இயற்கை தேன் ஒரு வரப்பிரசாதம்

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
162
Likes
304
Location
Melbourne
#1
இன்று எவ்வளவு தான் பணம் கொடுத்தாலும் வாங்கி விடலாம் என்கிற பொருட்களுக்கு மத்தியில் இன்றும் ஓர் அறிய பொருளை திகழ்கிறது இந்த இயற்கை தேன். தேனில் பல வகைகள் உண்டு, இருந்தாலும் கொம்புத் தேன் மற்றும் குறுந்தேன் ஆகியவை மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டவை. சுமார் ஐந்து லிட்டர் தேனைச் சேகரிக்க நமது மலைவாழ் மக்கள் ஏறத்தாழ பதினெட்டு முதல் இருபது கிலோ மீட்டர் வரை காட்டினுள் பயணம் செய்ய நேரிடுகிறது. ஆனால் போதிய விலை கிடைக்காமையால் கலப்படம் செய்ய நேரிடுகிறது. எனவே தான் இயற்கையான தேன் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. விரைவில் நாங்கள் தேன் எடுக்கும் காணொளியை இதில் வெளியிடுகிறோம்.
தேனின் வகைகள்
அடுக்குத்தேன், வேம்புத்தேன் . கொம்புத்தேன் , குறுந்தேன் , புத்துத்தேன் முதலிய தேன் வகைகள் உள்ளன.
கொம்புத்தேன்
கொம்புத்தேன் பற்றிய சித்தர் பாடல்
"வாதமொடு பித்தம் மாற்றும்
மாந்தமெனும் நோயை விரட்டும்
ஆறுதலென அரும்பசி ருசியூட்டும்
ஆதலினால் இது கொம்புத்தேனே"
என்கிறார் புலிப்பாணி சித்தர்.
மிக உயர்ந்த மரங்களின் கிளைகளிலும் பாறை இடுக்குகளிலும் இருந்து பெறப்படும் இந்த வகையான கொம்புதேனிக்கள் அதிக தூரம் பயணம் செய்து தேனைச் சேகரிக்க வல்லன . மிக உயரமான இடத்தில் தேன் கூட்டை அமைப்பதினால் அடர்த்த வனப்பகுதியில் பகுதிகளில் மட்டுமே கொம்புத்தேனை பார்க்க முடியும்.இதனால் தான் கொம்புத்தேன் மருத்துவ குணத்தில் சிறந்ததாக காணப்படுகிறது. கொம்புதேனை எடுப்பது சாதரணமான காரியம் இல்லை. தேன் எடுப்பதுக்கு முன்னரே பகல் வேளையில் மரத்தில் ஏறுவதக்கான முன் ஏற்பாடுகளை அதாவது மரத்தில் ஏறுவதற்க்கு எளிதாக கிடைமட்ட குச்சிகளை கட்டிவிட்டு, இரவில் மட்டுமே தேனை எடுப்பார்கள். அதுவும் இரவு வேளையில் தேன் எடுக்கும் போது வனவிலங்குகள் நடமாட்டமும் இருக்கும், அதுமட்டுமில்லாமல் கரடி போன்ற தேன் விரும்பிகளும் தேனில் வாடையைக் கண்டு பிடித்து வருவதுண்டு. ஆனால் இவர்கள் தங்கள் குல தெய்வத்தை முதல் உணவை வழங்கும் விதமாக முதல் தேன் அடையை அறுத்து வீசிவிடுவார்கள்.பின்னரே தங்களுக்கான தேனை எடுத்து கொள்வர்கள்..இப்படி வீசப்படும் அடைகளை பெரும்பாலும் கரடிகளே எடுத்துச் செல்கின்றன.இப்போது நினைத்து பாருங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் இந்த தேனைச்சேகரித்து நமக்காக கொடுக்கிறார்கள். ஆனால் நாமோ ஆடம்பர பொருட்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து விட்டு இயற்கையை அலசியப்படுதுகிறோம்.
 

