இன்றைய இளைஞர்கள் - The Youth of Today

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#1
போன வாரம் ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்ததை, உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் தோழிகளே. என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. பெண்கள் நிகழ்ச்சியில் motivation talk கொடுப்பவர் இந்த பெண்மணி.

இவர் ஏதோ வேலையாக ஓர் அலுவலகத்துக்கு சென்று இருக்கிறார். முதல் ஆளாக லிப்ட் ஏறியதால், உள்ளே செல்ல வேண்டிய நிலைமை. செல்ல வேண்டிய தளத்தின் எண்ணை அழுத்த முடியவில்லை. எண்களின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஓர் இளைஞன் திரும்பி பார்க்கவும், தான் போக வேண்டிய தளத்தின் எண்ணை (3) கைகளால் சைகை மூலம் காட்டி இருக்கிறார். ஆனால் மூன்றாம் தளத்தில் நிற்காமல், மேலே ஐந்து, ஆறு என்று நின்று, கடைசியாக பன்னிரெண்டாம் தளத்தில் தான், அந்தப் பெண்மணியால் அந்த இளைஞனின் அருகில் வர முடிந்திருக்கிறது.


நான் சொன்னேனே ஏன் மூன்றாம் எண்ணை அழுத்தவில்லை என்று கேட்டு இருக்கிறார். நான் ஏன் செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டாராம் அந்த இளைஞன். அந்த பெண்மணி திகைத்து விட்டாராம். வீட்டுக்கு வந்தவுடன் தன் மகளிடம் (IT கம்பெனியில் வேலை செய்பவர்) சொல்லி இருக்கிறார். அதற்கு மகள், உங்கள் மேல் தான் தவறு. நீங்கள் அதிகம்(expectation) எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று கேட்டாராம். அந்தப் பையன் செய்தது சரிதான் என்றும் சொன்னாராம் மகள்.
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#2
திருகுவலியும் தலைவலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்று நிரூபிக்கும் எடுத்துக்காட்டு - எங்கு போய் முடியப் போகிறதோ?
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#3
இது ஒரு சாதாரணமான செயல். இதைக் கூட அந்த இளைஞன் செய்ய மறுத்திருக்கிறார், அதையும் அந்த இளம்பெண் சரி என்று சொல்லியிருக்கிறார்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு சொல்லுங்கள் தோழிகளே.
@sumathisri,@sumitra,@jv_66,@gkarti,@kodiuma,@femila,@durgasakthi,@sujivsp @salma,@RathideviDeva,@malbha @chan,@saidevi,@Dangu,@shansun70,@jayakalaiselvi,@thenuraj @selvipandiyan,@Suganya Vasu,@ashsuma,@gowrymohan,@rajisugu,@saveetha1982,@bharathi saravanan,@roseagalya,@porkodit@naanathithi, @Vimalthegreat,@jeyanthy c,@ramyaraj @Sujatha Suji @gowrymohan @kaethies, @Subhasreemurali @Alagumaniilango
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,012
Likes
37,629
Location
karur
#4
உண்மைதான் கோமதி ...இன்றிய இளைய சமுதாயம் இப்படிதான் போய்கொண்டு இருக்கிறது. மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் ,,சுயமாக செயல்படுங்கள் என அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க சொன்ன வார்த்தை அர்த்தம் மாறி அவர்களை சுயநலவாதியாக மாற்றிவிட்டது.

ஐந்து வயதிலே அவன் மருத்துவனாக வேண்டும் என நினைத்து விடுதியில் சேர்த்து பதினைந்து வயதில் பல நேர்முக தேர்வுகளுக்கு அனுப்பி இருபத்தி ஒரு வயதில் இரண்டு லட்சம் சம்பளத்தில் ஒரு இளைஞன் பணியில் அமர்ந்தால் அவர்களிடம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா என்ன?

மனம் என்று ஒன்று இருந்தால் தானே மனிதநேயம் இருக்கும். இன்று இருக்கும் இளைய தலைமுறை மனிததர்மத்தை அடமானம் வைத்து அறிவை பெறுகிறது. அதில் வரும் சுகத்திற்கு சமூகமும் அடங்கிபோகின்றது.

