இனிக்கும் நிஜங்கள் - Inikkum Nijangal By Jash

Status
Not open for further replies.

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#1
haiiiiiiii frndsssss

naannnnn thaannnnnnn..... vanthutennnnn... happyyyyy new yearrrrr frnds...

எதிர்பார்க்காத நேரத்துல
உங்களோட எதிர்பார்ப்ப
எதிர்பார்த்து வந்திருக்கேன்...

hello frnds ஓடிறாடீங்க intha dialogue kettu... sathiyama ithu sara dialogue illa... ennoda chella frnd sonna first kavidai. inthavati oru diff themeoda vanthiruken.

ஆனா கதைக்களம் differenta இருக்கான்னு நீங்க தான் சொல்லணும்.... ஓ... என்னடா இவ கத தலைப்பு சொல்லாம கதைக்கு போய்ட்டாளேனு நினைக்காதீங்க... coming to my stry tittle "இனிக்கும் நிஜங்கள்"

hero pathi sollanumna, அவன் நல்லவனோ கெட்டவனோ? நாலும் தெரிஞ்சவனோ? என்னவோ? ஆனா எப்பவும் உண்மை பேசுவான்.

ஹீரோயின்.... பற்றி சொல்லனும்னா... சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு இதுல எல்லாம் நம்பிக்கை உள்ள பொண்ணு, நம்ப ஹீரோ லைப்ல கிராஸ்லாம் பண்ணல... பட் எப்படி மீட் பண்ணி கதை உருவாகுதுன்னு பார்ப்போம் பிரண்ட்ஸ்.

என்னோட போன கதைகளுக்கு கொடுத்த ஆதரவு போன்று, இதையும் ஏற்று கொண்டு ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன்.

இப்படிக்கு
உங்கள் சாரா.
 
Last edited by a moderator:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#3
இனிக்கும் நிஜங்கள்
பகுதி 1

அந்த ஆளுயரக் நிலைக்கண்ணாடியில், தன் சிகை அலங்காரத்தையும், தன் முகத்தின் ஒப்பனையையும் சரி பார்த்து கொண்டவள், சரி உடையை மாற்றலாம் என எண்ணினாள். தன் அன்னை வாங்கி தந்த, பெரிதாக சரிகை கரை இல்லாமல், ஆனால் உடல் பகுதி முழுவதும் தங்கக்கம்பிகள் ஓடிய நீல நிற பட்டு சேலையை உடுத்த தொடங்கினாள்.அதே நேரம், எந்த வித முன்னறிவிப்பு இன்றியும், கதவை கூட தட்டாமலும், “ஸாஸ்...(sauce) ரெடியாகிட்டியா?” என்ற கேள்வியோடு உள்ளே நுழைந்தான் சித்(sid). அவளோ எதிர்பாராமல் அவன் வந்த திகைப்பாலும், பெண்களுக்கே உரிய அச்ச உணர்வாலும், முந்தானை மடிப்பை வைத்துக் கொண்டிருந்த சேலையை நழுவ விட்டாலும், அது கீழே செல்வதற்குள் சட்டென்று பற்றி, தன்னை மறைத்துக் கொண்டே, அவனை முறைத்தாள்.
அவன் சாரி என மன்னிப்பு கேட்பதற்குள், “ஹே... அறிவில்லையா உனக்கு? இப்படி தான் வருவியா? கதவ தட்டிட்டு வரணும்னு தெரியாது?” என இடைவிடாமல் பொரிந்தாள். அவனோ “அப்படியா” என்பது போல், அவளை ஒரு மார்க்கமாய் அளக்கும் பார்வைப் பார்த்தப்படி, அவளை நோக்கி எட்டு வைத்தான்.
அவளும், அவன் முன்னேற முன்னேற, இவள் பின்னே நகர்ந்தாள். ஒரு கட்டத்தில், கட்டிலின் கால் இடிக்க, அப்படியே பின்னே சாயந்து, தடுமாறி மெத்தையில் விழுந்தவள், கைகளை ஊன்றி தன்னை சமாளித்தவள், நில்லாமல் இன்னும் அவன் நெருங்கி கொண்டே இருப்பதை பார்த்து, வார்த்தைகள் வராமல், பயத்தில் முகம் வெளுக்க, கண்களில் மிரட்சியோடு, தன்னை நெருங்குபவனைப் பார்த்தாள். இந்த அதிர்வில், தன் கையால் பிடித்திருந்த முந்தானை சேலை நழுவியதை, பாவம் அவள் அறியவில்லை.
ஆனால் அதை அவன் கண்டுக்கொண்டாலும், கண்களை கூர்மையாக்கி, ஒரு இடத்தை மட்டும் பார்த்தவன் “ஹே... என்ன இப்படி கட்டிருக்க... நீ லோ ஹிப்ல கட்டமாட்டியா பேபி” எனக் கேட்டுக் கொண்டே, அவள் வயிற்றின் சேலை மடிப்பை, கை நீட்டி அவன் உருவப் போக... பட்டென்று தன் கையால், குனிந்தவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தாள். அறைந்த பின் தான், தான் செய்த காரியத்தை எண்ணிப் பார்த்து, பயத்தோடு அவனை ஏறிட்டாள்.
அறை வாங்கியவனோ, தன்னை... ஒரு ஆண் பிள்ளையை... ஒரு பெண் அறைந்து விட்டாளே என கண்ணில் கோபத்தோடு, அவளை உறுத்து விழிக்காமல், தலையை லேசாய் தட்டியப்படி “சாரி... உன்ன தொடக் கூடாதுன்னு சொன்னேல... நான் மறந்துட்டேன்.” என அசால்ட்டாய் கூறிவிட்டு, “இட்ஸ் ஓகே... நீ லோ ஹிப் கட்ட மாட்டியா... இல்ல எப்படி கட்டுறதுன்னு தெரியாதா?” என அவன் கண்ணடித்து, இலகுவாய் வினவவும் தான், இயல்பானவள், தன் முந்தானையைத் தேடி எடுத்தப்படியே, “கட்டமாட்டேன்” என்பது போல் மறுத்து தலையாட்டினாள்.
“ஓ... உனக்கு தெரியாதா... அப்போ நான் உனக்கு ஹெல்ப் பண்ணவா?” என மேலும் நெருங்கியவனைப் பார்த்து, அவசரமாய் “இல்ல... எனக்கு பிடிக்காது, நான் அப்படியெல்லாம் கட்டமாட்டேன்.” என கூறி முடித்தாள்.
“ஆமா... நான் கொடுத்த சாரி எங்க? அத நீ கட்டலையா?” என அப்போது தான் அவள் அணிந்திருந்த சேலையை, இது நேரம் வரை அவள் அழகை ரசித்தவன் கவனித்தான்.
அவள், அதற்கும் மறுப்பது போல் தலையை தான் ஆட்டினாள். ஏனெனில் அவள் சிறிது குற்ற உணர்வில்... அவனை... தனக்கு தா...(அந்த சொல்லை கூட நினைக்க விரும்பவில்லை, அவள்) கை நீட்டி அடித்து விட்டோமே என்ற தவிப்பில் இருந்ததால், அவளுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.
“ஏன்... ஒய் பேபி...?” என கூவினான். அவனின் “ஒய் பேபி” என்ற கூவல் அருவருப்பை தந்ததோ அல்லது அவன் அளித்த சேலை அருவருப்பை உண்டாக்கியதோ தெரியவில்லை? அவள் முகத்தை சுழித்தப்படி, கட்டிலை விட்டு இறங்கி அவன் கொடுத்த சேலையை எடுத்து வந்து, அவன் முன்னே, அதன் ஒரு முனையை பிடித்து விரித்து காட்டினாள். “இத போய்... அதுவும் இன்னிக்கு கட்ட சொல்லுற...?” எனக் கண்ணை சுருக்கி கூர்மையாய் பார்த்து கேள்வி கேட்டாள். ஏனெனில் அந்த சேலை அப்படியே கண்ணாடியாய் மெல்லிசாய் இருந்தது, மேலும் அதற்கு தந்த சட்டையோ, அதற்கும் மேலாய் "லோ கட்" என்று சொல்வார்கள் என கேள்விப் படிருக்கிறாள், ஆனால் அதை இன்று தான் அந்த சட்டையில் பார்த்தாள்.
 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#4