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
162
Likes
304
Location
Melbourne
#2
வேம்புதேன்
கொம்புத்தேனைப் போலவே மிக உயர்ந்த மரங்களின் கிளைகளிலும் பாறை இடுக்குகளிலும் இருந்து பெறப்படும் இந்த வகையான தேனிக்கள் வேம்பு மரங்கள் அதிகம் உள்ள வனப்பகுதியில் தங்களது தேனைச் சேகரிக்க வல்லன. அதனால் சற்றே கசப்பும் துவர்ப்பும் அதிகம் கொண்டவையாக உள்ளன. பொதுவாகவே கொம்புத்தேன் அடர் பழுப்பும் மஞ்சள் நிறமும் கொண்டவை. வேம்புப்பூக்கள் இயற்கையாகவே மருத்துவ குணம் கொண்டவையினால் இந்த வேம்புத்தேனும் சிறந்த மருத்துவ குணம் மிக்கவை. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அற்புத மறந்து.
அடுக்குத் தேன்
கிராமங்களிலும் மலை அடிவாரப் பகுதிகளிலும் அடுக்குத் தேனை நாம் சேகரிக்க இயலும். தேன் வகைகளிலேயே அதிக அளவு தேன் இந்த வகையான தேன் அடையிலிருந்து கிடைகிறது. கொம்புத் தேனிலும் அதிகமான கிளைகள் இருக்கும் பட்சத்தில் அதிக அளவு கொம்புத் தேனை பெற முடியும்.
தற்போது கடைகளில் பெறப்படும் தேன்களில் பெரும்பாலும் பெட்டிதேன் எனப்படும் வளர்ப்பு தேனிக்கள் மூலமாக பெறப்படுகிறது. இது தேன் உற்பத்தியில் ஒரு பற்றாக் குறையை நவர்த்தி செய்தாலும், சில உற்பத்தியாளர்கள் தேணீகளுக்கு செயற்கையாக சர்க்கரைப் பாவை உணவகக் கொடுக்கின்றனர். இவைகையான தேனின் தரத்தை நீங்களே எண்ணிப்பாருங்கள். அதே சமயம் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யும் வளர்ப்பு தேன் உற்பத்தியாளர்களுக்கு எங்களது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது நீங்கள் கடைகளில் வாங்கும் தேனில்
தேன்-60%
இரும்பு-20%
பாதுகாப்பான் பூச்சி கொல்லி -20%
இதில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எந்த இணைய தளத்திலும் எடுக்கப்பட்டவையல்ல. தேனைச் சேகரிக்கும் போது நான் கண்ட அனுபவத்தையும் மலை வாழ் மக்கள் கொடுத்த தகவல்கையும் ஒருங்கே பகிர்ந்துள்ளேன். நமக்கு இயற்கையாக கலப்படமில்லாத தேனைச் சேகரித்து தரும் திரு.மூக்கன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
 

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
162
Likes
304
Location
Melbourne
#3
தேனுக்குப் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு என்றாலும், ‘அது சர்க்கரை நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து’ என்பது புதிதாக இருக்கவே, வியப்போடு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் தெய்வநாயகத்தை சந்தித்தோம்.
சர்க்கரை நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் தெய்வநாயகம் அவர்களின் உரை
பொதுவாகவே தேனுக்கு, காயங்களை குணப்படுத்தும் ஆற்றலும், உடற்பகுதிகளைப் பாதுகாக்கும் சக்தியும் உண்டு. அதில் அமிலத் தன்மையும், ஜவ்வுத்தன்மையும் இருப்பதால் வெளிக்காற்றில் இருக்கிற கிருமிகள் காயங்களில் புகாமல் பார்த்துக் கொள்ளும்.
சர்க்கரை வியாதிக்காரர்களின் உடலில் இருக்கிற ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், அவர்களின் ரத்தத்தில் காயங்களிலிருந்து பாதுகாப்பைத் தருகிற வெள்ளை அணுக்களின் வலு குறைந்திருக்கும். இதனால்தான் அவர்களுக்கு காயம் ஆறாததுடன், நோய்த் தொற்றும் மிக சீக்கிரமே ஏற்படும்.
அவர்களின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வலு குறைந்திருப்பதால், ஆன்டிசெப்டிக் மருந்துகள் அவர்களுடைய உடலில் முழுமையாக செயல்படுவதில்லை.. அதாவது காயம் பட்ட பகுதியில் உள்ள நுண்திசுக்களை இவற்றால் இணைக்க முடிவது இல்லை.
ஆனால், தேன், காயமடைந்த பகுதியில் உள்ள நுண்நார் செல்களைத் தூண்டி, நுண்திசுக்களை இணைக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகளின் காயங்களுக்கு மட்டுமல்ல.. எல்லாக் காயங்களுக்குமே, தேன் ஒரு அற்புத மருந்துதான்!’’ என்ற டாக்டர், கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட தேனில் இந்த குணங்கள் எதுவும் இல்லை.
நன்றி: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் தெய்வநாயகம் அவர்கள்.
 

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
162
Likes
304
Location
Melbourne
#4
தேனின் மருத்துவ குணங்கள் மற்றும் உட்கொள்ளும் முறைகள்


கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.


இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.


இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.


இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.


இதயத்திற்கு டானிக்
செம்பரத்தை இதழ் பொடியுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.


தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.