இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்களு&

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#1
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!
--------------------------------------------------------------------------------------

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்...

கெட்ட கொலஸ்ட்ரால்
***************************
ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.


அல்சீமியர் நோய்
********************
இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

நீரிழிவு
*********
இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.


உடல் வலிமை
******************
ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.


பெருங்குடல் புற்றுநோய்
******************************
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தானது, பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி
**********************
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.

கண்புரை
***********
ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.அழகாக சருமம்
******************
ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால், அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல் அழிவைத் தடுத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.


இதயம்
*********
ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

ஆரோக்கியமான பற்கள்
****************************
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.


ஆஸ்துமா
*************
ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஃபீனோலிக் ஆசிட்டுகள், மூச்சுக் குழாய்களில் இருக்கும் அடைப்புக்கள் அல்லது அழற்சியை நீக்கி, ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும்.


பார்கின்சன் நோய்
*********************
ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும், பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.


உயர் இரத்த அழுத்தம்
**************************
பொட்டாசியம் அதிகம் உள்ள ஆப்பிளில் உள்ளது. இந்த சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எனவே இதனை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சாப்பிட்டால் நல்லது.


எடை குறைவு
*****************
ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.

புற்றுநோய்
*************
ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளான க்யூயர்சிடின், நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

வலுவான எலும்புகள்
**************************
ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டான ஃப்ளோரிட்ஜின் இருப்பதால், அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஏற்படுவதை தடுத்து, எலும்புகளை வலுவடையச் செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் ஆப்பிளை அதிகம் சாப்பிட வேண்டும்.

மூளை
********
ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.


பித்தக்கற்கள்
****************
ஆப்பிளில் இயற்கையாகவே மாலிக் ஆசிட் மற்றும் இதர மென்மைப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இவை பித்தப்பையில் பித்தக்கற்கள் உண்டாவதை தடுக்கும்.


குடலியக்க எரிச்சல்
***********************
அதிக நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால், இவை குடலியக்கத்தின் போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்.

இரத்த சோகை
******************
தினமும் இரண்டு முதல் மூன்று ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அனீமியா என்னும் இரத்த சோகையை சரிசெய்துவிடலாம். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#2
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&#30

but nowadays we get the apple with wax coded only......

where we can eat fresh apple .... its added extra dangerous to health only
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#3
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&#30

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 15 நன்மைகள்!!!
------------------------------------------------------------------

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள். அத்தகையவர்கள் அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. அது என்னவென்றால், அதனை ஒரு ப்ரௌன் பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும். மேலும் சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும். அதற்காக சாப்பிட கூடாது என்பதில்லை. சிலருக்கு நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்பதாலேயே தான். இவ்வாறு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பலவாறு சாப்பிடலாம். குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன. இப்போது அதில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

அலர்ஜி
*********
வாழைப்பழம் அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.


இரத்த சோகை
******************
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


அதிகப்படியான ஆற்றல்
****************************
வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.


மலச்சிக்கல்
**************
மலச்சிக்கலாம் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.


வயிற்றுக்கடுப்பு
*******************
மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.


தலைபாரம்
**************
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

புகைப்பிடித்தலை நிறுத்த வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

மன அழுத்தம்
*****************
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.


குடல் கோளாறு
******************
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்க கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.


மூளை செயல்பாடு
**********************
பொட்டாசயிம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.

சிறுநீரக பிரச்சனை
**********************
வாழைப்பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும். அதிலும் இந்த பழத்தை தொடர்ந்து மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 8-9 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்சனையானாலும் போய்விடும்.


மாதவிடாய் பிரச்சனை
***************************
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிலும் அதிகப்படியான இரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான இரத்தப் போக்கு குறையும்.


எடை குறைய
****************
உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.


இதய நோய்
**************
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


சிறுநீர் கோளாறு
*******************
வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜூஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி. 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#4
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&amp

but nowadays we get the apple with wax coded only......

where we can eat fresh apple .... its added extra dangerous to health only
It's true priya....
ippo ethaiyume nambi saappida mudivathu illai.....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#5
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&amp

பேரிச்சம் பழம் சாப்பிடுறீங்களா? அப்படி என்னதான் அதுல இருக்கு?
------------------------------------------------------------------------------

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது. அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போமா!!!

மலச்சிக்கல்
**************
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.


பார்வை கோளாறு
*********************
பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.


கர்ப்பம் கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும். ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்
போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு
******************
பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.


