இயற்கையுடன் இசைந்து வாழ்வோம்!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
பெண்மை தோழமைகளுக்கு வணக்கம்!

இயற்கை நமக்கு மிக முக்கிய பாடம் கற்றுதந்துள்ளது ஒரு பேரழிவை கொடுத்து​, விலைமதிப்பில்லா எத்தனை உயிர்களின் இழப்புகள், எவ்வளவு கொடுமையான இருள் சூழ்ந்த இரவுகள் என்று பலபல! இதில் வயதானவர்கள், உடல் நிலை சரியில்​லாதவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்களின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. அவர்கள் வாழ்க்கை மறுபடியும் இயல்புநிலைக்கு திரும்ப வெகு காலமாகும்.

இந்த இக்கட்டான பேரழிவின் ஒரு விடியலாக இருந்தது தன்னலம் பாராமல் உதவி செய்த நம் இளைய சமுதாயமும் சில அரசு அதிகாரிக​ளும் மட்டுமே! முடங்கி கிடக்கும் அரசாங்கத்தை எதிர்பாராமல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டது, பாதிக்கப்​பட்டோரின் நிலையறிந்து உணவு, உறைவிடம், மருத்துவ உதவி செய்வது என்று அவர்களின் செயல்பாடுகள் அங்குள்ள மக்களின் சொல்லிலடங்கா துயர்​களை​ துடைத்துவிட்டனர்.

இந்த பெருவெள்ளம் இளைய சமுதாயத்தின் மீதிருந்த அவநம்பிக்கை முழுவதையும் துடைத்துவிட்டது. இதில் சமூக வலைதளங்கின் பங்கு மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அனைவரையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டது!

இவர்களின் உதவிக்கரம் வெள்ளத்திற்கு பிறகும் நிவாரணம் வழங்கி, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சுத்தம் செய்வது, மாணவர்களுக்கும் கல்வி புத்தகங்களை வழங்குவது, மருத்துவர்கள் வைத்து சிறப்பு முகாம்கள் அமைத்து உதவுவது என்று நீண்டுகொண்டே இருக்கிறது. இதில் சிறுதுளியாய் பெண்மை சார்பில் நிவாரண உதவியாக sanitary napkins, போர்வைகள் மற்றும் இங்கிருந்து மற்ற பொதுமக்கள் கொடுத்த நிவாரண பொருட்களை எடுத்து செல்ல போக்குவரத்திற்கு தேவையான உதவிகள் செய்துள்ளோம்.

சென்னை ஓரளவிற்கு மீண்டு விட்டாலும் இன்னும், கடலுரில் பல கிராமங்கள் மழை வெள்ளத்தால் மக்கள் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் நம்மால் ஆன உதவிகள் செய்வோம் ​பிராத்தனைகளோடு.

இந்த இயற்கை பேரழிவிற்கு மிக முக்கிய காரணம்,
நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மிக அதிக plastic பயன்பாடுகள். இவை இரண்டையும் விடுத்து இயற்கையுடன் இசைந்து வாழ்வதும் ஒரு வித உதவியே நம் அடுத்த தலைமுறைக்கு.

இனியாவது இதற்கு ஓர் முற்றுப்புள்ளியிடுவோம்!
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,468
Likes
148,286
Location
Madurai
#2
Very Well Said Kaa.. Esp this One! Amen :)

நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், மிக அதிக plastic பயன்பாடுகள். இவை இரண்டையும் விடுத்து இயற்கையுடன் இசைந்து வாழ்வதும் ஒரு வித உதவியே நம் அடுத்த தலைமுறைக்கு.

Read more: http://www.penmai.com/forums/announcements/105977-a.html#ixzz3u0j7WXhC
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#3
மிக அருமை இளவரசியாரே. பெண்மையின் சேவை வாழ்க!

நானும் சென்னை அருகே சில ஊர்களும், சிதம்பரம் அருகில் உள்ள சில கிராமத்திலும், 5 கிலோ அரிசியும் மற்றும் போர்வையும் கொடுத்துள்ளேன். கிட்டக்க 500 குடும்பங்களுக்கு.

:cheer:​
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#4
Thx u GK 4 Tagging.

:thumbsup​
 
saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#5
சூப்பர் இளவரசி மேம்...

இந்த இயற்கை நமக்கு சரியான வேளையில் உணர்த்திய பாடமாக தான் இதை நினைக்க வேண்டும்... நம் வீடு என்ற எண்ணத்தில் தானே வீட்டை தூய்மையாக வைத்திருக்கிறோம்... நம் மக்கள் என்ற உணர்வில் தானே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணம் வந்தது, அது போல் நம் நாடு என்ற எண்ணமும் கொண்டு பிளாஸ்டிக்கை தடை செய்ய ஒன்று கூடி போராட வேண்டும்... இந்த மழை அள்ளி அள்ளி வழங்கிய நீர் எல்லாம் வீணாகி சேறாகி பல வீடுகள் குளமாகி உபயோகமில்லாமல் போய்விட்டது... இனியாவது ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்போம்... குப்பைகளை தெருவில் கொட்டாமல் இருப்போம்... நீரை சேமிக்க மழை சேமிப்பு தொட்டி வைப்பது பெரிதல்ல... நம் ஏரிகளை தூர்வார வேண்டும், தேக்கங்கள் ஏற்படுத்தி நீரை சேமிக்க வேண்டும்... அந்த காலத்தில் அரசனாகபட்டவன் ஏரி, குளம் என்று வெட்டி வைத்து சரித்திரத்தில் இடம் பிடித்தான்... ஆனால் இப்போது ஏரிகளை அரசியல் செய்பவர்களே ஆக்கிரமிப்பு செய்வது தான் பெருங்கொடுமை... புதிதாக ஒன்றை ஏற்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... இருப்பதை காப்பாற்றவாவது முனைவோம்... அனைவரும் ஒன்று கூடி இயற்கையோடான வாழ்வை வாழ பழகுவோம்... விவசாயத்தை வளர்ப்போம், மரங்கள் நடுவோம், நீர்நிலை காப்போம்... குப்பைகளை அகற்றுவோம்... ஊர் கூடினால் மட்டுமே தேர் இழுக்க முடியும், ஒன்று கூடி நமக்கான வாழ்வாதாரத்தை காப்போம்...
 
kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,418
Likes
16,820
Location
Singapore
#6
Well said இளவரசி @Penmai இது ஒரு பாடம் என்று நினைத்து சவீதா சொல்வது போல இருக்கும் ஏரிகள் குளம் குட்டைகளை தூர் வாரி பாதுகாக்க வேண்டும் நாம்.
 
Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,980
Location
CHENNAI
#7
முற்றிலும் உண்மை சவீ... சவீதா சொல்வதைப் போல் அனைவரும் முயன்றால் நிச்சயம் நன்மை பிறக்கும் !! மக்களுக்கு உதவிய பெண்மைக் குழுவிற்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
 
jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,271
Location
madurai
#8
hai ila mam...

ya this is a great lesson to people

இயற்கையை தடுக்கவும் முடியாது...
அதை மிஞ்சவும் முடியாது....
அதை சமாதானப்படுத்தவும் முடியாது

என்பதை இந்த மழை வெள்ளம் நிரூபித்து விட்டது.

இங்க சில கடைல பிளாஸ்டிக் பயன்படுத்துறது இல்ல, மேலும் நாங்களே பொதுவா பிளாஸ்டிக் பை கொடுத்தா வேண்டாம் என்று கூறி விடுவோம் சிஸ்டர்.

இந்த குப்ப கொட்டுறது தான் பெருங்கொடுமை. நாங்களா குப்பைக்காரர் வரலைனாலும், மறுநாள் வந்ததும் குப்பை வண்டில போடுவோம். ஆனா, இங்க மற்றவங்க... சொல்லி மாளாது, ஞாயிற்றுக் கிழமை நைட் இல்ல சாயந்திரம் வந்து பார்த்தா தெரியும் எங்க ரோடு எப்படின்னு? இத வித கொடுமை... ஏரியா கவுன்சிலர் டெய்லி ரௌண்ட்ஸ் வர தான் செய்வார். பாவம் அவருக்கு கண் தெரியாது போல!
 
ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#9
சூப்பர் இளவரசி மேம்...

இந்த இயற்கை நமக்கு சரியான வேளையில் உணர்த்திய பாடமாக தான் இதை நினைக்க வேண்டும்... நம் வீடு என்ற எண்ணத்தில் தானே வீட்டை தூய்மையாக வைத்திருக்கிறோம்... நம் மக்கள் என்ற உணர்வில் தானே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணம் வந்தது, அது போல் நம் நாடு என்ற எண்ணமும் கொண்டு பிளாஸ்டிக்கை தடை செய்ய ஒன்று கூடி போராட வேண்டும்... இந்த மழை அள்ளி அள்ளி வழங்கிய நீர் எல்லாம் வீணாகி சேறாகி பல வீடுகள் குளமாகி உபயோகமில்லாமல் போய்விட்டது... இனியாவது ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்போம்... குப்பைகளை தெருவில் கொட்டாமல் இருப்போம்... நீரை சேமிக்க மழை சேமிப்பு தொட்டி வைப்பது பெரிதல்ல... நம் ஏரிகளை தூர்வார வேண்டும், தேக்கங்கள் ஏற்படுத்தி நீரை சேமிக்க வேண்டும்... அந்த காலத்தில் அரசனாகபட்டவன் ஏரி, குளம் என்று வெட்டி வைத்து சரித்திரத்தில் இடம் பிடித்தான்... ஆனால் இப்போது ஏரிகளை அரசியல் செய்பவர்களே ஆக்கிரமிப்பு செய்வது தான் பெருங்கொடுமை... புதிதாக ஒன்றை ஏற்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... இருப்பதை காப்பாற்றவாவது முனைவோம்... அனைவரும் ஒன்று கூடி இயற்கையோடான வாழ்வை வாழ பழகுவோம்... விவசாயத்தை வளர்ப்போம், மரங்கள் நடுவோம், நீர்நிலை காப்போம்... குப்பைகளை அகற்றுவோம்... ஊர் கூடினால் மட்டுமே தேர் இழுக்க முடியும், ஒன்று கூடி நமக்கான வாழ்வாதாரத்தை காப்போம்...
நன்றாக சொன்னாய் சவீ.
நம் இளைய தலைமுறை மாணவர்களிடம் ...நம் நீர்நிலை ஆதாரங்களை எடுத்து செல்ல வேண்டும் ...அதுவே நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து.
பொதுவாகவே எங்க ஊர் அடையாளமே மஞ்சப்பை....தான் ...
அதை கையில எடுத்துட்டேன் சவீ...
இப்ப பிளாஸ்டிக் பை ல ...வாங்குவதே இல்ல
 
ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#10
இயற்கையோடு இசைந்து வாழுவோம்....சரியாக சொன்னீர்கள் .சூப்பர் இளவரசி.
இயற்கையை காப்பாற்ற ...கைகோர்பபோம்...நன்றி பெண்மை
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.