“யா... ஏன்...” என நெற்றி சுருக்கி, பின் “இன்னிக்கு கட்டுனா தான்... க்ளாமரா... ஹாட்டா இருப்ப...” எனக் கண்ணடித்த்தான். மேலும் “ஒவ்வொருத்தனும்... உன்ன பார்த்துட்டு... என் மேல பொறாம பட வேண்டாம்...?" என இவளிடமே கேள்வி வேறு கேட்டான். அப்போது தான் நினைத்தாள், "இவனுக்கு ஒரு அறை போதாதென்று..." பின் "திமிர் எடுத்தவன்" என அவனை வழக்கம் போல் மனதுக்குள் திட்டி விட்டு, "என்னால கட்ட முடியாது... நீ பிறந்து வளர்ந்தது வேணா மும்பையா இருக்கலாம். ஆனா எங்க குடும்பத்துல என்ன இப்படியெல்லாம் வளர்க்கல, கண்ணியத்தோடு இருக்கணும்னு சொல்லி தான் வளர்த்திருக்காங்க" என பெரிதாக உரையாற்றினாள்.

"ஸ்ஸ்... ஓகே ஓகே ... யுவர் விஷ்... எப்படியும் வா... சீக்கிரம் கிளம்பு, டைம் ஆச்சு" என நழுவினான் sid.

பத்து நிமிடத்தில் அவளும் கீழ் தளத்திற்கு இறங்கி வர, "வாவ்... பியுடிஃபுல்" என மீண்டும் கூவி விசிலடித்தான். சித்தார்த்தின் செய்கையால், அவளுக்கு தன் மானம் கப்பலேறியது போல் அவமானமாய் உணர்ந்தாள். பின்னே பெரியவர்கள் எல்லோரும் கூடியிருந்த சபையில், இப்படி வெட்கமே இல்லாமல் வெளிப்படையாய் தன்னை வர்ணித்து, இதில் விசில் வேறு... இவ்வாறு செய்தால் அசிங்கமாக இருக்காதா? மேலும், அவள் "இன்னும் என்ன என்ன கூத்தடிப்பானோ" என்று மனதுள் இப்போதே பயம் கொள்ள ஆரம்பித்தாள்.