பற் சொத்தை
****************
நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#6
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&amp

திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!
--------------------------------------------------------

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. அவற்றில் எதில் அதிக நன்மை உள்ளது என்று பலர் குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன. குழந்தைகளுக்கு திராட்சை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதன் நிறம் குழந்தைகளை ஈர்ப்பதாலேயே. மேலும் திராட்சையை பலவாறு சாப்பிடலாம். அதில் ஜூஸ், ஜாம், ஜெல்லி, ஒயின், வினிகர் போன்றவை. சரி, இப்போது அந்த திராட்சையை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!


ஆரோக்கியமான இதயம்
*****************************
இதயத்தைப் பற்றி கவலை கொள்பவர்களாக இருந்தால், உடனே அந்த கவலையை விடுங்கள். ஏனெனில் ஒரு டம்ளர் ஒயினை சாப்பிடும் போது எடுத்துக் கொண்டால், இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.


மலச்சிக்கல்
**************
திராட்சையின் நன்மைகளில் ஒன்று தான், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்வது. ஆம், இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட், செல்லுலோஸ் மற்றும் சர்க்கரை, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்தால், குணமாகிவிடும்.


நீரிழிவு
*********
திராட்சையில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டு வர, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தி
***********************
திராட்சையில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளுள் ஒன்றான க்யூயர்சிடின் இருப்பதால், அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.


புற்றுநோய் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சியை தடுக்கும் பொருள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் நாள்பட்ட காயங்களை சரிசெய்யவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும் அழித்துவிடும். மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகளான அந்தோசியனின்கள் மற்றும் புரோஅந்தோசியனின்கள், புற்றுநோய் மேலும் பெரிதாவதைத் தடுக்கும்.

ஒற்றை தலைவலி
**********************
நன்கு கனிந்த திராட்சையால் செய்யப்பட்ட ஜூஸ் சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலியைத் தடுக்கலாம். அதிலும் இது நாள்பட்ட வலியாக இருந்தால், தினமும் காலையில் தண்ணீர் சேர்க்காத திராட்சை ஜூஸ் குடித்து வர குணமாகும்.


ஆரோக்கியமான மூளை
****************************
திராட்சையில் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது நரம்பியல்-சிதைவு வளர்ச்சி நோய் ஏற்படுவதையும் தடுக்கும் திறனுடையது.


எடை குறைவு
*****************
திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால், உடல் எடை குறைய உதவியாக உள்ளது. மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும், ரெஸ்வெராட்ரால் கொழுப்புக்கள் தங்குவதை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.


இளமை தோற்றம்
*********************
திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ளும். மேலும் திராட்சை ஜூஸை தினமும் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#7
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&amp

தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!
--------------------------------------------------------------------------

கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா? பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது. சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்.

புற்றுநோய்
*************
மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது


கண்கள்
*********
மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.


கொலஸ்ட்ரால்
******************
மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


நீரிழிவு
*********
மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.


முகப்பரு
***********
மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.


பாலுணர்வு
**************
பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தி
***********************
மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.


ஆரோக்கிய இதயம்
***********************
மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,953
Location
Atlanta, U.S
#8
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&amp

மாதுளை ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்!!!
------------------------------------------------------------------------------------------------

மாதுளை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இனிய கனி வகை, என்பது போன்ற பல வித வர்ணனைகளைக் கொண்டது. இது வருடந்தோறும் கிடைக்கக்கூடிய கனி என்பது இதன் கூடுதல் நன்மையாகும். எனினும், பெரும்பாலானோர் இதை மருத்துவ குணங்கள் நிறைந்த கனிவகைகளுள், சாமானியமான ஒன்றாகவே கருதுகின்றனர். அதனால் அவற்றை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டும் வருகின்றனர். ஏனெனில் அந்த அளவில் இதன் மருத்துவ குணமானது அதிகம். ஆனால் சிலருக்கு இந்த பழத்தை பொறுமையாக உரித்து சாப்பிட நேரமில்லாததால், இதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அவ்வாறு தவிர்த்தால், அது நமக்கு தான் நஷ்டம். இப்போது இந்த அற்புத கனியின் அரிய மருத்துவ குணங்களைப் பற்றி விளக்கிக் கூறுவதன் மூலம், அக்கனிக்குரிய நம் மனமார்ந்த பாராட்டுக்களை வழங்கலாம்.இளமையை தக்க வைத்தல்
********************************
மாதுளைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தன்மையினால், அவை கட்டற்ற மூலக்கூறுகளினால் உண்டாகக் கூடிய இளமூப்பு வியாதியிலிருந்து, உடலின் உயிரணுக்களைக் காக்கக் கூடிய வல்லமை பொருந்தியவையாய் உள்ளன. இக்கட்டற்ற மூலக்கூறுகள், சூரியனின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச் சூழலிலுள்ள மாசுக்களின் பாதிப்புகளினால் உண்டாகின்றன.


