இனிய இல்லறத்திற்கு எளிய வழிகள்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#1
திருமணத்துக்கு முன்பு மணமகனும், மணமகளும் மனம் விட்டுப் பேசுவது அவசியம். இதன் மூலம் இருவரது கருத்தும் எண்ணப் போக்கும் வெளிப்படுவதோடு, வரப் போகும் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவர் என்பதும் ஓரளவு புலப்படும். இதனால் திருமணத்துக்குப் பின்பு ஏற்படக்கூடிய சில அதிர்ச்சிகளை, ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். திருமணத்துக்கு முன்பே தெரிந்தவர்களிடம் தெளிவாக விசாரிப்பது, பிற்காலத்தில் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.

திருமணத்துக்கு முன் இருவரும் சந்தேகங்களைப் பேசித் தெளிவுபடுத்திக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் திருமணத்துக்குப் பிறகு நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருப்பது. இருவருக்குமே லட்சியங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் உண்டு. அதனால் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும். அதோடு திருமண பந்தத்தைப் புனிதமான விஷயமாக நினைக்கும் மனப்பாங்கு இருந்தால் நல்லதொரு வாழ்க்கை அமையும்.

பெற்றோருக்காக சின்னத் துரும்பைக் கூட அசைக்காத பிள்ளைகள் ஆகட்டும், பெற்றோர் முன் பேசப் பயப்படுபவர்கள் ஆகட்டும் (மகன், மகள் இருவரும் தான்). பெற்றோருக்காகத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டு, பின்னர் தவிப்பதைப் பார்க்கிறோம். முதலில் திருமணம் செய்து கொள்ளப்போகும் துணை தனக்குப் பொருத்தம் தானா என்று அறிந்து கொள்ளுங்கள். திருமணத்தால் பொறுப்பும் கடமையும் கூடும் என்பதை உணருங்கள்.

திருமணத்துக்கு அதிகம் பணம் செலவழித்தால்தான் பெண் வீட்டாரின் மதிப்பு கூடும் என்றும், அதுதான் பெண் மீது அவள் பெற்றோர் வைத்திருக்கும் பாசத்துக்கு அளவு கோல் என்றும் நினைப்பதால்தான், லட்சக்கணக்கில் பணம் கரைக்கப்படுகிறது. இதற்குப் பதில், ரத்தினச் சுருக்கமாக விழாவை நடத்தி புதுமணத் தம்பதியின் வளமான வாழ்வுக்குப் பணத்தைச் சேமித்து, தகுந்த பரிசாக வழங்குவது மேலும் சிறந்தது. வீண் கௌரவத்துக்காக ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர எவ்வளவு காலம் தயங்கப் போகிறோம்?

மணமக்கள் திருமணத்துக்கு முன்பே எல்லா விஷயங்களையும் பேசி ஒப்பந்தத்துக்கு வருவதும், முழுவதுமாகப் புரிந்து கொள்வதும் சாத்தியமில்லை. யதார்த்த வாழ்க்கையில் நாம் சந்திக்க வேண்டிய சவால்களும், அவற்றை நாம் எதிர்கொள்ளும் விதமும் அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்களாகும்.

இன்றைக்கு, யாரையோ காதலித்து, யாரையோ மணப்பது, திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்வது, விவாகரத்து செய்வது எல்லாம் சகஜமாகிவிட்டது. இதற்குக் காரணம் இளவயது தரும் தைரியம் தான். பெற்றோர்களால் நிச்சயிக் கப்பட்டவரைத் திருமணம் செய்து கொள்வது மடத்தனம் என்று நினைப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பிறகு தனிமையில் வாடுகிறார்கள். எனவே, திருமணம் என்னும் பந்தத்தை, சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் மணவாழ்க்கையை சீரியஸாக வாழாதீர்கள்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#2
திருமணத்துக்கு முன், ஆணோ, பெண்ணோ இருவருமே உடல்ரீதியாகப் பரிசோதனை செய்து கொண்டு, தாங்கள் திருமண வாழ்க்கைக்கு ஏற்றவர்தானா என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஏதேனும் குறையிருப்பின், அதை நைஸாக மறைத்து ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்படாதீர்கள். அதுமாதிரியான திருமணங்கள் நிமிடமாய் முறிந்துவிடும்

