம் ?????

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#1
ஹாய் நட்புக்களே.....

சமீபத்தில் என் மனதை பாதித்த ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர வந்திருக்கிறேன். எங்கள் பக்கத்துக்கு வீட்டு பையன், ஒரு தனியார் பள்ளியில் எட்டாவது படிக்கிறான்.. அவ்வபோது என்னிடம் ஏதாவது சந்தேகம் கேட்டு வருவான். நானும் சொல்லி கொடுப்பேன்..

அவனுக்கு தமிழ் சற்று தகராறு.. ஆகையால் அவனது அம்மா வந்து தினமும் உன்னிடமே படிக்கட்டும் என்றார்.. நானும் சரி என்று கூறியதால் அவனும் தினமும் வந்தான்..
மற்ற எல்லா படங்களையும் வேகமாய் படித்துவிடுவான் தமிழை தவிர.. தமிழ் புத்தகம் எடுத்தாலே அத்தனை சோகம் அவனது முகத்தில் வந்துவிடும்..

“ ஏன் டா இப்படி இருக்க?? மத்த எல்லாத்தையும் நல்லா தானே படிக்கிற “ என்று கூறி அவனை வாசிக்க வைத்தேன். அவன் படிக்க படிக்க எனக்கு தான் தலைவலித்தது..

“என்ன தம்பி நீ இப்படி வாசிக்கிற??” என்று கூறி ஒவ்வொரு எழுத்தாய் கூட்டி படிக்க வைத்து எழுத வைத்து, தினமும் செய்தி தாள் படிக்க வைத்து என்று தினமும் எனக்கு தெரிந்த வகையில் எல்லாம் அவனை தேற்ற முயன்றேன்..


இவன் தான் இப்படியா இல்லை இவனோட படிக்கும் மற்ற மாணவர்களும் இப்படியா என்று சந்தேகம் வந்து அவனது நண்பர்களிடம் கேட்டால்

“ அய்யோ !!! அக்கா தமிழ் மட்டும் கேட்காதிங்க.. கடவுளே.. யார் யாரோ சும்மா இருக்க முடியாம பாட்டு எழுதி வச்சிட்டு போயிட்டாங்க. அதை எல்லாம் நாங்க படிக்கணுமா ?? எங்க மிஸ்க்கே இதெல்லாம் புரியல” என்று கூறி இலக்கண பகுதியை கை காட்டினர்..


அவர்களுக்கு சாதாரணமாய் சேர்த்து எழுதுவது, பிரித்து எழுதுவது கூட சரியாய் வரவில்லை.. தமிழின் அடிப்படையே தெரியவில்லை.. அத்தனை கசப்பாய் இருக்கிறது மாணவர்களுக்கு.. அதிலும் வாசிக்க அத்தனை விசமாய் இருக்கிறது..


“ நேர் நேர் தேமா எல்லாம் தெரியுமா டா “ என்று கேட்டேன்.. “ இது எதுல வர ரைம்ஸ் கா “ என்று கேட்டு என்னை மேலும் கடுப்படித்தான்.

அவனது அம்மாவோ “ எப்படியாவது இந்த வருஷம் இவன் தமிழ்ல பாஸ் பண்ணிட்டா பிரச்னை இல்லை சக்தி.. அடுத்த வருஷம் ஒரே ஒரு கட்டுரை மட்டும் தான் அப்புறம் தமிழே இல்லை “ என்று கூறவும் எனக்கு பகீரென்றது


“ என்ன கா சொல்றிங்க ?? தமிழ் இல்லையா ?? அப்புறம் 11th 12th எல்லாம் என்ன செய்விங்க “ என்று அரண்டு போய் கேட்டேன்.


