இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்க&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கான 10 வழிகள்!!!

குறைந்த இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை என்பது உடல்நல கோளாறாகும். இதனால் உங்கள் இரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை விட குறைவான எண்ணிக்கைகளே இருக்கும். இரத்தத் தட்டுக்கள் என்பது இருப்பதிலேயே சிறிய இரத்த அணுக்களாகும். இரத்த குழாய் ஓட்டைகளில் அடைப்பை உருவாக்கி இரத்த உறைதல் ஏற்பட இது உதவிடும்.

சராசரியாக 5-9 நாட்கள் ஆயுட்காலத்துடன் நீடிக்கும் இந்த இரத்தத் தட்டுகள் இரத்தத்தில் சுற்றிச் செலுத்தும். ஒரு ஆரோக்கியமான நபரின் உடலில் ஒரு மைக்ரோ லிட்டர் இரத்ததில் 150,000 முதல் 450,000 இரத்த தட்டுக்கள் இயல்பாக இருக்கும். இந்த எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டருக்கு 150,000-க்கும் குறைவாக இருந்தால், இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என அர்த்தமாகும்.

சுலபமாகவும், அளவுக்கு அதிகமாகவும் காயப்படுத்துதல், வெட்டுக்காயங்களில் நீடித்து நிலைக்கும் இரத்தக்கசிவு, ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து உடனடி இரத்தக்கசிவு, சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம், சருமத்தில் மேலோட்டமான இரத்த கசிவால் ஏற்படும் சரும சொறிகள் போன்றவைகளே குறைந்த அளவிலான இரத்த தட்டுக்களின் எண்ணிக்கைக்கான சில அறிகுறிகள்.

பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மாதவிடாய் கழிவு ஏற்படும். குறைந்த இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை இருந்தால் உடல்நலக் குறைபாடு, சோர்வு மற்றும் பொதுவான அயர்ச்சியும் ஏற்படலாம். வாழ்வு முறையில் சில மாற்றங்களையும், சில எளிய வீட்டு சிகிச்சைகளையும் மேற்கொண்டால், உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்; ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடலாம்.

உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் வரை கீழ்கூறியுள்ள சிகிச்சைகளை தொடரவும். ஒரு வேளை, பிரச்சனை தீவிரமடைந்தால், உடனே மருத்துவரை கலந்தாலோசியுங்கள். குறைந்த இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கான 10 வழிகள், இதோ!

contd..​
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்&#296

பப்பாளி

பப்பாளிப் பழம் மற்றும் அதன் இலைகள் சில நாட்களிலேயே உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை, பப்பாளி இலையின் சாறால் அதிகரித்துள்ளதை 2009-இல் மலேசியாவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கண்டறிந்தது.

பழுத்த பப்பாளியை உண்ணுங்கள் அல்லது சிறிது எலுமிச்சை சேர்க்கப்பட்ட ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் தினமும் 2-3 முறை குடியுங்கள். பப்பாளி இலையின் காம்பை நீக்கி, அவைகளை ஒரு உரலில் போட்டு அரைத்து, ஜூஸை எடுங்கள். 2 டீஸ்பூன் அளவிலான இந்த கசப்பு சாற்றை தினமும் 2 முறை குடியுங்கள்.

பூசணிக்காய்

இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிடும் மற்றொரு உணவு தான் பூசணிக்காய். வைட்டமின் ஏ வளமையாக உள்ளது அது சரியான இரத்தத் தட்டுக்களின் வளர்ச்சிக்கு உதவிடும்.

மேலும் அணுக்களில் உற்பத்தியாகும் புரதத்தை சீராக்கும். இரத்தத் தட்டுக்களின் அளவை உயர்த்த இது மிகவும் முக்கியமாகும். நற்பதமான ½ டம்ளர் பூசணிக்காய் ஜூசுடன், டீஸ்பூன் தேனை கலந்து, தினமும் 2-3 முறை குடிக்கவும். பூசணிக்காயை சூப், அவியல் மற்றும் வாட்டிய உணவுகளிலும் சேர்த்திடலாம்.

கீரை

கீரையில் வைட்டமின் கே வளமையாக உள்ளது. இது குறைந்த இரத்தத் தட்டுக்கள் கோளாறுக்கு சிக்கிச்சையளிக்க உதவிடும். சீரான முறையில் இரத்த உறைதல் ஏற்பட வைட்டமின் கே தேவையானதாகும். இதனால் அளவுக்கு அதிகமாக ஏற்படும் இரத்த கசிவு இடர்பாடு குறையும். நற்பதமான 4-5 கீரை இலைகளை 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.

அதனை ஆற வைத்து, அதனுடன் 1/2 டம்ளர் தக்காளி சாற்றை கலக்கவும். இதனை தினமும் 3 முறை குடிக்கவும். இந்த பச்சை காய்கறியை சாலட், ஸ்மூத்தி மற்றும் சூப் ஆகியவைகளுடனும் சேர்த்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்கள்

உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புகழ்பெற்ற ஆயுர்வேத சிகிச்சையான நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் 3-4 நெல்லிக்காய்களை உண்ணுங்கள். இல்லையென்றால், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் தேனை தலா 2 டீஸ்பூன் கலந்து தினமும் 2-3 முறை குடியுங்கள். நெல்லிக்காயை கொண்டு வீட்டில் செய்யப்பட்ட ஜாம் அல்லது ஊறுகாயையும் உண்ணலாம்.

நல்லெண்ணெய்

குறைந்த வெப்பநிலையில் தயார் செய்யப்பட்ட இந்த எண்ணெய் உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இயற்கையான வழியில் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் தன்மைகளை நல்லெண்ணெய் கொண்டுள்ளது. இயக்க உறுப்பு பாதிப்புகள் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

உயர் தரமுள்ள நல்லெண்ணெய்யை 1-2 டீஸ்பூன் அளவு தினமும் குடியுங்கள். நிணநீர்முடிச்சு பகுதிகளில் நல்லெண்ணெய்யை வெளிப்புறமாகவும் பல முறை தடவலாம். இதுவும் உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும். கூடுதலாக, குறைந்த வெப்பநிலையில் தயார் செய்யப்பட்ட இந்த எண்ணெய்யை சமயலுக்கும் பயன்படுத்துங்கள்.

பீட்ரூட்

இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பீட்ரூட் உண்ணுவது மற்றொரு புகழ்பெற்ற உணவு முறையாக கருதப்படுகிறது. இயற்கையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் குருதி தேங்கு நிலை தன்மைகள் இதில் அதிகமாக உள்ளதால், உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை கொஞ்ச நாட்களிலேயே வேகமாக அதிகரித்து விடும்.

நற்பதமான 1 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை தினமும் 3 தடவை குடியுங்கள். மற்றொரு முறை - 3 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை 1 டம்ளர் கேரட் ஜூசுடன் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கவும்.

தண்ணீர்

இரத்த அணுக்கள் தண்ணீர் மற்றும் புரதத்தால் ஆனது. அதனால் தினமும் அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை என வரும் போது, குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்க்கவும். அதற்கு காரணம் இது உங்கள் செரிமானப் பாதையை பாதிக்கும்.

அதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சாது. மாறாக வடிகட்டிய மற்றும் தூய்மைப்படுத்தப்பட்ட குளிர்ந்த தண்ணீரை குடியுங்கள். இதனால் உங்கள் உடலில் இரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாக உதவும். இதனால் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையும் மேம்படும். தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த தண்ணீரை குடியுங்கள்.

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.