இன்றைய இளைய தலைமுறை வாழ்க்கை முறை எப்படி

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இன்றைய இளைய தலைமுறை வாழ்க்கை முறை எப்படி இருக்கின்றது?


அநேகரும் அதிக சத்தம், இரைச்சல் இவற்றுடனே வாழ்கின்றனர். பைக் சத்தம் காதை செவிடாக்குகின்றது. ரேடியோ, டி.வி. சத்தம் ஊருக்கே இரைச்சலாக இருக்கின்றது. இதனால் அநேகருக்கு கேட்கும் திறன் வெகுவாக குறைந்து வருகின்றது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இது மட்டுமின்றி இவர்கள் அதிக முன் கோபம், டென்ஷன், படபடப்பு உடையவர்களாக ஆகி விடுகின்றனர்.

இதனால் இவர்கள் எளிதில் பல நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பேசுவதில் கூட வேகமாகவும், சத்தமாகவும் பேசுபவர்களாகவே அநேகர் உள்ளனர். நிதானமாகவும், இரைச்சல் இல்லாத குரலிலும் பேசுவது பேசுபவரின் உடலுக்கும், கேட்பவரின் உடலுக்கும் நல்லது. அதிக சத்தம் உடலுக்கு ஏற்படும் சுனாமி, உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும்.

ஆக அமைதி என்பது உங்களை சுற்றி அமைதியாக இருப்பது மட்டுமல்ல, உங்கள் மனதும் அமைதியாய் இருக்க வேண்டும்.

சில சமயங்களில் வெளி சத்தத்தினை விட உங்கள் மனதின் சத்தம் அதிகமாக இருக்கும். காரணம் மன வேதனை. இம்மாதிரி நேரங்களில் உங்களை தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். அமைதியாய் அமர்ந்து மூச்சை மட்டுமே கவனியுங்கள், மனம் அமைதிப்படும். அமைதி நீங்கள் யார், உங்கள் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனை உணர்த்தி விடும்.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#2
Re: இன்றைய இளைய தலைமுறை வாழ்க்கை முறை எப்பட&#3

Nice .. TFS
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.