இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
இன்று மனிதர்களை பல வகையான நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் முதன்மை வகிக்கிறது. இவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்கள்.

நம் நாட்டில் 75 சதவிகிதம் பேர் இந்த நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற பழமொழி போல் தினமும் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டும் நோய்தான் இந்த நீரிழிவு நோயும், இரத்த அழுத்த நோயும்.

ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருந்தால் இரத்த அழுத்த நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த இரத்த அழுத்த நோயை மௌன கொலையாளி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனித உடலின் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இந்த சுருங்கி விரியும் தன்மை 120/80 வரை சராசரி மனிதர்களுக்கு இருக்கும்.

இந்த சுருங்கி விரியும் தன்மை அதிகரித்தால் அதிக இரத்த அழுத்த நோயும் , குறைந்தால் குறைந்த இரத்த அழுத்த நோயும் ஏற்படுகிறது.

சில சமயங்களில் மனம் அதிக உணர்ச்சி வசப்படும்போது இரத்தம் வேகமாக உள்வாங்கி வெளியேறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை சித்தர்கள் பித்த வாத அழுத்தம் என்கின்றனர்.

மனித உடலில் அமைந்துள்ள பித்த நீர் அதிகம் சுரந்து வாத நீருடன் கலந்து பித்த வாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அதிக ரத்த அழுத்தம் என்கிறோம். அதே நிலையில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வாத நீர் அதிகம் சுரந்து பித்த நீருடன் சேரும்போது வாத பித்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குறைந்த இரத்த அழுத்தம் என்கிறோம்.

இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சத்துக்கள் இருந்தால் அவை இரத்தக் குழாய்களில் படிந்து இரத்தத்தில் அழுத்தம் அதிகரித்து இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கோபம், கவலை, அச்சம் உள்ளவர்களை இரத்த அழுத்தம் அதிகம் தாக்குகிறது. உடல் வலியும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தூக்கமின்மையும் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கும் வர 25 சதவிகிதம் வாய்ப்புள்ளது.

அதிக இரத்த அழுத்த நோயாளிகளின் உணவுக் கட்டுப்பாடு

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை, இனிப்பு பண்டங்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

குளிரூட்டப்பட்ட பானங்கள், செயற்கை வர்ணம் அல்லது வாசனை கலந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கேன்களில் அடைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக்கூடாது.

வெண்ணெய், நெய், கிரீம், மாமிசம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது.

மது, புகை, போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

உணவில் அதிகளவு கீரைகளும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் பிஞ்சு வகைகளையே அதிகம் சாப்பிடவேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வாயுவை அதிகரிக்கச்செய்யும் கிழங்கு வகைகளையும், பருப்பு வகைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டும்.

உணவில் அதிகளவு காரம், புளிப்பு சேர்க்கக் கூடாது.

எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக உணவுக்குப்பின் சிறிது பழவகைகள் உண்பது நல்லது. அதில் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு தூங்கச் சென்றால் நல்ல நித்திரை காணலாம். நல்ல நித்திரை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

மனதை அதிகம் பாதிக்கும் இடங்களுக்குச் செல்வதையோ, நிகழ்வுகளைப் பார்ப்பதையோ தவிர்ப்பது நல்லது.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சிறிது நேரம்அமர்ந்து தியானம் செய்து, பின் பால் அருந்திவிட்டு படுக்கச் செல்லவேண்டும்.

ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளுக்கு

குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளை பெட்ரோல் இல்லா வாகனம் என்பார். அதாவது வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் போகும்போது வாகனம் எங்கு வேண்டுமானாலும் நின்று போகலாம்.

அதுபோல்தான் குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளின் நிலையும். அவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளையும், அதனை முறையாகவும் சாப்பிட்டு வரவேண்டும். சில நேரங்களில் இவர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், தூக்கம் போன்றவை ஏற்படும். உடல் சோம்பலாகவே இருக்கும். உடலில் வலி ஏற்படும். அப்போது இவர்கள் சிறிது குளுக்கோஸ் கலந்த நீர் அருந்துவது நல்லது. அல்லது சர்க்கரை கலக்காத எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். கேழ்வரகு கூழ், கம்பு கூழ் மிகவும் சிறந்தது. எலும்பு சூப் செய்து அடிக்கடி அருந்த வேண்டும்.

மதுபானத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் மயக்கம், தலைச்சுற்றல், ஏற்படும்போது மோரில் உப்பு கலந்து உடனே அருந்தினால் தெளிவு உண்டாகும்.

பாதாம் பருப்பு - 2,

முந்திரி பருப்பு - 2,

பேரிச்சை - 2,

உலர்ந்த திராட்சை - 4,

இவற்றை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

குடலில் வாயுத்தன்மை அதிகரிக்காமல் பார்த்தக்கொள்ள வேண்டும். மேற்கண்ட வழிகளை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் ரத்த அழுத்த நோய்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.