அவர்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டும் தான் தமிழ் அதிலும் ஒன்பது பத்தாம் வகுப்பில் ஒரே ஒரு கட்டுரை மட்டும் தானாம்.. நாம் முப்பது மதிப்பெண்ணிற்கு கட்டுரை மட்டுமே எழுதியா காலம் போய் இப்பொழுது இருபது மதிப்பெண்ணிற்கு ஒரு கட்டுரை அதுவும் ஒரே வருடத்திற்கு என்று முடித்துவிட்டனர்..


சரி தமிழ் தான் இப்படி என்று ஆங்கிலம் கேட்டால், அதுவும் அரைகுறை.. எதுதான் ஒழுங்கு என்று பார்த்தால் எதுவும் இல்லை ஆனால் காலை ஏழுமணிக்கே பள்ளிக்கூடம் கிளம்பிவிடுகின்றனர்..


“ அக்கா அல்ஜிப்ரா சொல்லி கொடுங்க” என்று வந்தான்..

“ சரி வா “ என்று நானும் வந்து புத்தகத்தை பிரித்தால் கிட்டத்தட்ட அல்ஜிப்ராவில் மட்டும் இருபது பாடம் இருந்தது..

“ அக்கா 19th excersice சொல்லி கொடுங்க “ என்றான்..

“ ஏன் டா தம்பி முதல்ல இருந்து படிச்சாதானே புரியும்.. எடுத்ததுமே கடைசிக்கு போயிட்டா எப்படி ?? “ என்று கேட்டேன்.

“ அதெல்லாம் லாஸ்ட் இயர் முடிச்சாச்சு.. மிஸ் இதுல தான் ஸ்டார்ட் பண்ணாங்க “ எனவும் “ ஊப் !!!! சரி “ என்று நானும் ஆரம்பித்தாள் அதிலும் ஆயிரம் திணறல்.

கடுப்பாகிபோய் “ என்னதாண்டா உங்க ஸ்கூல்ல சொல்லி கொடுக்கிறாங்க ?? எல்லாத்துலயும் இப்படி பண்ணா எப்படி “ என்று கடிந்தேன்..

“ நான் என்ன கா செய்ய ??” என்றான் அப்பாவியாய்..


இதற்கிடையில் தனியார் பள்ளி வேறொன்றில் வேலை
பார்க்கும் என் தோழியை சந்திக்க நேர்ந்தது.. “ என்னப்பா எப்படி இருக்கு ??? பசங்க எல்லாம் எப்படி படிக்கிறாங்க??” என்று கேட்டேன்.. புலம்பிதீர்த்து விட்டாள்..


“புக்ல என்ன இருக்கோ அதை மட்டும் சொல்லி கொடுத்தா போதும்னு சொல்றாங்க சக்தி.. பசங்களுக்கு சில நேரம் அப்டியே சொன்ன புரியல.. ரியல் லைப்ல நடக்குறது கூட கம்பேர் பண்ணி சொன்னா ஈஸியா இருக்கும்.. அப்படி சொன்னா கிளாஸ்ல தேவை இல்லாம பேசி பசங்களை திசை திருப்பகூடாதுன்னு சொல்றாங்க” என்றாள்..


“ சரிதான்” என்றபடி வீட்டிற்கு வந்தால், “ அக்கா சிலப்பதிகாரம்ல ஹீரோ பேரு ஏன்னா கட்டபொம்மன் தானே..அவர் தானே டைலாக் எல்லாம் பேசுவார் ??” என்று கேட்டபடி வந்தான் இவன்..


“ டேய் ஓடியே போயிடு... என்னை கடுப்பேத்தாத” என்று புலம்பியபடி நகர்கிறது என் மாலை பொழுதுகள் அவனது தப்பு தவறனா தமிழோடு..


இதில் யார் மேல் குற்றம் ??? பிள்ளைகள் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதும் என்று நினைப்பதா ?? பள்ளிகளின் கவர்சிகளை பார்த்து மயங்கிவிடும் பெற்றோர்கள் மீதா ?? புத்தகத்தில் இருப்பது மட்டுமே போதும் என்று எண்ணுபவர்கள் மீதா ??