பின் அங்கிருந்த, முடியெல்லாம் வெள்ளி கம்பிகளாய் மாறியிருந்த ஒரு முதியவர், "ஏன்டாப்பா... இங்க நாங்களெல்லாம் இருக்கிறத மறந்துட்டியா... இல்ல எங்கள பார்த்தா... உனக்கு மனுஷங்களா தெரியலையா?" என ஐயத்தோடு வினவினார். "இல்ல தாத்தா மறக்கல... ஆனா இந்த ஸாஸ் என்ன மயக்குறாளே, நான் என்ன பண்ண?" என அப்பாவியாய் சொல்லி விட்டு, சிரித்துக் கொண்டே, அவளிடம் சென்று தன் கையை நீட்ட, அவளும் வேறு வழியில்லாமல், அதில் தன் கை வைக்கவும், அவன் வாசலை நோக்கி சென்றான். அவரோ "அது சரி... இன்னிக்கு ஒரு நாள் அப்படி தா இருக்கும்" என கூறினார்.

அவனுடன் இரண்டு அடி எடுத்து வைத்தவள், அதன் பின் நகராமல் சிறிது நிற்கவும், அவன் கேள்வியாய், லேசாய் தலையை தூக்கவும், அவளோ அதைக் கண்டுக் கொள்ளாமல், திரும்பி "தாத்தா... நீங்க, அம்மா அப்பால வரலையா?" என கேட்டாள்.

அதற்கு அவரோ "இல்லமா வருவோம்... முத நீங்க ரெண்டு பேரும் அழகா ஜோடியா போங்க... நாங்க... பின்னாடியே வேற கார்ல வந்திருவோம்" என ஏற்ற இறக்கமாய் சொல்லியப்படி, அவர்களை வாசல் வரை சென்று அனுப்பி வைத்தார், அந்த அன்பு தாத்தா கமலவாசன். பின் அங்கு வெளியே, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பதிருந்த, தன் காரை நோக்கி அவன் அழைத்து சென்றான்.

பின் அவர்களது கார், ஒரு பெரிய ஹோட்டலுக்குள் சென்று நிற்க, விலையுர்ந்த கோட் சூட்டில் இருந்த sid முதலில் இறங்கி, தன் மனையாளின் கைகளுக்காக, அவன் தன் கை நீட்ட, அவளும், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட பாதையில், தன் கால்களை பதித்து இறங்கினாள்.

இருவரும் நடந்து செல்ல, செல்ல, முக்கிய புள்ளிகளும், சில பாலிவுட் நட்சத்திரங்களும் புன்னகைத்து, மெல்ல தலையசைத்து வரவேற்க, மேலும் மின்னல் வேக ப்ளாஷ்களுடன், புகைப்படம் எடுக்கும் கலைஞர்களும், அவர்களுக்கு முன்னே, அவர்களை தங்கள் புகைப்பட கருவியில் பிடித்து கொண்டே, அப்படியே பின்னேயே நகர அனைவருக்கும் ஒரு புன்சிரிப்பை பதிலாய் அளித்தப்படியே, மேடையை நோக்கி சென்றான் sid. அவனோடு செயற்கை புன்னகையை பூசியப்படி அவளும் சென்றாள்.
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#5

அப்போது தான் மேடையையும், அதற்கும் கீழே அரங்கையும் நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்தாள். இன்று காலை தன்னிடம் வந்து, மாலையில் ரிசப்ஷன் நடக்கப் போவதாகவும், அதற்கு அவளை தயார் செய்ய, அழகு கலை நிபுணர்கள் வருவார்கள் என்று அவர்களின் பெயர் அடங்கிய முகவரி அட்டையை தந்து விட்டு சென்றான். சரி ஏதேனும் ஒரு ஹோட்டல் அல்லது மண்டபத்திற்குள் நடக்கும் என நினைத்திருந்தாள். இதுவரை தொலைக்காட்சியில் அல்லது கற்பனையில் மட்டுமே இவற்றையெல்லாம் பார்த்திருந்தவள், ஆனால் தற்பொழுது, நேரிடையாய் பார்க்கவும், ஒரு நிமிடம் அல்ல, சில நிமிடங்கள் கண்களை மலர்த்தி, வியந்து தான் போனாள்.

