இயர் அட்டாக்...?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
கோவிலுக்கு கோபுர வாசல்கள்!
மனித முகத்துக்கு?
"வாய், மூக்கு, காது, கண் இவைதாம்!'
சிரித்தபடி சொல்கிறார், காது, மூக்கு, தொண்டை நிபுணர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன்!
"உடம்பின் உள் கோளாறுகளைச் சரியாக எச்சரிக்கும் இண்டிகேட்டர்கள் இவை' என்கிறார்.
ஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கிறோம்... இயர் அட்டாக்...?
"நாம் ஓரளவு பாலன்ஸ்ட் ஆக நாடமாடுகிறோம் என்றால் காது என்ற அற்புத உறுப்பில் உள்ள திரவத்தால் தான்.'
ஸடன் சென்ஸரிநியூரல் ஹியரிங் லாஸ் சுருக்கமாக எஸ்.எஸ்.ஹெச்.எல் (Sudden Neural Hearing Loss) என்பதுதான் இவ்வகை பாதிப்புக்கான மருத்துவப் பெயர். திடீரென்று காது கேட்காமல் போய்விடும்!
"இயர் அட்டாக் ஏற்பட பல காரணங்கள் உண்டு... சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மூச்சுப் பாதையில் இன்ஃபெக்ஷன் இவற்றுள் எது ஏற்பட்டாலும் திடீரென்று காது கேட்காமல் போய்விடும். பெரும்பாலானோருக்கு சரியான சிகிச்சை கொடுத்தால் இரண்டு வாரங்களுள் குணமாகி விடுவார்கள்...' என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன்.
காதில் வெளிகாது, நடுக்காது, உள் காது என்று மூன்று அமைப்புகள் உள்ளன அல்லவா... அதில் உள் காது பாதிக்கப்பட்டால்தான் இத்தகைய பாதிப்பு திடீரென்று வருமாம்!
"உள்காதே இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் இரண்டாவது வயதில், அறுவை சிகிச்சை செய்து மூளையில் "சிப்' (கம்ப்யூட்டர் போல) ஒன்று வைத்தோம்... மூளை நரம்புகளுடன் இணைந்து செயல்பட்டு, இன்று நான்கு வயதாகும் அக் குழந்தைக்கு நன்றாக கேட்கிறது... பேசுகிறது... இவ்வகை பிரெயின் ஸ்டெம் ட்ரான்ஸ்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நடந்தது ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை...'
"உள் காதில் இருக்கும் காக்லியா (Cochlea) என்ற அமைப்பை இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத பல குழந்தைகளுக்கு அத்திறனைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அவர்கள் வளர்ந்து ஐ.ஐ.டி.யிலும் கல்கலைக் கழகங்களிலும் படிக்கிறார்கள்' என்று பெருமிதப்படுகிறார் டாக்டர் காமேஸ்வரன்.

நன்றி-மங்கையர் மலர்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.