இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ளி

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ளி

இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ளி படிப்பு மட்டும் போதுமா?

ஒரு பத்து வருடத்துக்கு முன்பு, நம் உயர் நிலை கல்வி எவ்வாறு இருந்தது? ஆம், அப்பொழுதும் நாம் புத்தக புழுக்களாக புத்தகத்தில் ஒரு வார்த்தை விடாமல் மனபாடம் செய்து அதை அப்படியே தேர்வில் துப்பி, முதல் மதிப்பெண்கள் வாங்கினோம். ஆனால் அன்று தொழிர்கல்விகளுக்கு நுழைவு தேர்வு என்ற ஒன்று இருந்தது... அது வெறும் புத்தக புழுக்களை வடிகட்டி, சிந்திக்க தெரிந்தவர்களை முன்னிறுத்தி காட்டியது... அதனால், ஒரு நல்ல திறமை வாய்ந்த மருத்துவரையும், கற்பனை வழம் கொண்ட பொறியாளரையும் உருவாக துணை புரிந்தது... ஆனால் இன்று புத்தகத்தை தலைகீழாக மனபாடம் செய்து படிக்க தெரிந்தால் போதும், இன்றைய முக்கிய கல்லூரிகளில் இடம் கிடைத்து விடும்...ஆனால் செயல் திறனை யோசிக்க தெரிந்த, மனபாடம் செய்ய முடியாத மாணவர்கள் தூக்கி எரிய படுகிறார்கள்... இந்த கல்வி முறை எதிர் காலத்திற்கு பயனளிக்குமா?


இன்றைய நிலையில் பள்ளி மாணவர்கள், படிக்க நிறைய பெரிய புத்தகங்கள் பள்ளியில் தரபடுகின்றன.. ஆனால் அதில் இருக்கும் பாடங்களை செயல் திறனால் கற்று கொடுக்க படுகிறதா?. இல்லை... இதில் என்ன பயன்? ஒன்றும் இல்லை...வெறும் தேர்வில் மட்டும் மதிப்பெண் வாங்கி என்ன பண்ணுவது.. இன்றைய நிலையில், நமது கல்வி திறன் உலகத்தில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட வேண்டி இருக்கிறது... இதில் வெறும் புத்தக புழுக்கள் நசுங்கி அழிந்து விட மாட்டார்களா?


பள்ளி படிப்பு மிகவும் அவசியம் தான். ஆனால், இன்றைய நிலையில், குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு மட்டும் போதுமானதாக இருக்க வில்லை. பள்ளி சாரா படிப்பு (Extra curricular activities ) மிகவும் அவசியம்.. அதற்கு இன்றைய பெற்றோர்கள் இரண்டாம் உரிமை குடுக்க வேண்டும்...(முதல் உரிமை பள்ளி படிப்புக்கு). குழந்தைகளுக்கு அறிவு திறன் படைத்த பல நல்ல அறிவியல் செயல் முறை விழகங்கள் கூடிய பயிற்சி அளிக்க பட வேண்டும்... இசை, நடனம்,விளையாட்டு,நீச்சல் பயிற்சி,தற்காப்பு கலை,ஓவியம், கற்பனைத்திறனை வளர்க்க உதவும் பயிற்சிகள் எல்லாம் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும்... இதெல்லாம் பயில் வித்தல் வெறும் திறமைகளை வளர்த்து கொள்ள மட்டும் அல்ல... வளரும் பொழுது, அவர்கள் பெரியவர்களாக வரும் பொழுது, அவர்களின் தன்னம்பிக்கையை கூட்டும். அவர்கள் உழைத்து அவர்கள் கல்வி திறனை வளர்த்து கொள்ள வழி வகுக்கும்...அவர்களின் செலவிற்கு தவறு வழியில் போகாமல், பெற்றவர்களின் துணை நாடாமல், வேலை கிடைக்கும் வரை சொந்த காலில் நின்று வெற்றி பெற வழி வகுக்கும்...


இன்றைய மாணவர்கள் நாளை நல்ல திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்குபவர்கள்...அதனால் அந்த ஆரோக்கியமான சமுதயாத்திற்கு வித்து இன்றே புதைத்து, நீர் ஊற்றி வளர்க்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு நம்மிடையே அதாவது பெற்றோர்களிடையே இருக்கிறது...
 
Last edited:

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#2
Re: இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ள&#30

hi lakshmi,
very nice msg..........
செயல் திறனை யோசிக்க தெரிந்த, மனபாடம் செய்ய முடியாத மாணவர்கள் தூக்கி எரிய படுகிறார்கள்... இந்த கல்வி முறை எதிர் காலத்திற்கு பயனளிக்குமா?

indha varigal nootrukku nooru unmaye... yosikka vendiya visayam.... yosippargala?
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#3
Re: இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ள&#30

Yosippathu nam pillaigalin yethirgaalathukku payanalikkum... athvarai petrorgal pillaigalin karpanai sakthi valara, valarkka, avargalal edukka vendiya muyarchiyai thodarnthu niraivetra vendum....paarkalalam...
 

Anupriya86

Commander's of Penmai
Joined
Apr 25, 2011
Messages
1,545
Likes
2,805
Location
Chennai
#4
Re: இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ள&#30

இந்த கால கட்டத்திற்கு தேவையான அவசியமான ஒரு விவாதம் லக்ஷ்மி..

உண்மை தான் நம் கல்வி முறையால் நாம் யாரை உருவாக்குகிறோம்.. திறம்மிக்க மாணவர்களையா.. இல்லை வெறும் புத்தகப்புழுக்களையா...

நம் கல்வி முறை சரியானது இல்லை என்பது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது.. இருந்தும் நாம் எடுக்கும் நடவடிக்கை என்ன.. என்றாவது பெற்றோர்கள் சிந்தித்திருக்கிறீர்களா... இல்லை...

இனியாவது சிந்திப்போம்.. செயல் திறமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்வோம்..

அனு
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#5
Re: இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ள&#30

நன்றி அனு,பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள் தான், ஆனால் அதை செயல் படுத்த நேரம் தன கிடைக்க வில்லை.. குழந்தைகளின் குழந்தை பருவத்தை பருவத்தை பறிக்க தான் எத்தனை எதிரிகள்.. கார்ட்டூன் வடிவில், மெகா சீரியல் வடிவில், அளவை மிஞ்சும் வீடு பாடம் என்ற வடிவில்.. எத்தனை குழந்தைகளுக்கு ஒரு அரை மணி நேரமாவது விளையாட நேரம் இருந்திருகிறது... விளையாட்டு அவர்கள் பள்ளியில் உட்கொள்ளும் மன அழுத்தத்தை நீக்கும். அதே போல் தான் பள்ளி சார படிப்புகளும். அதே மன அழுத்தத்துடன் வீட்டிற்கு வந்து தொலை காட்சி பார்த்தால், அவர்கள் மூளை இன்னும் பாதிப்படையும்... குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் தொலை கட்சி பார்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.ஆனால் விளையாட்டு, இசை , நடனம் அவர்கள் மன அழுத்தத்தை நீக்கும் வல்லமை உடையது...
 

sulran

Friends's of Penmai
Joined
Oct 29, 2011
Messages
279
Likes
312
Location
chennai
#6
Re: இன்றைய வளர்ந்து வரும் தலைமுறைக்கு பள்ள&amp

Hi friends,

Please spend some time for selecting schools. state level la rank vankura schools than best nu thappa eda pottu pillaingala depression akkatheenga.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.