ஏனெனில், மேடையில் இவர்கள் அமரவென, பல விதமான கற்கள் பதித்து அலங்கரிக்கப்பட்ட அழகான மயில்கள், இரு புறமும் நிமிர்ந்து நிற்க, அதன் முதுகு புறத்தில் இவர்கள் அமர்வதற்கென நாற்காலி போன்று வடிவமைக்கப் பட்டிருந்தன. அதற்கு பின்னே ஒரு பெரிய திரையில், இருவரும் ஜோடியாய் இவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்கள், கிராபிக்ஸ் கலக்கப்பட்டு விதம் விதமான கோணங்களிலும், வித்தியாசமான பின்னணியிலும் காட்சிகளாக்கப் பட்டிருந்தன.பின் அரங்கை பற்றி சொல்ல வேண்டுமெனில், விருது வழங்கும் நிகழ்சிகளில், அமைக்கப்பட்டிருப்பது போன்று, வெள்ளை துணியால் மூடிய வட்ட மேசைகளும், நாற்காலிகளும் வீற்றிருக்க, அதைத் தாண்டி பத்திரிக்கையாளர்களுக்கென தனியே போடப்பட்டிருந்த மேசைகளும், நாற்காலிகளும் ஒரு புறம் இருக்க, காவல் துறையினர் சிலரும் ஆங்காங்கே இருக்க, மற்றொரு புறம் இரவு உணவு வழங்கும் பஃபேட் முறைக்கு, மேடை அமைக்கப்பட்டிருக்க, இரவாவதற்கு நேரம் இருப்பதால், தற்பொழுது அங்கு குட்டி பார் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. மேடைக்கு கிளைப்பக்கமாய் லைட் மியூசிக்கும் இசைக்கட்டு கொண்டிருந்தன.

சரியாய் இவர்கள் மேடை ஏறும் தருணம், ஏ. ஆர். ரகுமானின் "அசீம்... ஓ... ஷேர்ஷா..." என்ற ஜோதா அக்பர் படப்பாடலின் இசை மட்டும் ஒலிப்பரப்பப் பட்டது. அதே சமயம் எல்லோரின் கைத்தட்டலும், "ஹே... கங்க்ராட்ஸ் மேன்...", "ஹார்ட்டி விஷ்ஷஸ் sid" என சில குரல்களும், "வி வார்ம்லி வெல்கம் அவர் வாசன் குரூப் ஆஃப் கம்பெனீஸ், எங் கப்பிள் மிஸ்டர் சித்தார்த் வாசன் அண்ட் மிசஸ் சாஸ்வதா சித்தார்த் வாசன்" என ஒலிபெருக்கியின் அறிவிப்பும் அவர்களை எட்டின.

அதை ஏற்று கொண்டது போன்று ஒரு சின்ன தலையசைப்பும், சின்ன சிரிப்போடும் நின்றான். அவனைப் பின்பற்றி, ஒரு மென்னகையோடு அவளும் நின்றாள். அப்போது தான், இவனும் பெரிய பணக்காரன் தான் போல என எண்ணினாள். மீண்டும் புகைப்படக்காரர்கள் தங்கள் கருவியில் அவர்களை, வெவ்வேறு கோணங்களில் சிறைப்படுத்த ஆரம்பித்தனர். இரண்டு நிமிடத்தில் வேறு இசை ஒலிக்க, "நவ், மிஸ்டர் கமலவாசன், எம்.டி ஆஃப் வாசன் குரூப் நியரிங் தேம் டூ விஷ்" என அறிவிப்பு மீண்டும் ஒலிக்க, தன் பேரனைப் போன்றே கோட் சூட் அணிந்து, மிடுக்கோடு, கம்பீரமாய் நடந்து சென்று, தன் பேரனின் கழுத்தில் ஒரு மலர் மாலையை இட்டு, பின் மற்றொரு மாலையை அவன் கைகளில் தந்து, தன் மருமகளைக் கை காட்டினார்.

அவனும் முகமலர்ச்சியோடு, கண்களில் காதலை தேக்கியப்படி, அவன் பக்கம் திரும்பி, அவன் உயரத்திற்கு நிமிர்ந்த அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தப்படி மாலையிட்டான். ஏனோ அவள் கண்களில் நீர் நிறைய, தலை குனிந்து கொண்டாள். மறுநிமிடம் அதை மறைத்தும் கொண்டாள். பின்னர் சாஸ்வதாவின் குடும்பத்தை அறிமுகப்படுத்தலாம் என கமலவாசன் எண்ணி, அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் வேண்டாம் என மறுத்து விட்டனர்.

பின்னர் வந்த பெரும் புள்ளிகளும், பாலிவுட் நட்சத்திரங்களும் பரிசு பொருளோடு வந்து வாழ்த்து தெரிவிக்க, அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டும், சிலர் செய்த கேலிப் பேச்சுக்களையும் ரசித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தான் சித்தார்த். இப்படியே ஆழ்ந்து விட்டவன், அரைமணிநேரம் சென்ற பின் தான், தன் அருகே நின்றவளை கவனித்தான். அவளோ அவஸ்த்தையாய் நின்று கொண்டிருந்தாள்.
 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#6

வந்தவர்கள் எல்லாம், அவர்களின் வழக்கமாய், மணமகள் அருகே நின்று, தோளோடு அணைத்தப்படியும், சிலர் இடையோடு அணைத்தப்படியும் நின்று, புகைப்படத்திற்கு போஸ் தந்தனர். இதில் ஆண், பெண் பேதம் இல்லாமல் வேறு இருக்க, தன் கணவனின் தொடுகையே சகிக்க முடியாதவள், இவர்களின் தொடுகையையா பொருத்து கொள்வாள்? அதை விரும்பாது, முகத்தை சுழிக்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் தான் அவஸ்த்தையோடு நின்றிருந்தாள்.

