இரவும் அவளும் - Iravum Avalum By Agamathi

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#21
அத்தியாயம் 15:


கம்பெனிக்குள் நுழைந்ததுமே மௌனி முதல்வேலையாக புயலென அவனது கேபின்குள் நுழைந்தாள். அவளின் வரவை அவன் எதிர்பார்த்தே இருந்தது போல் அவள் உள்ளே நுழைந்ததும் "வாங்க.. மிஸ் மௌனிகா.. ரெசிக்கினேஷன் லெட்டர் கொண்டு வந்துருக்கீங்களா?.." என்று முகத்தில் புன்னகையும் வார்த்தையில் அடங்கப்பட்ட கோவத்தையும் வெளிப்படுத்தியவாறு கேட்டான்.


அவனின் கேள்வியில் அவள் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள். ஆனாலும் தன்னை சமாளித்தவள், "எஸ் சார்.. மை ரெசிக்கினேஷன் லெட்டர்.. "என்று லெட்டரை அவன் முன் வைத்து விட்டு தலை குனிந்து நின்றாள். அவளையே அழுத்தமாக பார்த்தவன், "மிஸ் மௌனிகா. ரெசிக்கினேஷன் லெட்டர் குடுக்கறதுக்கு முன்னாடி ஃபஸ்ட் கம்பெனி ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க.. பொதுவா வேலையை விட்டு நிக்கிறதுக்கு நாற்பத்தி ஐந்து நாட்களுக்கு முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணனும். அதோட உங்க லெட்டரை இன்னும் ஒரு வருஷத்துக்கு கம்பெனி ஏத்துக்க முடியாது.. " என்று கிண்டலும் அதிகாரமுமாக சொன்னவனை,


கோபமாக முறைத்தவள், "ஏ..ஏன் ஏத்துக்க முடியாது?..நான் ஒன்னும் இங்கே அகிரிமெண்ட் போட்டு ஒர்க் பண்ணல.. சோ எப்பவேனாலும் என்னால இங்கிருந்து போக முடியும்.. " என்றவளை கேலியாக பார்த்தவன் தன் டேபிளில் இருந்த ஃபைலை எடுத்து அவள் முன் வீசி எறிந்தான்.


அவனின் இந்த புறக்கணிப்பு அவளுக்கு வலித்தது. இருந்தும் முகத்தில் எதையும் காட்டாமல் அதை பிரித்து பார்த்தவளுக்கு இப்போது தன் தோழி அருகில் இருந்தாள் அவளை கொன்று விடும் அளவுக்கு கொலைவெறியில் இருந்தாள். ஆம்..அதிலிருந்த பேப்பர்ஸ் அனைத்தும் மௌனியும் கீர்த்தியும் சேர்ந்து கம்பெனியில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் லோன் வாங்கியதற்கான ஆதாரம்.


அன்று ஒரு நாள் கீர்த்தியின் தந்தை வாங்கிய கடனுக்காக கீர்த்திக்கு பணம் தேவைப்பட்டது. மௌனி தன் பெயரில் இருந்த பணத்தை அவளிடம் கொடுக்க கீர்த்தி பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். "எந்த ஒரு உறவுக்கும் நடுவில் வரும் பிரச்சனைக்கு முதல் காரணம் பணமாக தான் இருக்கும் மௌனி.."என்று பணத்தை வாங்க மறுத்து விட்டாள்.


ஆனாலும் பணம் நெருக்கடி காரணமாக கீர்த்தி கம்பெனியில் லோன் அப்ளை செய்திருந்தாள். ஆனால் கம்பெனி நிர்வாகம் அவளுக்கு நான்கு லட்சம் மட்டுமே தர முடியும் என்றதால் மௌனியும் சேர்த்து இருவரும் வாங்குவதாக கணக்கு காட்டி ஒரு வழியாக லோன் வங்கியிருந்தனர்.


அதுவே இப்பொழுது அவளுக்கு தடையாக வந்து நின்றது. "அடியேய்ய்.. கீர்த்தி.. உன் கௌரவுத்துல தீயை வைக்க. உன்னால நான் எப்பிடி மாட்டிட்டு இருக்கேன்.. "என்று மனதிற்குள் தோழியை சபித்தவள் வெளியில் கொஞ்சமும் அசராது அவனை பார்த்து "அந்த லோன் அமௌண்ட்டை நான் கட்டிட்டா இப்போவே நான் வேலையை விட்டு நிற்கலாம் தானே?.." என்றவளை மெச்சுதலாக பார்த்தவன், "ஓ..தாராளமாய் நீங்க போகலாம். ஆனால் போகும் போது உங்க ஃபிரண்ட் கீர்த்தியையும் கூட கூட்டிட்டு போங்க.. " என்று எங்கு அடித்தால் அவளுக்கு வலிக்குமோ அங்கேயே அடித்தான்.


அவனின் வார்த்தையில் அவள் முற்றிலுமாக அதிர்ந்து தான் போனாள். தனக்கு வேலை இல்லை என்றால் கூட பரவாயில்லை. ஆனால், கீர்த்திக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். அவளது குடும்பமே இவளது வருமானத்தை நம்பி தான் இருக்கின்றது. எதுவும் செய்ய இயலாத நிலையில் தவித்து நின்றவளை இகழ்ச்சியை பார்த்தான்.


"சித்து.. நீங்க ரொம்ப அநியாயம்
பண்றீங்க.." என்று ஏறக்குறைய கத்தினாள்.


அதில் அவன் பொறுமை எல்லையை கடந்தது. வேகமாக சேரை தள்ளி விட்டு எழுந்தவன், "யாருடி அநியாயம் பண்ணது?.. நீயா? இல்லை நானா?.. வாழ்க்கையே வேண்டாம்ன்னு ஒதுங்கி இருந்தவனை ஆசை காட்டி உயிர் கொடுத்து இப்பிடி ஒரேடியா கொன்னுட்டு வந்திருக்கியே.. நீ செய்ததை விடவா இது அநியாயம்?.. என்றவன் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அவளிடம் கர்ஜித்தான்.


அவனின் இந்த அதட்டலில் அவள் உடல் அதிர்ந்தது. காதலும், மென்மையும், கொஞ்சலுமாக தன்னிடத்தில் பேசிய தன்னவனின் இந்த அதட்டல், கோவம் எல்லாம் சேர்ந்து அவளுக்குள் வேதனையை கொடுத்தது.அவனின் இந்த கோவத்தையும், வெறுப்பையும் தாங்க முடியாது என்று தானே அவள் அவனை விட்டு பிரிந்தது வந்தது.


"இல்..இல்லை சித்து.. அது..அதுவந்து எந்த பிரச்சனையும் வந்திரக்கூடாது தான் நான் அப்பிடி பண்ணேன். நம்..நம்மோட நல்லதுக்கு தான் உங்களை விட்டு வந்தேன்.." என்று திக்கி திணறி கண்கலங்க சொன்னவளை கண்டு அவன் கோவம் இன்னும் அதிகரித்தது.


"எது?..எதுடி.. நல்லது.. அது எப்பிடிடீ எல்லாம் பெண்களும் ஒரே மாதிரி சுயநலமா இருக்கீங்க?.. ஒருத்தனோட வலியையும், உணர்வுகளையும் புரிஞ்சிக்காம உங்க இஷ்டத்துக்கு எது வேணாலும் செய்வீங்க.. எப்பவும் உங்களை பத்தியே யோசிக்கிறீங்களே.. உங்களால மத்தவங்க மனசு எந்த அளவுக்கு கஷ்டப்படும்னு நினைச்சு பார்த்தீங்கன்னா விரும்புறவனை எந்த கஷ்டம் வந்தாலும் விட்டுட்டு போக மாட்டிங்க.. இதையெல்லாம் உங்கிட்ட போய் சொல்றேன் பாரு.. ச்சை" என்று எரிச்சலில் தலையில் கை வைத்தவனிடம்,

"இல்லை சித்து..அதுவந்து.. காரணமா தான் நான் உங்களை விட்டு பிரிஞ்சு வந்தேன்.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க.." என்று கன்னங்களில் வாழ்ந்தோடிய கண்ணீருடன் கெஞ்சியவளை கண்டு வெறுப்பாய் பார்த்தவன், "இதையெல்லாம் நீ எங்கூட 'வாழுறதுக்கு ' முன்னாடி யோசிச்சு இருந்திருக்கணும்.. " கோவத்தில் வார்த்தைகளை சிதற விட்டான்.


"சித்து.. " என்று அறை முழுக்க எதிரொலிக்க கத்தியவளை கண்டு அசராது பார்த்தவன், "இப்பிடியெல்லாம் என்னை பேச வச்சதே நீதாண்டி.." அவனின் வார்த்தைகள் கனலாக விழுந்தன.


"என்..என்னால உங்களோட சேர்ந்து வாழ முடியாது சித்து.." குரல் இறுகி சொன்னவளின் அருகில் வந்தவன் அவள் தோளையை பற்றி சுவற்றோடு சுவராக சாய்த்தவனின் முகம் செந்தணலாக மாறி இருந்தது. அவனின் கோவத்தில் அவள் பூஉடல் நடுங்கியது.ஆனால், அவனோ அவளின் நடுக்கத்தை கண்டுகொள்ளாமல் அவள் தாடையை பற்றி தன் பக்கம் திருப்பியவன் சற்றும் தாமதிக்காது அவள் இதழை கடித்து சுவைத்தான். வெகு நாட்களுக்கு பிறகு தன்னவனின் இந்த நெருக்கத்தில் அவள் கிறங்கி நின்றாள். எப்போதும் போல் அவன் தொடுகையில் அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது. அதே சமயம் அவனது இந்த இதழ் முத்தத்தில் கொஞ்சமும் காதல் இல்லை. மாறாக மிதமிஞ்சிய கோவம் மட்டுமே இருந்தது. அவனின் மொத்த கோவத்தையும் அவள் இதழில் வெளிப்படுத்தியவனை கண்டு அவளுக்கு சிரிக்க தான் தோன்றியது. அவள், அவனின் மீது வைத்திருந்த அதீத காதலில் எப்போதும் அவனால் ஏற்படும் வலிகளை அவள் சுகமாகவே ஏற்று கொண்டவள், அதே போல் இப்போதும் அவனது இந்த கோவத்தையும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டாள்.


வெகு நேரமாகியும் தன்னை விடாது தன் இதழில் மூழ்கிருந்தவனின் தலையில் கை கொடுத்து அவனை தனக்குள்ளே
புதைத்து கொண்டாள்.அட்லீஸ்ட் இப்பிடியாவது அவன் கோவத்திற்க்கு தான் ஒரு மருந்தாக இருக்க எண்ணி அவன் கைகளுக்குள் படர்ந்து அவனுக்கு இசைந்து கொடுத்தாள். உதடு உலர்ந்து எரிச்சலில் வலி எடுத்த போதும் அவனை விட்டு அவள் விலகவில்லை. இறுதியாக மூச்சு காற்றுக்காக அவள் நெஞ்சுக்கூடு தவிக்க அதன் பின்னரே அவளை விட்டு விலகியவன் அவளை பார்த்து " உன்கூட சேர்ந்து வாழுறதுக்கு எனக்கு உன்னோட பெர்மிஷசன் தேவை இல்லை.. அது அப்பவும் சரி இப்பவும் சரி.. உன்கிட்ட எனக்கு 'அந்த ' உரிமை எப்பவோ கிடைச்சாச்சு.. அதை நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறன்.. " என்று வார்த்தைகளாலும் அவளை காயப்படுத்தினான்.


அவனின் வார்த்தையில் அவள் மனம் வலித்தது. உதட்டை கடித்து கொண்டு தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் கலங்கிய முகத்தை கண்டு என்ன நினைத்தானோ பின் அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்தான். கண் மூடி அதை அனுபவித்தவளின் மனம் அமைதி அடைந்தது. இது போதுமே வார்த்தையால் அவளை காயப்படுத்தினாலும் அவனின் இந்த இதழ் ஒற்று அவன் தன் மீது வைத்த காதலை அவளுக்கு சொல்லாமல் சொல்லியது. ஆனால் இது தொடரக்கூடாது என்று அவள் மூளை எடுத்துரைக்க அவனிடமிருந்து வேகமாக விலகியவள், "போதும் சித்து.. நீங்க என்..என்னுடைய உணர்வுகளை தூண்டி விடுறீங்க.. எப்பவும் நீங்க நினைச்சது நடக்காது.. " என்றவளை கண்டு இளகிய அவன் முகம் மீண்டும் கடினமுற்றது.


"நீயெல்லாம் சொல் பேச்சு கேக்குற ஆள் இல்லைடி.. உன்னை எப்பிடி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும். உனக்காக இல்லை.. " என்றவன் அவள் போட்டிருந்த சுடியினுள் கை நுழைத்து அவள் வயிற்றில் அழுத்தமாக கரம் பதித்தவன், " என் குழைந்தைக்காக.. நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு தான் ஆகணும்.. " என்ற அவனின் வார்த்தையில் அவள் உச்ச அதிர்ச்சிக்கே சென்றிருந்தாள். கொஞ்சம் நேரம் மூளை மரத்து போய் அப்பிடியே நின்றிருந்தாள்.


அப்போது தான் அவளுமே உணர்ந்தாள். இத்தனை நாளில் தன்னவனின் சிந்தனையில் அவள் தன் நாள் கணக்கை கவனிக்க தவறினாள். வேகமாக அறையில் இருந்த கேலண்டரை பார்த்தவள் இந்த இரு மாதமும் நாள் தள்ளி போகிருப்பதை உணர்ந்தவளுக்கு உடலில் அப்பிடி ஒரு சிலிர்ப்பு உண்டானது. அவன் கை மீது தன் கையை வைத்து அழுத்தியவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தை வர வில்லை. தன் உடலுக்குள் தன்னவனின் உயிர் உருவானது தெரிந்ததும் எந்த பெண்ணும் உணர்ச்சியில் சிக்குண்டு தவிப்பாள். அதே போல் தான் அவளும் சந்தோஷத்தில் வழிந்த கண்ணீரோடு அவனிடம் திக்கி திணறி கொண்டிருந்தாள்.


"சித்து, நான்..நீங்க.. அது நீங்க.. நமக்கு.. " அவளுக்கு வார்த்தை வெளிவரவில்லை. அவன் கையை இன்னும் தன் வயிற்றோடு அழுத்தி பிடித்து கொண்டு உணர்ச்சியில் தவித்து கொண்டிருந்தவளை பார்த்தவாறு தன் கையை உருவியவன் அவளை உணர்வில்லாத ஒரு பார்வை பார்த்து வைத்தான்.


"உனக்கு விருப்பம் இருந்தாலும்.,இல்லாவிட்டாலும் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு ஆகணும். சம்மதிக்க வைப்பேன். என்னால ஒரு குழந்தைக்கு தந்தை ஆக முடியாதுன்னு சொன்னவர்களின் வார்த்தையை பொய்யாகும் விதமாக எனக்கு என்னோட குழந்தை வேணும். என் குழந்தையை எங்கிட்ட குடுத்துட்டு, அப்புறம் நீ உன் விருப்பப்படி இருந்துக்கோ." என்று வார்த்தைகளால் அவளை வதைத்து கொண்டிருந்தான்.


அவனின் வார்த்தையில் அவள் உள்ளுக்குள் செத்து கொண்டிருந்தாள். ஆனாலும் அவன் இப்பிடி எல்லாம் பேசுவதற்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்தவள் அந்த நொடி தன்னையே வெறுத்தாள் அந்த பேதை பெண்.


" சித்து.. அப்போ நீங்க இந்த குழந்தைகாக தான் இங்கே வந்தீங்களா?.. " என்றவளின் முகத்தையே பார்த்தவாறே "ஆமா.. இந்த குழந்தைகாக தான் நான் இங்கே வந்தேன்.. " இறுக்கமாய் ஒலித்தது அவனது குரல்.


அவனின் வார்த்தையில் அவள் விரக்தியாய் சிரித்தாள். ஏனென்றால் அன்று ஒரு நாள் மர வீட்டில் அவன் தன்னை போக சொல்லும் போது அவள் எடுத்த முடிவும் இது தானே. தன்னுடைய காதலை அவன் பிடிவாதமாய் மறுத்த போதும் அவனிடம் அந்த பத்து நாள் அவகாசம் கேட்டு தங்கியதற்கு காரணம் எப்படியாவது அவனோடு கூடி அவனுக்கு வாரிசு குடுக்க தானே. தன்னை ஏற்று கொள்ளா விட்டாலும் தன் வாரிசை கண்டிப்பா அவன் ஏற்று கொள்வான் என்ற நம்பிக்கையில் தானே தன்னையே அவனுக்கு கொடுக்க நினைத்து அவள் அந்த பத்து நாள் அனுமதி கேட்டது. அப்போது இருந்த மன நிலையில் அவளால் இதை மட்டுமே யோசிக்க முடிஞ்சுது.


கண்ணில் தேங்கிய கண்ணீரோடு உதட்டில் நிறைந்த விரக்தி புன்னகையோடு அவள் தன் கையை வயிற்றின் மீது வைத்து மிருதுவாக வருடியவள், "உங்களுக்கு இந்த குழந்தை எவ்ளோ முக்கியம்ன்னு எனக்கு தெரியும் சித்து..நீங்களே இங்கே வரலைனாலும் நிச்சயம் நானே இந்த குழந்தையை உங்ககிட்ட கொடுத்திருப்பேன்.." என்றவளை அழுத்தமாக பார்த்தவன், "ரொம்ப சந்தோஷம்.. இந்த வார்த்தையை நீ எப்பவும் மறக்காம இருந்தா சரி.. இப்போ நீங்க போகலாம் மிஸ்
மௌனிகா.. ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. எனக்கு ஒர்க் இருக்கு.." என்றவன் அவள் கண் முன்னாடியே அந்த ரெசிக்கினேஷன் லெட்டரை கிழித்து குப்பை தொட்டியில் போட்டான்.


உயிர்ப்பு இழந்து இயந்திரமாக கதவு வரை சென்றவள் பின் என்ன நினைத்தாளோ அவன் அருகில் வந்தவள் அவன் கண்ணங்களை தாங்கி அவனது உயரத்திற்கு எம்பி அவன் இதழில் தன் இதழை அழுத்தமாக பொருத்தினாள். அவனை போன்று கோபமாக இல்லாமல் அவளின் ஒட்டு மொத்த காதலையும் அந்த இதழ் முத்தத்தில் வெளிப்படுத்தினாள்.


ஆனால் அவனோ இறுக்கமாய் அசைவற்று இருந்தான். இருந்தும், அவளை விலகி தள்ளவும் இல்லை அதே சமயம் அவளை அரவணைத்து கொள்ளவும் இல்லை. மாறாக தன்னுள் இருகி நின்றான். அவனது இருக்கத்தை அவள் உணர்ந்தாலும் அதை எல்லாம் அவள் கண்டு கொள்ளவே இல்லை. அவளாக களைத்து போகும் வரை முழுதாக அவன் இதழை சுவைத்து விலகியவள், "உங்களோட இந்த பொய்யான கோவமும், வெறுப்பும் உண்மை ஆகி்ட கூடாதுன்னு தான் நான் உங்களை விட்டு வந்தேன் சித்து.. என்றாவது ஒரு நாள் நீங்களும் புரிஞ்சிப்பீங்க.. " என்றவள் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டாள்.


அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் கை முஷ்ட்டியை மடக்கி டேபிளில் ஓங்கி குத்தினான். "குழந்தையாம்.. குழந்தை.. தான் பிரக்னன்ட் ஆனது கூட தெரியாம இன்னும் குழந்தையா சுத்திட்டு இருக்க உன்னை வைச்சு கிட்டு நான் எப்பிடி தான் சமாளிக்க போறேனோ.." என்றவன் அடுத்து செய்ய வேண்டியதை நினைத்து தன் மொபைலில் இருந்து அழைப்பு விடுத்தான். அந்த பக்கம் அழைப்பு எடுத்ததும் பேசி முடித்தவனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.


கேபினிலிருந்து வந்த மௌனிகா நேரே தோழியிடம் சென்றவள், "கீர்த்தி, எனக்கு உடம்பு சரியில்லை.. நான் வீட்டுக்கு போறேன்.. நீ வந்திடு.. " என்று அவளின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுன்னு சென்று விட்டாள்.


செல்லும் தோழியையே பார்த்து கொண்டிருந்த கீர்த்தியின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. இன்னும் எவ்ளோ தூரம் தான் போக முடியும் மௌனி.. எதாவது ஒரு கட்டத்துல நீ ஒரு முடிவு எடுத்து தானே ஆகனும். என்று நினைத்தவள் கையில் இருந்த ஃபோனை காதில் வைத்து, "பிரபா அண்ணா.. மௌனி வீட்டுக்கு போய்ட்டாள். இனி என்ன செய்யணுமோ அதை நான் பார்த்துக்குறேன்.. அவளை எப்பிடியாவது இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது என்னோட பொறுப்பு.. " என்று ஃபோனை அனைத்தவள் பின் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.


ஈவினிங் வேலை முடிந்து கிளம்பும் போது தான் கீர்த்திக்கு நினைவு வந்தது. காலையிலே மௌனி வண்டி எடுத்துட்டு போய்ட்டாள். இப்போ எப்பிடி போறது என்ற யோசனையில் கீழே வந்தவள் எதிரில் வந்த கார்த்திக்கை கவனிக்காமல் அவன் மீதே இடித்து விழ போனவள் அவன் சட்டையை பிடித்து பேலன்ஸ் இல்லாமல் தடுமாறியவளின் இடையில் கை கொடுத்து தூக்கி நிறுத்தியவன், "எப்போ பார்த்தாலும் எங்கையாவது விழுந்து வைக்கிறதே உன் வேலையா?.. எதிர்ல ஆள் வரது கூட தெரியாம அப்பிடி என்ன யோசனை?.. " என்று கத்தியவனிடம், "சா..சாரி சார் ஏதோ தெரியாம மோதிட்டேன்.." என்றவளின் முகத்தையே குறும்பாக பார்த்தவன், "நீ தெரிஞ்சே இடிச்சாலும் நான் வேண்டாம்னா சொல்ல போறேன்.." என்ற அவனின் வார்த்தையில் அவள் குழம்பி போய் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து கொண்டிருக்கும் போதே.. "என்னடா என் தங்கச்சியை மிரட்டிட்டு இருக்கியா?.. " என்றபடி பிரபா அங்கு வந்து சேர்ந்தான்.