இதில் மதிப்பெண் வரவில்லை என்றால் மட்டும் பிள்ளைகளை போட்டு அடிப்பது திட்டுவது.. அடிப்படை கல்வியே சரியில்லை என்கிறபோது மற்றதெல்லாம் எப்படி சரியாய் வரும் ??
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,798
Likes
148,824
Location
Madurai
#2
நீ சொல்றது சரி தான் சரயு.. இங்க Schoolsல தமிழை Language ah பார்க்கறோம்..?? Physics, Chemistry போல அதும் a Kinda Subject.. அப்புறம் எப்படி அடிப்படை சிக்கல் இல்லாமல் வரும்..??

எனக்கும் இந்த Problem இருந்தது, அதுக்காக நான் என் Schoolல குறை சொல்ல மாட்டேன்.. மத்த விஷயத்துல என்னோட Fluency எல்லாம் அங்க கத்துக்கிட்டது தான்.. But என் தமிழை நேர் செய்தது என் Parents தான்..

Superb தமிழ் அம்மா So Called தமிழ் டீச்சர் Best ah அமைஞ்சுட்டா, இதை சரி பண்ணலாம்.. ஆனால் படிக்கற மக்களுக்கும் அந்த ஆர்வம் இருக்கணும்ல..

மத்த Subjects இதை விடவா..? ஆஹா அமர்க்களம் போ..

// இதில் யார் மேல் குற்றம் ??? பிள்ளைகள் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதும் என்று நினைப்பதா ?? பள்ளிகளின் கவர்சிகளை பார்த்து மயங்கிவிடும் பெற்றோர்கள் மீதா ?? புத்தகத்தில் இருப்பது மட்டுமே போதும் என்று எண்ணுபவர்கள் மீதா ??

இதில் மதிப்பெண் வரவில்லை என்றால் மட்டும் பிள்ளைகளை போட்டு அடிப்பது திட்டுவது.. அடிப்படை கல்வியே சரியில்லை என்கிறபோது மற்றதெல்லாம் எப்படி சரியாய் வரும் ??
//

உங்க friend சொல்ற போல, சில Schoolல Managements சொல்றதைத் தான் கேட்கணும்... ஆனால் அப்படி Restrictions இல்லாத Schoolsலயும், ஆர்வமுடன் Practical ah சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும் இங்கு குறைவே..

என்னோட அத்தை ஒரு Big CBSE School Principal, அவங்க சொல்வாங்க,, நாங்க Project Oriented ah போனாலும்.. இவ்ளோ Marks வாங்க வச்சுடுங்க, அப்போதான் IIT போக Easy ah இருக்கணும்ன்னு சொல்ற Parents um இருக்காங்க.. Then அவங்களுக்குப் புரிய வச்சு அனுப்புவோம்ன்னு..

இப்போ கொஞ்சம் இந்த Situation மாறுது சரயு.. Parents தெளிஞ்சுட்டாங்க... Academic Edu தவிர Curricularக்கும் Importance தருகிற இடத்துக்கே போறாங்க..

அடிப்படை கல்வியே சரியில்லை..

இதை பேச ஆரம்பிச்சா முடிக்க முடியாது சரயு :p
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#3
i understand your feelings dear....

1) nowadays everything is a rat race for marks.
2) none wants to study for the sake of study...
3) kuzhandhaigalum appadiyae... aasiriyargalum appadiyae....
4) i am also worried about future citizens of India....present generation suffers a lot....the previous generation has not lifted a little finger to rectify problems.... as a result, the present generation suffers... the scenario continues....
5) In the school where I am working (as a principal and english teacher for x,xi and xii) the students are asking "why book?"... guide is enough.!!!!! they will learn according to marks scope, grab the marks...nothing more nothing less....
 
Last edited:

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#4
இன்றைய சூழலில் மிக மிக அவசியமான பதிவு, அனைவருமே இதை அலசலுக்கு உட்படுத்தினால் நம் சமூகம் மேம்படும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிறகாவது.


காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடா ன்னு பாடி அதையே நம்பி இன்று அடிப்படை தகுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இழக்க துவங்கி பல பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது.


விடுதலைக்கு பின்னர், யார் நாற்காலியில் அமர்வது என்ற ஒரே நோக்கில் தேசம் முன்னேற, நிஜத்தில் தேசமும், மக்கள் இல்லை இல்லை மாக்களுமாய், பின்னேறி போனோம்.


விவசாயம், கல்வி போன்ற அடிப்படை பலமாக இல்லாது போனதே நம் இன்றைய நிலைக்கு காரணம். வளர்ந்த நாடுகளில் அனைத்தும் கல்வியை ஒரு போதும் அவர்கள் குழந்தைப் பருவம் முதலே வியாபாரப் பொருளாக விடவில்லை.


இந்த தோல்விக்கு அனைவரும் பொறுப்பே - நம் குழந்தைகள் சிறக்க எனில், வீட்டில் இருந்து தான் துவங்க வேண்டும். சமூகத்திற்கு அவசர அறுவை சிகிச்சை மிக முக்கியம், சிகிச்சைக்கு தயாரா?
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,930
Likes
76,736
Location
Hosur
#5
நல்லதொரு அலசல் சக்தி.

மதிப்பெண்களை வைத்தே மாணவர்களின் திறனை மதிப்பிடும் நிலைமை தான் இதற்குக் காரணம். மாணவர்களின் அடுத்த அடுத்த கல்வி நிலைக்கு மதிப்பெண்ணை வைத்தே இடம் அளிக்கப்படுகிறது. மதிப்பெண்களைப் பெறுவதற்கு ஒரே வழி என்ன? புரிகிறதோ, புரியவில்லையோ... எப்படியாவது மனப்பாடம் செய்து தேர்வில் எழுதிவிட்டு வருவது. இதில் அவர்கள் விருப்பத்துடன் படிப்பதில்லை, ஆதலால் எழுதிவிட்டு வந்தவுடன் மறந்தும் விடுவார்கள். நம் நாட்டின் கல்வி முறை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. இதில் யாரை குறை கூறுவது...? ஒரு தரப்பை குறை கூறினால், இதனால் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் இன்னொரு தரப்பை நோக்கி விரல் நீட்டுவார்கள். இது ஒரு இடியாப்ப சிக்கல்... தீர்வு காண்பது என்பது கடினம் தான்.
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,917
Location
nederland
#6
ஹாய் சரயு...

உங்க வருத்தம் புரிகிறது....

எனக்கு இதில் என்ன சொல்வதென்றே புரியவில்லை..

கல்வி என்பது தனியே மார்க் எடுக்க மட்டும் தான் என்ற நோக்கு இங்கெல்லாம் இல்லை..


என்ன பாடு பட்டாவது இந்த மார்க் எடுத்து இந்த படிப்புக்கு போய்விடு என்று இங்கு திணிப்பதும் இல்லவே இல்லை..

ஆசிரியர்கள் மாணவர்களை கையாளும் விதம் மிக மிக வேறுபாடானது ..

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதை சிறுவயதில் இருந்தே இனம் கண்டு வளர்க்க முனைவர் ..

கல்விக் முறை நிறையவே வேறு பாடு கொண்டது...

நான்கு வயதிலிருந்து பிராக்டிகல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள் ..

அதன் மூலம் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வேகம் நிச்சயம் அதிகம்... நான் பார்த்து வியந்திருக்கிறேன்..

மொழி...தமிழ்...ம்ம்...இங்கு பாடமா இருக்கு ..

நிச்சயம் நாம் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் ...
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#7
பாடத்திட்டத்தையும் தேர்வு முறையும் மாத்தினா தேவலை. தமிழ் மொழி இலக்கியம் சரி எதுக்கு ஆங்கில இலக்கியத்தையும் திணிக்கிறாங்க. ஆங்கிலம் ஒரு அளவு போதாதா?