இதை அறிந்தவன் போன்று, சித்தார்த் உடனே அங்கே மேடையில் நின்றிருந்த மேற்பார்வையாளரிடம், கண்ணாலயே கட்டளையிட, உடனே அவர் மேடையில் ஏறி வந்தவர்களை தடுத்து, கீழே காத்திருக்கும் படி சொல்ல, அவர்களோ சிறிது எரிச்சலோடு கீழே சென்றனர். ஆனால், அதைப் புரிந்து கொண்ட, அந்த நபரோ, அவர்களை அருகிலேயே காலியாய் இருந்த ஒரு மேஜை நாற்காலிகளில் அமர வைத்து, அவர்களுக்கு குளிர்ப் பானங்களை வரவழைத்து உபசரித்தார்.

அதற்குள் தன் மனையாளை, கைப்பிடித்து, மேடையில் இருந்த அலங்கார நாற்காலிக்கு இட்டு சென்று, அமர வைத்தவன், மீண்டும் வேறு ஒருவருக்கு கண் ஜாடை செய்தான். அவரும் உடனே செயல்பட ஆரம்பித்து, இரண்டு நிமிடத்தில், இருவருக்கும் குளிர்ப்பானங்களை தருவித்தார்.

அதை எடுத்து தனக்கும், தன் மனைவிக்கும் கொடுத்து கொண்டே, "என்ன சாஸ்...? என்ன ஆச்சு?" என கேட்டான். ஏற்கனவே கடுப்பில் இருந்தவள், அவனது இந்த அழைப்பில், "என்ன இப்படி கூப்பிடாதன்னு எத்தனவாட்டி சொல்லிருக்கேன்" என பொரிந்தாள். "ஓகே ஓகே... கூல்..." பேபி என்று சொல்ல வந்த வார்த்தையை வாய்க்குள்ளேயே பூட்டி விட்டு, சிறிது இடைவெளி விட்டு, "இப்ப என்ன ஆச்சுன்னு, நீ இப்படி முகத்த தூக்கி வச்சிருக்க, எல்லோரும் நம்மளையே தான் பார்ப்பாங்க சாஸ்வதா." என சாதாரண குரலில் சொன்னாலும், அதில் அழுத்தம் இருந்தது.

"டெல் மீ... வாட்ஸ் தி ப்ராப்லம்?" என மீண்டும் அழுத்தமாய் கேட்க, "இல்ல... அது வந்து... ம்ச்சு... எல்லோரும்... இடிச்சுக்கிட்டே நிக்கிறாங்க, எனக்கு பிடிக்கல" என ஒரு வழியாய், முழுதும் சொல்லாமல் சொன்னாள்.

"ஓ... ஓ மை காட்... இதுக்கு தானா..." என இழுத்தவனை, அவள் முறைக்க, "ஓகே... சரி... நான் பார்த்துக்குறேன்... வா" என மீண்டும் அவளுக்கு கை நீட்டினான். மேலும் தன் மனைவியை, இடையோடு அணைத்துக் கொண்டு நிற்கவும், எரி தணலுக்கு பயந்து சுடும் வாணலியில் விழுந்ததைப் போன்று எண்ணினாள்.

பின் இரண்டு நிமிடத்தில் சித்தார்த்தின் கட்டளையால், அவனின் தோழி ஒருத்தி, சாஸ்வதாவின் தம்பியை அழைத்து வந்து, அவள் அருகே நிறுத்தி விட்டு சென்றாள். வந்த அவள் தம்பியோ, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், "அக்கா... நீ எவ்ளோ லக்கி. எனக்கு உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு கா... மாமா எவ்ளோ பெரிய செலிப்ரட்டியா இருக்கார்... ம்ஹும்... இப்ப வருத்தப்படுறேன் பொண்ணா பிறக்கலையேன்னு. நான் மட்டும் பொண்ணா பிறந்திருந்தா, மாமா என்ன தான் கட்டிருப்பார்." என தன் அக்காவின் காதைக் கடித்தான். மேலும் தனக்கு தானே ஹாசியம் சொன்னது போல் சிரித்தும் கொண்டான்.

ஆனால் சாஸ்வதாவின் மனதிலோ, தங்க கூண்டில் அடைப்பட்ட கிளியாய் நம் நிலைமை ஆயிற்றோ என குழம்பி தவிக்க தொடங்கினாள்.


நிஜம் இனிக்கும்..........
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#7
haiiiiii frndssssss

firsttttttt sorryyyyyy ennala sonna datela ud thara mudiala. athunaala thaan inniku late aanalum paravaayillanu vanthu inikkum nijatthin first ud kuduthirukken.

eppadi irunthuchu inichuchaa... illa kasakkuchchaanu sollittu ponga frnds...

appuram one obligation frnds... intha pongal varai, ennala regulara ud thara mudiyathu... eppo time kidaikkutho appo thaan vara mudiyum. but pongal anniku irunthu regulara ud thandiruven frnds..... so intha cinna kulandaiya mannichu vitturunga...

ok frnds...... inikkum nijangalai patri irantu vari illai irantu vaarththai... illa oreluthu oru moliyaavathu sollittu ponga frnds. appuram avasaram avasarama pottadala mistakes iruntha manichidunga frnds. editing and cuttingum pannala... so adjust pannikonga... inimae crcta vanthirum frnds.

ungal karutthukkalai ethirpaarththu kaattirukkum ungal sara. ungal karutthukkalai ingae pathividungal

http://www.penmai.com/forums/serial-stories/84368-comments-jash-6.html#post1373052
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#8
பகுதி 2

