இது ’2026’ கதை பாஸ்!

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#1
[h=1]உப்பு...புளி... மிளகாய் கொண்டு வந்தா உனக்கும் எனக்கும் கல்யாணம் - இது ’2026’ கதை பாஸ்![/h]ல்யாணத்துக்கு வரதட்சணைக் கொடுத்து பொண்ணுங்க வந்ததெல்லாம் ஒரு காலம்...இப்போவெல்லாம் பசங்கதான் வரதட்சணை கொடுக்கிற மாதிரியான நிலைமை. ஆனாலும், பல வீடுகளில் இன்னும் ’என் பொண்ணுக்கு, நான் குடுக்கறேன்’னு அண்டா, குண்டாவில் இருந்து அடகு வைக்க நகை வரை கொடுத்துதான் அனுப்பறாங்க.
ஆனால் வரப்போற வருங்காலத்தில்,ரொம்ப வேண்டாம்...ஜஸ்ட் ஒரு 10 வருஷம் ஃபாஸ்ட்டா போய் 2026 ல் என்னவெல்லாம் வரதட்சணையா கேட்பாங்க அல்லது கொடுப்பாங்கன்னு ஓர் முன்னெச்சரிக்கைதான் இவை...

1. ஆக்சிஜன் சிலிண்டர்

போற போக்கைப் பார்த்தா காத்தே இல்லாத உலகத்தில்தான் நாம வாழ வேண்டி இருக்கும். அதனால, பையனோ, பொண்ணோ யாரா இருந்தாலும் ஒரு வருஷத்துக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டரோட வரவங்களுக்குத்தான் கல்யாணம் கன்பார்ம்.

2. பாஸ்வேர்ட்

ஊரு, உலகமே இன்னைக்கு நிலைமைல பாஸ்வேர்டுகளால்தான் சூழப்பட்டுள்ளது. அதனால, வீடு தொறக்க பாஸ்வேர்ட், வெளில போக பாஸ்வேர்ட், கிச்சனுக்கு பாஸ்வேர்ட் அப்டினு எல்லாத்துக்கும் பாஸ்வேர்ட் கேட்கற நிலைமை வரலாம். இதனால, எண்களோ, எழுத்துக்களோ காம்பினேஷனில் மிச்சம் இல்லாம போகலாம். சோ, அவங்களுக்குனு ஒரு யூனிக் பாஸ்வேர்ட் கொண்டு வரவங்களுக்குத்தான் பொண்ணோ, பையனோ குடுப்போம்னு பெத்தவங்க டிமாண்ட் பண்ணலாம்.


3. ரோபோ

சீனா மேட், ஜப்பான் மேட்னு வீட்டு வேலைல இருந்து, தூங்கப்போறப்போ தாலாட்டு பாடறது வரை செய்யுற ரோபோக்கள் கொண்டு வர மணமகன், மணமகள்தான் பர்ஸ்ட் சாய்ஸா இருப்பாங்க.

4. உப்பு..புளி..மொளகா

விவசாயத்தையே வேரோடு அழிக்கற காலம் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு. அதனால, உயிர் வாழ, சமைச்சு சாப்பிடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்கறி இதெல்லாம் யாருக்கு சொந்தமா விளையுதோ அவங்களை கல்யாணம் பண்ணிக்க உலக கோடீஸ்வரங்களே போட்டிப் போடலாம்; சொல்றதுக்கில்லை.


5. தண்ணீர்

2016 ம் வருஷத்திலேயே ஒரு தண்ணீர் கேனை 30 ரூபாய் கொடுத்து வாங்கறோம். இன்னும் பத்து வருஷத்தில் தண்ணீரே இருக்குமா என்பதும் சந்தேகம்தான். அதனால், அப்போ சொந்தமா குடிதண்ணீர் குளம் யார் வச்சுருக்காங்களோ அவங்களுக்கு மட்டும்தான் டும்..டும்..டும்.

6. கடைசியா ஒரு சீரியஸ் பாய்ன்ட்

இன்னைக்கு பெண்களுக்கு நடக்கற பாலியல் வன்முறைகளால் அடுத்த நூற்றாண்டில் 10க்கு ஒரு பொண்ணு இருந்தாலே அதிகம். அதனால இதையெல்லாம் வரதட்சணையாக் கொடுக்கற நிலை பசங்களுக்கும் வரலாம்...பீ கேர் புல் பாய்ஸ்!
-பா.விஜயலட்சுமி
 

rni123

Friends's of Penmai
Joined
Oct 24, 2014
Messages
371
Likes
322
Location
ME
#10
சூப்பர் சிந்தனை.. போகின்ற போக்கை பார்த்தல் இது நடைமுறைக்கு வரும் காலம் தூரத்தில் இல்லை ...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.