"ஆமா.. அப்படியே உன் தங்கச்சியை நாங்க மிரட்டிட்டாலும்.. அவள் வாயை திறந்து பேசிட போறாள்.. என்று முனுமுனுத்தவன்.. சரி வா பிரபா போகலாம். உன்னை பிக்கப் பண்ண தான் வந்தேன்.. "என்றவாறு கீர்த்தியின் மீது ஒரு பார்வையை செலுத்தி விட்டு காரை நோக்கி சென்றான்.


இவர் ஏன் இப்பிடி பார்த்துட்டு போறாரு.. என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே பிரபா அவளிடம், "கீர்த்தி நீ வாம்மா.. நான் உன்னை ட்ராப் பண்ணறேன்.. மௌனி தான் காலையிலே போய்ட்டாளே.." என்றவனிடம். "இல்லை அண்ணா.. பரவாயில்லை நானே போய்கிறேன்.." என்று அவள் மறுக்க.

"அது இல்லை கீர்த்தி.. நாங்க அந்த பக்கம் தான் போறோம்.. சோ நோ ப்ரோப்லம்.. நாங்களே உன்னை ட்ராப் பண்ணறோம்.. வாம்மா போகலாம்.. " என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே கார்த்திக் காரை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகில் வர, பிரபா இயல்பு போல் பின்னால் ஏறி கொள்ள கீர்த்தி தயங்கியவாறு நின்றாலும் முன் பக்கம் கார்த்தியின் அருகிலே ஏறி அமர்ந்து கொண்டாள்.

பின்னால் அமர்ந்த பிரபா உதட்டில் தவழ்ந்த சிரிப்போடு தன் ஐபேடில் ஹெட்செட் கனெக்ட் செய்து காதில் மாட்டி கொண்டு சீட்டின் பின்புறமாய் கண் மூடி சாய்ந்திருந்தான்.

கீர்த்திக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. கார்த்திக் வண்டியை ஓட்டி கொண்டிருந்தாலும் அவன் பார்வை தன் மேல் படிவது போல் தோன்றி உள்ளுக்குள் படபடப்பாக உணர்ந்தாள். கையில் வைத்திருந்த பையை அழுத்தி பிடித்து கொண்டு டென்ஷனாக அமர்ந்திருந்தவளை பார்த்த கார்த்திக் அவள் கை மீது தன் கையை வைத்து அழுத்தியவன், "என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. ஆர் யூ ஓகே.." என்ற அவனது இந்த மிருதுவான குரலில் அவள் இன்னுமே படபடப்பாக உணர்ந்தாள். மொழி தெரியா குழந்தை போல் மலங்க மலங்க விழித்தவளை பார்த்து அவள் கன்னத்தில் கை வைத்து "என்னாச்சும்மா.. " என்று பரிவோடு கேட்டவனின் வார்த்தையில் மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல் 'ஒண்ணுமில்லை' என்று தலை அசைத்தாள். அவள் செய்கையில் சிரித்தவாறு 'ஒண்ணுமே..இல்லையா.. ' என்று அவளை போலவே தலை அசைத்தவன், அதற்கு மேலும் அவளை சீண்டாமல் சாலையில் கவனத்தை செலுத்தினான்.


கீர்த்தி இறங்க வேண்டிய இடம் வந்ததும் வண்டியை நிறுத்திய கார்த்திக் அவளை பார்க்க. அவளோ திரும்பி பிரபாவை பார்த்து "இவ்வளோ தூரம் வந்தாச்சு.. வீட்டுக்குள்ள வந்துட்டு போங்கண்ணா.. ப்ளீஸ்.. " என்று கெஞ்சியவளிடம் மறுக்க தோன்றாது வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் அவளுடன் சென்றனர்.


பிரபாவின் வீடு போல் பிரமாண்டமாக இல்லா விட்டாலும் ஓரளவு பெரிதாகவே இருந்தது. அதில் கீழே ஒரு போஷனாக பிரித்து மௌனியும், கீர்த்தியும் தங்கியிருக்கின்றனர். எப்போதும் இயல்பு போல் கீர்த்தி உள்ளே நுழைய அவளை தொடர்ந்து பிரபாவும் கார்த்திக்கும் உள்ளே நுழைந்தனர்.


ஹாலில் உள்ள சோஃபாவில் தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்கி கொண்டிருந்த மௌனியை கண்டவள், "ஹேய் மௌனி.. எழுந்திரிடி.. யார் வந்துருக்காங்கன்னு பாரு.. " என்று கீர்த்தி உலுக்கியத்தில் கண் திறந்தவள் அங்கு நின்ற பிரபாவையும், கார்த்தியையும் பார்த்து சட்டென எழுந்து நின்றாள்.


பிரபாவோ அவளை அழுத்தமாக பார்த்தான் என்றால், கார்த்திக்கோ "ஹேய் அருந்தவாலு.. என்னாச்சும்மா உடம்பு சரியில்லையா?.. ஏன் ஒரு மாதிரி இருக்க.." என்று சோர்வாக இருந்த அவளின் முகத்தையும் தன் நண்பனின் முகத்தையும் பார்த்தவாறே கேட்டான்.


அதில் தன்னை சமாளித்தவள் வழக்கம் போல் தன் முகபாவத்தை மாற்றி கொண்டு சிரித்தவாறு, "அதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணா.. கொஞ்சம் டயேர்டு.. வாங்க அண்ணா.உட்காருங்க.." என்று அவர்களை வரவேற்றாள்.


பிரபாவை கண்டு கொள்ளாமல் கார்த்தியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அதற்குள் கீர்த்தி அனைவர்க்கும் குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தவள் அப்போது தான் டீபாவின் மேல் இருந்த கவரை பார்த்தாள். அதில் டானிக், மாத்திரை, பேப்பர் என்று அடங்கிய அந்த கவரை கையில் எடுத்தவாறு, "மௌனி ஹாஸ்பிடல் போயிருந்தியாடி.. உடம்புக்கு ரொம்ப முடியலையா.. என்னையும் கூட கூட்டிட்டு போயிருக்கலாம் தானே?.." என்றபடி கையில் இருந்த பேப்பரை பிரித்து பார்த்தவளின் முகம் செந்தணலாக மாறியது.


மௌனியோ பயத்தில் உடல் நடுங்க தோழியின் முகத்தை பார்த்தவாறே எழுந்து நின்றாள்.


அந்த ரிப்போட்டை படித்த கீர்த்தி அடுத்த நொடி தாமதிக்காது மௌனியின் அருகில் வந்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அவள் அடித்ததில் நிலை தடுமாறிய மௌனி சோஃபாவின் மீதே தவறி விழுந்தாள். திடீரென்று நடந்த இந்த நிகழ்வில் ஆண்கள் இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.


பிரபாவோ தன்னுள் இறுகி நின்றானே தவிர வேறு அவனால் செய்ய முடியவில்லை. நிலைமை விபரீதமாக மாறி விட்டதை உணர்ந்து அவன் அமைதி காத்தான். ஆனால் கார்த்திக் ஓடி போய் மௌனியை தாங்கியவன் கீர்த்தியை முறைத்து, "அறிவு இருக்கா உனக்கு.. என்ன நடந்துச்சின்னு.. இவளை இப்பிடி அடிக்கிறே.. " என்று கோவமாக கத்தினான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் கீர்த்தி கையில் இருந்த பேப்பரை மௌனியிடம் காட்டி, "இதுக்கு என்னடி அர்த்தம்.. இப்போ நீ எந்த நிலைமையில வந்து நிக்கிறேன்னு தெரியுமா?.. என்று கோவமும் அழுகையுமாய் கேட்டவளிடத்தில் பதில் சொல்லாது தலை குனிந்து அழுது கொண்டிருந்த மௌனியை கண்ட கார்த்திக்கும் ஏதோவோ சரியில்லை என்று நினைத்தவன் எழுந்து, கீர்த்தியின் கையில் இருந்த ரிப்போட்டை வாங்கி பார்த்தவனுக்கு சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று ஒன்றும் புரியவில்லை. அதில் மௌனி கருவுற்று இருப்பதாக போடப்பட்டிருந்தது.


சற்று நேரம் அங்கு அமைதியே நிலவியது.அங்கிருந்த நால்வரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர். மௌனியின் விசும்பல் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. அதற்கும் மேலும் பொறுமையை கை விட்ட கீர்த்தி நேரே பிரபாவிடம், "அண்ணா உங்க ரெண்டு பேர் கல்யாணம் உடனே நடந்தாகனும்.. " என்று தீர்க்கமாய் ஒலித்த கீர்த்தியின் குரலில் மௌனி அதிர்ந்து இவளுக்கு எப்படி தெரியும் என்பது போல் பார்த்தாள்.


பிரபாவோ மௌனியையே கூர்மையாக பார்த்தபடி, " உன் பிரண்ட் அவளாவே எங்கிட்ட வந்து கேட்டா மட்டுமே இந்த கல்யாணம் நடக்கும் கீர்த்தி.. " என்று இருக்கமாய் வந்த அவன் குரலில் மௌனி அடிபட்ட பார்வை ஒன்றை அவன் மீது செலுத்தினாள். அவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அழுத்தமாய் நின்றான்.


அதற்குள் கீர்த்தி மௌனியை பார்த்தவாறே, "கண்டிப்பா அவள் சொல்லுவாள் அண்ணா.. இந்த கல்யாணத்துக்கு அவள் சம்மதிச்சே ஆகனும்.. அப்பிடி இல்லைன்னா அதுக்கப்புறம் என்னை அவள் உயிரோடவே பார்க்க முடியாது.. " என்று தீவிரமாய் ஒலித்த அவள் குரலில் அங்குள்ள அனைவருமே அதிர்ந்து நின்றனர். மௌனியோ ஓடி வந்து கீர்த்தியை அணைத்து கொண்டு, "ஏண்டி.. இப்பிடியெல்லாம் பேசுற.. எனக்குன்னு உன்னை விட்டா வேற யாரு இருகாங்க.. " என்று கதறியவளை கண்டு கீர்த்திக்கும் அழுகை வந்தது. இருந்தும் மௌனியின் வாழ்க்கைக்கு தன் கோபம் மட்டுமே இப்போதைக்கு உதவி என்று நினைத்தவள் அழுகையை கட்டு படுத்தி தன்னுடமிருந்து அவளை பிரித்து அழுத்தமாய் பார்த்தாள் அவளின் பதிலுக்காக.

அதை புரிந்து கொண்ட மௌனியும் பிரபாவிடம் திரும்பி, "என்..எனக்கு இந்த கல்யாணத்துக்கு சம்..சம்மதம்.. " என்று அழுது கொண்டு தேம்பி தேம்பி சொன்னவளை குற்றம் சாற்றும் வகையில் பார்த்து வைத்தான்.

பின் கீர்த்தியிடம் திரும்பி, "கல்யாணம் வரைக்கு இவளை ஜாக்கிரதையாய் பார்த்துக்கோ.. மறுபடியும் எங்கையாவது ஓடிட போறாள்.. "என்று சொன்னவனை கண்ட கீர்த்தி சிரித்தவாறு, "அண்ணா.. இந்த கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடந்தாகனும்.. " என்ற அவளின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தவன் "கண்டிப்பாம்மா.. " என்று கண்களால் கீர்த்தியிடன் நன்றியை தெரிவித்து விட்டு மௌனியின் மீது பார்வையை செலுத்தியபடி அங்கிருந்து சென்றான். கார்த்தியும் அவனுடன் செல்ல போனவன் பின் நின்று கீர்த்தியின் மீது அழுத்தமான பார்வையை செலுத்தினான்.

அவன் பார்வையை அவள் உணர்ந்தாலும் ஏதும் சொல்ல முடியாத நிலையில் தலை குனிந்து நின்றாள். அதன் பிறகு கார்த்திக்கும் அங்கு நிற்க்க முடியாமல் பிரபாவோடு சென்று விட்டான்.

காரில் சென்று கொண்டிருந்த இரு ஆண்களின் மனதிலும் ஓரே எண்ணம் தான் இருந்தது. "என்ன மாதிரியான நட்பு இது.. " என்று அவர்களால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

Pls drop your comments :
https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#22
Hi frnds,

Happa oru valiya type panni mudichuten.. more than time problm frnds.. intha ud enna romba kashata paduthiruchi.. Sariya vanthuruka nu theriyala so padichitu sollunga pls..
அத்தியாயம் 16:


காரில் சென்று கொண்டிருந்த பிரபா மற்றும் கார்த்திக் இருவரின் மனதிலும் வெவ்வேறு சிந்தனைகள் ஓடி கொண்டிருந்தது. முதலில் தன் நிலைக்கு வந்த கார்த்திக், ஏதோ தீவிரமான யோசனையில் வண்டியை ஓட்டி கொண்டிருந்த இருந்த பிரபாவை பார்த்து சிறு புன்னகையோடு அவன் தோள் மீது கை வைத்து "வாழ்த்துக்கள் மச்சான்..." என்று மனமார்ந்த அன்போடு சொன்னவனை பார்த்த பிரபா மெல்லிய சிரிப்போடு தலை அசைத்து ஏற்றுக்கொண்டான். ஆனால், அவன் உதட்டில் தவழ்ந்த சிரிப்பு அவன் கண்ணை எட்ட வில்லை என்பதை கார்த்தியால் உணர முடிந்தது.


"மச்சான்.. எல்லாம் சரியாகிடும்டா.. " என்று ஆறுதலாக சொன்ன நண்பனை உணர்வில்லாது பார்த்தவன், "எப்பிடிடா?.. எப்பிடி சரியாகும்?.. இந்த மாதிரி ஒரு நிலைமை வந்திரக் கூடாதுன்னு தானே நான் நினைச்சேன்.. இன்னைக்கு கீர்த்தியோட முகத்தை கூட அவளால நிமிர்ந்து பார்க்க முடியல அப்பிடி இருக்கும் போது நாளைக்கு எல்லாருமே இதே கேள்வி தானே கேப்பாங்க..இல்லை மச்சான்.. அந்த மாதிரி எதுவும் நடக்க கூடாது.. யாரும் அவளை கேள்வி கேட்க நான் விட மாட்டேன்.. ஆனால், இது எல்லாம் அவளால வந்தது.. என்னதான் நல்லவளா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடியே பிரக்னன்ட் ஆகிட்டான்னு தெரிஞ்சா இந்த உலகம் அவளை தப்பா தான் பேசும்.. இதை கூட புரிஞ்சிக்காம அப்பிடி என்ன பிடிவாதம்?.. " என்று கோவத்தில் அவன் கை இறுகியது அதன் விளைவு கார் ரோட்டில் சீறி பாய்ந்தது.


அதில் பயந்த கார்த்திக், "டேய்.. டேய்.. வண்டியை எங்கையாவது கொண்டு போய் மோதிடாதடா.. உங்க பிரச்சனைல எனக்கு எதாவது ஆகிட்ட போகுது.. நான் இன்னும் 'எதையும்ம்ம்...மே' அனுபவிக்கல.. " என்று போலியாக அலறியவனை நம்பாது பார்த்தவன், "ம்ம்ம்.. உன்னை பார்த்தா அப்பிடி தெரியலயே.. எதுக்கும் நம்ம காலேஜ் டேஸ்ல உன் பின்னாடி சுத்தினாளே அந்த ரோஷினி அவள்கிட்ட கேட்டா தெரிஞ்சிடும் உன் யோக்கியத்தை.." என்று பதிலுக்கு கிண்டலடித்தவனிடம் கை தூக்கி சரணடைந்த கார்த்திக், " போதும்டா.. புதுசா ஏதும் பொரளியை கிளப்பி என் வாழ்கையை கெடுத்துடாதீங்க.. உனக்கு புன்னியம்மா போகட்டும்.. " என்றவனை கண்டு வாய் விட்டு சிரித்தான்.


அவன் சிரிப்பதையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கின் மனம் கனிந்தது. நண்பன் இது போல் சிரித்து எத்தனை நாட்கள் ஆயிற்று. பின் விளையாட்டை கை விட்டவனாக, "இப்போ என்ன பண்ண போற மச்சான்.. கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் அது தான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது.. அது மட்டுமல்ல மச்சான்.. மௌனி சின்ன பொண்ணுடா .. நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கனும்.. " என்று நண்பனின் கோபத்தை பற்றி நன்கு அறிந்தவனாக எடுத்துரைத்தான்.


அதை கேட்ட பிரபா, "ஆமா ரொம்ப சின்ன பொண்ணு தான்.. " என்று முனகியவன் நினைவில் அவள் தன்னோடு கூடிய ஞாபகங்கள் வந்து அவன் உதடுகள் சிரிப்பில் வளைந்தது. பின்னர் கார்த்திக்கிடம் திரும்பி, "நான் அம்மாகிட்ட பேசிட்டு எப்பிடியாவது இந்த பத்து நாட்களுக்குள்ளேயே கல்யாணத்தை நடத்துற மாதிரி செய்யணும்..ஆனால் கல்யாணம் நான் சொல்ற மாதிரி தான் நடக்கணும்.. " என்று இனி தான் செய்ய போவதை பற்றி அவனிடம் விரிவாக சொல்லி முடித்தான். அதற்குள் கார்த்திக் தங்கியிருக்கும் அப்பாட்மென்ட் வரவும் நண்பனிடம் சொல்லி விட்டு கார்த்திக் இறங்கி கொண்டான்.


கார்த்திக் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் தாண்டிய அடுத்த தெருவில் தான் பிரபாவின் வீடு உள்ளது. பிரபா கார்த்திக்கை தங்களோடு தங்குமாறு எத்தனையோ முறை வற்புறுத்தியும் கார்த்திக் மறுத்து விட்டான். அதே போல் தான் பிரபாவின் பிஸ்னஸ்சில் கார்த்திக் பார்ட்னராக இருந்தாலும் அவன் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை மட்டுமே பெற்றுக்கொள்வான். பிரபாவின் அம்மா வசந்திக்கு கார்த்திக்கின் இந்த சுய மரியாதை குணத்தை கண்டு எப்போவுமே பெருமை கொள்வார். ஒரு காலத்தில் அவரும் இதுபோல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர் தானே.. ஒரு நம்பிக்கை துரோகியால் கணவனை இழந்து கையில் குழந்தையோடு தனியாக நின்று தொழிலை கவனித்து சுயமரியாதையோடு வாழ்க்கையை போராடி வாழ்ந்தவர். அதனாலே கஷ்டப்பட்டு முன்னேறியே கார்த்திக்கின் மீது அவருக்கு எப்பவும் பெருமையாகவும், கர்வமாகவும் இருக்கும்.


கார்த்திக் செல்வதையே பார்த்து கொண்டிருந்த பிரபாவுக்கும், சீக்கிரம் தன் நண்பனின் வாழ்க்கையிலும் சந்தோஷம் கிடைக்க வேண்டும் என்றவனின் நினைவில், இன்று மாலை கார்த்திக்கின் பார்வை கீர்த்தியின் மீது வித்தியாசமாக படிவத்தை கண்டான். இது நாள் வரை எந்த பெண்ணிடமும் அவன் முகம் குடுத்து பேசியது இல்லை. ஆனால் கீர்த்தியிடம் மட்டும் அவன் பார்வை தடுமாற்றத்தை பிரபா உணர்ந்தான். அதனாலேயே அவன் கீர்த்தியை ட்ராப் பண்ணுவதாக சொல்லி அவளை காரில் அழைத்து சென்றது. காரில் செல்லும் போது பிரபா காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டானே தவிர அவன் தன் ஐபாட்யை ஆன் கூட பண்ணவில்லை. அதனாலயே கார்த்திக் கீர்த்தியிடம் பேசியது அவன் காதில் தெளிவாகவே விழுந்தது. அந்த நிமிஷமே பிரபாவிற்கு கார்த்திக்கின் மனதில் என்ன உள்ளது என்பதை நன்கு புரிந்து கொண்டான்.கூடிய சீக்கிரம் கீர்த்தியும் புரிந்து கொள்ள வேண்டும்.. என்று நண்பன் பற்றிய சிந்தனையிலே வீடு வந்து சேர்ந்தான்.


அங்கு கார்த்திக்கோ, அப்பாட்மென்டின் ஓரத்தில் உள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் இன்னும் தூங்காமல் தங்கள் அம்மாக்களை தொந்தரவு படுத்தி கொண்டு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுடன் தானும் சென்று குழந்தையாகவே மாறி அவர்களுடன் விளையாடினான். அங்குள்ளவர்களுக்கு அவனை நன்றாக தெரியுமாதலால் அவனிடமே குழந்தைகளை விட்டுட்டு அவர்கள் சென்று தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வந்து நன்றியோடு தங்கள் குழந்தைகளை தூக்கி சென்றனர்.


அவர்கள் போவதையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கு இதே போல்
தானும் தன் சிறு வயதில் அம்மாவின் அன்புக்காக ஆசிரமத்தில் ஏங்கி தவித்தது நினைவுக்கு வர எப்போதும் போல் அந்த நினைவை ஓரம் தள்ளினான். எப்பொழுதும் எல்லாம் அவன் தனிமையை உணர்கிறானோ அப்போது எல்லாம் எதாவது ஒரு வேலையில் தன்னை மூழ்கடித்து கொள்வான். தனிமை என்ற உணர்வு தன்னை நெருங்க விடாது பார்த்துக்கொள்வான். எல்லா நேரங்களிலும் இல்லை என்றாலும் எதாவது பண்டிகை நாட்களில் மற்றவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமா வாழும்போது ஏதோ ஒன்றை தான் இழந்ததாக தோன்றும். இப்பிடி எதையெதையோ வெகுநேரம் யோசித்தவன் பின்,


லிஃப்ட்டில் ஏறி ஆறாம் தளத்தில் உள்ள தன் வீட்டிற்குள் நுழைந்தவனை எப்போதும் போல் இருள் சூழ்ந்த வீடே அவனை வரவேற்றது. நன்றாக பளிங்கு மற்றும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட அந்த வீட்டில் பெரிய ஹால், அதை ஒட்டி கிட்சன், ஹாலை கடந்து ஒரே ஒரு பெட்ரூம் வித் அட்டாச் பாத்ரூம் என இவை மட்டுமே இருந்தாலும் நன்றாக பெரிதாய் உயர்தக பர்னிச்சர் கொண்டு அழகான பெயிண்டிங் மற்றும் வண்ண ஒளி விளக்குகள் கொண்டு அழகுற அந்த வீடு இருந்தாலும் ஏனோ அவனுக்கு அது வெறுமையாக தான் தோன்றியது.