மெல்ல மெல்ல, படிக்கும் நோகுமோ, காலுக்கும் நோகுமோவென படி ஏறினாள் சாஸ்வதா. ஒரு வழியாய், மெதுவாய் ஏறி வந்தும், சித்தார்த்தின் அறை கதவை அடைந்து விட்டாள். கையில் பால் சொம்போடு, குனிந்தப்படி வந்தவள், கதவை தட்ட எண்ணி, அப்போது தான் நிமிர்ந்தாள். ஆனால், அது பாதி திறந்தப்படி தான் இருந்தது. எனினும், கதவை லேசாய் தட்டி விட்டு, சாஸ்வதா உள்ளே நுழைய, அதில் கலைந்த சித்தார்த், தன் ஆப்பிள் மடிக் கணினி மீதிருந்த பார்வையை அகற்றி, அவள் மீது பதித்தான்.

லேசாய் சரிகை கரையோடிய தேன் வர்ண மெட்டல் ஷிப்பான் சேலையில், மிதமான ஒப்பனையில் நின்றவளைப் பார்த்தவனின் மூளை, அவனை ரசிக்க ஆணையிட்டது. முன்பை விட இப்போது லேசாய் வெண்மையாய் மெருகேறியிருந்த மேனி, வெட்கத்தால் லேசாய் சிவந்த கன்னங்கள், மை தீட்டாத கண்கள் தான், எனினும் அவனுக்கு அது அழகாய் தெரிந்தன, நேர்கோடாய் நீண்டு, கடைசியில் வளைந்த புருவங்கள், நெற்றியின் மத்தியில் சிறிதுமில்லாமல், பெரிதுமில்லாமல் வட்ட வடிவ செந்நிற பொட்டு, அப்படியே நேர் மேலே, வகிட்டில் குங்குமம்.

அவளோ எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது, என தலை குனிந்தப் படியே, அவஸ்தையோடு கண்களை சிமிட்டிக் கொண்டே இருந்தாள். அதை உணர்ந்தவன் போன்று "என்ன சாஸ்வதா என்ன? சொல்லு?" என அக்கறையாய் அருகே வந்து, பாந்தமாய் வினவினான். அவளோ தயங்கியப்படியே, "இல்ல... ம்மா... அம்மா தான், இனி... இங்கயே... இருக்க சொன்னாங்க" என வியர்த்து ஒழுக, ஒரு வழியாய் விஷயத்தை கூறினாள்.

அவனோ அதன் அர்த்தத்தை உணர்ந்து உல்லாசமாய் புன்னகைத்தப்படியே, "ஓ... தட்ஸ் ஃபைன். ஆனா... எதுக்கு அனுப்பி இருக்காங்கன்னு புரியுதா?" என புருவத்தை உயர்த்தி, கேட்டப்படியே அவளை நெருங்கி, அவள் கையில் இருந்த வெள்ளி சொம்பை வாங்கி, அருகே இருந்த சிறிய மேஜையில் வைத்து விட்டு நிமிர, சாஸ்வதாவை காணவில்லை. அவளோ, அவன் கால்களில் விழுந்து வணங்கி கொண்டிருந்தாள். "ஹேய்... என்ன இதெல்லாம்... கெட் அப் சாஸ்வதா" என தமிழும், ஆங்கிலமும் கலந்து அவன் இயல்பாய் பேசியது அப்போது தான் கவனித்தாள். "ஓ... இங்க பிறந்து வளர்ந்ததால் அப்படி பேசுகிறார் போல" என எண்ணியவள், "இல்ல... இது எல்லாம் சாஸ்திரம்னு செய்ய சொன்னாங்க" என அவள் அவன் கால்களில் இருந்தப்படியே கூற, அவனோ அவள் தோள்களை பற்றி எழுப்பியப்படியே "இதெல்லாம் வேணாம் டியர், எப்போவும் உன் மனசுல, நீ என்ன நினச்சுட்டு இருந்தாலே போதும்" என காதலாய் சொன்னானோ?

அவளும் பதில் அளிப்பது போல், அழகாய் வெட்கத்தால் தலைக் குனிய, அவள் முகத்தை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் மனதோ "இது சரியில்லை... இது தவறு... இது தவறு..." என அடித்து கொண்டது.

ஆனால், அவன் மூளையோ "இது சரி தான்... இது தவறில்லை" என சொல்லியப்படி, அதை உணர்த்தும் பொறுத்து, அவனுள் புது இரத்தத்தை பாய்ச்சுவதும், அவனது நாடி நரம்புகளில் இருந்து மூளைக்குள் புது இரத்தம் பாய்வதுமாய் ஓடியாடி கொண்டிருக்க, அவனது ஹார்மோன்களும் செவ்வனே தங்கள் வேலைகளை துவங்க, "ஐ லவ் யு பேபி" என காதலாய் கசிந்துருகி கொண்டே, அவள் கண்களை பார்த்தப்படி கூறினான்.