மது குடிப்பது ஒரு கேவலமான செயல்,பிறர் மனை நோக்கான் என பண்பாடுகளோடு வளர்ந்தவர்கள் நாம். இப்போது இருக்கும் தலைமுறையோ இவை எல்லாம் தங்களின் தகுதியை உயர்த்தும் காரணியாக பார்க்கிறது.

ஒருவீட்டில் அப்பா அம்மாவிற்கு சண்டை ....மது அருந்துகிறார் என அம்மா திட்ட அதற்கு பத்துவயது அவரது பெண் சொல்கிறாள். குடிப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல...என் தோழிகளின் அப்பாவும் குடிக்கிரார்கள். நீ தான் தேவை இல்லாமல் சண்டை போடுகிறாய் என அம்மாவை திட்டுகிறாள். எங்கே போய்கொண்டு இருக்கிறது இந்த சமுதாயம் ???????
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#5
Paavam andha paiyan project managerta thittu vaangunaanu, illa sariya poi solla theriyaama girl friendukitta thittu vaangunaano ennavo. Andha kovatha ivanga mela kaamichittan. Nammala vida avan palara saamaalikka vendiya tension, stress......:)
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,980
Location
CHENNAI
#6
எல்லோருமே அப்படி இருப்பதில்லை தோழி... ஆனால் என்ன முன்பெல்லாம்,அதிகமாக மனிதாபிமானம் கொண்ட மனங்கள் இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டது என்பதுதான் வருத்தமாக உள்ளது. பொது இடங்களில் {பஸ்,மருத்துவமனை}வயதானவர்களோ, ஊனமுற்றவர்களோ நிற்கும் நிலை ஏற்பட்டால் கூட பலர் எழுந்து நின்று அவர்களுக்கு உட்கார இடம் தருவதில்லை என்பதை நேரில் பார்க்கும் போது மன மிகவும் வேதனை அடைகிறது.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#7
ஒருவரின் செயலை மட்டும் வைத்து இன்றைய ஒட்டு மொத்த இளைஞர் சமுதாயத்தையும் நாம் மதிப்பிட முடியாது அல்லவா கோமதி?

அந்தப் பெண்மணி உதவி கேட்ட போது அந்த இளைஞர் எந்த மாதிரி மனநிலையில் இருந்தாரோ?

கீழே உள்ள லிங்க்ல துர்கா சக்தி பகிர்ந்து இருக்கிற article படிச்சு பாருங்க... அந்த நல்ல செயலை செய்ததும் இளைஞர்கள் தான்.


http://www.penmai.com/forums/genera...les-do-happen-our-daily-life.html#post1573310

இந்த சமுதாயத்தில் இரண்டு விதமான மனோபாவத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தான் நம் இளவரசி இந்த மாத பெண்மை மின்னிதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

http://www.penmai.com/forums/penmai-emagazine/99577-penmai-emagazine-august-2015-a.html#post1574255
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
Dear @kkmathy


நாம் எல்லோரும் சில காலம் பின் நோக்கி செல்வோமாக,,நாம் நம் சிறு வயதில் ,மற்றும் இளம் வயதில் பேசிய வை,நடந்து கொண்ட முறை பற்றி ,இப்பொது நடுத்தர வயதில் நின்னைத்து பார்த்தால் ,நாம இப்படி நடந்து கொண்டோம் என்று தோன்றும்,
நமக்கு நம் 20 வது வயதில் சரி என்று படுவது ,40 வயதில் தவறு என்றும்
40 வது வயதில் சரி என்று படுவது ,60வயதில் தவறு என்றும் தோன்றும்,இது வயதும் அனுபவமும் நமக்கு சொல்லி தரும் படம்.

நம் இளம் வயதில் நாம் நடந்து கொண்ட விதம் பார்த்து நம் முந்திய தலைமுறைகள் இப்படி தான் வருத்த பட்டு இருப்பார்கள்.