ஹாலில் உள்ள லைட் கூட போடாமல் நேரே ரூம்க்கு சென்றவன் இரவு விளக்கை மட்டும் போட்டு விட்டு ரெப்பிரேஷ் ஆகி கட்டிலில் கண்மூடி சாய்ந்தவனின் நினைவில் கீர்த்தியின் முகமே தோன்றி அவனை அலைக்கழித்தது. அதிலும் அவளின் அந்த மருண்ட விழிகளும், அவள் அணிந்த அந்த ஒற்றை கல் மூக்குத்தியில் ஜொலித்த அவளின் பால் வண்ண முகம், முதன் முதலில் தான் தொட்டு அவளை தூக்கிய போது அவளிடத்தில் உண்டான நடுக்கம் என அவளது நினைவுகளே அவனை ஆட்கொண்டது. எப்போதும் அவன் தன் தனிமையை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டான். ஆனால் இன்று மட்டும் ஏனோ இந்த தனிமை அவனுக்கு பெரிதும் வலித்தது. கண் மூடி படுத்திருந்தவனின் விழியோரத்தில் இருந்து அவனையும் அறியாமல் கண்ணீரானது வழிந்தோடியது. இப்போதே அவள் தன்னருகில் வேண்டும் என்று அவன் மனம் தவித்தது. தாயை தேடும் சேய்யாக அவன் மனமும் அவளை நாடியது. அவளின் அணைப்புக்குள் புகுந்து இந்த தனிமையில் இருந்து தன்னை காத்து கொள்ள வேண்டும் என்று சிறு குழந்தையாக அவன் ஏங்கி தவித்தான்.


இந்த அளவிற்கு தன் மனம் அவளை நடுகிறதா என்று அவனே வியக்கும் வகையில் அவள் நினைவுகள் எழுந்து அவனை தடுமாற செய்தது. அந்த ஏசி அறையிலும் அவனுக்கு வியர்க்க மூச்சு முட்டுவது போல் தோன்றி எழுந்தவன் ஜன்னல் அருகில் சென்று அதன் கதவை திறந்து விட்டான். இரவு நேரத்து ஜிலென்று காற்று அவன் முகத்தில் பட்டு அவன் வெம்மையை தனித்தது. ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலை படுத்தி கொண்டவன், "குட்டிம்மா.. இன்னைக்கு நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறடி.. " என்றவனின் நினைவில் எப்பொழுதும் தன்னை பயத்தில் விழி விரித்து பார்க்கும் அவளின் மருண்ட கண்களை நினைத்து இப்போதும் அவன் உதட்டில் புன்னகை மலர்ந்தது. பின்னர் அவளை பற்றிய சிந்தனையிலேயே போய் படுத்தவனுக்கு உடல் அசதியினால் மெல்ல அவன் விழிகள் நித்திரையின் கீழ் ஆழ்ந்தது.


காலையில் கண் விழித்த மௌனிக்கு ஏனோ ரொம்ப அசதியாக இருந்தது. இரவு முழுவதும் அழுததில் கண்கள் எரிச்சல் எடுக்க முகம் முழுவதும் சிவந்து வீங்கி போய் இருந்தது. கட்டிலில் இருந்து எழப்போனவள் திடீரென்று கண்கள் இருட்டி கொண்டு தலை சுற்றி தடுமாறி விழ போனவளை சட்டென தாங்கி பிடித்த கீர்த்தி மீண்டும் கட்டிலேயே அவளை உட்காரவைத்தாள்.


பின் அருகில் இருந்த தண்ணியை எடுத்து அவளிடம் கொடுத்தவள், "மௌனி.. என்னடி என்ன பண்ணுது?.. ஹாஸ்பிடல் போகலாமா?.. " என்று பதட்டத்துடன் கேட்டவளை கண்டு புன்னைகைத்த மௌனி, "எனக்கு ஒன்னும் இல்லை கீர்த்தி.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. நீ எதுக்குடி எப்போ பார்த்தாலும் இப்பிடி டென்ஷன் ஆகுற.. நேத்து கூட நீ அடிச்சது எனக்கு ரொம்ப வலிக்குது தெரியுமா.. " என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு பாவம் போல் சொன்னவளை முறைத்த கீர்த்தி, "நீ பண்ணி வைச்ச வேலைக்கு உன்னை அடிச்சதோடு விட்டேனே.. அதை நினைச்சு சந்தோஷப்படு.. " என்று கோபத்தோடு சொன்னவளை கண்டு,
'க்களுக்..' என்று சிரித்து வைத்தாள் மௌனி.


"இல்லை கீர்த்தி.. இப்போ எல்லாம் பிரக்னன்ட் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்கிறது தான் பேஷன்.." என்று சிரிக்காமல் சொன்னவளை அதற்கு மேலும் தாமதிக்காத கீர்த்தி அருகில் இருந்த தலையணை எடுத்து அவள் மீதே சரமாரியாக மொத்தினாள். பதிலுக்கு மௌனியும் இன்னோரு தலையணையை எடுத்து அவள் மீது வீச.. என்று இருவருக்கும் நடுவில் ஒரு குட்டி கலாட்டாவே நடந்து கொண்டிருக்கும் போது கீர்த்தியின் அம்மா மருதம் கையில் காபி ட்ரையுடன் அறைக்குள் நுழைந்தார்.


அவரை பார்த்ததும் மௌனி சண்டையை மறந்தவளாக, "அம்மா... " என்று கூவலுடன் ஓடி போய் அவரை அணைத்து கொண்டவள், "எப்போ அம்மா வந்தீங்க?. நீங்க வரதா இந்த பக்கி என்கிட்ட சொல்லவே இல்லை.. " என்று சலுகையாய் அவர் தோளில் சாய்ந்து கொண்டு பேசியவளின் கனத்தை வருடியவர், "என் மௌனி கண்ணு நிச்சயத்துக்கு நாங்க வராம இருப்போமா ராசாத்தி..." என்று அவளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தவர் அவளிடம் காப்பி கப்பை குடுத்து விட்டு கீர்த்தியிடம் திரும்பி, "கீர்த்தி சாய்ந்திரம் வரவங்களுக்கு சாப்பாடு நாமளே செஞ்சிடுலாமா?.. இல்லை வரவங்க ரொம்ப வசதியானவங்கன்னு சொன்னியே எந்த மாதிரி சாப்பிடுவாங்கன்னு சொன்னினா அதே மாதிரி செஞ்சிடுலாம்.. " என்றவரிடத்தில், "இல்லைம்மா நீங்க எதுவும் செய்ய வேண்டாம் நான் கேட்டரிங் மெம்பெர்ஸ்
கிட்ட ஆர்டர் கொடுத்துட்டேன் அவுங்க பாத்துப்பாங்க.. அப்புறம் டேக்ரேஷன்க்கு
சொல்லிருந்தேன் அவங்க சரியா பண்றாங்களான்னு மட்டும் பாத்துக்கோங்க.. " என்று மௌனியை அழுத்தமாக பார்த்துக்கொண்டே சொல்லி முடித்தாள் கீர்த்தி.


அதற்குள் கீர்த்தியின் அம்மா "நான் எல்லாம் பார்த்துக்குறேன் கீர்த்தி.. நீ மௌனிக்கு என்ன வேணுமோ கேட்டு அவளை தயார் பண்ணு.. இன்னைக்கு வரவுங்க என் பொண்ணை பார்த்து அப்பிடியே அசந்து போயிடனும்.. " என்று மௌனியின் தலையை பாசத்தோடு வருடியவரை கண்டு அவளுக்கு கண் கலங்கியது. அதை பார்த்தவர், "நாங்க இருக்குற வரைக்கும் நீ எதுக்கும் கலங்க கூடாது கண்ணு.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்.. " என்றபடி அவர் அங்கிருந்து சென்றார்.


மௌனியோ அதிர்ந்து போய் கட்டில் அமர்ந்தாள். நேற்று தான் கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொல்லும் போதே ஓரளவு அவள் இதை எதிர் பார்த்தே இருந்தாள். அவனை பற்றி அவளுக்கு தெரியாதா என்ன..நல்லவேளை இன்று நிச்சயத்தோடு நிறுத்தி விட்டான். முடிந்திருந்தால் கல்யாணத்தையே நடத்தியிருப்பான் கிராதகா.. என்று உதட்டின் ஓரம் சிரிப்பில் வளைய தன்னவன் பற்றிய சிந்தனையில்

இருந்தவளின் அருகில் வந்த கீர்த்தி அவளின் கை பிடித்து, "மௌனி.. பிரபா அண்ணா தான் இன்னைக்கே நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க.. அதே மாதிரி இந்த ஒரு வாரத்துக்குள்ள அதாவது, வர வெள்ளி கிழமையே கல்யாணம்ன்னு முடுவு செய்ச்சிருக்காங்க.." என்றதும் மௌனியின் முகம் ஒரு நொடி வேதனையில் சுருங்க அதை பார்த்த கீர்த்தி, "என்..எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும் மௌனி.. கண்டிப்பா நீ எங்ககிட்ட இருந்து எதையோ மறைக்கிற. சும்மா எல்லார்கிட்டையும் அவரை வெறுக்குற மாதிரி என்கிட்டையும் நடிக்காதே.. அப்பிடி அவரை புடிக்காம தான் அவரை தேடி போய் உயிருக்கும் உயிராய் நேசிச்சு அவரோடு ஒண்ணா வாழ்ந்துட்டு இப்போ அவரை பிரியவும் முடியாம சேர்ந்து வாழவும் முடியாம உனக்குள்ளயே ஒவ்வொரு நாளும் தவிச்சிட்டு இருக்கியே.. எதுக்குடி., எதுக்கு இப்பிடி நீயும் தவிச்சிட்டு அண்ணாவையும் கஷ்டப்படுத்துற?.. அப்பிடி என்ன தான் இருக்கு உன் மனசுல.. அதை சொல்லி தான் தொலையேண்டி.. " என்று ஏறக்குறைய கத்தினாள்.


கீர்த்தி கேட்ட எந்தவொரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு தலை குனிந்து அமைதியாய் இருந்தாள் மௌனி. அவளால் எப்பிடி பேச முடியும். அவள் தந்தை செய்த பாவத்தை அவளால் எப்பிடி எல்லோரிடமும் சொல்ல முடியும். அதற்கு பரிகாரம் செய்ய தானே பிரபாவின் வாரிசு நான் சுமக்க வேண்டும் என்று அவளது தாய் கேட்டு கொண்டதும். அதற்காக தான் அவளும் அவனை தேடிச் சென்றது. இதோ இப்போதும் தான் யார் என்ற உண்மையை அவனிடம் சொன்னால் உடனே இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவான். அது மட்டுமா தன்னையும் தன் குழந்தையும் அடியோடு வெறுத்து விடுவானே.. அதையெல்லாம் தாங்கி கொள்ள முடியாது என்று தானே மனதை கல்லாக்கி கொண்டு அவனை விட்டு பிரிந்து வந்தது.


எதையும் சொல்லாமல் தன்னுள் இருகிபோய் உட்கார்ந்து இருந்தவளை பார்த்த கீர்த்தியும் பொறுமையை இழந்து, "சரி மௌனி.. நீ உன் பிடிவாததிலே நில்லு.. எது எப்பிடி இருந்தா என்ன இப்போ குழந்தைகாகவாது நீ இந்த
கல்யாணதுக்கு சம்மதிச்சு தான் ஆகணும்.. என் பேச்சை மீறி நீ நடக்க மாட்டேன்னு நம்புறேன்.. எந்த பிரச்சனையும் பண்ணாம சாய்ந்திரம் நிச்சயதுக்கு ரெடியாகு.. " என்று கட்டளை போல் உறைத்தவள் மற்ற வேலைகள் பார்க்க கீழே சென்று விட்டாள்.


அதன் பிறகு மௌனி அறையை விட்டு வரவே இல்லை. மதியம் உணவு வேளைக்கு கீழே இறங்கியவள் அங்கு கீர்த்தியின் தம்பி, தங்கைகள், லட்சுமி அக்காவின் குடும்பம் அது போக அவள் வீட்டில் குடியிருபவர்கள், குழந்தைகள் என வீடு முழுவதும் நிறைந்து இருந்தது. அவர்கள் எல்லோரையும் பார்த்ததும் அவளும் தன் கவலைகளை மறந்து அங்குள்ளவர்களிடம் சிரித்து பேசி அரைட்டை அடித்து அதுவும் கீர்த்தியின் தம்பி தங்கையோடு சேர்ந்து வீட்டை அலங்காரம் செய்கிறேன் என்ற பெயரில் தனக்கு தான் நிச்சயம் என்பதையும் மறந்து அவர்களோடு அட்டகாசாம் செய்து கொண்டிருந்தாள்.

மௌனியின் குறும்பு தனத்தை பார்த்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்த கீர்த்தி அப்போது தான் மேலே பலூன் கட்டுவதற்காக மௌனி அங்கிருந்த ஏணியில் ஏற போனாள். அதை பார்த்து பயந்த கீர்த்தி வேகமாக அவள் அருகில் சென்று அவளை தடுத்து திட்ட போனவள் அருகில் இருந்த தம்பி தங்கைகளை கருதி எதுவும் பேசாமல் அவளை அழுத்தமாக முறைத்தாள்.

கீர்த்தி முறைத்த பிறகே மௌனிக்கு தன் நிலை உறைத்தது. நாக்கை கடித்து அசடு வழிய தோழியை பார்த்தாள். கீர்த்தியோ தன் தலையிலேயே அடித்து கொண்டு, "நீ அலங்காரம் செஞ்சது கிழிச்சது போதும்.. ஃபங்சன்க்கு ரெடியாகனும் வா.." என்று அவளின் கை பிடித்து அழைத்து சென்றாள்.

மௌனி குளித்து முடித்து வருவதற்குள் பார்லரில் இருந்து ஆட்கள் வந்திருந்தனர். அழகான பேன்சி டிசைனர் சாரியில் நிறைய ஒளிரும் கற்கள் பதிக்கபட்டிருந்த புடவை அழகாய் பாந்தமாய் அவளை தழுவியிருந்தது. அதே போல் அவளிடம் இருந்த நகையில் வைரத்தால் ஆன கொடி போன்ற டிசைன் கொண்ட நெக்செட்டும் அதற்கு மேட்ச்சாய் இருந்த வைர காதணி மட்டும் போட்டு அழகு நிபுணர்களின் கை வண்ணத்தில் தேவதையாய் ஜொலித்தாள்.

மாலை ஆறு மணி அளவில் பிரபாவின் கார் உள்ளே நுழைந்தது. அதுவரை சாதாரணமாக இருந்தவள் ஏன்னோ கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள். பிரபாவை எப்பிடி எதிர் கொள்ள போகிறோம் என்று அவளுக்கு பயமாக இருந்தது. அவனின் கோபத்தை பற்றி தான் அவளுக்கு தெரியுமே. அதுவும் அவளின் உச்சக்கட்ட பயமே பிரபாவின் அம்மாவை நினைத்து தான். அவள் இதுநாள் வரை அவரை பார்த்தது இல்லை. இருந்தாலும் அவர் தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ என்று நினைத்தவளின் கை இப்போதும் நடுங்க தொடங்கியது.


அதற்குள் கீர்த்தியின் அம்மா அவர்களை சம்பர்தாயப்படி வரவேற்றார். பிரபா பிரபாவின் அம்மா, கார்த்திக், அவர்களுடைய பிரண்ட்ஸ் ஆபீஸ் ஒர்க்கர்ஸ் என்று எல்லாருமே வருகை தந்திருந்தனர். கீர்த்தியின் அம்மாவே எல்லோரையும் வரவேற்று அவர்களை உபசரித்தார். பிரபா தன் அம்மாவிடம் கீர்த்தி மற்றும் கீர்த்தியின் அம்மாவையும் அறிமுகம் படுத்தி வைத்தான். வசந்திக்கும் அவர்களை பார்த்தவுடன் ரொம்ப பிடித்துவிட்டது. ஆனால் கீர்த்தியின் அம்மாக்கு தான் கொஞ்சம் படபடப்பாக இருந்தார். கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர் வந்திருக்கும் மாப்பிளை வீட்டினர்க்கு எந்த குறையும் வரக்கூடாது என்று பதட்டமாய் இருந்தார்.


அவரின் மனநிலையை புரிந்து கொண்ட வசந்தி அவரின் கை பிடித்து தன்னருகில் அமர வைத்தவர், "சம்மந்திம்மா.. இது நம்ம வீட்டு விசேஷம்.. நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம்.. என் பையன் உங்க எல்லாரையும் பத்தி சொல்லி இருக்கான்.. நீங்க எந்த பயமும் இல்லாம உங்க பொண்ணை எங்களுக்கு கொடுக்கலாம்." என்று அமைதியாவும், தீர்க்கமாகவும் சொன்னவரை பார்த்த கீர்த்தியின் அம்மாவுக்கும் மனதில் இருந்த கொஞ்சநஞ்ச பயமும் நீங்கியது. பின் பெரியவர்கள் இருவரும் தங்களுக்குள் உரையாடி கொண்டிருந்தனர். வந்தவர்கள் அனைவரும் கையில் ஜூஸ் ஸ்னாக்ஸ் செலஃபீ என்று தங்கள் வேலையில் இருந்தனர். பிரபாவும் கார்த்திக்கும் கூட தங்களுக்குள் உரையாடி கொண்டிருந்தனர். என்ன தான் பிரபா கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் தன்னவளை தேடி கொண்டிருந்தது.


நேரம் ஆகுவதை உணர்ந்த கீர்த்தியின் அம்மா அனைவரையும் அழைத்து கொண்டு மாடிக்கு சென்றார். பெரிய விளையாட்டு மைதானம் போன்று இருந்த மாடியின் மத்தியில் ஒளிரும் வண்ண விளக்குகள் கொண்டு அழகான மேடை அமைக்க பட்டிருந்தது. அதே போல் மாடி முழுவதும் விதவிதமான டிசைனிங் லைட்ஸ், பூக்கள், பலூன் என்று வந்தவர் அனைவருமே அசந்து போகும் அளவிற்க்கு அலங்கார செய்ய பட்டிருந்தது. பின்னர் மௌனியை அழைத்து வருவதற்காக போக இருந்த மருதத்தை தடுத்த வசந்தி, "நானே என் மருமகளை கூட்டிட்டு வரேன்.." என்று மௌனியை தேடிச்சென்றார்.


அறையில் இருந்த மௌனிக்கோ ஹார்ட் அட்டாக் வந்துவிடும் அளவிற்கு அவளது இதயம் பயத்தில் துடித்து கொண்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் அவளின் பதட்டத்தை அவளால் மறைக்க முடியவில்லை. தோழியின் டென்ஷனை உணர்ந்த கீர்த்தியும் வெளியே வராமல் அவளுடனே இருந்தாள்.


மௌனியின் ஒட்டு மொத்த டென்ஷன்க்கு காரணமான பிரபாவின் அம்மா வசந்தி மௌனியின் அறைக்குள் நுழைந்தார். அவரை கண்டதும் மௌனி அதிர்ந்து மூச்சு அடைக்க எழுந்து நின்றாள். ஆனால் கீர்த்தியோ அவரை பார்த்து புன்னகைத்து, "வாங்கம்மா.. உள்ளே வாங்க.. இவள் தான் மௌனி.. " என்று தோழியை அவருக்கு அறிமுகம் படுத்தினாள். இருவரையும் பார்த்து புன்னகைத்த வசந்தி பின் மௌனியிடம் சென்று ஒரு நொடி அவளை கூர்ந்து பார்த்தவர் பின் முகம் மலர்ந்தவராய் அவளின் கன்னத்தை பாசத்தோடு வருடி கண்கலங்க அவளது நெற்றியில் முத்தமிட்டவர், "ரொம்ப அழகா இருக்கேம்மா.. என் பையனுக்கு நீதான் வாழ்கை துணைன்னு கடவுள் எழுதி வைச்சதே யாராலும் மாத்த முடியாது.." என்றவரின் வார்த்தை அவளுக்கு புரியாவிட்டாலும் அவருக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பதில் அவள் முகம் மலர்ந்து சதோஷத்தின் உச்சதிற்க்கே சென்று விட்டாள்.


மனதில் சந்தோஷம் அதிகரிக்க அவள்,"அத்தைம்மா.. " என்ற கூவலுடன் அவரை அணைத்து கொண்டாள். அதை பார்த்து கொண்டிருந்த கீர்த்திக்கு தான் இப்போது ஹார்ட் அட்டாக் வரும் போல் இருந்தது. சற்று முன் டென்ஷனாக இருந்தவளா இவள்.. கடவுளே இவளே புரிஞ்சிக்க முடியலையே.. என்று குழம்பி போய் நின்றிருந்தாள் கீர்த்தி.


தன்னை அணைத்து கொண்ட மௌனியை பாசத்தோடு அணைத்து கொண்ட வசந்தி புன்னகையோடு அவளிடம், "மௌனி..மேலே என் மகன் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கான். இப்போ நாம போகலை அவன் இங்கையே வந்தாலும் சொல்லுறதுக்கு இல்லை.. " என்று சிரித்தவாறு சொன்னவரை கண்டு முகம் சிவந்து விலகினாள் மௌனி.


பின்னர் வசந்தியே மௌனியின் கை பிடித்து அழைத்து கொண்டு மாடிக்கு சென்றார். உடன் கீர்த்தியும் சென்றாள். மேடையில் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து பார்த்த வசந்திக்கு சந்தோஷதில் கண்ணீர் தழும்பியது.


தன்னருகில் கோட்சூட்டில் கம்பீரமாய் நின்றவனை கண்டு அவள் மனம் தடுமாறியது. இவன் என்னவன் என்று அவளுக்கு கர்வமாய் இருந்தது. ஆனால் அவனோ எந்த உணர்வையும் காட்டாமல் சாதரணமாக நின்றிருந்தான். பின்னர் வசந்தி வாங்கி கொண்டிருந்த நிச்சய மோதிரத்தை கீர்த்தி வெள்ளி தட்டில் ரோஜா பூ இதள்களை பரப்பி அதன் மீது வைத்து எடுத்து கொண்டுவந்தாள்.

மோதிரத்தை கையில் எடுத்த பிரபா அவள் புறம் திரும்பி அவளையே அழுத்தமாக பார்த்தான். அவன் பார்வையில் தடுமாற்றத்தோடு தன் கையை நீட்டியவளின் கை பிடித்து மோதிரத்தை மாட்டினான். அவனது தொடுகையில் எப்போதும் போல் அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது. அவளின் நடுக்கத்தை உணர்ந்தவனின் முகத்தில் நமட்டு புன்னகையுடன் வேண்டும் என்றே அவள் கையை இன்னும் அழுத்தி பிடித்து மெதுவாகவே மோதிரத்தை மாட்டினான்.
அவனது பார்வையிலும் தொடுகையிலும் அவள் செங்கொழுத்தாய் மாறி போனாள். பின்னர் அவளும் நடுங்கும் தன் கை கொண்டு அவனின் கரத்தை பற்றி மோதிரத்தை அணிவித்தாள்.