அவன் விரலால் நிமிர்ந்தவளோ, அதை எதிர்கொள்ள முடியாமல், மீண்டும் கண்களை தாழ்த்த, அவனோ மென்மையாய் சிரித்தப்படி, அவளை தன் இரு கரங்களால் அள்ளியப்படி, அங்கிருந்த மெத்திருக்கைகளைக் கடந்து, ஒரு உள்ளறைக்கு சென்று, கதவை சாற்றினான்.
 
Last edited:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#9

நின்றப்படியே அவளை மெத்தையில் கிடத்தி விட்டு நிமிர, ஆனால் அவனால் நிமிர தான் முடியவில்லை. ஏனெனில், அவள் கை வளையத்திற்குள் அவன் கழுத்து மாட்டியிருக்க, குனிந்தவாறே அவளை ரசித்தவனின் கண்களில், சரி பாதி பயமும், வெட்கமும் சூழ படுத்திருக்கிறாள் என்பதனை அவள் கண்களை இறுக்கி மூடியிருந்த விதத்திலும், அவள் தொண்டைக்குழி ஏறி இறங்கிய விதத்திலும் உணர்ந்தான் அவன்.

மேலும், அவளின் செய்கைகள் அவனுக்கு அழைப்பு விடுப்பதாகவே அவனுக்கு தோன்ற, அவள் கழுத்து வளைவை நோக்கி குனிந்து, தன் முதல் முத்திரையை பதித்தான் சித். அதில் சிலிர்த்தவள், தன் கைகளை தளர்த்தி, அவன் தோள் தொட்ட சமயம், "ஆனா... நா... நான் ஒரு மிருகத்தோட வாழ ஆசைப்படல" என்று அழுகையோடு கமரிய குரல் அவன் காதுகளில் ஒலிக்க, அவன் மூளை விழித்து கொண்டது.

சட்டென அவனின் ஹார்மோன்களும், உடனடியாய் வேலை நிறுத்தம் செய்ய, அப்போது தான் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல், தலையை லேசாய் உலுக்கி கொண்டவன், அவள் அருகே அமர்ந்தான். சாஸ்வதாவும், ஏதோ கனவில் இருந்து விடுப்பட்டவள் போல், நெற்றி சுருக்கி அவனைப் பார்த்தாள். அவனோ ஒரு சமாளிக்கும் புன்னகையை வீசி, அவள் காதருகே இருந்த நெற்றிப்பொட்டில் முத்தமிட்டவாறே "கொஞ்ச நாள் ஆகட்டும்... சாஸ்... இம்..." என குனிந்து கூறியப்படியே, அவள் அருகே படுத்தவன், அவளை தோளோடு அணைத்து, தன் நெஞ்சத்தோடு நெருக்கி, மீண்டும் ஒரு முத்தத்தை அவள் தலையில் பதித்தான்.

சாஸ்வதா "என்னங்க..." என அவன் நெஞ்சத்தில் இருந்தப்படியே அழைத்தாள். சித்தார்த் உம் கொட்ட, "என்ன... எங்க... எப்போ பார்த்து லவ் பண்ணீங்க?" என ஒரு சிறுகுழந்தையின் ஆவலோடும், எதிர்பார்ப்போடும் கேட்டாள்.------------------------


சித்தார்த்... வளர்ந்து வரும் திறமையான இளம் தொழிலதிபர்களின் பட்டியலில் முதல் இடத்தை வகிப்பவன். அவ்வப்போது, அவன் வயதுக்கே உரிய இளமை கொண்டாட்டங்களும், இனிமை விளையாட்டுகளிலும் தன்னை இடுபடுத்திக் கொள்வான். அதனாலே, நிறைய பத்திரிக்கைகளின் சூடான செய்திகளிலும், கிசுகிசுக்களிலும் அவன் புகைப்படமும், அவன் பெயரும் இடம் பெறும். இதை வைத்தே, அவன் எந்த அளவிற்கு உழைக்கிறானோ, அதற்கு குறையாமல் வாழ்வை அனுபவிக்கவும், வாழவும் கற்றிருக்கிறான் என நாம் யூகித்து கொள்ளலாம்.

மேலும், சில மாத பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இவனுடன் சில மாடல்களோ அல்லது பெண் நட்சத்திரங்களோ ஜோடியாய் நின்று போஸ் கொடுத்திருப்பார்கள். சில சமயம், அதை கமலவாசன் காண நேர்ந்தால், பேரனை அழைத்து, "என்னடாப்பா... இது?" என தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த பண்பாட்டோடும், கலசாரத்தோடும் ஊறியவராய் கேள்வி கேட்பார்.

ஆனால் அவனோ "எது தாத்தா?" என பதில் கேள்வி கேட்டப்படியே, அவர் கையிலிருக்கும் பத்திரிக்கையை பார்ப்பவன், "இவ... இவ பேரு..." என உண்மையாய் நெற்றி சுருக்கி யோசிப்பான். அதிலேயே "ஏன்டாப்பா... இவ்வளவு சிரமப்படுற?... இரு... புத்தகத்துக்கு உள்ள போட்டிருப்பாங்க" என அந்தப் புத்தகத்தைப் புரட்டி, "பீனாவாம்..." என பதில் தர, "ம்ம்... பீனா... அன்னிக்கு பார்த்தப்ப, xxx பப்... போகலாமான்னு கூப்பிட்டா... நானும் ப்ரீயா... இருந்ததால, அவக் கூட போனேன் தாத்தா. வேற ஒன்னும் இல்ல..." என பிறந்து வளர்ந்தது முதல், பணம், பார்ட்டி, மாடல்கள் என மும்பை நாகரீகத்தில் ஊறிய சித்தார்த் பதில் கூறினான்.