ஒரு குருவி சைஸ் முளைக்குள்ள பூசணிக்காய் அளவுக்கு திணிச்சா எவ்ளோ தான் பிள்ளைங்க தாங்குவாங்க. என் காலத்துல நான் இந்த ஆதங்கத்த புலம்ப கூட முடியல. இப்ப பிள்ளைங்க இத புலம்பவாவது முடியுது.


சரயு, அந்த பையனின் " எவனோ எழுதி வச்சிட்டு போய்ட்டான். இப்ப எங்க உசுர வாங்குறானுங்க." இதே புலம்பல நானும் ஒரு english poem மனப்பாடம் பண்ண போது நினைச்சிருக்கேன் . இன்னமும் நினைவிருக்கு , william wordsworthஇன் Daffodils . எனக்கும் மனனம் செய்றது ரொம்ப கஷ்டமான வேலை. புரிஞ்சா மட்டுமே என்னால படிக்க முடியும். அப்பல்லாம் அப்படி புலம்பினேன். ஒரு கவிதைய கூட ரசிக்க வைக்க தெரியாத பாடத்த்திட்டத்த வச்சிக்கிட்டு, அந்த இலக்கியத்த படிச்சா என்ன படிக்காட்டி என்ன. அப்புறம் இங்க ஒரு பிரெண்ட் வீட்டுக்கு போனப்ப அவங்க வீட்டு தோட்டத்த சுத்தி காமிச்சப்போ அந்த Daffodil பூவ காமிச்சாங்க. நொந்துட்டேன். டேய் இத விட அழகான பூவெல்லாம் நான் ரோட்டோரத்திலேயே பார்த்திருக்கேன். இதெல்லாம் ஒரு பூவுன்னு ஒருத்தர் கவிதை எழுதி அதை என்ன படிக்க வச்சுட்டானுங்கலேன்னு வாய் விட்டு தெரியாம புலம்பி, அப்புறம் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.


இது சின்ன ஒரு சம்பவம் தான். என்னை சுயமா கூட சிந்திக்க விடாம ஆட்டு மந்த மாதிரி நடத்துன கல்வி திட்டத்து மேல கோபம் இன்னும் இருக்கு. இது மாதிரி நிறைய கோபம் , வருத்தம், ஆதங்கம் எல்லாம உண்டு.


பெற்றோர்கள் பக்கம் மாற்றம் வருவதற்கு சில காலம் ஆகும். எல்லா பெற்றோரும் தான் பார்த்து வந்த குல தொழிலில் பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது, அவனாவது படிச்சு நல்ல வேலைக்கு போய் நல்லா சம்பாரிச்சு வாழட்டும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு/ ஆசை/ கனவு காரணமா அளவுக்கு மீறி செலவு செஞ்சு தனியார் பள்ளியில சேர்த்து இருக்கனால அவங்க கண்டிப்பா பிள்ளைகளையும் ஆசிரியர்களையும் இன்னும் புஷ் பண்ணுவாங்க. அவங்க ஆசை நியாயமானது.


அதனால மாற்றம் மேல் நிலையிலிருந்து வரணும். பாட சுமையா குறைக்கணும் இல்ல பரீட்சை சுமையா குறைக்கணும். பாடத் திட்டத்த மாத்துராங்களோ இல்லையோ கண்டிப்பா பாடம் நடுத்துற முறைய மாத்தணும். இந்த அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் லாப்டாப் கொடுத்ததுக்கு பதில ஒவ்வொரு பள்ளிக்கும் projector கொடுத்திருக்கலாம். வரலாறும் , புபியியலும் எதுக்காக மனப்பாடம் செய்யணும். அத ஆவண(documentary ) படமா போட்டு ஒரு கலந்துரையாடலோட நிறுத்திக்கலாம். யாரு எப்ப எங்க செத்தாங்கன்னு தேதி வாரியா தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. அதே மாதிரி அறிவியலையும் காணொளி மூலமா புரிய வைக்கலாம். இத விட ஈசியா மாணவர்களுக்கு புரிய வைக்க முடியாது.