மணமக்கள் மனரீதியாகவும் தயாராவது அவசியம். நாலும் தெரிந்த நம்பகமானவர் என்று யாரேனும் பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் திருமணபந்தம் பற்றி அவ்வப்போது பேசி வரலாம். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை களை எதிர் கொள்வது எப்படி என்று அவர் தரும் டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கலாம். சச்சரவுகளால் காலத்தை வீணாக்காமல், லட்சியங்களை நோக்கிப் பயணிக்கலாமே

திருமணம் என்றாலே ‘கால்கட்டு’ என்றும் ‘மாட்டிக்கிட்டான்டா!’ என்றும் நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. மனைவியைக் கிண்டலடிப்பது, திருமண நாளை கெட்ட வேளையாகச் சித்திரிப்பது, என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!" என்று நண்பர்களோடு கும்மாளமிடுவது என சிலர் செய்கிறார்கள்தான். ஆனால் இதையெல்லாம் வைத்து, திருமணம் உண்மையிலேயே கஷ்டம் என்று மணமகன் நம்பிவிடக்கூடாது. ‘கல்யாணம்’ என்பது கஷ்டமான விஷயம் என்றால், யாருமே திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள்.

முதிர்ச்சி என்பது வயதைப் பொறுத்த விஷயமல்ல; மனதைப் பொறுத்தது. சில தம்பதிகளுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் இருப்பார்கள்; ஆனால் அவர்களே பொறுப்பில்லாமல் சிறுபிள்ளைத்தனமாக நடப்பார்கள். இல்லறம் என்பது காலம் முழுதும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் உன்னதமான விஷயம். நேர்மை, அன்பு, பொறுமை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் போன்ற உயர்ந்த குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ளும்போது, பொறுப்பு வந்து விடுகிறது. நல்ல பக்குவம் தோன்றுகிறது.

காதல் என்பது திருமணத்துக்கு முன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திருமணத்துக்குப் பின் இருப்பதுதான் பெருமை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், இனிய இல்லறம் இந்தப் பூலோகத்தில், இந்தப் பிறவியில். குறிப்பிட்ட வாழ்க்கைத் துணையோடுதான் வளர்ந்து வளம் பெறுகிறது. வாழ்க்கைத் துணையார் என்பது நிர்ணயிக்கப்பட்டதாக இருந்தாலும், அந்த வாழ்க்கையை எப்படி ஏற்கிறோம் என்பது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட இருவர் கையில்தான் இருக்கிறது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#3
வேற்றுமையில் ஒற்றுமை, தேசத்துக்கு மட்டுமல்ல, கணவன்-மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். சரியில்லாததை நினைத்து மறுகத் தொடங்கினால், தவறு மட்டுமே பூதாகரமாகப் புலப்படும். தனக்கு அமைந்ததை விட இன்னும் நல்ல துணையாக அமைந்திருக்கலாம் என்று இருவரும் நினைக்கத் தொடங்கினால், அந்நியோன்யம் வளராது. பெற்றோருடனோ, உடன்பிறந்தவருடனோ மனத்தாங்கல்கள் வருகிறதே. உடனே விவாகரத்தா செய்து விடுகிறோம்? மனவேற்றுமைகளைத் தாண்டி அமைதி காண்பதே வெற்றிகரமானத் திருமணங்களின் ரகசியம்!

அன்பும், காதலும் அவசரமாக வரவழைத்துக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல; காலப்போக்கில் இயற்கையாக வளரும் விஷயம். அதில் நிபந்தனையற்ற அன்பு ஆதாரமாக இருக்கிறது. நமக்கு எவ்வளவு அன்பு கிடைக்கிறது என்பதைவிட, எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பைப் பொழிகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. கொள்ளைக்காரர்களைக்கூட அன்பால் திருத்திய சிறை அதிகாரிகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருக்க சபதம் பூண்டிருப்பவர்களுக்கு அன்பால் ஆட்கொள்வது கஷ்டமா?

