இன்சுலின் செடி.

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,663
Likes
18,542
Location
chennai
#1
இன்சுலின் செடி


நிஜமா? டுபாக்கூரா?


‘நீரிழிவின் தலைநகரமாக இந்தியா உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில், இன்சுலின் செடி பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. பலர் தங்களது வீடுகளில் வளர்ப்பதாகப் பெருமை பொங்கச் சொல்வதையும் கேட்க முடிகிறது. ‘சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு உண்மையிலேயே இன்சுலின் செடிக்கு திறன் இருக்கிறதா... இல்லை இது வெற்று விளம்பரமா’ என்று சித்த மருத்துவர் காசிப்பிச்சையிடம் கேட்டோம்.

‘‘இன்சுலின் செடியின் இலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகிவிடும் என்பது உண்மையல்ல. இந்த இலையைச் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை அளவு குறைகிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அவையெல்லாமே வாய்வழியாகப் பரவும் வார்த்தைகள்தான். இந்தியாவில் எந்த ஆராய்ச்சி நிலையத்திலும் இன்சுலின் செடி நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று ஆராய்ந்து சொல்லப்படவில்லை.

ஒருவேளை, இன்சுலின் செடியின் இலையை சாப்பிடுவதால் ரத்தத்தில் க்ளூக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படலாம். ஆனால், எந்த அளவு க்ளூக்கோஸ் கட்டுப்படுத்துகிறது, என்ன முறையில் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கங்களும் ஆராய்ச்சிகளும் தேவை. வெறுமனே தகவல்களின் அடிப்படையிலும், விளம்பரத்தின் அடிப்படையிலும் இன்சுலின் செடி நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சொல்வதை ஏற்க முடியாது.

நம் நாட்டிலேயே சர்க்கரை நோய்க்கு பல சக்திவாய்ந்த மூலிகைகள் உள்ளன. அதிலும் சிறுகுறிஞ்சான், ஆரைக்கீரை, பாகல் இலை, தென்னங்குறும்பை, சரக்கொன்றைப் பூ ஆகியவை சர்க்கரை நோய்க்கு காரணமான கணையத்தின் பாதிப்பையே சரி செய்யும்’’ என்கிறார்.

அலோபதி மருத்துவத்தில் இன்சுலின் செடியை எப்படிப் பார்க்கிறார்கள் என்று நீரிழிவு சிறப்பு மருத்துவர் சாதனா தவப்பழனியிடம் கேட்டோம்.‘‘கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைவதால்தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதனால், ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டுதான் நீரிழிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் குறைவான அளவில் உள்ளவர்களுக்கு மாத்திரை மூலமும், அதிகமாக உள்ளவர்களுக்கு ஊசி மூலம் இன்சுலின் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஒரு செடியின் இலைகளைத் தின்பதன் மூலம் நீரிழிவைக் குறைத்துவிடலாம் என்பதற்கு மருத்துவரீதியான எந்த ஆதாரமும் இல்லை.
நீரிழிவைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான மருத்துவ சிகிச்சை மூன்றும்தான் தேவை. இந்த மூன்றும் ஒருங்கிணையும்போதுதான் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

மற்றபடி இயற்கை மருத்துவம், இன்சுலின் செடி என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்தான்’’ என்கிறார்.ஒரு சிகிச்சையை அலோபதி மருத்துவம் ஆதரிக்க வேண்டும் அல்லது மாற்று மருத்துவம் ஆதரிக்க வேண்டும். இரண்டு தரப்புமே எங்களுக்குத் தெரியாது என்று கையை விரித்தால் என்னதான் செய்வது?

இன்சுலின் செடி என்பது என்ன?

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியானதுதான் இந்த இன்சுலின் செடி. தாவரவியலில் Costus igneus என்று குறிப்பிடப்படுகிற இன்சுலின் செடி, சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதாவது, கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும் என்கிறார்கள்.

இந்த இன்சுலின் செடியின் இலைகளை காலையில் 2, மாலையில் 2 என்ற விகிதத்தில் சாப்பிடச் சொல்கிறார்கள். அதன்பிறகு, இரண்டாவது வாரத்தில் காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றும் சாப்பிடச் சொல்கிறார்கள். இதுபோல் 30 நாட்கள் உண்டுவந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் என்றுதான் விளம்பரம் செய்யப்படுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த இன்சுலின் செடி பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் சொல்கிறார்கள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.