இத ட்ரை பண்ணுங்க…

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
பலர் உடலை அழகாக வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். அதில் அழகைப் பராமரிக்கிறேன் என்று பெரும்பாலானோர் செய்வது அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பது தான். அப்படி செலவு செய்து என்ன பயன். முகம், கை, கால் மட்டும் அழகாக வெள்ளையாக இருந்தால் போதுமா, முழங்கை அழகாக இருக்க வேண்டாமா? அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!! பிறகென்ன அழகு என்று பலர் நினைக்கும் போது, முகம், கை, கால்களை மட்டும் நினைத்து, அதற்கு மட்டும் அதிக பராமரிப்புக்களை கொடுக்கிறார்கள். முழங்கைகைய கண்டு கொள்வதே இல்லை. இதனால் பல இடங்களில் அதிகம் ஊன்றி, இறந்த செல்கள் தேங்கி முழங்கை கருப்பாகவும், மென்மையின்றியும் அசிங்கமாக இருக்கிறது. அழகு என்று வரும் போது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து பகுதிகளுமே சரிசமமான நிறத்தில் இருக்க வேண்டும். ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…இதுவரை நீங்கள் உங்கள் முழங்கைக்கு எந்த ஒரு பராமரிப்பும் கொடுத்ததில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றைக் கொண்டு அவ்வப்போது முழங்கைக்கு பராமரிப்பு கொடுங்கள். இதனால் விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்குவதுடன், அவ்விடமும் மென்மையாக இருக்கும். சரி, இப்போது கருமையாக இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க என்ன செய்வதென்று பார்ப்போமா…! 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெள்ளையாகும். சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும். பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்கும். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும். 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலநுது, முழுங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, காட்டன் கொண்டு துடைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தைப் பளபளப்பாக்க எப்படி கடலை மாவைப் பயன்படுத்துகிறோமோ, அதேப் போல் முழங்கையை பளபளப்பாக்கவும் கடலை மாவைப் பயன்படுத்தலாம். அதற்கு கடலை மாவை, தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், கடலை மாவை எலுமிச்சை சாற்றில் கலந்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை தேனுடன் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். மஞ்சளுக்கு சரும கருமையை போக்கும் சக்தி உள்ளது. எனவே மஞ்சள் தூளை, தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நீரால் முழங்கையை 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனாலும் நல்ல மாற்றம் தெரியும்.
 

Attachments

anitprab

Friends's of Penmai
Joined
Sep 13, 2011
Messages
419
Likes
580
Location
madurai
#3
பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி.............ஜெயா.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி.............ஜெயா.
Most welcome sis....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.