இயற்கை நியதியின்படி, எந்த வகையான எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் மனதினுள் அசைபோடுகிறோமோ, அதுவே நமக்குப் பல மடங்காகத் திரும்ப வரும். சந்தேகம், கோபம், பிடிவாதம் போன்றவற்றைப் பெறுவதும் அன்பு, அமைதி, பரிவு, நம்பிக்கை ஆகியவற்றைப் பெறுவதும், நாம் கொடுப்பதைப் பொறுத்தே அமைகிறது. நாம் நல்ல இல்லற வாழ்க்கைக்குத் தகுதியானவர் என்று திடமாக நம்புவதோடு, அந்தத் தகுதிக்கு நேர்மையான முயற்சி எடுத்து உயர்த்திக் கொள்ளும்போது, ஆதர்ஷ தம்பதியாக நம் வாழ்க்கை அமைகிறது.

பெண் என்பவள் அன்பின் உறைவிடம். எந்தச் சூழ்நிலையிலும் தன்னைச் சட்டென மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவள். அன்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனம் படைத்தவள். அதனால்தான், தன் வீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டில் வாழ்க்கையைத் தொடங்குகிறாள். இதுபோற்றத்தக்க விஷயம் என்பதை கணவன் புரிந்து கொண்டு, தங்கள் வீட்டில் அவள் சீக்கிரம் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் இருக்க வழி வகுக்க வேண்டும்.

இக்கால இல்லத்தரசியானவள், வேலை பார்க்கும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமையுணர்ந்த மருமகளாகவும், கணவருக்குத் தோழியாகவும், நிதி நிர்வாகம் முதல் சமையலறை வரை தலைமைப் பொறுப் பேற்கும் நிர்வாகியாகவும் பரிணமிக்கிறாள். கணவனானவன் அவளது மதிப்பை உணர்ந்து அவளுக்குப் பக்க பலமாய் இருக்கத் தொடங்கினால், ‘நல்ல குடும்பம்’ விருது உங்கள் கைகளில்.

நமது வாழ்க்கைத் துணை நம்மைப் போலவே நினைக்க வேண்டும். நமக்குப் பிடித்ததை ரசிக்க வேண்டும். நாம் வெறுப்பதை வெறுக்க வேண்டும். இருவரும் எல்லாவற்றிலும் ஒத்துப்போக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதில் சுவாரஸ்யமும் இல்லை. அவரவரருக்கென்று ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும். அவரவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையோ பழக்கங்களையோ நையாண்டி செய்வதற்குப் பதிலாக மதிக்க பழகிக் கொள்ளலாம். இதனால், நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் காட்டக்கூடிய மதிப்பு அதிகரிக்கும்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,279
Likes
20,720
Location
Germany
#4
தம்பதியர் இருவரும் வெவ்வேறு குடும்பத்தில், மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால், திருமணமான ஒரே நாளில் தனக்குத் தகுந்தாற்போல் மற்றவர் மாறிவிட வேண்டும் என்று இருவருமே எதிர்பார்க்க மாட்டார்கள். அதே நேரத்தில் திருமண பந்தத்துக்குள் நுழைகிறோம் என்கிறபோது, இருவருமே சில மாற்றங்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். இதனால் பயப்படும் நிலைக்குப் பதிலாக மகிழ்ச்சியான மனோபாவமே உண்டாகும்.

நாம் மாறுவதால் திருமண பந்தம் பலப்படும் என்றால் ஈகோ பார்க்கக்கூடாது. அதுவே, நம் வாழ்க்கை லட்சியத்தையோ கொள்கையையோ பாதிக்கும் பெரிய விஷயங்கள் என்றால் உறுதியாய் இருப்பதோடு, மற்றவர் மனம் மாறக் காத்திருக்கலாம். இதனால் தியாகம் செய்து விட்டு பின்பு மனஉளைச்சலில் தவிக்கும் நிலையைத் தவிர்க்கலாம். லட்சியங்களைப் பற்றி திருமணத்துக்கு முன்பே புரிய வைப்பது பிற்கால அதிர்ச்சிகளைத் தவிர்க்கும்.