எல்லோரின் கை தட்டலையும், வாழ்த்துக்களையும் பெற்று கொண்ட இருவரின் மனதிலும் சந்தோஷம் மட்டுமே இருந்தது. கீர்த்தியோ தோழியை கட்டி அணைத்து கொண்டு தன் வாழ்த்தை தெரிவித்தாள். அது போல கார்த்திக்கும் தன் நண்பனை அணைத்து கொண்டு அவன் காதில் ரகசியம் பேசி வாழ்த்தை தெரிவிக்க., அவனை தன்னிடம் இருந்து தள்ளி விட்ட பிரபா, "ச்சீய் நாயே.. போடா இங்கிருந்து.." என்று கோபம் போல் சொன்னாலும் அவனது முகத்தில் வெட்கத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.


அதன் பின்னர் வந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல புகைப்படம் எடுக்க என்று நேரம் சென்றது. மாடியின் ஓரத்தில் பப்ஃபே முறையில் விருந்துக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அது போக கார்த்திக் கீர்த்தியின் தம்பி தங்கையோடு சேர்ந்து வானவேடிக்கை போல் சரமாரியாக பட்டாசை வெடித்து கொண்டிருந்தான். அதுவரை பிரபாவின் அருகில் அமைதியாக அமர்ந்திருந்த மௌனி பட்டாசு வெடிக்கவும் அவளது இயல்பான குறும்பு தனத்தில் தன்னை மறந்து சிறு பிள்ளை போல் அவர்களிடம் சென்றவள் கார்த்திக்கிடம், "அண்ணா.. அண்ணா நான் ஒரு முறை வைக்கிறேன்.. " என்று கெஞ்சியவளிடம் புன்னகைத்த கார்த்திக் பட்டாசை அவளிடம் கொடுத்தான்.


அதை பார்த்த பிரபாவின் முகம் இறுகியது. அதை மௌனி கவனித்தாளோ இல்லையோ கீர்த்தி நன்றாகவே கவனித்தாள். பிரபாவின் இந்த கோவத்திற்கு காரணத்தை கீர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. வயிற்றில் குழந்தை இருக்கும் போது மௌனி இந்த மாதிரி குழந்தை தனமா நடந்துக்குறது அவளுக்குமே நல்லதுக்கு இல்லை என்று தன் தோழியை நினைத்து பல்லை கடித்தவள் நேரே அங்கு சென்றாள். தம்பி, தங்கை, மௌனி என்று அங்கிருந்த எல்லோரையும் அதட்டி அனுப்பியவள் கார்த்திக்கை முறைத்து விட்டு சென்றாள். செல்லும் கீர்த்தியையே பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் புன்னகை வந்தது. ஏனெனில் அவன் இங்கு வந்ததில் இருந்து கீர்த்தியின் பார்வை தன் மேல் படிவதை உணர்ந்தாலும் அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லையே.


இங்கே மீண்டும் தன்னருகில் வந்தமர்ந்த மௌனியை பிரபாவால் முறைக்க மட்டுமே முடிந்தது. அவளோ அவன் முறைப்பை கண்டு கொள்ளாமல் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள் சுற்றியும் பார்த்து தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, அவனின் கையை எடுத்து அவளின் புடவை தளப்பினுள் நுழைத்து அவள் வயிற்றில் படர விட்டவள், "பாவா.. உங்க குழந்தை உங்களை மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங்.. சோ நீங்க பயப்பட வேண்டாம்.. " என்றவளின் வார்த்தையில் அவன் உள்ளுக்குள் சிலிர்த்தாலும் இருக்கும் சூழ்நிலை கருதி வேகமாக கையை உறுவிக்கொண்டான். அவளோ ஒன்னும் நடவாத போல் முகத்தை பாவமாய் வைத்து கொண்டாள்.


கீர்த்தியின் அம்மா மருதம் சிறியவர்களுக்கு தனிமைகொடுக்க நினைத்து அவர்களுக்கு கீழேயே சாப்பிட வைக்குமாறு கீர்த்தியிடம் சொல்லி அனுப்பினார். அதே போல் அவர்களிடம் சென்ற கீர்த்தி, "அண்ணா.. மௌனி உங்க ரெண்டு பேருக்கும் கீழே சாப்பாடு ரெடியா இருக்கு.. வாங்க போகலாம்.. " என்று அவர்களை அழைத்து கொண்டு கீழே வந்தவள் ட்யனிக் டேபிள்ளில் அவர்களுக்கு வேண்டியதை எடுத்து வைத்து விட்டு, "மௌனி நீங்க சாப்பிடுங்க..எனக்கு மேலே வேலை இருக்கு எதாவது வேணும்னா கூப்பிடு.." என்று நாகரீகம் கருதி அங்கிருந்து சென்று விட்டாள்.


மௌனியோ அதுவரை அவளிடம் இருந்த தைரியம் அவளை விட்டு போக இதயம் படபடக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவாறே அவள் அருகில் வந்தான். அவனின் பார்வையில் முகம் சூடாகி சிவந்து மரத்து போய் நின்ற கால்களை கஷ்ட்ட படுத்தி பின்னால் நகர்ந்தவள் சுவற்றில் இடித்து நின்றாள்.அவனோ அவள் அருகில் நெருங்கி வந்து அவள்முன் மண்டியிட்டவன் அவளின் புடவை மாராப்பை விளக்கி அவளது வயிற்றில் அழுத்தமாக இதழ் பதித்தான். அவனின் ஈர உதட்டின் குளுமையும், மீசைமுடியின் குறுகுறுப்பையும் தாங்க முடியாமல் உடல் முழுவதும் சிலிர்த்து மூச்சு வாங்க உதடு கடித்து கண் மூடி நின்றவள், "பாவா... "என்று கீனமாய் முனகி அவனின் தலையை தன் வயிற்றோடு அழுத்தி கொண்டாள்.


அவனும் அவளின் இடையை கட்டி கொண்டு அவள் வியிற்றிலேயே முகத்தை புதைத்து கொண்டவன், "மௌனி.. எனக்கு இப்போவே என் குழந்தையை பார்க்கணும்டி..." என்று ஏக்கம் நிறைந்த குரலில் சொன்னவனின் வார்த்தையில் அவள் உடல் விறைத்தது. அன்று ஆஃபிஸில் குழந்தைக்காக தான் வந்தேன்.. என்று அவன் சொன்ன வார்த்தை நினைவில் எழுந்தும் அவனை விளக்கித்தள்ளினாள், "போதும் சித்து.. உங்களுக்கு உங்க குழந்தையை கண்டிப்பா குடுத்துடுறேன்.. அதுக்காக என்..என்னோட உணர்வுகள்ல விளையாடாதீங்க.." என்று கத்தியவளை அலட்சியமாய் பார்த்தவன், "இனி உன் இஷ்டப்படி எதுவும் நடக்காது..என்னை கோவப்படுத்தாம இருக்குறது தான் உன்னக்கு நல்லது.. செய்த பாவத்துக்கான தண்டனையை இப்போ நீதான் அனுபவிக்கனும்..." என்றவனின் வார்த்தையில் அவள் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.


அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவளின் தோளில் கை வைத்து முரட்டுத்தனமாக தன்னருகில் இழுத்து அவள் இதழை சுவைத்தான். கொஞ்சமும் காதல் இல்லாத அவனது இந்த இதழ் முத்தம் அவளுக்கு வலித்தது. இருந்தும் எப்போதும் போல அவள் அவனை விட்டு விலகவில்லை. அதே சமயம் அவனுக்கு இசைந்து கொடுக்கவும் இல்லை. அதை உணர்ந்தவனுக்கு இன்னும் கோவம் அதிகரித்து. அதே கோவத்தில் பெண்ணவள் தன்னால் காயப்படுகிறாள் என்பதை மறந்து அவளின் கீழ் உதட்டை கடித்து சுவைத்தான். அதில் அவளால் வலி தாங்க முடியாமல் அவன் அணிந்திருந்த கோட்யை பிடித்து கொண்டு அவன் உயரத்திற்கு எம்பி நின்று அவனுக்கு இசைந்து கொண்டுதாள். அதன் பின்னரே அவன் வன்மையை கைவிட்டு மிருதுவாக அவள் இதழை நாடினான்.


அவளின் தோளை அவன் அழுத்தி பிடித்திருந்ததில் அவள் குத்தியிருந்த பின் கழண்டு புடவையின் முன்பக்க மடிப்பானது சரிந்து விழுந்தது. சட்டென அதை தாங்க போனவளின் முயற்சியை தடுத்தவன். அவள் இடையில் கை கொடுத்து இழுத்து அணைத்து கொண்டு இன்னும் அவள் இதழில் மூழ்கிப்போனான். அவன் என்ன செய்தாலும் அவளாக அவனை விட்டு விலகவில்லை. உயிரே போனாலும் உன் கைகளுக்குளே போகட்டும் என்ற ரீதியில் அவனோடு அன்னைப்புக்குள் இருந்தாள். முன்பு அவனிடம் சந்தோஷமாக கூடியவள் தான். ஆனால் இப்போது அவனோடு முழுமனதாக ஒன்ற முடியவில்லை. மனதில் ஏதோ ஒரு இடத்தில் வலித்தது.ஒருவேளை காதலாக அவன் நாடியிருந்தால் அவள் மகிழ்ந்து இருப்பாளோ என்னவோ...


இருவரும் தங்கள் உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் போது திடீரென்று கதவு தட்டும் சத்தத்தில் அவளை விட்டு விலகினான். அவளோ சரிந்திருந்த புடவையை அள்ளி தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு அறைக்குள் ஓடி விட்டாள். தலையை அழுந்த கோதி மூச்சு இழுத்து தன்னை நிலை படுத்திய பின்னரே கதவை திறந்தவன் அங்கு தன்னையே குறுகுறுன்னு பார்த்து கொண்டிருந்த கார்த்திக்கை கண்டு கொலைவெறியில் கெட்ட வார்த்தை சொல்லி திட்ட ஆரம்பிக்க அப்போது தான் கார்த்திக்கின் பின்னால் சங்கட்டமான முகபாவத்தோடு நின்று கொண்டிருந்த கீர்த்தியை கண்டதும் திட்டுவதை பாதியிலேயே நிறுத்தி கொண்டான். ஆனால் கார்த்திக்கை முறைப்பதை மட்டும் நிறுத்த வில்லை.


கார்த்திக்கோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நமட்டு சிரிப்போடு பிரபாவின் தோளில் கை போட்டவாறு, "இல்லை மச்சான்.. உன் கஷ்டம் எனக்கு புரியுது..ஆனால் அங்கே கொஞ்சம் பாரேன்.."என்று நண்பன் கை காட்டிய திசையை பார்த்த பிரபா அங்கு வசந்தி, மருதம் என எல்லோரும் மாடியிலிருந்து அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


அவர்கள் எல்லோரையும் பார்த்த பிரபா கொஞ்சம் தடுமாறி போனான். அதை பார்த்த கார்த்திக், "இதுக்கு தான் மச்சான் நாங்க கதவை தட்டினோம். சப்போஸ் அவங்க எல்லாரும் கதவை தட்டாம உள்ள வந்து நீங்க எங்களுக்கு எதும் பிரீஸோவ் காட்டிருந்தீங்கனா எங்க நிலைமை என்ன ஆகுறது.." என்று சிரிக்காமல் சொன்ன நண்பனின் வாயை பாய்ந்து வந்து மூடினான் பிரபா. ஆனால் அதை கேட்டு கொண்டிருந்த கீர்த்தி வாய்விட்டே சிரித்து விட்டாள். அதற்குள் பெரியவர்கள் அனைவரும் அவர்கள் நோக்கி வந்தனர்.
பின் வந்தவர்கள் எல்லாம் சொல்லி விட்டு கிளம்ப, இறுதியாக வசந்தியும் மருததிடமும், கீர்த்தியிடம் சொல்லி விட்டு கிளம்பும் போது மௌனி கீழே இறங்கி வந்தாள். அழுத சுவடே தெரியாமல் மீண்டும் மேக்கப் போட்டு சிரித்த முகமாகவே வந்தவளிடமும் வசந்தி சொல்லி விட்டு கிளம்ப உடன் கார்த்திக்கும் பிரபாவும் கிளம்பினர்.


பிரபா கிளம்பு போது மௌனியை அழுத்தமாக பார்த்தான். அவனின் பார்வையை அவள் உணர்ந்தாலும் நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்து நின்றாள். அப்போது தான் எதர்ச்சியாக அவன் திரும்பும் போது புஜை அறையின் ஓரத்தில் மௌனியின் அம்மா போட்டோ மாட்டப்படிருந்தது. அதை பார்த்தவறே சென்றவனின் முகத்தில் யோசனை படர்ந்தது. இனி தான் செய்ய போவதை நினைத்து அவனது உதடுகள் சிரிப்பில் வளைந்தது. ஆனால் அவை அனைத்து மௌனியை காயப்படுத்த போகிறது என்று அந்தக்கணம் அவன் அறியாமல் போனான்.

Pls share your comments :

https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#23
அத்தியாயம் 17(1):

நிச்சயதார்த்தம் விழா முடிந்து வெளியே வந்த பிரபாவும் வசந்தியும் ஒரு காரில் சென்றுவிட கார்த்திக்கோ அவனது காரை நோக்கிச் சென்றான். காரை ஸ்டார்ட் செய்து திரும்பியவனின் பார்வையில், மொட்டை மாடியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கீர்த்தியை கண்டதும் அவனது முகத்தில் விசம புன்னகை வழிந்தது.மாடிக்கு சென்ற கீர்த்தி அங்கு மாடியின் ஓரத்தில் விழாவிற்காக வரவைக்கப்பட்ட ஜெண்ட்ரேட் மெஷினின் அருகில் சென்றவள் அதன் மேல்பகுதியில் இருந்த ஸ்விட்சை இழுத்து அங்கு மாடி முழுவதும் தொங்க விடப்பட்ட அலங்கார விளக்குகள் அனைத்தையும் ஆஃப் பண்ணி விட்டு எப்போதும் எரியும் அந்த ஒற்றை விளக்கை மட்டும் போட்டு விட்டாள். அதன் பின் அங்கிருந்து மேஜையின் மீது வைத்திருந்த பொருட்களை திரும்பி நின்று நிதானமாக அடுக்கி வைத்து கொண்டிருக்கும் பொழுது காற்றில் அசைந்தாடிய அவளது சேரியின் முந்தியானது அங்குள்ள சுழலும் ஜென்ரேட் மெஷினில் பட்டு இழுக்க, அவள் என்ன என்று உணரும் முன்பே புடவையோடு சேர்த்து அவளையும் இழுத்தது.அதன் இழுத்த வேகத்தில் பெண்ணவள் நிலை தடுமாறி அந்த மெஷின் மீதே விழ போனவளை சட்டென ஒரு வலிய கரம் தாங்கியது. கண் இமைக்கும் நொடியில் அவள் இடுப்பில் சுற்றியிருந்த மீதி புடவையையும் உருவியவன் அவளை அங்கிருந்து இழுத்து கொண்டான். பயத்தில் உடல் நடுங்க கண் மூடி தன் தோளில் சாய்ந்து இருந்தவளின் கன்னத்தை தாங்கியவன்,"கீத்து.. இங்கே பாரு.. உனக்கு ஒன்னும் இல்லைடா.. நான் தான் வந்துட்டேன்ல.. கண் திறந்து என்னை பாரும்மா.. " என்றவனின் மிருதுவான வார்த்தையில் மெல்ல கண் திறந்தவள் எதிரில் நின்ற கார்த்திக்கை கண்டதும் என்ன நினைத்தாளோ "கார்த்திக்... "என்ற கூவலுடன் தாவி அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள்.அவளது செய்கையில் அவனுமே கொஞ்சம் தடுமாறி தான் போனான். அதுவரை அவளுக்கு எதும் ஆகிவிட கூடாது என்ற பதட்டதில் இருந்தவன் அவளின் இந்த நெருக்கதில் அவன் தன் வசம் இழந்தான். மனதிற்கு பிடித்தவள் தன்னை அணைத்ததும் அவன் நிலை தடுமாறி போனான். அந்த நிலையில் அவனது உணர்வுகளும் தூண்ட அதற்க்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் இடையில் கை கோர்த்து இழுத்து அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவளின் அருகாமை அவனை கிறங்க செய்தது. அதுவும் பெண்ணவளின் மென்மையை உணர்ந்தவனுக்கு தன்னால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. உணர்வுகளின் பிடியில் இருந்தவன், அவள் தன்னை மறந்து பயத்தில் தான் தன்னோடு ஒன்றியிருக்கிறாள் என்பதை அந்த கணம் மறந்து போனான்.அவள் இடையை அழுத்தி இன்னும் தன்னோடு இறுக அணைத்து கொண்டவன் தாபத்தில் அவளின் கன்னக்கதுப்புகளில் முத்தமிட்டு அவளை தன்னுள்ளே புதைப்பது போல் இறுக்கி கொண்டான். அவனின் இறுகிய அணைப்பில் வலியெடுக்க அப்போது தான் அவளுக்கு தன் நிலை உறைத்தது.தீ சுட்டார் போல் அடுத்த நொடி கொஞ்சமும் தாமதிக்காது அவனை தள்ளிவிட்டு விலகியவள் மூச்சுவாங்க அவனுக்கு முதுகு காட்டி நின்றாள். ஒரு ஆடவன் முன்னால் தான் இந்நிலையில் இருப்பதை எண்ணி அவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது. உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தவன் அவள் தள்ளி விட்ட பிறகு தான் அவனுக்குமே தான் செய்த தவறு புரிந்தது. வேகமாக தன் கோட்டை கழட்டியவன் அவள் அருகில் சென்று அவளுக்கு போர்த்தி விட்டான்.அவன் அணிவித்த கோட்டை இறுக பிடித்து கொண்டு கண்களில் வழிந்த கண்ணீரோடு ஒரு நிமிடம் அவனை ஏறிட்டு பார்த்தவள் பின் அங்கிருந்து ஓடிவிட்டாள். அவனிடம் எதுவும் பேசவும் இல்லை, திட்டவும் இல்லை மாறாக ஏன் இப்பிடி செய்தாய் என்ற ஒரு பார்வை மட்டுமே அவனிடம் செலுத்திவிட்டு சென்றாள். அவள் சென்ற பிறகு தான் அவனுக்கே தன்னை நினைத்து கோவமாக இருந்தது. அவள் மனதை முழுதாய் புரிந்து கொள்ளும் முன்பு தான் அவசப்பட்டு விட்டோமே என்று காலம் கடந்து வருந்தினான். அதிலும் போகும்போது அவள் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தவனுக்கு மனம் வலித்தது. பிரபாவின் கல்யாணம் முடிந்த பிறகு இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்று நினைத்தவன் அதற்க்கும் மேலும் அங்கிருக்க முடியாமல் சென்றுவிட்டான். அன்றைய இரவு இரு பெண்களுக்கும் தூங்கா இரவாக தான் முடிந்தது.


மறுநாள் விடியல் நால்வருக்கும் ஒவ்வொரு முடிவோடு ஆரம்பம்மாகியது. ஆனால் அவர்கள் நினைத்து எல்லாம் நடந்து விட்டால் விதி என்ற ஒன்று எதற்கு இருக்கிறது. எல்லா மனித வாழ்க்கையிலும் நான் ஒருவன் எப்போதும் இருக்கிறேன் என்று விதி தனது வேலையை எந்த குறையும் இல்லாமல் அழகாக ஆரம்பித்தது.


அழகான விடியலில் இரு பெண்களுமே மனதில் உள்ள வலிகளை மறைத்து மற்றவர்களுக்காக புன்னகை முகமாகவே இருக்க முயன்றனர். கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதனால் இரு வீடுகளிலும் அதற்கான வேலைகள் தடபுடலாக ஆரம்பமாகியது. முன்கூட்டியே பிரபா தனது திட்டத்தின் படி வசந்தி மற்றும் மருதத்திடம் கல்யாணம் எளிமையான முறையில் கோவிலில் நடத்திவிடலாம் என்றும் அதன் பிறகு ரிசெப்ஷன் வைத்துக்கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தான். யாருக்கும் எந்த
சந்தேகமும் வராதபடி அவன் நினைத்தது போலவே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.


ஆனால் மௌனி தான் தனக்குள் தவித்துக் கொண்டிருந்தாள். நிச்சயத்தின் போது பிரபா நடந்து கொண்ட விதம் அவளுக்குள் இன்னும் பயத்தை கொடுத்தது. அவனுக்கு தன்னை பற்றிய உண்மை ஏதும் தெரிந்துவிட்டதோ என்று அவள் தான் குழம்பி தவித்து கொண்டிருந்தாள். கல்யாண நாள் நெருங்கநெருங்க அவளின் பயமும் பதட்டமும் அதிகரித்து கொண்டே இருந்தது. வீட்டில் கல்யாண வேலைகள் எல்லாம் எந்த குறையும் இல்லாமல் நடந்தாலும் எதிலும் ஒன்ற முடியாமல் தனக்குள் முடங்கி கொண்டாள். மனதின் ஓரத்தில் தன்னவனுக்கு ஏதோ துரோகம் செய்கின்றோமோ என்ற குற்றவுணர்வில் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. சரியோ தவறோ அவன் தனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்று கொண்டு தான் யார் என்கிற உண்மையை கல்யாணத்திற்கு முன் அவனிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.


ஆனால், நிச்சயம் முடிந்த பிறகு மௌனி வெளியே எங்கேயும் போக கூடாது என்று கீர்த்தியின் அம்மா தடுத்து விட்டார். போனில் அழைத்தாலும் இவளது எந்த அழைப்பையும் அவன் ஏற்க்கவில்லை. நிச்சயத்தின் போது அவனை கடைசியாக பார்த்தது தான் அதன் பிறகு அவனை சந்திக்க அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தாள். கல்யாண வீட்டில் அவளை தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். கீர்த்தியின் தம்பி தங்கைகளின் கிண்டல்கள் அக்கம் பக்கத்தினரின் கேலிப்பேச்சுகள் என்று எல்லோரிடமும் வழக்கம் போல் புன்னகை முகமாக நடிக்க முயன்றாள்.தோழியின் நிலையை கீர்த்தியாலும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாமலே இருந்தாள். எங்கே எதையாவது கேட்க போய் மறுபடியும் இந்த கல்யாணத்தை மௌனி நிறுத்திவிடுவாளோ என்ற பயத்தில் அவளிடம் எதையுமே கேட்கவில்லை. ஆனாலும் அவள் உடல் நிலை கருதி அவளுக்கு தேவையான உணவு, மருந்து என நேரம் தவறாது குடுத்து அவளை பார்த்துக்கொண்டாள். அதேபோல் தான் மருதமும் அவர்கள் சம்பர்தாயபடி மௌனிக்கு நலுங்கு வைத்தல், பூஜை, மருத்துவ உணவு விருந்து போன்ற மற்ற சடங்குகளை எந்த குறையும் இல்லாதது அவளுக்கு செய்தார்.