இந்த மாதிரி சில மற்றங்கள ஆலோசனை செஞ்சு கொண்டுவரலாம். ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒரு பாரதி, கம்பன், ராமானுனம், கலாம், ஐன்ஸ்டீன், டெஸ்லா இப்படி யாரோ இருப்பாங்க. அத கண்டுபிடிச்சு வெளிய கொண்டுவர்ற மாதிரி இருக்கணும். இப்ப இருக்குற மாதிரி உள்ள திறமைய அமுக்கி அவன ஆட்டு மந்தையா ஆக்குற மாதிரி இருக்கக்கூடாது.
 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#8
hai sakthiiiii dearrrrrrrrrr


enna ithuuuuu ippadi oruthanuku tuttion edutathukaeeeee pulambittana..... engala maadiri tchrsssssss padra paada sonnaaaaaa enna aakurathu...


sakthi un stud sonnathu sari thaan evan evano eludi vachathu padi padinu usira vaanguna... antha evano ippo oru sachino ila dhoniyo crckt aadunaar appadinu sonna rasichu padipanga... aena studentsku ivangala teriyum... ana patu eluduna barathiyum, tamiluku paadu patta u ve saavum avanuku theriyathu...


ithu ellam cinna pilaila irunthu avanuku solli taranum.... so ithula 1st tapu parents mela thaan... child growth krathu oru kalainu aen theriyuma solranga... avangala cinna pilaila irunthu naalum solikodutu olunga valarkanum... cinna pilaila irunthu avanuku yaaraiyum arimukapaduthama ippa 8thlayo tenthlayo padi padinu sonna avan ennatha padippan...?


ippa irukka parents mrng to evn schlku anupunum... evng to nt tutn anupanum... ithula parentsku namma pullainga eppadi padikiranganu yukikka kooda therila... antha alavuku tv comp tabla iruka talking tom, barbie nu adimai paduthi vachirukanga kulandaingala parents... ketta avangaluku ayiratu ettu velai...


ithu en anubavam solren... mer sonna parents ellam pillaingala cbse schoola padikka vaikkira parents... tutn vanthum kooda nee sonna madiri basicsae teriyama padikka vaikudu cbsce schools... ketta avanga parents solranga... 6th vara thaan ippadi, eppadium tenthku iluthu pidichu padika vachu marks vaanga vachiduvanga apdinu solranga? athu eppadingirathu thaan million dollar kelviyaa enaku iruku?


intha parents enga neighbour hood thaan, mark card vara annikum mattum suttu vattaramae stambichu pora madiri avangappa kattu katti tiituvaar. ne schl po venaam... unna padikka vaikirathu wastenu... appuram marunal evn partha antha pilla tabla barbie vilaiyaadum...


athavathu daily kankanichu pullaingala padikka vaikanum, i mean regularitya kondu varanum.


next teachers parpom... enaku vaaitha exp vachu solren... ella tchrsum olunga solli kodutha intha pbm illa... then b.ed mudichavanga thaan olunga soli taruvanga apdinu oru ennam govt kitta... aana ithuku oru palamoli enaku nyabagam varuthu... evlo thaan ennaiya tadavi manla purantalum otra mannu thaan ottum. athu pola enna thaan b.ed padichalum solli kodukka theriyatha tchrsayum parthiruken... b.ed padikama semaya solli tara teachersayum parthiruken....


tchrs job oru nalla profession. eppadi usira kaapatra doctoraiyum, nyayattha nilai naatura vakkilaiyum theivathuku samama paarkkuromo athu madiri nalla kudimakankala uruvakura teachersum deivathuku samam... aanaa itha teachersa varavanga purinchukirathu kammi thaan...


