இனிக்கும் தயிர் யோகர்ட்!- Health benefits of Yogurt

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இனிக்கும் தயிர் யோகர்ட்!

தயிர், மோர், வெண்ணெய், சீஸ், பனீர் போன்று பாலில் எடுக்கப்படும் யோகர்ட்டும் சத்துக்கள் நிறைந்தது. இதை, இனிப்புத் தயிர் என்று சொல்லலாம். மிதமான பக்குவத்தில் கிரீமாகக் கிடைக்கும் இந்த இனிப்புத் தயிர் உடலுக்கு அதிக நன்மைகளைச் செய்கிறது.

1..ப்ரோபயாடிக் என்ற நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட், குடலுக்கு நன்மை செய்து, அமிலப் பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. வயிற்றுஉப்பசம், வயிற்றுப்போக்கு, அல்சர், தொற்று, மலச்சிக்கல், எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளின் வீரியத்தைக் குறைக்கும். வாய் துர்நாற்றப் பிரச்னை நீங்கும். பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுக்குக் குளிர்ச்சியைத் தரும்.


.ஆரோக்கியமான நொறுக்குத் தீனிக்கு, அவசியம் பரிந்துரைக்கப்பட வேண்டியது, யோகர்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யோகர்ட்டை சுவைக்கலாம். ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கிரீன் ஆப்பிள், மாம்பழம் போன்ற பல சுவைகளில் கிடைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் ப்ளெயின் (Plain) யோகர்ட் சாப்பிடுவது நல்லது.

3.யோகர்ட்டைத் தொடர்ந்து சாப்பிட, கெட்ட கொழுப்புகள் (LDL) குறைந்து, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் கட்டுப்படுத்தும்.

4.யோகர்ட்டில் உள்ள புரதம் புதிய செல்கள் வளரவும், தசைகளை வலுவாக்கவும் உதவும்.


5.இதில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ப*ற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. எலும்பு மெலிதல் பிரச்னைகள் வராது.

6.பெண்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய பிறப்புறுப்பு தொடர்பான தொற்றுக்கள் வராமல் தடுக்கும். இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

7.அசைவ உணவுகளில் இருக்கும் வைட்டமின் பி12 இதிலும் உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.



8.சீரான, அழகான சருமத்துக்கு யோகர்ட்டை சாப்பிடலாம். பருக்கள், சிவப்புப் புள்ளிகள், கருவளையம் போன்றவை குணமாகும்.

9.கூந்தலில் யோகர்ட் தடவிவர, பொடுகுத் தொல்லை, தலை மேற்பரப்பில் வரும் எரிச்சல் போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

 
Last edited:

Aarushi

Citizen's of Penmai
Joined
Jun 26, 2012
Messages
533
Likes
1,322
Location
Sri Lanka
#3
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.