அதோ இதோ என்று கல்யாண நாளும் வந்துவிட்டது. காலையில் ஏழு மணி முதல் பத்து மணிக்குள் முகூர்த்தம் என்று சொல்லியிருந்தாலும் பிரபா குடும்பத்தினர் சீக்கிரமாகவே வந்திருந்தனர். அவர்களை தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே கீர்த்தி குடும்பத்தினரும் வந்து இறங்கினர். வசந்தி எடுத்து கொடுத்த விலையுயர்ந்த அரக்கு வண்ண பட்டுபுடைவை அவளை பாந்தமாய் தழுவி இருக்க அதற்கு ஏற்றார் போல் தங்க நகைகளை அணிந்து மனப்பெண்ணுக்கே உரித்தான நாணமும் பதட்டமும்மாக வந்து இறங்கியவள் முதலில் தன்னவனை தான் தேடினாள். கோவில் மண்டபத்தில் கார்த்திக்கோடு பட்டு வேஷ்ட்டி அணிந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தவனை கண்டு அவள் தடுமாறி தான் போனாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவனின் ஊடுருவும் பார்வையில் பாவையவள் முகம் சிவந்து வேகமாக தலை குனிந்து கொண்டாள். அவளின் செய்கையில் அவன் உதட்டின் ஓரம் சிரிப்பில் வளைந்தது. பெண்ணவளின் நாணத்தில் அவன் கர்வமாக உயிர்தெழுந்தான்.


இருவரின் மௌன சம்பாக்ஷனை பார்த்த கீர்த்தி தோழியை கிண்டல் செய்தவாறு அங்கு பெண்ணிற்க்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு அவளை அழைத்து சென்றாள்.அதை தொடர்ந்து திருமண சடங்குகள் ஆரம்பிக்க பிரபா அதற்கு ஆயத்தமாகினான். இரு குடும்பத்தின் நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோருமே வந்திருந்தனர். பின் மணமேடையில் அமர்ந்த பிரபா ஐய்யர் மந்திரம் ஓத அதை தொடர்ந்த சம்பர்தாயங்களை செய்து கொண்டிருந்தான். அதே மாதிரி பிரபாவின் தங்கையாக நின்று கீர்த்தியே எல்லா சடங்குகளிலும் கலந்து கொண்டாள். இறுதியாக ஐய்யர் பெண்ணை அழைத்து வர சொல்ல வசந்தி தான் மௌனியை அழைத்து வந்தார்.


அழகு பதுமையென தன்னருகில் அமர்ந்தவளை கண்டு அவனையும் அறியாது பழைய நினைவுகளில் அவன் முகம் இறுகியது. அருகில் அமர்ந்த மௌனி அவனது இறுகிய முகத்தை கண்டு அவளுக்கும் வேதனையாக இருந்தது. அவனது மனநிலை மாற்ற எண்ணி மெல்ல அவன் தோளை சுரண்டியவள், "சித்து.. நான் உங்ககூட இருக்கும் போது வேற எதை பத்தியாவது யோசிச்சீங்க.. அப்புறம் நான் என்ன செய்வேன்னு உங்களுக்கே தெரியும்.. " என்றவளின் பார்வை அவனது உதட்டில் நிலைத்தது. அவளின் வார்த்தையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தும் தன்னை சமாளித்தவன் அவளை முறைத்து பார்த்தான்.அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை.


அதன் பின்னர் இருவருமே வேற எந்த சிந்தனையும் இல்லாமல் மற்ற சடங்குகளில் முழு மனதோடு ஈடுபட்டனர். கன்னிகாதானம் சடங்கில் கார்த்திக் தான் மௌனியின் அண்ணனாக நின்று அவளை தன் நண்பனுக்கு தாரைவார்த்து கொடுத்தான். இறுதியாக கெட்டிமேளம் முழங்க ஐய்யர் தாலி எடுத்து கொடுக்க முக்கோடி தெய்வங்களின் சாட்சியாகவும் பெற்றவர்களின் ஆசிர்வாதத்துடனும் தன்னவளின் கழுத்தில் மங்கலநாணை பூட்டினான். அந்த நிமிடம் அவள் நிமிர்ந்து அவன் கண்களை பார்க்க அவனும் அவளை பார்த்தவாறே தாலியை கட்டினான். அதே போல் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகுட்டில் அழுத்தமாக வைத்து விட்டான். அதை கண் மூடி அனுபவத்தவளின் உடல் சிலிர்த்தது அடங்கியது. அன்று ஒருநாள் காட்டு பகுதியில் அவன் தன் இரத்தத்தால் தனக்கு திலகம் வைத்தது நினைவில் எழுந்ததும் அவனை அதிர்வுடன் பார்த்தாள். அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்தவனின் உதட்டில் மர்ம புன்னகை மலர்ந்தது.அதன் பின் அவளது கரம் பிடித்து அக்கினியை வளம் வந்தவன் அருந்ததி தேவியை சாட்சியாக கொண்டு அம்மி மிதித்து அவளது காலில் மெட்டியை அணிவித்தான். எப்போதும் போல் அவனது தொடுகையில் அவள் உடல் சிலிர்த்து நடுங்கியது. அதை உணர்த்தவன் அவளை சீண்டி பார்க்க நமட்டு புன்னகையோடு வேண்டுமென்றே அவளது மறுகாலை அழுத்தி பிடித்து மெதுவாகவே மாட்டி விட்டான். அதற்குள் அவள் தான் ஒரு வழியாகி போனாள். முகம் முழுவதும் நாணத்தால் சிவந்து வேகமாக காலை இழுத்து கொண்டாள். அதை தொடர்ந்த எல்லா சடங்குகளும் அவர்களுக்கு அழியாத இனிமையான நினைவுகளாகவே நின்றது. இருவர் மனதிலும் எத்தனை வேதனைகள் இருந்தாலும் இந்த கல்யாணத்தால் அவர்கள் மனம் நிறைந்தது. இனி எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருவரும் தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தனர். மௌனிக்கோ தனது அம்மாவிற்கு கொடுத்த சத்தியத்தை இப்போது தான் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் அவனின் கையை இறுக பற்றிக்கொண்டாள்.


அதன் பின்னர் இருவரும் வசந்தி மற்றும் மருதத்திடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். பிள்ளைகளின் வாழ்கை நன்றாக அமைய வேண்டும் என்று இரு அம்மாக்களும் கண்கலங்க அவர்களை ஆசிர்வதித்தனர். ஆனால் மௌனிக்கு தான் வசந்தியின் காலில் விழும்போது குற்றவுணர்வில் உள்ளுக்குள் துடித்தவள், "அத்தைம்மா.. " என்ற கூவலுடன் அவரை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். வசந்தியும் அவளை அணைத்துக்கொண்டு கண்கலங்கினார். இருந்தும் தன்னை சமாளித்தவர் அவளின் கண்ணை துடைத்து விட்டு " நீ
எதுக்காகவும் அழக்கூடாது கண்ணு .. நம்ம வீட்டு பெண்கள் எப்பவும் தைரியமாய் இருப்பாங்க.. இனி இவனை தான் அழவிடனும்.. " என்று பக்கத்தில் இருந்த பிரபாவை சுட்டி காட்டி அவர் கேலி செய்ய அதை கேட்ட மௌனி "களுக்..." என்று சிரித்தவள், "அத்தைம்மா... நீங்க சொன்னாலும் இல்லைனாலும் நான் பண்ற டார்ச்சர்ல உங்க பையன் அழதான் போறாரு.. " என்று கேலிசெய்து சிரித்தவளை கண்டு அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது. ஆனாலும் உள்ளுக்குள் அம்மா, மருமகளின்
இனக்கத்தை கண்டு அவனுக்கு மகிச்சியாகவே இருந்தது.


அதை தொடர்ந்து கீர்த்தி மற்றும் கார்த்திக்கின் கிண்டல்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருவரையும் ஓட்டி தள்ளி விட்டனர். அதுபோக வந்திருந்த நண்பர்கள், உறவினர்களின் ஆசீர்வாதம், வாழ்த்துக்கள் என்று நேரம் சென்றது. அதற்குள் மௌனி தான் ரொம்ப சோர்ந்துவிட்டாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டாள். ஆனால் பிரபா அவளின் நிலை உணர்ந்து வசந்தியிடம் சொல்லி சீக்கிரமே கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டான். கோவிலை விட்டு வெளிவந்தவர்கள் மணமக்களுக்கு என்று அலங்கரிக்கப்பட்ட காரில் பிரபாவும் மௌனியும் ஏறிக் கொள்ள அதற்கடுத்த காரில் மற்றவர்கள் ஏறிக்கொண்டனர். இறுதியாக கையில் நிறைய பைகளுடன் வந்த கீர்த்தி அங்கு நின்றுகொண்டிருந்த கார்த்திக்கை கண்டு கொள்ளாமல் இரண்டாவதாக உள்ள காரில் ஏற நினைத்து கார்த்திகை கடந்து செல்ல போனாள். அவளின் செய்கையில் அவனுக்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ தன்னை கடந்து செல்ல முற்பட்டவளின் கையை இறுக்கி பிடித்து இழுத்தவன் அதே வேகத்தில் பிரபா,மௌனி இருந்த காரின் முன்பக்க கதவை திறந்து அவளை உள்ளே தள்ளிவிட்டு காரை சுற்றிக்கொண்டு வந்தவன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து அவனே காரை கிளம்பினான். அன்றய நிகழ்விற்கு பிறகு கீர்த்தியின் இந்த புறக்கணிப்பு அவனுக்கு கோவத்தை உண்டாக்கியது. முகம் இறுக காரை ஒட்டிக் கொண்டிருந்தவனை பார்த்த கீர்த்திக்கும் மனம் வலித்தது.


அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த மௌனி சற்று களைப்பாக உணர்ந்தாள். சீட்டின் பின்னால் கண் மூடி தலை சாய்த்திருந்தவளின் தோளை பற்றி தன்னருகில் இழுத்த பிரபா அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவனின் செய்கையில் அவள் மனம் மகிழ்ந்தது. தன்னவன் இது போல் காதலாக அணைத்து எத்தனை நாட்கள் ஆயிற்று. அவனோடு சேர்ந்திருந்த பழைய நினைவுகளில் அவளுக்கு கண் கலங்கியது. அவனின் காதல் அம்முவாய் மாறி அவனது நெஞ்சில் அழுத்தமாய் முகம் புதைத்து கொண்டாள். அவனும் அவளின் தோளை சுற்றி கை போட்டு அவளை அணைத்து கொண்டான். அவனது மார்பு சூட்டின் கதகதப்பில் அவனோடு இன்னும் அழுத்தமாய் ஒன்றினாள். ஏனோ அவனது அணைப்பில் மட்டும் அவள் பாதுகாப்பாய் உணர்ந்தாள். அவளை அணைத்து கொண்ட அவனும் வெகுநாட்களுக்கு பிறகு அவள் மீதிருந்த கோபத்தை மறந்து காதலாக அவளை அரவணைத்து கொண்டான்.


இருவருமே தங்களை மறந்து இருக்கும் போது வழக்கம் போல், "ம்க்கும்.. மச்சான்.. நாங்களும் இங்கே தான் இருக்கோம்டா..." என்ற கார்த்திக்கின் குரலில் தன் நிலைக்கு வந்த மௌனி வேகமாக விலகி போனவளை பிரபா மீண்டும் இழுத்து தன்னோடு அணைத்து கொண்டவன், "இவள் என் பொண்டாட்டி.. நான் ஹக் பண்ணுவேன்.. கிஸ் பண்ணுவேன் உனக்கு ஏன்டா பொறாமை.. சீக்கிரம் உனக்கு ஒரு கலயாணத்தை
பண்ணனும்..அப்போ தான் மனுஷன்னோட அவஸ்தை புரியும்.." என்று பேசிக்கொண்டே போனவனின் கையை பிடித்து கிள்ளி வைத்தாள் மௌனி. ஆனால் காத்திக்கின் பார்வையோ கீர்த்தியின் மீது ஏக்கமாய் படிந்தது. கீர்த்தி அதை உணர்ந்தாலும் வெளியில் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள்.


அதற்குள் பிரபாவின் வீடு வந்ததும் கார் உள்ளே நுழைந்தது. காரில் இருந்து இறங்கிய மௌனி கோட்டை போல் மிக பிரம்மாண்டமான வீட்டை பார்த்ததும் கொஞ்சம் மிரண்டு தான் போனாள். ஆனால் அவளின் பயத்திற்கு அவசியமே இல்லை என்பது போல் அவள் அருகில் வந்த பிரபா அவளை தோளோடு அணைத்து கொண்டான். அவர்களுக்காக வசந்தி ஆரத்தி கரைத்து எடுத்து வந்தவர் அதை கீர்த்தியிடம் குடுத்து எடுக்க சொனார்.


பின் கீர்த்தியே இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். அதன் பிறகு லட்சுமி தேவியை மனதார வேண்டி நிலைப்படியின் மீது இருந்த பொன் அரிசி நிரம்பிய மங்கள கலசத்தை தன் வலது காலால் தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள் மௌனி. சம்பர்தாயதுக்காக மாப்பிளை பெண் இருவருக்கும் பால் பழம் கொடுத்த பின் அவர்களை சாப்பிட வைத்தார் வசந்தி. மௌனித்தான் ரொம்பவே சோர்ந்து போய்விட்டாள்.அவளின் நிலையை உணர்ந்த பிரபா கீர்த்தியிடம் சொல்லி அவளை ஓய்வு எடுக்குமாறு கீழே உள்ள அறைக்கு அனுப்பி வைத்தான். வசந்தியும் மருதமும் வந்திருக்கு உறவினர்களுக்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்த விருந்து நடக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கவனித்து கொண்டனர். பிரபாவும் கார்த்திக் உடன் சேர்ந்து மாலை நடக்க இருக்கும் ரிசெப்ஷன்காக ரெடி பண்ணி கொண்டிருந்தான். பிரபாவின் ஒட்டு மொத்த திட்டத்தையும் அந்த ரிசெப்ஷன் பங்க்சன்னில் தானே அரங்கேற்ற போகிறான். தன்னை அவமானம் படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்றவனின் முகம் செந்தணலாக மாறியது. யாரையோ காயப்படுத்த அவன் செய்ய போகும் இந்த செயல் பாவம் அது தன்னவளை தான் அதிகம் காயப்படுத்தும் என்று அறியாமல் போனான்.


அறையில் இது எதையுமே தெரியாமல் தன்னவனை கை பிடித்த மகிழ்ச்சியில் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தாள் மௌனி... பாவம் மாலை நடக்க இருக்கு விபரீதங்களை எப்பிடி அவள் எதிர் கொள்ள போகிறாளோ.. எது நடந்தாலும் அவள் காயப்படுவது மட்டும் உறுதி.. ஆனாலும் தன் காதலுக்காக அந்த வலியையும் ஏற்று கொள்ளவளா?..


Pls share your comments:


https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#24
அத்தியாயம் 17(2):


மதியம் உணவிற்காக கீர்த்தி எழுப்பும் வரை நன்றாக அசந்து தூங்கி கொண்டிருந்தாள் மௌனி.அவள் எழுப்பியதும் தான் தாமதம் வேகமாக அடித்து பிடித்து கொண்டு எழுந்தமர்ந்தவள், "சாரி.. சாரிடி கீர்த்தி.. ரொம்ப நேரம் தூங்கிட்டேன்னா.. காலையில சீக்கிரம் எழுந்திரிச்சேன்ல அதான் டயர்ட்டா இருக்கு.. அத்தைம்மா வந்தாங்களா?.. எதாவது சொன்னாங்களா?.." என்று படபடப்பாக பேசியவளை கண்டு புன்னகைத்த கீர்த்தி, "அதெல்லாம் ஒன்னும் இல்லைடி..நீ டென்ஷன் ஆகாதே.. அம்மாவும், வசந்தி ஆண்டியும் வந்திருக்க கெஸ்ட்ட கவனிக்கவே நேரம் பத்தலை.. அதுவும் கிராமத்துல இருந்து வந்திருக்க எங்க சொந்தகார கும்பல் குடுக்குற அளப்பறையை சமாளிக்க முடியாமல் ரெண்டு பேரும் முழிச்சிட்டு இருகாங்க.." என்று கீர்த்தி சொன்ன பாவனையில் மௌனிக்கும் சிரிப்பு வந்தது.


பின் தோழியை பார்த்து தயங்கியவாறே,"கீர்த்தி.. அது..அதுவந்து.. சித்து எங்கே இருக்காரு?.." என்றவளை குறும்பாக பார்த்த கீர்த்தி, "இப்போதைக்கு அண்ணா ரிசெப்ஷன் வேலையில ரொம்ப பிஸியா இருக்காரு.. சோ எதுவா இருந்தாலும் நீங்க நைட் பேசிக்கோங்க அப்போ தான் உங்களை யாரும் தொந்திரவு பண்ண மாட்டாங்க.." என்றவள் கன்னத்தில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்து, "ஓ 'அப்போ...' உங்களுக்கு பேச நேரம் இருக்காது தானே?.. " என்று கண்ணடித்து கேளி செய்த தோழியை முறைத்த மௌனி அருகில் இருந்த தலையணையை எடுத்து அவள் மீது வீசினாள்..அதை உணர்ந்த கீர்த்தியும் அங்கிருந்து நகர்ந்து விட அப்போது என்று பார்த்து உள்ளே நுழைந்த பிரபாவின் மீது விழுந்தது.


அந்த நேரம் அவனை அங்கு எதிர் பார்க்காத பெண்கள் இருவரும் சற்று அதிர்ந்து தான் போனார்கள். ஆனால், பிரபாவோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இரும்பாக விறைத்து நின்றான். மௌனியை ஒரு நிமிடம் அழுத்தமாக பார்த்தவன் பின் கீர்த்தியிடம் திரும்பி, "கீர்த்தி.. ரிசெப்ஷன்காக இன்டர்நேஷனல் பியூட்டிஷன் வர வச்சிருக்கேன்.. ஹால்ல வெயிட் பண்ணறாங்க.. நீ கொஞ்சம் அவங்களை ஹாண்டில் பண்ணும்மா.." என்று தான் வந்ததற்கான காரணத்தை சொன்னவனிடத்தில்,


"ஓ.. சரிண்ணா.. நான் இப்பவே அவங்ககிட்ட டீடெயில்ஸ் கேட்டுக்குறேன்.." என்றபடி கீர்த்தி வெளியே செல்ல அவளை தொடர்ந்து பிரபாவும் அறையின் வாயில் வரை சென்றவன் பின் கதவை சார்த்தி தாளிட்டு திரும்பியவனின் பார்வை மௌனியின் தலை முதல் கால் வரை கொஞ்சமும் பாரபட்சம் இன்றி உரிமையாய் அவள் மேல் படிந்தது. தூங்கியதனால் அவள் கட்டியிருந்த பட்டு புடைவை கசங்கியிருக்க அவன் கட்டிய மொத்தமான தாலி சரடில் பின்னிக்கிடைந்த தங்கச் சங்கிலியோடு நின்றிருந்த அவளின் நலுங்கிய தோற்றம் அவனை கிறங்க செய்தது. தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற உரிமையோடு அவனது விழிகள் அவளை விழுங்கியது.


மேனியெங்கும் பயணித்த அவனின் பார்வை வீச்சில் அவள் கொஞ்சம் தடுமாறி தான் போனாள். ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றவளின் அருகில் வந்தவன் ஒற்றை விரல் கொண்டு அவளின் முகத்தை நிமிர்த்தி தன் முகம் காண செய்தான். மெள்ள விழி உயர்த்தி பார்த்தவள் அவன் விழிகளில் தெரிந்த காதலில் அவளுக்கு தன்னிடத்தில் ஒட்டுமொத்த காதலையும் வெளிப்படுத்திய பழைய சித்துவாக தான் தெரிந்தான். அப்பிடிபட்ட காதல் இனி தனக்கு கிடைக்குமா என்று கனவாகி கானலாய் போன தன் காதலை மீண்டும் தன்னிடத்தில் உயிர் பெறச் செய்த தன்னவனை காதலோடு ஏறிட்டு பார்த்தாள். அடுத்த நொடி, "சித்து..." என்ற கூவலுடன் அவன் கன்னத்தை தாங்கி முகம் முழுவதும் ஒரு வேகத்தில் முத்தமிட்டவள் அவன் இதழை கண்டு தயங்கியவாறு அவனை பார்த்தாள்.


அவனோ குறும்புன்னகையுடன் அவளின் இடையில் கை கோர்த்து தன்னருகில் இழுத்தவன், "என்னடி என்னமோ புதுசா தயங்குற.. ஆல்ரெடி என் வாரிசை நீ சுமந்துட்டு இருக்க.. அப்புறம் எதுக்கு இந்த தயக்கம்?.. சரவெடி எப்போதிலிருந்து இப்பிடி வெட்கப்பட ஆரம்பிச்சாள்..ம்ம்ம்?.." என்று புருவம் தூக்கி உதட்டில் தவழ்ந்த நமட்டு புன்னகையுடன் கேளி செய்தவனை கண்டு அவளின் முகம் இரத்த நிறத்தில் சிவந்து போனது.


"பாவா... " என்று போலியாக அவன் தோளில் குத்தி சிணுங்கியவள் அவன் நெஞ்சில் சாய்ந்து முகத்தை மறைத்துக் கொண்டாள். மனைவியின் நாணத்தை எப்போதும் போல் ரசித்தவன் அவளை அணைத்து கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். தன்னவளின் அருகாமையில் அவன் மனமும் தடுமாற அவளின் தோள்பட்டை, கழுத்து, கன்னம் என்று தன் உதடுகளால் வருடியவனின் மூச்சுக்காற்று வெப்பத்திலும், மீசைமுடி குறுகுறுப்பிலும் அவன் கைகளுக்குள் சிலிர்த்து நடுங்கினாள்.. அவளின் நடுக்கத்தை உணர்ந்தவனும் இன்னும் அழுத்தமாக அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து கண் மூடிக்கொண்டான். அவனின் அணைப்பின் மயக்கத்தில் கண் மூடி நின்றவள், "பாவா... " என்று கீனமாய் முனகினாள்.