இயற்கையான இரத்த மெலிவூட்டிகள்
*********************************************
இரண்டு வகையான இரத்த உறைவுகள் உள்ளன. முதல் வகையான உறைவு, வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளினால் உண்டாகும் காயங்களிலிருந்து புறத்தோலை விரைவாக மீளச் செய்யும் ஆற்றல் கொண்டது. இவ்வகைக் காயங்களில், உடனடி இரத்த உறைவு, அதிக இரத்தப் போக்கை தடுக்கக் கூடியது. அதனால் இது கட்டாயத் தேவையாக உள்ளது.


பெருந்தமனி தடிப்பு நோய் (atherosclerosis)
**********************************************
வயது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்வியல் பழக்கங்களினால், கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் உடலுக்குள் சென்று சேர்ந்து, இரத்த நாளங்களின் சுவர்களை இறுகிக் கொள்ள வைக்கும். மாதுளையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், "அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன்" என்றழைக்கப்படும் கெட்ட வகை கொலஸ்ட்ராலை
தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.

ஆக்ஸிஜன் மாஸ்க்
***********************
எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை
இவை அதிகப்படுத்துகின்றன.

மூட்டுவாதம்
****************
மாதுளையின் மருத்துவ குணங்கள், எலும்புகளையும் எட்டுகின்றன. இது, மூட்டுவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின், ‘குருத்தெலும்பு' என்றழைக்கப்படும் சவ்வுப் பகுதியை, அதீத பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தடுக்கிறது. இந்தக் கனி, வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும் ஆற்றலும், குருத்தெலும்பை பாதிக்கும் நொதிகளை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டவை.


விறைப்புத்தன்மை குறைபாடு
***********************************
மாதுளை, இந்த தர்மசங்கடமான பிரச்சினையை, தீர்க்கவல்லதாகும். ஆனால், இது இப்பிரச்சினைக்கு உடனே முழு நிவாரணம் வழங்கக்கூடிய அதிசய மருந்து என்று நினைத்தல் தவறு. மாதுளைச் சாறு, இக்குறையை மிதமாக மட்டுமே நிவர்த்திக்கக்கூடும். இதைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை வெளியிடவில்லை. ஆனால் இந்த கருத்துக்கு
சில ஆதரவாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.

புரோஸ்டேட் புற்றுநோய்
*****************************
இந்த கருத்தும், திடமான முடிவுடையது அல்ல. ஆனால், இரு வேறு ஆய்வுகள், மாதுளைச் சாறு புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகிறது என்று கூறுகின்றன. ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனையில், மாதுளைச் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, அவற்றின் அழிவை அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


இதய நோய்கள்
******************
ஆய்வுக்கூடப் பரிசோதனையில், மாதுளைச் சாறு, இதய நோயாளிகளின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொடுக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: மாதுளைச் சாறு, இதய நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுப்போர்க்கு, எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.


வயிற்றுப்போக்கு
********************
வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர், மாதுளைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் போக்கலாம்.


உடல் எடை குறைய
************************
மாதுளை, அதிக கலோரிகள் இல்லாத பழமாதலால், இது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


குருத்தெலும்பு சீர்குலைவு
*******************************
இப்பழம், எலும்புகளுக்கு வலுவூட்டி, குருத்தெலும்பு சவ்வுகளின் சீர்குலைவைத் தடுக்கும்.


இரத்த அழுத்தம்
********************
மாதுளை, இரத்த அழுத்தத்திற்கு நல்லது.


ஞாபக மறதி
**************
அல்சீமர் போன்ற ஞாபக மறதி தொடர்பான வியாதிகளுக்கு மாதுளை ஒரு அருமருந்தாகும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&#30

டியர் தேனு ,
நல்ல தகவல்கள். நீ கொஞ்சம் ப்ரீயாக இருக்கும்பொழுது இத் தகவல்கள்களை /மற்றும் புதிய தகவல்களையும் கீழே உள்ள பக்கத்தில் போஸ்ட் /கோப்பி பேஸ்ட் செய்தால் நல்லது.

http://www.penmai.com/forums/health/47751-health-benefits-fruits.html
 

4rukmani

Citizen's of Penmai
Joined
Jul 16, 2012
Messages
798
Likes
798
Location
us california
#10
Re: இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்கள&#30

Let me read the whole topic and comeback
Thanks for these useful info
Rukmani
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.