இது காலத்தின் கோலம் ,இன்றைய இளம் தலைமுறைகள் செயல்கள் பார்த்து வருந்து வது இயற்கையே,

இன்றைய இளம் தலைமுறைகள் நம்மை விட தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகவும் ,திறமையாகவும்
காட்டாற்று வெள்ளம் போல் உள்ளனர்,அது ஒழுங்காக கரை சேரவேண்டும்.

அவர்களுக்கு பொறுப்பும் ,கடமையும் வந்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் ,நம்பிக்கை தானே வாழ்க்கை,
இளம் தலைமுறைகள் எதிலும் வேகம் வேகம் என்று உள்ளார்கள்.அவர்கள் முட்டி மோதி அடிபட்டு நிக்க போகிறார்களா,அல்லது தெளிந்து நிதானித்து கரை சேர்வது அவர்களின் சாமர்த்தியம் பொருத்தது.

நீங்கள் குறிப்பிட நிகழ்ச்சி பற்றி விவாதித்தல் ,அதில் உள்ள சரி ,தவறுகள் என்னவென்றால்

அந்த பெண்மணி லிப்ட் use செய்ய தெரியாதவர் ஆக இருந்தால்,அவர் உதவி கேட்டும் உதவாதது தவறு.

அந்த பெண்மணி லிப்ட் use செய்ய தெரியாதவர் ஆக இருந்து ,அடுத்தவர் அவருக்கா செய்யவேண்டும் என நின்னைப்பது தவறு,அவருக்கு லிப்ட் எண்களை அழுத்த முடியாத சூழலில் இருந்து அவருக்கு உதவி கிடைக்க வில்லை ,என்றால் மிகவும் வருந்த தக்கது.

பொதுவாக நாம் லிப்டில் முதலில் ஏறினால் பின் வருவவர்கள் இடம் மரியாதை கருதி நீங்கள் எந்த தளம் செல்ல வேண்டும் என கேட்பது வழக்கம் ,மற்றும் நாகரிகம் ,அவர்கள் தவிர்த்து அவர்களே press செய்வதும் உண்டு,சிலர் சொல்வதும் ,உண்டு,அந்த நபர் உடன் வருவவரும் தான் செல்லும் தளம் வருவதாக நின்னைத்து இருக்கலாம்.

மரியாதை நிமித்தமாக கேட்டு இருக்க வேண்டும்.

எதிலும் எதிர்பார்ப்பு இருத்தால் ஏமாற்றமே, எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்று கொண்டாள் எப்பொதும் சுகம் ,நிம்மதி.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#9
இதில் இன்னொரு கோணமும் இருக்கு. அந்த பெண்மணி மூன்று என்று சைகை செய்ததாக சொன்னீர். அந்த இளைஞன் பார்வையில் மரியாதை குறைவாக எண்ணி இருக்கலாம் (நான் என்ன இங்க லிப்ட் ஆப்பரேட்டரா? ). இளைஞர்களுக்கு என்றுமே அதிகாரம் பிடிக்காது. ஏன் யாருக்குமே பிடிக்காது.


இதே அந்த பெண்மணி "தம்பி கொஞ்சம் மூண அழுத்துரியா பா" ன்னு சொல்லி, அந்த பையன் கண்டுக்காம இருந்திருந்தா, அது தான் உண்மைலேயே வருந்தக்கூடிய விஷயம்.. எனக்கென்னவோ அவன் கண்டிப்பா செஞ்சிருப்பான்னு தோணுது.
 
Last edited:

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#10
சரி அந்த மகள் நடவடிக்கையின் அர்த்தம்..... அவள் அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, தன் தாயைப்பற்றி தான் நெடு நாட்களாக சொல்லத்துடிக்கும் குற்றசாட்டை சொல்லிவிட்டாள். அதாவது அவள் மறைமுகமாக சொல்ல நினைப்பது " அம்மா நீ என்கிட்ட , மத்தவங்ககிட்ட ரொம்ப எதிர்பார்க்குற.... சக்திக்கு மீறி.... என்னால/மத்தவங்களால உன்ன , உன் எதிபார்ப்ப திருப்தி செய்ய முடியல.... நீ எப்ப தான் இத புரிஞ்சிக்கப்போற.:help:"
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.