"ம்ம்ம்ம்.. " - பிரபா

"பாவா..." - மௌனி

"சொல்லுடி.. " - பிரபா

"அது..வெளியே எல்லாரும் இருகாங்க.."
- மௌனி

"பரவாயில்லை.." - பிரபா

"அத்தைம்மா வந்துடுவாங்க.." - மௌனி

"வரட்டும்.. " - பிரபா

"கீர்த்தியும் எப்போ வேணும்னாலும் வந்துருவாள்.." - மௌனி

"சரி..." - பிரபா

"ப்ளீஸ் பாவா.. யாராவது வர போறாங்க.." அவன் கைகள் சொன்ன செய்தியில் அவள் குரல் குழைவாகவே ஒலித்தது.

"முடியாது... " வீம்பாக பிடிவாதத்துடன் ஒலித்தது அவன் குரல்.

அவனின் பதிலில் சட்டென கண் திறந்தவள், "பாவா.. இப்பிடியே இருந்தா எப்போ ரிசெப்ஷன்க்கு ரெடியாகுறது.. மணியாச்சு.. ப்ளீஸ் பாவா.." என்று அவன் சட்டை பட்டனை திருகியபடி குரல் குழைய சொன்னவளை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அவள் தாடையில் கை வைத்து நிமிர்த்தியவன் குனிந்து அவள் நெற்றியின் மீது மென்மையாய் இதழ் பதித்து விட்டு விலகினான்.


பின் அவளிடம், "சரி மௌனி.. நான் பியூட்டிஷன்கிட்ட ஆல்ரெடி சொல்லியிருக்கேன்.. அந்த மாதிரி தான் உன்னை ரெடி பண்ணுவாங்க.. சொசைட்டில எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு சோ அதுக்கேத்த மாதிரி தான் நீ இருக்கனும்.. ஐ ஹோப் யு அண்டர்ஸ்டாண்ட்.. இன்னைக்கு பங்க்சன்ல யாரும் எந்த குறையும் சொல்லாத அளவுக்கு நீ நடந்துக்கனும்.. " என்று கட்டளை போல் சொன்னவனை கண்டு மனம் வருந்தினாலும் அவள் தலை சரி என்று ஆடியது. அதன் பிறகு அவன் அங்கிருந்து சென்று விட்டான்.


அவன் சென்ற அடுத்த ஐந்து நிமிடத்திலேயே கீர்த்தியும் அவளுடன் நான்கு பியூட்டிஷன்களும் அறைக்கு வந்திருந்தனர். ஆனால் கீர்த்தியோ முதலில் மௌனியை நன்றாக சாப்பிட வைத்துவிட்டு அவளுக்கு வேண்டிய மருந்துகளையும் கொடுத்த பின்னரே அவளை ரெடியாக அனுமதித்தாள். ஏனெனில் இதன் பிறகு அவள் சாப்பிட எப்பிடியும் இரவு தாமதமாகி விடும் என்பதால் அவள் அதற்கேற்றாற் போல் உணவையும் மருந்தையும் கொடுத்து வைத்தாள்..


வந்திருந்த பியூட்டிஷன் அவர்களின் உயர்தக அழகு சாதனங்களை கொண்டு பார்ப்பவர்கள் அனைவரும் அசந்து போகும் படி அவளை தேவதையாக மாற்றிக்கொண்டிருந்தனர். அது போக பிரபா சொல்லிவைத்திருந்த விலை உயர்ந்த லெகங்கா போன்ற டிசைனிக் உடையில் அதிகப்படியான வேலைப்பாடுகள் கொண்டு, உயர்ந்த தரம் கூடிய சில நுண்கற்கள் பதித்த அந்த அழகிய உடை சற்று வெயிட்டாக இருந்தாலும் அது அவளுக்கு அழகாய் பொருந்தியது. அதே போல் அந்த உடைக்கென்று வடிவமைப்பில் செய்யப்பட்ட வைர நகைகளை அவளுக்கு அழகாகவும் எளிமையாகவும் அணிவித்தனர். டிசைனிங் ஹேர் ஸ்டைல்,மேக்கப், உடை, நகை என்று அனைத்தும் அவளின் அழகை இரட்டிப்பாகியது. சொன்னது போலவே வந்தித்திருந்த பியூட்டிஷன் பெண்கள் தங்கள் திறமையால் உண்மையில் அவளை ஒரு தேவைதையாக தான் மாற்றி இருந்தனர். கீர்த்தியே ஒரு நிமிடம் அவளின் அழகில் அசந்து தான் போனாள். அவளின் கன்னத்தில் கை வைத்து நெட்டி முறித்தவள் தோழியை அணைத்து கொண்டு மனதார பாராட்டினாள்.


மாலை நேரம் பார்த்து அனைவரும் ரிசெப்ஷன் நடக்கும் இடத்திற்கு மற்ற கார்களில் சென்றுவிட.. அதன் பிறகு மணமக்களுக்கு என்று அலங்கரிக்கப்பட்ட காரின் பின் சீட்டில் பிரபாவும் மௌனியும் ஏறிக்கொள்ள முன்பக்கம் கார்த்திக்கும் கீர்த்தியும் இருந்தனர். எப்போதும் போல் கார்த்திக் வண்டியை ஓட்ட அங்கு நால்வர்க்குள் சிரிப்பு,கேளி கிண்டல்கள் என்று அந்த பயணம் இனிமையாக இருந்தது.


கோட்டை போல் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தினுள் வண்டி நுழைந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த அத்தனை கார்களையும் தாண்டி இவர்கள் வண்டி மட்டும் உள்ளே நுழைந்து மண்டபத்தின் வாயில் முன்பே நின்றது. இவர்களின் வரவிற்காகவே காத்திருந்தது போல் வாயிலின் இரு ஓரத்திலும் நின்று கொண்டிருந்த மியூசிக் குரூப்ஸ்தங்களின் இசையை முழங்கினர். முதலில் வண்டியை விட்டு இறங்கி நின்ற பிரபா பின் கை நீட்டி தன்னவளையும் இறக்கி விட்டவன் அவளோடு கை கோர்த்து சேர்ந்து நின்றான். அதற்குள் அவர்களை சுற்றி போட்டோகிராஃபர், வீடியோ எடுக்க என்று ஒரு கும்பல் சூழ்ந்திருக்க இன்னொரு பக்கம் பிரபாவின் ஒட்டுமொத்த பிசினஸ் இண்டர்ஸ்ட்ரியில் இருக்கும் முக்கியமானவர்கள் அனைவருமே வந்திருந்தனர். அதுபோக மீடியா சேர்ந்த செலிபிரிட்டிஸ், பொலடிகள் செலிபிரிட்டிஸ் என்று தமிழ்நாட்டின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே அங்கு
வருகை புரிந்திருந்தனர்.


பங்சனின் ஆடம்பரத்தையும் வந்திருப்பவர்கையும் பார்த்த பின்பு தான் மௌனிக்கு தன்னவனோட உயரம் புரிந்தது. போட்டோஸ், விடீயோஸ் என்ற அந்த கும்பல்களில் மௌனி சற்று பயந்து தான் போனாள். வேகமாக தன்னவனோடு ஓட்டி நின்றவள் அவனின் கையை இறுக பற்றிக்கொண்டாள். அவளின் செய்கையில், அவன் தொழில் அதிபன் பிரபாவாக மாறி அவள் மீது கோபம் கொண்டான். பின் புன்னகை முகமாக அவளை பார்த்தவன், "ம்ப்ச் என்ன பண்ற?.. இங்கே மீடியா, பிரஸ்ன்னு எல்லாரும் வந்துருக்காங்க.. நீ செய்யற ஒவ்வொரு ரியாக்ஷன்னும் அவங்களுக்கு ரெக்கார்ட் ஆகும்.. சோ டோன்ட் பிகேவ் லைக் தட்.." என்று சிரித்த முகமாக பேசினாலும் வார்த்தைகளால் அவளை கடிந்தான். அதில் அவள் மனம் வலிக்க தான் செய்தது. இருந்தும் எப்போதும் போல் தன் வேதனையை உள்ளுக்குள் மறைத்து வெளியில் புன்னகை முகமாக அவனோடு சேர்ந்து நின்றாள்.ஸ்டேஜில் நின்றுகொண்டிருந்த இருவரின் ஜோடி பொருத்தத்தை கண்டு அனைவரும் அசந்து தான் போனார்கள். ஒளிரும் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் வைர நகைகள் மின்ன உண்மையிலேயே தேவதையாய் ஜொலித்தவளின் அழகிற்கு ஈடேற்க்கும் வகையில் அவனும் அழகுற திகழ்ந்தான். அவள் அணிந்திருந்த உடையின் நிறத்திலேயே கோட்சூட் அணிந்து கம்பீரமாக நின்றிருந்தவனின் ஜோடி பொருத்தத்தில் யாரும் எந்த ஒரு குறையும் சொல்லி விட முடியாது. அந்த அளவிற்கு அளவிற்கு இருவரின் பொருத்தமும் நிறைவாக இருந்தது.


வந்தவர்கள் அனைவரின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுக்க என்று நேரம் சென்றது. தன்னவனின் அருகில் அவனுக்கு ஏற்ற துணையாக நின்று வந்தவர்களிடம் புன்னகை முகமாகவே பதில் அளித்து கொண்டிருந்தாள் மௌனி. அதே போல்
பிரபாவும் மேடையில் தன்னவளோடு நின்று கொண்டிருந்தாலும் அவனது கண்கள் யாரையோ எதிர் பார்த்து காத்துக்கொண்டிருந்தான். அவனின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் உள்ளே நுழைந்தாள் ஷாலினி. பிரபாவின் சொந்த தாய்மாமன் மகள். தெலுங்கு சினிமா
துறையில் இப்போது புகழ் பெற்றுவரும் முன்னணி நாயகி ஷாலினி தேவி. எல்லாவற்றையும் விட மேலாக பிரபாவின் முன்னால் காதலி.


அவளை அங்கு கொஞ்சமும் எதிர்பார்க்காத மௌனி அதிர்ந்து தான் போனாள். முடிந்து போன அத்தியாயம் என்று நினைத்தவள் மீண்டும் வருவாள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எத்தனையோ பிரச்சனைக்கு பிறகு தன் கையில் வந்த காதல் நழுவி விடுமோ என்று பயந்தாள். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் இதயத்தில் சுருக்கென்று வலியை உணர்ந்தாள் மௌனிகா. இருந்தும் தன்னை சமாளித்து கொண்டவள் பிரபாவின் கையை இறுக பற்றிக்கொண்டாள்.


அவள் வந்ததும் அரங்கில் சிறு சலசலப்பும் கும்பலும் கூடியது. ஆனால் அவளோ சுற்றிலும் செக்யூரிட்டிஸ் புடைசூழ பாதுகாப்பாய் மேடை ஏறி மணமக்களின் அருகில் வந்தவள் கையோடு தான் கொண்டுவந்திருந்த பூங்கொத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு,"வாழ்த்துக்கள் பாவா.. ஒருவழியா கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க போல.. எனிவே ஹாப்பி மேரீட் லைஃப்.." என்றவள் மௌனியை அலட்சியமாய் பார்த்து வைத்தாள்.


ஆனால் பிரபாவோ, "தேங்க் யு ஷாலினி தேவி.. மீட் மை வொய்ஃப் மௌனிகா சித்தார்த் பிரபாகரன்.." என்றவன் மௌனியின் தோளில் கை போட்டு அவளை அணைத்துக்கொண்டான். கணவனின் அணைப்பில் எப்போதும் போல் முகம் சிவந்து கண்களில் நிறைந்த காதலோடு அவனை ஏறிட்டு பார்த்தாள்.. அவனுமே, அவளுக்கும் சற்றும் குறையாத காதலோடு அவளை இன்னும் இறுக்கி கொண்டான். இருவரின் இணக்கத்தை பார்த்த ஷாலினி என்ன நினைத்தாளோ அங்கிருந்து விறுவிறுவென்று சென்றுவிட்டாள். அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்த பிரபாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.


அதே புன்னகையோடு மனைவியின் கை பிடித்து அவன் திட்டத்தின் படி அங்கு வரவைக்கப்பட்ட பிரஸ், மீடியா, ரிப்போர்ட்டர்ஸ் என்று எல்லோர் முன்னிலையில் வந்தவன் அவர்கள் கேட்ட விதவிதமான கேள்விகளுக்கு சற்றும் சளைக்காது பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால், அதில்அங்கிருந்த ஒரு நிருபர், "சார்..ஏற்கனவே உங்க கல்யாணம் நின்று போய்விட்டதாகவும் அதனால் உங்க பர்சனல் லைப்ல நிறைய ப்ரோப்லம் வந்துச்சுன்னு கேள்வி பட்டோம்.. ஆனால் இப்போ இந்த திடீர்னு கல்யாணம் பண்ண என்ன காரணம்?.." என்று அடுத்தவர் பர்சனல் வாழ்க்கையை தங்கள் பப்லிசிட்டிக்காக கேள்வி கொண்டிருந்தார் அந்த நிரூபர்.


பிரபாவோ அதே புன்னகையுடன், "ப்பஸ்ட் உங்க எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்லிக்கிறேன்.. தேவை இல்லாத எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்.. எங்களது கல்யாணம் முழுக்கமுழுக்க காதல் கல்யாணம்.. நடுவில் எனக்கு நடந்த ஒரு விபத்தினால் நாங்க ரகசிய கல்யாணம் செய்துகொள்ள வேண்டியதாகி விட்டது.. யாருக்கும் எங்களால் அழைப்பு கொடுக்க முடியவில்லை.. இப்போது தான் நான் முழுமையாக குணமாகினேன்..அதனால் ஊர்அறிய சட்டப்படி நாங்க கல்யாணம் செய்து கொள்கிறோம்.." என்று கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் அடுக்குகளாய் பேசியவனை கண்டு அவள் விரக்தியாய் சிரித்தாள். தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று உள்ளுக்குள் செத்து கொண்டிருந்தாள். ஏன்னால் இது எதுவும் உண்மை இல்லையே.. அவன் சொன்ன காதல், கல்யாணம் இது எல்லாவற்றிக்கும் சொந்தமானவள் அந்த ஷாலினி தானே.. என்று அவள் மனம் பல்வேறு சிந்தனைகளில் ஓடியது. இறுதியாக "குழந்தைக்காக தான் வந்தேன்.." என்று அவன் சொன்ன வார்த்தையில் வந்து நின்றது.


இவளது நிலையோ இப்பிடி இருக்க.. அங்கு கீர்த்தியின் நிலை மிகவும் மோசமாகியிருந்தது. இரு பெண்களின் வாழ்கையில் சந்தோஷம் என்பதே கிடையாது என்று அவர்களுக்கு விதிக்கப்பட்டு விட்டதோ?.,

Pls share your comments :

https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#25
அத்தியாயம் 18:


ரிசெப்ஷனில் வசந்தியோடு நின்று வந்தவர்களை உபசரித்து கொண்டிருந்த கீர்த்தியின் அழகில் கார்த்திக் தடுமாறி தான் போனான். மயில் வண்ண புடைவையை ஒற்றையாக விரித்து பாந்தமாய் அவள் கட்டியிருந்த விதம் அவளின் அழகை இன்னும் அழகாக காட்டியது.அதேபோல் அவளின் இடையை தாண்டி இருந்த கூந்தலை அழகுற பிரெஞ்ச் ஸ்டைலில் தளர பின்னலிட்டு காதோரத்தில் ஒற்றை சிகப்பு ரோஜாவை செருகி விட்டிருந்தாள். தன் சேமிப்பில் வாங்கிய தங்க நகைகள் அனைத்தையும் தங்கைகள் இருவருக்கும் போட்டுவிட்டவள் தன்னிடமிருந்த ஒர்ஜினல் முத்துக்களால் ஆன அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களை மட்டும் அனிந்து அழகுற திகழ்ந்தாள். அதிலும் அவள் அனிந்திருந்த அந்த ஒற்றை வைரகல் மூக்குத்தியில் ஜொலித்த அவளின் பால் வண்ண முகத்தை கண்டு அவன் மனம் மயங்க தான் செய்தது. இதுநாள் வரை அவளிடம் தன் மனதை தெரிய படுத்த அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.அன்றைய நிச்சயத்தில் நடந்த நிகழ்விற்கு பிறகு அவள் அவனை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. அவன் பேசவரும் பொழுதெல்லாம் அவள் யாருடனாவது சேர்ந்து கொள்வாள். அவள் வேண்டுமென்றே தன்னை தவிர்கிறாள் என்று அவனுக்குமே புரிந்து தான் இருந்தது. எப்பிடியும் அவளுடன் பேசி இதற்கு ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தான். ஏனெனில் அவளின் இந்த புறக்கணிப்பு அவனுக்கு வருத்தத்தை விட கோபத்தை தான் அதிகம் தூண்டுகிறது என்று அவனால் உணர முடிந்தது. எங்கே அந்த கோபத்தில் அவளை காயப்படுத்தி விடுவோமோ என்றும் கூட பயந்தான்.அதற்குள் அங்குவந்திருந்த பிசினஸ் நண்பர்கள் அனைவரும் அவனை சூழ்ந்து கொள்ள அவர்களிடம் பேசியவாறே சென்றான். அதுவரை தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்த கீர்த்தி சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள். செல்லும் அவன் முதுகையே வெறித்து பார்த்தவளின் முகம் வேதனையை பிரதிபலித்தது. ஆனால் அவள் ஒன்றை கவனிக்க தவறினாள். அவன் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டே சென்றாலும் எதிரில் அழகுக்காக வரிசையாக வைக்கப்பட்ட முழுநீள கண்ணாடியின் வழியே அவளை பார்த்து கொண்டே தான் சென்றான். அவள் முகத்தில் தெரிந்த வேதனையை கண்டு என்ன நினைத்தானோ சற்று தூரம் சென்றவன் நண்பர்களிடம் எதையோ பேசிவிட்டு நேரே கீர்த்தியை நோக்கி வந்தான்.அவன் வருவதை கண்டு மீண்டும் அவள் இயல்பு போல் முகத்தை திருப்பிக்கொண்டாள். ஆனால் அவனோ முகத்தில் தவழ்ந்த புன்னகையுடன் அவள் அருகில் வந்தவன், "கீர்த்தி.. உன்னை அம்மா வர சொன்னாங்க.. ஏதோ திங்ஸ் எடுத்து வைக்கனும்மா.." என்றவனை குழப்பமாய் பார்த்தவள், "வசந்தி ஆன்டியா?..இங்கே தானே இருந்தாங்க?.." என்று சுற்றி முற்றிலும் பார்த்தாலும் அவனுடன் செல்ல தவறவில்லை.ஸ்டார் ஹோட்டல் போன்று ஆடம்பரமாக இருந்த அந்த கட்டிடத்தில் கண்ணாடி எது கதவு எது என்று தெரியாத வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மேலே முதல் தளத்தில் ஹோட்டல் ரூம் போல் வரிசையாக இருந்த முதல் ரூமின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை தொடர்ந்து அவளும் சென்றாள்.அவள் உள்ளே வந்ததும் அடுத்த நொடி கதவை லாக் செய்து அதன் மீது சாய்ந்து நின்றவன் அவளையே உறுத்து விழித்தான். அவனின் செய்கையில் பதறியவள், "காத்திக் சார்.. என்..என்ன பண்றீங்க?..முதல்ல கதவை திறங்க.. யாராவது வந்துட போறாங்க?.. எதுக்காக இப்பிடி பொய் சொல்லி கூட்டிட்டு வந்தீங்க.." என்றவள் இதயம் படபடக்க தன் மென்குரலால் அவனை பார்த்து கதியவளை கண்டு அசராது பார்த்தவன், தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவள் கண்களை நேருக்குநேராக பார்த்தபடி,"எதுக்காக நான் உன்னை கூட்டிட்டு வந்தேன்னு உனக்கே தெரியும்.. போதும் உன்னோட இந்த கண்ணாமூச்சி ஆட்டம்..இன்னைக்கு நான் உன்கிட்ட பேசியே ஆகணும்.. இதுக்கும் மேல என்னால காத்துகிட்டு இருக்க முடியாது.." என்றவனிடத்தில்,


"உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை.. வழியை விடுங்க நான் போகணும்.."


"எனக்கு பதில் சொல்லாமல் நீ இங்கிருந்து போக முடியாது.. " இறுகிப்போய் ஒலித்தது அவன் குரல்.


"இப்போ நீங்க வழியே விடலைன்னா நான் சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுவேன்.. "


"ஓ..தாராளமா கூப்பிடு.. அதுவும் ஒருவிதத்தில் எனக்கு நல்லது தான்.. " கேளி போல் உரைத்தாலும் அவன் முகம் கோபத்தை தான் வெளிப்படுத்தியது.


"ஒரு பொண்ணுகிட்ட இப்பிடி நடந்துக்கிறீங்களே உங்களுக்கு அசிங்கமா இல்லை?.." வேண்டுமென்றே வார்த்தைகளை சிதறவிட்டாள்.அதில் அவன் பொறுமை எல்லையை கடந்தது. வேகமாக அவள் கழுத்தை பிடித்து சுவற்றோடு சுவராக சாய்த்தவனின் முகம் செந்தணலாக மாறி இருந்தது. அவனின் கண்கள் சிவந்து அனலாய் அவள் மீது படிந்தது. அவனது இந்த கோபத்தில் அவள் உடல் நடுங்கியது. அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் குளம் போல் தேங்கியிருந்த அவளின் கண்களை அழுத்தமாக பார்த்தவன், "இதோ இந்த பார்வை தாண்டி..முதன்முதலில் என்னை பயத்தோடு பார்த்த இதே பார்வை தான் இன்னும் என்னை உயிரோட கொன்னுட்டு இருக்கு..எப்போ உன்னை பார்த்தேனோ அப்போதிலிருந்தே என் நிம்மதி போச்சுடி.. உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ எனக்கு மட்டும் தான்.. சின்ன வயசுல இருந்து அனாதையாய் தனிமையில வாழ்ந்துட்டு இருந்த எனக்கு எல்லாமுமாய் நீ வேணும்டி.. எனக்கே எனக்குன்னு நீ வேணும்.." என்றவனின் குரல் கோபத்தில் ஆரம்பித்து வேதனையில் முடிந்தது.ஆனால் அவளோ, "நா.. நான் உங்களை விரும்பவில்லை.. நீ..நீங்க என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க.." அவன் கழுத்தை அழுத்தி பிடித்து இருந்ததனால் அவளால் திக்கி திணறி தான் பேச முடிந்தது.