சினிமாவில் நாம் பார்க்கும் பல விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்ட வையே! நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியவை அல்ல. காதலிப்பவர் இருவரது அன்யோன்யமும், அவளுக்காக அவன் மலையிலிருந்து குதிக்கத் தயாராக இருப்பதும், அவனுக்காக அவள் பணம் பொருள், பெற்றோரைத் துறந்து போக முனைவதும், கட்... கட்"என்று சொன்னவுடனே மறைந்து போய்விடும். திரையில் பார்ப்பது பொழுதுபோக்கு அம்சம் என்பதால் நாம் அவர்கள் அல்ல; நம் வாழ்க்கை அது அல்ல!

தொலைக்காட்சித் தொடர்களில் பார்க்கும் கதைகள், திரைப்படங்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாமியாரால் கொடுமை, சின்ன வீடு வைத்திருக்கும் கணவன், நிம்மதியைக் குலைக்கும் நாத்தனார் போன்றவற்றை ஒரு பெண்ணும், தன் தாயை வெறுக்கும் மனைவி, சொத்தை அபகரிக்கும் மனைவியின் தம்பி போன்றவற்றை ஒரு ஆணும், பார்த்துவிட்டு திருமண வாழ்வு 10,000 வோல்ட் மின்சாரம் என்று பயந்து, பீதியுடனேயே அணுகுவது முட்டாள்தனம். எனவே, டீ.வி. சீரியல்களை சீரியஸாக எடுத்துக்காதீங்க

உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ திருமணத்தில் தோற்றிருக்கலாம். கசப்பான அனுபவங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அதையே ‘ஹை லைட்’ செய்து கொண்டிருக்கக் கூடாது. வெள்ளி விழா, பொன் விழா தாண்டியும் அன்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியரைப் பார்த்து ஊக்கம் கொள்ள வேண்டும். திருமணத்தில் மகத்துவம் இல்லாமலா இத்தனை பேர் திருமண பந்தத்தில் தழைத்திருக்கிறார்கள்? நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதுவே நமதாகும்!

கல்யாணமான மறுநாளிலிருந்தே, கணவன் அல்லது மனைவியின் ஒவ்வொரு செயலையும் அலசி, ஆராய்ந்து, கேரக்டர் அனாலிஸிஸ் செய்வது அனாவசியம். இதனால் அவர்களைப் பற்றிய தவறான எண்ணத்தை நம் மனத்தில் பதியவைத்துக் கொண்டு, அவர்களை அதே கண்ணோட்டத்தோடு பார்க்க நேரிடும்; அந்தக் கண்ணோட்டம் தவறாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகம். ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மட்டுமே மனத்தில் பதித்து, சகஜமாகப் பழகுங்கள்.

கூட்டுக் குடும்பமாக இருக்கும் நிலையில், மாமனார் மாமியாரோடு ஏற்படும் சச்சரவுகளை ஒரு பெண் சாதுர்யமாகப் புன்னகையுடன் சமாளித்துச் செல்ல வேண்டும். தன் வீடாக நினைத்து, வீட்டிற்குள் சுறுசுறுப்பாக இயங்கி வந்தாலே பாதி பிரச்னைகள் குறையும். இதைச் செய்ய உடல் ஆரோக்கியமும், அதற்கு நல்ல உணவும் அவசியம். மனதை நல்ல சிந் தனைகள் கூடியதாக வைத்துக் கொள்ள பிஸியாக இருப்பது அவசியம். புகுந்த வீட்டில் உரிமையும் உண்டு. கடமையும் உண்டு என்ற ஆணித்தரமான எண்ணம் தைரியத்தை உண்டாக்கும்
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#5
viji mam............ thanks for ur super sharing.......... its very useful for my personal life............ i agreed all ur valuable points...............
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.