ippa intha moonu tolilumae panatthuku vilai pokuthu... and teachersa varavanga summa veetula irukirathuku vanthu school pona sambadikalam kra mind set perumpalanavargaluku.... appadi aakittanga management and individualityngra perla studentsku freedom tarra intha kaalakattamum.




antha kalathula padipungirathu gurukulathula irunthu, antha guruku veetuku udaviya irunthu ella panividaiyum senchu kalvi katukittanga... appo thaan olukam, nyaanam, vivaram ellam teriyumnu... ippa schoolula oru studenta romba settai panraanu adicha... avalae solra, "engamma kooda adichathu illa neenga adikireengalanu?" teachera.. ithu naan studenta irukum podae partha experience...


ana enaku vaaitha students and parents nallavanga... "miss neenga nalla adinga... avan padichaa podum" apdi solvanga... pasangalum "miss test venaam miss... nama quiz vilaiyaduvom miss... test vacha neraya pilainga copy adikiranga miss" apdi solra tangangal thaan en students...


and innoru visayam onnu solla virumbren... oru student avan failakura studento 1st mark edukura studento... naama nalla sollik koduttha avan eppovum namaku good student thaan... nalla teach panra entha teacherukum entha studentum problematic illa...


now let us come to syllabus... ippo iruka syllabus matanuma... illa teaching method matanuma... enanu enaku therila... ana eppadi patta syllabusa irunthalum, teachers teach panra vidathula thaan iruku... as am a sci teacher... en studentsku after 6th std... avangaluku ovoru lessonum lab kootitu poi antha equipments kamichu teach panna nalla results kidaikkum...
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#9
and rathi sonna madiri avana padangal moolam solli taralam.. enagluku history teachers ellam map varanchu thaan solli taruvanga... intha ideava naan teachera pona puthusula 4th social edukka sonanga... naan rivers mapa boardla varanchu soli tara, ella studentsum... even failures kooda 10ku 8 eduthanga...


and tam eng madiri language teachers should be well versed or well talent irukanum avanga pronounciationae studentsa katti podanum... enaku intha madiri teachers tenthla appuram colgla tam teachersum amainchanga... avanga tamil seyyul vaasikum pothaeeeee sema spirita irukum....


ipa irukka parentsuku mark thaan kuri... en cousin tenthla 492 edutthaan... matric schoolula padichu... and avanga appa next 12th ku peria schoolula, hostel serthu padikka vachar... ana mark vangingaa taan 1111 ana engnr cut off kammi... and ivan anga sernthu kattukittathu... nalla vaai pesa, nalla frnds pidichu... ippo 24 hrs phonelaye taan valraan athuvum smart phonela. avana partha engalukae payama iruku... charge poda kooda time illama charge potute pesuraan. so parentsum maranum, adminstratinum maranum, teachersum maranum.

naanlam telivaa thaan ma irukken... nalla padikkira entha pullaingalum, entha schoolayum nalla padikkumnga... avangalukunu oru age vanthathum tana padipanga, avangala guide panni support panna mattum podum.

and namma naatula tamilin nilai patti solanumna... tamil tamil nu solravangalae, tamilukaka padu padurathu illa... thats all... tamiloda talaiyelutthungirathu... tamil naadula peyaralavil irukum avlo thaan.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#10
@jash சொன்ன மாதிரி,
எதையும் visuala காட்சிப்படுத்தி (அது நிஜமாவோ, நிழலாவோ, கற்பனையாவோ) பாடம் நடத்துனா, பிள்ளைங்களுக்கு இன்னும் நல்லா புரியும்.


history, civics , geography , இதெல்லாம் வெறும் chapter/ unit test இல்ல கலந்துரையாடல் + quiz மாதிரி முடிச்சிக்கலாம்.


ஆசிரியர் வேலை என்பதை ஒரு சம்பாரிக்கும் உத்தியோகமாக எண்ணாமல், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, வரவேண்டும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.