"என்னவோ பா... நீயும் உங்கப்பன்ன மாதிரி குடும்பத்த கவனிக்காம விட்டுறாத. நாளைக்கு உனக்குன்னு கல்யாணமாகி, ஒரு குடும்பம்னு ஆகிட்டா, இந்த வீணாப் போனவளுகள விட்டிருடா பா..." என அறிவுரை கூற ஆரம்பிக்க, "ஓகே... ஓகே... ஓகே தாத்தா" என அவனும் ஒத்துக் கொள்ள, அதற்கு மேலும், அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்த தன் பேரனை, கமலவாசனால் ஒன்றும் சொல்லமுடியாமல் போக, ஒரு பெருமூச்சோடு நிறுத்திக் கொண்டார்.
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#10

இப்படிப்பட்ட சித்தார்த்தின் குணநலன்களை, மேலும் நாம் அறிந்து கொள்ள, நம் நாட்டில் இருக்கும், பெயர் பெற்ற ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு, அவன் அளித்த பிரத்யேக பேட்டியை நாம் தமிழில் காண்போம்.

"இன்று நமது அரங்கத்தில், வாசன் ஆட்டோமொபைல்ஸின் சேர்மன் மிஸ்டர் சித்தார்த், நம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார். இனிய மாலை வணக்கம் மிஸ்டர் சித்தார்த்" என புன்னகையோடு ஆரம்பித்தார் செய்தியாளர். "மாலை வணக்கம்" என கோட் சூட்டுடன் கால் மேல் கால் போட்டு மிடுக்காய் அமர்ந்து, வசீகரமாய் புன்னகைத்து பதில் கூறினான்.

"இன்று சந்தையில் புதிதாய் வலம் வந்து கொண்டிருக்கும், வர்த்தக ஊர்தியான டெசி ட்ரக், இதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது? ஏனெனில் எப்பொழுதுமே வாசன் ஆட்டோமொபைல்ஸில் இருந்து வருடாவருடம், ஒரு புதிய சொகுசு கார்களை தான் கொண்டு வருவீர்கள், ஆனால் இந்த வருடம் ஒரு வர்த்தக ஊர்தியை இறக்கியிருக்கீர்கள்" என ஒரு புன்னகையோடு செய்தியாளர் முடிக்க,

"நீங்கள் சொல்வது சரி தான், கடந்த வருடங்களில் எல்லாம் கார்களை மட்டுமே உருவாக்கிய நாங்கள், இப்பொழுது முதன் முறையாய் டெசி ட்ரக்கை சந்தையில் இறக்கியிருக்கிறோம். மேலும் நீங்கள் கேட்ட கேளிவியிலேயே பதிலும் உள்ளது, இது ஒரு வர்த்தக ஊர்தி என்பதால் தான் இறக்கியிருக்கிறோம். இத்தனை நாட்களும், என் கனவு திட்டங்களான, புதிய வடிவ கார்களையே வடிவமைத்து உருவாக்கினோம். பின் வர்த்தகம் செய்யும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு வர்த்தக ஊர்தியை உருவாக்க வேண்டும் என நெடு நாள் யோசித்து, செயல்படுத்தப்பட்டு வெளிவந்தது தான் இந்த டெசி ட்ரக்.

செய்தியாளர் "ஓ.. அப்படியென்றால், இத்தனை வருடங்கள் வந்தது எல்லாம் உங்கள் ஒருத்தரின் கனவு கார்கள் என்றே சொல்லலாமா?"

"இம்... அப்படியும் சொல்லலாம், ஆனால் அதற்கு வடிவம் கொடுத்து, உலாவ விட்டதில் எங்கள் பொறியாளருக்கும், தொழில் வல்லுனர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என்பது மறுபதற்கில்லை."

"ஆம், நீங்கள் சொல்வது சரி தான். இப்போது இந்த புது வரவான டெசி ட்ரக், மக்களிடம் சென்று வெற்றி பெறும் என நம்புகிறீர்களா?" செய்தியாளர்.

"வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் தான் கொண்டு வந்திருக்கிறோம், அதனால் கண்டிப்பாக வெற்றி அடையும்" என்று அவன் உறுதியாய் மொழிய, "எப்படி இவ்வளவு உறுதிப்பட கூறுகிறீர்கள்" என செய்தியாளர் அவனை ஆழம் பார்க்க, அவன் தன் வாகனத்தின் செயல் திறன், மற்றும் அதன் நிறைகளை அடுக்கினான். அப்படியே அங்கு அவர்களின் டெசி ட்ரக்கை திரையிட்டு விளக்கமாய் வேறு காட்டப்பட்டது.

"உங்களை போன்றவர்கள் எல்லோரும், இப்போது கார்ப்பரேட் பிசினஸ்ஸில் இருக்கிறார்களே, நீங்கள் ஏன் இன்னும் அதில் இறங்கவில்லை?"
 
Last edited:
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.