அவளின் வார்த்தையில் அவனுக்கு கோபம் வந்தாலும் அவள் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை கண்டு அவன் முகம் மலர்ந்தது. அதுவே அவளது மனதை அவனுக்கு சொல்லியது. அவள் கழுத்தை பிடித்திருந்த தன் கைகளை விலக்கி கொண்டு அவளின் அருகில் நெருங்கி நின்றவன், "அப்பிடியா?.. அப்போ நீ என்னை விரும்பவில்லை?.." என்று உதட்டில் தவழ்ந்த குறும்புன்னகையுடன் கேட்டவனை கண்டு அவள் தான் தடுமாறி போனாள்.


இருந்தும் தன்னை சமாளித்தவள் தைரியமாக அவனை நிமிர்ந்து பார்த்து, "உண்மை தான் கார்த்திக் சார்.. நீங்க தான் ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க போல.. என் மனசுல அப்பிடி ஒரு எண்ணம் இருந்ததே கிடையாது.. நீங்க ஜஸ்ட் பிரபா அண்ணாவோட பிரண்ட் அவ்ளோதான்.." என்று தடுமாறியபடி பேசியவளை கூர்மையாக பார்த்தவன், "அப்போ வேறவழி இல்லை.. டெஸ்ட் பண்ணி பார்த்திட வேண்டியது தான்.." என்று தாடையில் கை வைத்து யோசித்தவாறு சொன்னவனை புரியாது பார்த்தாள்.


அடுத்த நொடி அவள் என்ன என்று உணரும் முன்பே தனது முரட்டு இதழால் அவளின் செப்பு இதழை சுவைத்தான். திடீரென்று நடந்த நிகழ்வில் பெண்ணவள் பயந்து தான் போனாள். தன்னால் முடிந்த அளவு அவனிடம் போராட அவள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தொலைவிலே முடிந்தது. வலிமையான தேகம் கொண்ட அவனிடத்தில் மெல்லிய பூந்தேகம் கொண்ட அவளால் போராட முடியவில்லை. மொத்த காதலையும் தனது இதழால் அவளுக்குள் செலுத்தி கொண்டிருந்தான் அந்த காதல் கள்வன்.. வெகுநேரம் அவனது முத்தத்தில் போராடிக்கொண்டிருந்தவள் ஒருகட்டத்தில் அவள் ஆழ்மனதில் அவன் மீது உண்டான காதலால் கொஞ்சம் கொஞ்சமாய் அவளது எதிர்ப்புகள் குறைந்து அவனது முத்தத்தில் கிறங்கி நின்றாள். தன்னையும் அறியாமல் தொங்கவிடப்பட்டிருந்த தன் மலர் கரங்களை மெல்ல உயர்த்தி அவனது முதுகில் படரவிட்டவள் அவனை அணைத்து கொண்டாள். அதை உணர்ந்தவன் இன்னும் அழுத்தமாய் அவள் இதழை சுவைத்து விட்டு அடுத்த நொடி அவளை விட்டு விலகியவனின் முகம் சிரிப்பில் மலர்ந்தது. அவளது கை அவனை அணைத்திருக்க அவன் முகத்தருகில் கண் மூடி உதடு துடிக்க முகம் முழுவதும் சிவந்து உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தவளை பார்த்தவனுக்கு அத்தனை மனநிறைவு. கர்வமாய் அவனது முகத்தில் புன்னகை மலர்ந்தது.அதே புன்னகையுடன் அவளின் கன்னத்தை தன் பெருவிரலால் வருடியவன் அவளை பார்த்து,"குட்டிம்மா.. " என்று அழைத்தவனின் வார்த்தை அத்தனை குழைவாக வந்தது. ம்ஹும் எங்கே அதையெல்லாம் அவள் காதில் விழுந்தால் தானே!.. அவள் தான் வேறு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறாளே.இன்னும் கண் திறக்காமல் இருந்தவளை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அவளை இன்னும் தன்னோடு இறுக அணைத்து கொண்டவன்,"குட்டிம்மா.. கண்ணை திறடி.." என்றவனின் வார்த்தையை விட அவனின் அணைப்பில் தான் அவள் தன்நிலைக்கு வந்தாள். சட்டென அவனை தள்ளிவிட்டு நின்றவள் அவனை முறைத்து பார்த்தாள்.


அவனோ அவளின் முறைப்பை எல்லாம் கண்டுகொள்ளாமல் உதட்டின் ஓரத்தில் தவழ்ந்த குறும்புன்னகையுடன் மீண்டும் அவள் அருகில் வந்தவன், "இப்போ சொல்லுடி நீ என்னை விரும்பவில்லைன்னு.." என்றவனை கோவத்தோடு ஏறிட்டு பார்த்தவள், "இதுக்கு பேர் காதல் இல்லை.. உங்க உடல்பசிக்காக என் உணர்வுகளை தூண்டி விடுறீங்க.."என்று அவள் முடிக்கும் முன் தரையில் விழுந்து கிடந்தாள். அவன் அடித்ததினால் கன்னம் தீயாய் எரிய காதில் சுளீரென்று வலியெடுக்க
பயத்துடன் அவனை பார்த்தாள். அவனோ கோபத்தின் உச்சத்தில் ஐயனாராகவே மாறிப்போனான்.


அதே கோபத்தில் அவள்புறம் குனிந்து அவள் முடியை கொத்தாக பிடித்தவன், "என்னடி சொன்ன.. " என்று ஆத்திரத்தில் மறுகையால் அவளை அடிக்க போக அதில் அவள் பயந்து சற்று பின்னால் நகர்ந்தாள். அவள் உடல் முழுவதும் அப்பட்டமாக பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது. அந்த நிலையிலும் அவள் கண்ணில் தெரிந்த பயத்தில் என்ன கண்டனோ, "ச்சை.. உன்னை அடிக்கிறதுக்காக தொடக்கூட இப்போ எனக்கு கூசுதுடி.." என்றபடி விலகி எழுந்தவன் தலையை அழுந்த கோதி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். அவளோ தரையில் அமர்ந்தபடி தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தாள்.


அவள் அழுவதை பார்த்தவனுக்கு இன்னும் கோவம் அதிகரிக்க, "ச்ச்சீ..மொதல்ல அழறதை நிப்பாட்டுடி.." அதற்க்கும் எரிந்து விழுந்தான். என்ன முயன்றும் அவனால் அவன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் பேசிய வார்த்தையிலேயே வந்து நின்றது. இதற்கு மேலும் இங்கு நின்றால் அவளை இன்னும் எதாவது காயப்படுத்தி விடுவோம் என்று அங்கிருந்து சென்றான். வாசல் வரை சென்றவன் என்ன நினைத்தானோ திரும்பி அவளை பார்த்து, "என் காதலை இதைவிட கேவலமா அசிங்க படுத்தமுடியாது.." கோவமா இல்லை ஆதங்கமா என்று தெரியாத வகையில் வெளிவந்தது அவனது குரல். பின், அவள் மீது இருந்த கோவத்தை கதவின் மீது காட்டியவாறு வேகமாக சென்று விட்டான்.


அவன் சென்ற பிறகு முழங்கால்களை கட்டிக்கொண்டு ஒருபாடு கதறி அழுதவள், "சாரி கார்த்திக்..ரியலி சாரி.. நான் உங்களுக்கு வேண்டாம் கார்த்திக்.. என்னால உங்களுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்காது.. உங்களை கல்யாணம் பண்ணிக்கிற தகுதியும் எனக்கு இல்லை.." என்றவள் தன் நிலையை நினைத்து கதறி துடித்தாள். தன்னால் முடிந்தமட்டும் தன் வேதனையை அழுகையில் கரைத்தவள் பின் தன்னை சரிப்படுத்தி கொண்டு கீழே வந்தாள். அப்போது தான் பிரபா மௌனி இருவரும் பிரஸ்மீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.


அதன் பிறகு பங்க்சன் எந்த குறையும் இல்லாமல் அழகாக நிறைவுற்றது. பங்சன்க்கு வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சியின் ஆடம்பரத்தையும் மணமக்களின் பொருத்தத்தையும் கண்டு அசந்து தான் போனார்கள். கடந்த ஒரு வருடத்தில் அவனை பற்றிய பேச்சுக்கள், வதந்திகள் என எல்லாவற்றையும் பொய்யாகும்படி செய்து விட்டான் தொழில் அதிபன் சித்தார்த் பிரபாகரன். இதுதானே அவனும் எதிர் பார்த்தது. இப்பொழுது தான் அவன் மனம் முழுதாய் நிறைந்து இருந்தது. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை தவிர என்று நினைத்தவனின் பார்வை மௌனியின் மீது படிந்தது. அவன் மனம் அவளிடம், "ஏன் என்னிடம் பொய்யாகி போனாய் அம்மு.. " என்று ஊமையாய் அழுதது.


ஆனால் மௌனியின் மனமோ ஷாலினியின் நினைவில் உழன்று கொண்டிருந்தாள். அந்த நால்வரின் மனமும் ஒவ்வொரு வேதனையில் துடித்து கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மற்றவரின் நலனை கருதி தான் தனக்குள் துடித்து கொண்டிருக்கின்றனர். இதுதானே அன்பு மனதுக்கு பிடித்தவர்களின் சந்தோஷத்திற்காக எந்த வலியையும் தாங்கி கொள்ளலாமே...


நேரம் செல்ல செல்ல வந்தவர்களும் சென்றிருக்க பங்க்சன் எந்த ஒரு குறையும் இல்லாமல் முடிந்தது. இப்பவும் கார்த்திக்கே மௌனியையும் பிரபாவையும் அழைத்துச் சென்றான். அவன் எப்போதும் போலவே எல்லோரிடமும் சிரித்து பேசி சாதாரணமாக தான் இருந்தான். ஆனால் கீர்த்தியால் தான் அப்பிடி இருக்க முடியவில்லை. இம்முறை கீர்த்தி வேறொரு காரில் வசந்தியோடு வந்தாள். கீர்த்தியின் அம்மா,தம்பி தங்கைகள் அனைவரும் மௌனியை கண்கலங்க வழி அனுப்பி வைத்தனர். மௌனியும் மருதத்தை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டாள். அவள் அம்மா இறந்த பிறகு அவளுக்கு துணையாக குடும்பமாக இருந்தது இவர்கள் தானே.. இவர்கள் மட்டும் இல்லையென்றால் தன் நிலையை அவளால் யோசிக்க கூட முடியவில்லை.. வெகுநேரம் அழுது கொண்டிருந்தவளை மருதம் தான் அதட்டி, அன்பாய் அக்கறையாய் அம்மாகே உரித்தான புத்திமதிகளுடன் அவளை அனுப்பி வைத்தார்.


இங்கு பிரபாவின் வீட்டிற்கு வந்ததும் கார்த்திக் தனக்கு அசதியாய் இருக்கு என்று அவன் அபார்ட்மெண்ட்க்கு சென்று விட்டான். பிரபாவும் வீட்டினுள் நுழைந்ததும் மௌனியை கூட கண்டு கொள்ளாமல் விறுவிறுவென்று மேலே தனது அறைக்குச் சென்றுவிட்டான். வசந்தி தான் அவர்கள் முறைப்படி மௌனியை விளக்கேற்ற வைத்து சில சம்பர்தாயங்களை செய்து கொண்டிருந்தார். உடன் கீர்த்தியும் தோழிக்கு உதவியபடி நின்றிருந்தாள்.வசந்தி நேரம் பார்த்து இரவு சடங்குக்காக மௌனியை தயார் செய்யும்படி கீர்த்தியிடம் சொல்லி இருந்தார். அதேபோல் மௌனி தன் அலங்காரத்தை கலைத்து குளித்து பிறகுதான் அவளுக்கே நிம்மதியாக இருந்தது. ஏதோ பாரம் குறைந்தது போல் உணர்ந்தாள். பின் எளிமையான பிங்க் நிறத்தில் சிந்தடிக் புடைவையை ஒற்றையாக விரித்து விட்டவாறு கட்டியிருந்தாள். முடியை தளர பின்னலிட்டு இருபுறமும் வலியுமாறு மல்லிப்பூவை அணிவித்து தோழியை ரெடி பண்ணிக்கொண்டிருந்தாள் கீர்த்தி. ஆனால் இரு பெண்கள் முகத்திலும் மருந்துக்கும் சந்தோஷம் என்பது ஒருதுளி கூட இல்லை. இருவரின் மனதிலும் பல்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது.


மௌனிக்கு பிரபாவை எப்பிடி எதிர்கொள்ள போகிறோம் என்று பயமாக இருந்தது. அவனோடு வாழ்ந்து அவனது வாரிசை சுமந்து கொண்டு இருப்பவள் தான். ஆனால் அப்போதெல்லாம் அவன் சித்துவாக காதலை மட்டுமே அவளிடத்தில் வெளிப்படுத்தியவன். ஆனால் இப்போது பிரபாவாய் மாறி இருக்கும் இவனிடத்தில் அவளுக்கு காதலை விட பயம் தான் முதலில் வந்து நிற்கிறது. அதே பயத்தோடு கணவனின் அறையில் உரிமையாய் காலடி வைத்தாள் மௌனிகா சித்தார்த் பிரபாகரன்.. பாவம் அங்கு அவளுக்கு என்ன காத்திருக்கிறதோ?...


Pls share your comments :

https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#26
அத்தியாயம் 19:


மௌனியை அறைக்குள் அனுப்பிவிட்டு வந்த கீர்த்தியை வசந்தி கை பிடித்து நேரே உணவுமேஜைக்கு இழுத்துச் சென்று அவளை அமரவைத்தவர் பிளேட்டில் உணவுகளை பரிமாறியவாறே, "எப்போவும் தோழியை கவனிச்சிக்கிறது தப்பில்லை.. கூட உன்னோட ஹெல்த்தையும் பார்த்துக்கணும் தானே.. எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யிற ஆனால்,சாப்பிடறதுக்கு உனக்கு நேரம் இல்லையா?..ம்ம்ம்ம்?... மதியத்திலிருந்து நீ இன்னும் சாப்பிடல மொதல்ல சாப்பிடு.." என்று செல்லமாய் கடிந்தபடி அவளை உணவு உண்ணவைத்தார்.


மௌனியும் கூட தனக்கு இருந்த மனநிலையில் கீர்த்தியை கவனிக்க தவறினாள். கீர்த்திக்கோ கார்த்திக்கை பற்றிய சிந்தனையிலேயே தனக்குள் உழன்று கொண்டிருந்தாள். இன்று தான் அவனிடம் பேசியதை நினைத்து அவளுக்கும் வேதனையாக இருந்தது. ஆனாலும், அவனின் நலனுக்காக எந்த வலியையும் தாங்கி கொள்ளலாம். என்று நினைத்தபடி தொண்டைக்குழியினுள் இறங்க மறுத்த உணவை தண்ணீரை குடித்து இயந்திர கதியில் விழுங்கினாள்.அவளருகில் அவளுக்கு பதார்த்தங்களை பரிமாறியபடி அமர்ந்திருந்த வசந்தியின் பார்வை கீர்த்தியின் மீது கனிவுடன் படிந்தது. பழைய நினைவுகளில் அவரின் கண்களும் சற்று கலங்கியது. அதை பார்த்த கீர்த்தி, "ஆண்டி.. என்னாச்சு ஆண்டி?.. எதாவது பிரச்சினையா?.." என்று பதட்டத்துடன் கேட்டவளை கண்டு புன்னகைத்தவர், "ஒண்ணுமில்லைம்மா.. உன்னை பார்க்கும் போது எனக்கு என்னோட பிரண்ட் ஞாபகம் வந்துருச்சு அதான்.. அவளும் உன்னை மாதிரி தான் இருப்பாள்.. பிரண்ட்ஷிப்க்காக எதையும் செய்வாள்.." என்றபடி பழைய நினைவுகளில் பேசியவரை கண்டு லேசாக புன்னைகைத்த கீர்த்தி சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை எடுத்து ஒதுங்க வைத்து கொண்டிருந்தாள்.அவளுக்கு இருந்த மனநிலையில் அவளால் யாருடனும் பேசமுடியவில்லை. ஒருவேளை வசந்தியிடம் அது குறித்து அவள் எதாவது பேசியிருந்தால் அன்றே மௌனி,பிரபாவின் மொத்த பிரச்சனையும் முடிந்து இருக்கும். என்ன செய்வது அங்கு தான் இருவருக்கும் நடுவில் விதி..விதி என்ற ஒன்று சட்டமாக அமர்ந்து கொண்டு அவ்வளவு சீக்கிரம் உங்களை சந்தோஷமாக இருக்க விட்டுவிடுவேனா என்கிற ரீதியில் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தது. பின் கீழே உள்ள வசந்தியின் அறைக்கு பக்கத்து அறையில் கீர்த்தி தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின்னரே வசந்தி அவரது அறைக்குச் சென்றார்.இங்கு பிரபாவின் அறைக்குள் நுழைந்த மௌனி அறையின் ஆடம்பரத்தை கண்டு வாயை பிளந்தபடி நின்றிருந்தாள். அப்போது தான் அவனும் குளித்து விட்டு ட்ஷர்ட்டும் லோயரும் சகிதமாக கையில் இருந்த டவலால் தலையை துவட்டியபடி அவளை அழுத்தமாக பார்த்தவாறே வந்தான். அதுவரை வாசலில் நின்று கொண்டிருந்தவள் அவனை கண்டதும் முகம் மலர உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தபடியே, "ஸ்ஷ்ப்பா.. என்ன சித்து இப்பிடியா வீட்டை கட்டுவாங்க?..கீழே இருந்து ரூம்க்கு வரதுக்குள்ள மூச்சு தள்ளுது போங்க.. ஆமா, இவ்வளவு பெருசா வீட்டை கட்டிவச்சிருக்கீங்களே.. நீங்க இன்கம்டாக்ஸ் எல்லாம் ஒழுங்கா கட்டுரீங்களா?.."என்று முதலிரவு அதுவுமாக அதி முக்கிய கேள்வியை கேட்டவளை கண்டு அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது. அவளோ அவனின் முறைப்பையெல்லாம் கண்டுகொள்ளாமல் கையில் இருந்த பாலை நிதானமாய் பருகியபடி மீண்டும் அறையை சுற்றி பார்வை சுழல விட்டாள்.அவள் சொல்வதும் சரி என்பது போல் தான் பிரபாவின் வீடு இருந்தது. அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டில் மூன்று தளஅடுக்குகளாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் மூன்றாவது தளம் முழுவதுமே அவனது அறையாக இருந்தது. அங்குஅவனுக்கு தேவையான ஜிம், அலுவலக அறை, ஹோம்தியேட்டர், பால்கனி என்று அனைத்தும் அழகுற அதிநுட்ப டெக்னாலஜி முறையில் வடிவமைக்க பட்டிருந்தது. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பணத்தின் செழுமை நன்றாகவே தெரிந்தது.பாலை குடித்து முடித்து எழுந்தவள் மெல்ல நடந்து ஏதோ எக்ஸ்சிபிஷன்னை சுற்றி பார்ப்பது போல் அந்த அறையை பார்த்துக்கொண்டிருந்தாள். அழகிய வண்ண பெயிண்ட் கொண்டு அதைக்கேற்றார் போல் அழகிய வண்ண ஒளிர்விளக்குகளை பொருத்தப்பட்டு ஸ்டார் ஹோட்டல் ரேன்ஞ்சிற்கு அறையின் இன்டீரியர் டேக்ரேஷனை அமைப்பை கண்டு வியந்தவள், "ஹ்ம்ம்... கன்ஸ்டர்க்ஷன்ஸ் கம்பெனி வச்சிருக்கவன் வீடு இப்பிடி இல்லைன்னா தான் ஆசிரியப்படணும்.." என்றவாறு அவளின் படிப்பு திறமையெல்லாம் செலுத்தி அந்த அறையை நோட்டம்
விட்டுக்கொண்டிருந்தாள். அவனோ எதுவும் பேசாமல் அவளின் செய்கையை பார்த்தவாறே அங்கிருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டபடிஎதிரில் இருந்த லேப்டாப்பில் தனது வேலை பார்த்து கொண்டிருந்தான்.


எவ்வளவு நேரம் தான் அறையை சுற்றி பார்ப்பது போல் நடிக்க முடியும் எப்பிடியும் அவனை எதிர்க்கொண்டே ஆக வேண்டும் என்ற முடிவோடு அவன் வேலை செய்வதை பார்த்தவாறே அவனருகில் வந்தவள் தயங்கியபடி அவனை பார்த்தாள். இதுவரை தனது குறும்புத்தனத்தால் அவளது பயத்தை ஒதுக்கி வைத்திருந்தவள் அவனின் இந்த இறுகிய முகத்தை கண்டு மறுபடியும் அவளுக்குள் குளிரெடுத்தது. எதுவும் பேச முடியாமல் அவனையே பார்த்தவாறு நின்று இருந்தாள்.அவனோ கொஞ்சமும் அவளை கண்டுகொள்ளவில்லை. தன் வேலையிலேயே கவனமாய் இருந்தான். அவனின் இந்த புறக்கணிப்பு அவளுக்கு வலித்தது. ஏற்கனவே பல வலிகளை சுமந்து கொண்டிருப்பவள் கூட திடீரென்று ஷாலினியின் வருகையோடு சேர்த்து இவனின் இந்த புறக்கணிப்பு எல்லாம் அவளை இன்னும் அதிகமாய் வேதனை படுத்தியது. மனதின் வலியை கண்கள் உணர்ந்து கலங்கியபடி நின்றவளை திரையின் மீதிருந்த பார்வையை திருப்பாமல் கையை மட்டும் உயர்த்தி அவள் இடையோடு சேர்த்து இழுத்து தன் மடியில்போட்டுகொண்டவன்,முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது தன் வேலையை தொடர்ந்தான். அவளோ "சித்து... " என்றபடி பதறி எழப்போனவளை ஒருகையால் வளைத்து பிடித்தவன் மறுகையால் கீபோர்டை தட்டிக்கொண்டிருந்தான். என்ன தான் அவன் மீது மனத்தாங்கல் இருந்தாலும் அவனிடம் கோபம் கொள்ளவோ புறக்கணிக்கவோ அவளால் எப்போதுமே முடியாது. அதனால் அவன் மடியில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.ஆனால் மனைவியை மடியில் வைத்துக்கொண்டு எந்த கணவன் அமைதியாக இருப்பான். கணவனாகிய அந்த கள்வன் தன் லீலைகளை அவளிடத்தில் காட்ட ஆரம்பித்தான். புடைவை தளப்பினுள் இடையை சுற்றி படர்ந்திருந்த அவனது கைகள் சொன்ன செய்தியில் பெண்ணவளின் உடல் மொத்தமாக நடுங்கியது. "பாவா.." என்றபடி முனகியவள் அவன் கையின் மீது கை வைத்து தடுக்க முயன்றாள். ஆனால் அப்போது தான் அவனின் அணைப்பும் வேகமும் அதிகரித்தது. அதை உணர்ந்தவளும் அதன் பிறகு அவனை தடுக்காமல் அவன் கைகளுக்கு விடுதலை அளித்தாள். ஆனால் அதற்குள் அவள் தான் ஒருவழியாகி போனாள். ஒருகட்டத்தில் அவனின் லீலைகளை தாங்க முடியாமல் சட்டென எழுந்து நின்றவள், "போங்க பாவா.. ரொம்ப வலிக்குது.. நீங்க முன்னாடி மாதிரி இல்லை.. இப்பயெல்லாம் ரொம்ப மோசம்ப்பா.. டர்ட்டி பாய் ஆ பிகேவ் பண்றீங்க.." என்று சிறு குழந்தை போல் பாவனையில் அவனிடமே புகார் வாசித்தவளை கண்டு அவனால் என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.அவன் சிரித்ததில் இன்னும் கோபமுற்றவள் காலால் தரையை உதைத்தபடி, "போங்க.. நான் அத்தைம்மாகிட்ட போறேன்.. அவங்ககிட்ட சொல்லி உங்களை என்ன பண்றேன்னு பாருங்க.. " என்றவள் அங்கிருந்து நகர போனாள். அதில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் எங்கே லூசு தனமாய் எதாவது செய்து விடுவாளோ என்று எழுந்தவன் அவளின் கை பிடித்து இழுத்து தன் இரு கரங்களால் அவள் இடையோடு சுற்றி வளைத்து கொண்டவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டிய படி, "எங்கேடி போக போற?.." என்று கேலியாய் கேட்டவனை கண்டு முறைத்தவள்,


"நா..நான் உங்களை பத்தி அத்தைம்மா கிட்ட கம்பளைண்ட் பண்ண போறேன்.."என்று அவனை நோக்கி ஒற்றை விரல் நீட்டி கெத்தாக மிரட்டியவளின் வெண்டை பிஞ்சு விரலை கடித்து வைத்தவன்.


"ஓ.. போய் மேடம் என்ன சொல்ல போறீங்க.." அதே கேலி குரலில் கேட்டான்


அவன் கடித்த கையை உதறியபடிபடி,
"நான் போய்.. நீங்க.. நீங்க.. நீ.. " என்றவளின் குரல் பாதியிலேயே நின்றது.அப்போது தான் அவளுக்குமே தனது மடத்தனம் புரிந்தது. 'அச்சோ மௌனி.. இவ்வளவு லூசாடி நீ.. போச்சு உன் மானமே போச்சு...' என்று மனதில் தன்னையே நினைத்து கடிந்தவள் முகத்தில் டன்டன்னாக அசடு வழிய அவனை ஏறிட்டு பார்த்தாள்.


அவனோ உதட்டின் ஓரம் குறும்புன்னகையுடன், "ம்ம்ம்ம்.. நான்..நான்..என்ன பண்ணேன்?.." என்று விடாது கேலி செய்த்தவனை கண்டு முகம் சிவந்தவள், "சித்து... " என்றபடி சிணுங்கி அவன் நெஞ்சிலேயே முகம் புதைத்து கொண்டாள். அவனும் மெல்லிய சிரிப்போடு அவளை
அனைத்துக்கொண்டவன் குனிந்து அவள் காதோரத்தில் மீசைமூடி குறுகுறுப்போடு முத்தமிட்டவன், "காலைல மொத்தமா உங்க அத்தைம்மாகிட்ட கம்பளைண்ட் பண்ணிக்கோ.."என்றவன் அடுத்த நொடி அவள் என்ன என்று உணரும் முன்பு அவளை தன் கைகளில் ஏந்தியவன் அவர்கள் இருந்த வரவேற்பு அறையை தாண்டிய படுக்கையறையினுள் தூக்கிச் சென்றான்.


அங்கு அறை முழுவதும் அவளுக்கு பிடித்த சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அதேபோல் சிவப்பு நிறத்தில் இதயம் வடிவ பலூன்கள் தரையெங்கும் பரவி கிடைந்தது. பார்ப்பவர்கள் வியக்கும் வகையில் அறை அழகுற திகழ்ந்தது. மங்கிய ஒளியில் விட்டுவிட்டு எரிந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில் அறையை பார்த்தவள் அதிர்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இளம் பெண்ணான அவள் தன் திருமண வாழ்க்கையின் ஆசையில் இதுவும் ஒன்றாக கற்பனை செய்து வைத்திருந்தாள். அதே மாதிரி அவளுக்கு பிடித்தது போலவே அந்த அறை அலங்கரிக்க பட்டிருந்தது. வெள்ளை திரைச்சீலையினால் மூடப்பட்டு நன்றாகவே பெரிதாய் இருந்த அந்த வட்ட வடிவ கட்டிலில் பூவோடு பூவாக அவளை கிடத்தியவன் அவளை பார்த்து ஒற்றை புருவம் தூக்கி கண்ணடித்து சிரித்தான்.


"சித்து... " என்று கண்கலங்க எழப்போனவளின் தோளில் கை வைத்து மீண்டும் கிடத்தியவன் அவள் மேல் பரவி படர்ந்தான். அவளின் கண்ணீரை துடைத்து விட்டு அவளது நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தவன் தன்னோடு அவளை பாதுகாப்பாய் அணைத்துக் கொண்டான்.அவளும் கணவனின் அணைப்பில் விருப்பத்துடன் ஒன்றினாள். வெகுநாட்களுக்கு பிறகு அவளின் இந்த நெருக்கம் அவனை முற்றிலுமாக கிறங்கச் செய்தது. அதுவும் அவனுக்கு மட்டுமே உரிமையாய் மனைவியாய் தன் கைகளுக்குள் உருகியவளை அவன் காதல் கொண்ட மனது அவள் மீது இருந்த எல்லா கோபத்தை மறந்து அவளின் பழைய சித்துவாக மாறி போனான். அவளிடத்தில் மட்டுமே தன் மனம் நாடுவதை நினைத்து அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது. இந்த அளவிற்கா ஒரு சிறு பெண்ணிடம் தான் மயங்கி இருக்கிறோம் என்று அந்த முப்பது வயது ஆண்மகனும் தடுமாறி தான் போனான்.


அவனின் அருகாமையில் எப்போதுமே அவள் உடல் சிலிர்த்து நடுங்கும். அதை உணர்ந்தவனும் முகத்தில் நிறைந்த புன்னகையோடு காதலாக இருந்தவன் கணவனாக மாறி அவளிடத்தில் தன் தேடலை ஆரம்பித்தான். அவளின் உடல் நிலை கருதி மென்மையாய் தன் தொடுகையில் அவளை மலரச் செய்தான். பெண்ணவளின் இயல்பான தடுமாற்றத்திற்கும், உணர்விற்கும் மதிப்பு கொடுத்து அவளை நாடினான். அழகிய காதலோடும், புரிதலோடும் தங்கள் மனதில் இருந்த மற்ற எல்லா கசப்பான சுவடுகளையும் மறந்து இந்த நிமிடம் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பை மட்டும் கருத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையை அழகாக பூக்கச் செய்து கொண்டிருந்தனர். முழுதாய் அவளோடு கூடி கலந்தவன் சில மணி நேரத்திலேயே அவளை விட்டு விலகினான். அதிலிலேயே அவள் சற்று சோர்ந்து தான் போனாள்.


விலகி படுத்தவன் கை நீட்டி அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன், "அம்மு.. ஆர் யு ஓகே.." என்றவனின் மிருதுவான வார்த்தையில் அவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது. முயன்று தன்னை கட்டு படுத்திக்கொண்டவள், "ம்ஹும்.. ஒண்ணுமில்லை.." என்பது போல் தலை அசைத்து அவன் வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். வெகு நாட்களுக்கு பிறகு கணவனின் அணைப்பில் நிம்மதியாக உறங்கினாள். அவனுமே அவளை அணைத்துக்கொண்டு கண்ணயர்ந்தான். அந்த நிமிடம் இருவரின் மனமும் நிறைந்து இருந்தது.


அதிகாலையில் முதலில் கண் விழித்து அவன் தான். தன் கையணைப்பில் சிறு குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. மெல்ல அவள் தூக்கம் கலையாதவாறு அருகில் கிடத்தியவன் அவளின் உடையை சரி செய்து அவளுக்கு போர்த்திவிட்டான். அதில் அவள் இன்னும் வசதியாக தன் தூக்கத்தை தொடர்ந்தாள் அவனின் செல்ல மனையாள். பின்னர் சிரிப்புடன் அவளை விட்டு விலகி எழுந்தவன் எப்போதும் போல காலையில் ஒட்டப்பயிற்சிக்காக அணியும் உடையை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான். தெருமுனையில் இருக்கும் விளையாட்டு மைதானத்தை நோக்கி சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தவனின் முகம் புதிதாக மலர்ந்திருந்தது. மைதானத்தினுள் நுழைந்தவன் அவனுக்கு முன்னதாவே உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கார்த்திக்கை நோக்கிச் சென்றான். தூரத்தில் வந்து கொண்டிருந்த பிரபாவை பார்த்து கை அசைத்த கார்த்திக் அவன் அருகில் வந்ததும் அவன் முகத்தை பார்த்து பக்கென்று வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான்.


கார்த்திக் சிரிக்கவும் புரியாது முழித்த பிரபா பின் கண்டிப்பா தன்னை பற்றி தான் வில்லங்கமாய் ஏதோ நினைத்து சிரிக்கிறான் என்று அவனை பார்த்து முறைத்தவன், "என்னடா?.. எதுக்கு சிரிக்கிற?..என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்கா?.." என்றவன் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வெடுக்கென்று பிடிங்கி மடமடவென்று குடித்துக் கொண்டிருந்தான்.


அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இன்னும் சிரித்து கொண்டிருந்த கார்த்திக்கை கண்டு எரிச்சலுற்றவன், "ம்ப்ச்.. சொல்லி தொலையேன்டா.. எருமை.. எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க.. மொதல்ல சிரிக்கிறது நிப்பாட்டு பரதேசி..." என்று கடுப்பாகி போனவனின் தோள் பற்றி திருப்பி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் கண்ணாடி முன் அவனை நிற்கச்செய்த கார்த்திக் "கண்ணாடியை பார்.. " என்று சைகையால் சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்க தொடங்கினான்.


முதலில் கண்ணாடியை பார்த்த பிரபாவிற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் சற்று நேரத்தில் அவனது முகம் வெட்கச் சிரிப்பில் மலர்ந்தது. சட்டென திரும்பி நின்றவன் தலையை அழுந்த கோதிக் கொண்டான். நண்பனின் முகத்தை பார்க்க கூட அவனுக்கு தயக்கமாக இருந்தது. பிரபாவின் இந்த மலர்ந்த முகம் கார்த்திக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. தன் நண்பன் வாழ்க்கையில் இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டான்.


பின் நண்பனின் அருகில் வந்த கார்த்திக் "என்ன மச்சான்.. நைட் ரொம்ப சேதாரமோ?.. அப்பிடி ஏதாச்சும் இருந்தா சொல்லு மச்சான்.. கைவசம் டாக்டர் இருக்காரு.."என்று பராபட்சமே இன்றி கேலி செய்தவனை முறைத்த பிரபா கையில் இருந்த பாட்லை அவன் மீதே வீசி எறிந்தான். அதை அசால்ட்டாய் தட்டி விட்ட கார்த்திக் நண்பனை தன்னால் முடிந்த அளவு ஓட்டி தள்ளிவிட்டான். கார்த்திக்கின் ஒட்டுமொத்த டார்கெட்டும் அன்று பிரபா தான் மாட்டிக்கொண்டான்.

கார்த்திக்கின் இந்த அதீத கிண்டல்களுக்கு எல்லாம் காரணம் பிரபாவின் கன்னத்தின் ஓரத்தில் பல்பட்ட காயம் இருந்தது. அதுவும் அவன் ஆப்ரேஷன் செய்யப்பட்டு இருந்ததால் அவனின் வெள்ளை சருமத்தில் அந்த காயமானது அப்பட்டமாக தெரிந்தது. கார்த்திக்கோ அதை வைத்து தான் பிரபாவை ஓட்டி தள்ளிவிட்டான். பிரபாகோ சங்கட்டமாக இருந்தாலும் மனதில் புதிதான சந்தோஷத்தை உணர்ந்தான்.

கார்த்திக்கின் கிண்டல்களில் இருந்து ஒருவழியாக தப்பித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவனின் மனம் முழுவதும் தன்னவளின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தது. மனைவியை பார்க்கும் ஆசையில் வேகமாக வீடு வந்து சேர்ந்தவனை எதிர் கொண்டவள் ஷாலினியும் அவளது குடுப்பதினரும் தான்...

Share your comments :

https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Agamathi

Friends's of Penmai
Joined
Jul 23, 2017
Messages
148
Likes
441
Location
KULITHALAI
#27
அத்தியாயம் 20:


புது மனைவியை பார்க்கும் ஆசையில் துள்ளல் நடையோடு வீட்டிற்குள் நுழைந்தவன் அங்கு ஹாலில் அமர்ந்திருந்த ஷாலினியையும் அவளது பெற்றோரையும் கண்டு பழைய நினைவுகளில் அவனது முகம் இறுகியது. அந்த சூழ்நிலையிலும் முதலில் அவன் கண்கள் தன்னவளை தான் தேடியது. ஆனால் அங்கு பதட்டமான முகத்துடன் அமர்ந்திருந்த வசந்தியும், கீர்த்தியும் தவிர அவள் எங்கேயும் இல்லாதது கண்டு அவனது புருவங்கள் யோசனையாக முடிச்சிட்டது..அதற்குள் இடைபுகுந்த வசந்தி, "வந்துட்டியா பிரபா.. போப்பா போய் மொதல்ல குளிச்சிட்டு வா கண்ணா.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்.." என்றவர் நிலைமையை சமாளிக்க முயன்றார். அவரிடம் தலை அசைத்த பிரபா ஷாலினியின் அப்பா ராமகிருஷ்ணாவின் மீது அழுத்தமாக பார்வையை பதித்தபடி மேலே சென்றான். அவனின் பார்வையில் அவருக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது. தான் பெற்ற ஒன்றுக்கும் உதவாத மகனையும், மகளையும் நினைத்து பல்லை கடித்தார். கைக்கு கிடைத்த புதையலை ஏளனமாய் தள்ளிவிட்ட தன் மகளை நினைத்து இப்போதும் அவரால் முறைக்க மட்டுமே முடிந்தது.ஷாலினியோ அவரின் முறைப்பையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இருந்தால் தானே. பிரபா வீட்டினுள் நுழையும் போதே அவள் பார்வை முழுவதும் அவன் மீது தான் நிலைத்து இருந்தது. அதிலும் யார் கவனித்தார்களோ இல்லையோ அவன் முகத்தில் இருந்த காயத்தைக் கண்டு அவள் உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாள். அன்றைய சூழ்நிலையில் தன் கனவுகளுக்கும், ஆசைக்கும் மயங்கி தான் செய்த மடத்தனத்தை எண்ணி இப்போது அவளால் வருந்த மட்டுமே முடிந்தது.எந்த வாழ்க்கைகாக அவனை அவமானம் படுத்தி தங்களது காதலை கொன்றுவிட்டு போனாளோ இப்போ அந்த வாழ்க்கைக்காக அவனிடமே அடைக்கலம் தேடி வந்திருப்பதை நினைத்து அவளுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலைக்கு அவளுக்கு வேறுவழியும் இல்லை. அவன் உதவி நிச்சயம் தேவை. அன்று இளம் பருவத்தில் அவன் உயரம் தெரியாமல் அவனை உதறி தள்ளினாள். ஒரு கட்டத்தில் அவன் உண்மையான உயரம் பற்றி தெரிந்த போது காலம் கடந்திருந்தது. அதிலும் அவன் திருமணம் பற்றி கேள்விப்பட்டதும் அவள் நொறுங்கி போனாள். தான் இழந்த இழப்பை அப்போது தான் முழுமையாக உணர்ந்தாள்.இங்கு மேலே சென்றுகொண்டிருந்த பிரபாவின் நினைவில், இப்போது இவர்களின் வருகையால் தன்னவள் எந்த நிலையில் இருக்கிறாளோ என்ற சிந்தனையிலேயே அறைக்குள் சென்றவன் அங்கு கண்ட காட்சியில் அவனது முகம் சிரிப்பில் மலர்ந்தது.ஏனெனில், அங்கு அவனின் செல்ல மனையாள் இன்னும் சுகமாய் துயில் கொண்டிருந்தாள். அதுவரை அவன் மனதில் இருந்த இறுக்கம் மறைந்து உதட்டில் தவழ்ந்த புன்னகையோடு அவள் அருகில் சென்றான். "கும்பகர்ணி... இவள் இன்னும் இந்த பழக்கத்தை விடலையா.." என்றபடி அவளருகில் அமர்ந்தவன், அவள் இருந்த கோளம் கண்டு அவன் பார்வை உரிமையாய் அவள் மீது படிந்தது. அவளின் புடைவை மாராப்பை முழுதாய் விலக்கியவன் அவள் வயிற்றில் முகம் புதைத்து படுத்துக்கொண்டான். ஏனோ அவன் மனம் கலங்கி இருந்தது. இந்த குழந்தைக்காக அவன் தவித்த தவிப்பு தான் என்ன.. இனி தனக்கு இந்த தகுதி இல்லையோ என்று தனிமையில் அவன் குழம்பி தவித்து கொண்டிருக்கும் வேளையில் எங்கிருந்தோ வந்து அவன் வாழ்க்கையை மலரச்செய்து தன்னுடைய வாரிசை சுமந்து கொண்டிருக்கும் தன்னவளின் நினைவில் அவன் அணைப்பு இறுகியது. அவனின் செய்கையில் உறக்கம் கலைந்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் மலர்ந்த புன்னகையோடு அவன் தலையை தன் வயிற்றோடு அழுத்திகொண்டவள்,
"என்னாச்சு பாவா..." என்றபடி அவன் சிகையை கோதி கொண்டிருந்தாள். அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் வயிற்றில் அழுத்தமாய் இதழ் பதித்தவனின் ஸ்பரிசத்தில் அவள் உடல் சிலிர்த்தது. இருவருமே தங்களை மறந்து குழந்தையின் நினைவில் இருந்தனர். பிரபாவின் மொபைல் அழைப்பு சத்தத்தில் தான் அவர்கள் தன் நிலைக்கு வந்தனர்.முதலில் அவளிடமிருந்து விலகிய பிரபா மொபைலை எடுத்து செவிகொடுத்தான். வசந்தி தான் அழைத்திருந்தார் அந்த பக்கம் என்ன கூறினாரோ,"சரிம்மா.. நாங்க வரோம்.. அவங்களை வெய்ட் பண்ண சொல்லுங்க.." என்று இறுகி போய் ஒலித்தது அவன் குரல். அவன் முகம் மாற்றத்தை உணர்ந்த மௌனி அருகில் இருந்த புடைவை அள்ளி தன் நெஞ்சோடு அணைத்தபடி எழுந்து அமர்ந்தவளுக்கு சற்று பயம் கொடுத்தது. அவனின் இந்த இறுகிய முகத்தை பார்க்கும் போதெல்லாம் ஏனோ அவளுக்குள் குளிரெடுத்துவிடும். எப்போதும் எல்லோரிடமும் முடிந்த அளவு தன்னுடைய குறும்புத்தனத்தில் இந்த பயம், வேதனை எல்லாவற்றையும் மறைத்து விடுவாள்.ஆனால் இவனிடம் மட்டும் அவளது இந்த ட்ரிக் வேலைக்கு ஆகாது. அதை அவளுமே உணர்ந்தே இருந்தாள்.அன்னையிடம் பேசி முடித்து திரும்பியவன் மனைவியின் முகத்தில் தெரிந்த பயத்தில் அவன் முகம் மென்மையானது. சிரித்தபடி அவள் கன்னத்தில் தட்டியவன், "கீழே கெஸ்ட் வந்துருக்காங்க.. அம்மா நம்மள வர சொல்றாங்க அம்மு.." என்றதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.


"சரி சித்து.. இதோ இப்போ ரெடியாகிட்டு வந்துறேன்.."என்றபடி கட்டிலில் இருந்து எழப்போனவள் தயக்கத்துடன் அவனை பார்த்தாள். அவனோ இடத்தை விட்டு நகராமல் கைகளை கட்டிக்கொண்டு குறும்புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் தலை குனிந்தவள், 'கடவுளே.. இவன் என் மானத்தை வாங்காம விட மாட்டான் போல் இருக்கே..' மனதினுள் அவனை கடிந்தவள்,

"சித்து... நா..நான் ரெடி ஆகணும்.. " தயக்கமாய் இழுத்தவளிடத்தில்,

"யூ நீட் எனி ஹெல்ப்..." என்று குறும்பு குரலில் சொன்னவனை முறைத்தவள்,

"ப்ளீஸ் சித்து.. " என்று கண்களை சுருக்கி கெஞ்சியவளிடத்தில் அதற்கு மேலும் அவளை சீண்டாமல் அங்கிருந்த அவனது ஜிம் அறைக்குள் சென்று மறைந்தான். வழக்கமான உடற்பயிற்சியில் அவன் ஈடுபட்டிருந்தாலும் அவன் மனம் மட்டும் யோசனையில் உழன்று கொண்டிருந்தது.


சற்று நேரத்தில், ஏதேதோ யோசனையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தவனை"பாவா.. நான் கீழே போறேன்.. நீங்க ரெடியாகிட்டு வரீங்களா." என்றபடி வந்த இளம் மனைவியை கண்டு அவன் தடுமாறி தான் போனான். சிவப்பு நிறத்தில் மெல்லிய பாடர் கொண்ட புடைவை அவளை பாந்தமாய் தழுவியிருந்தது. தலையில் சுற்றப்பட்ட துண்டுடன், காதில் வைர ஜிமிக்கி அசைந்தாட, கழுத்தில் அவன் கட்டிய தாலி சரடோடு சேர்த்த ஒற்றை தங்க சங்கிலியில் அழகுற திகழ்ந்தாள். அதிலும் அவள் நெற்றி வகுடில் வைத்திருந்த இளஞ்சிவப்பு குங்குமத்திலும், தன்னவனால் கொண்டாடப்பட்ட பெண்ணின் முகத்தில் தெரிந்த புது பூரிப்பில் மிளிர்ந்த அழகில் அவள் தேவதையாக ஜொலித்தாள்.


மனைவியின் அழகை கண்களால் பருகியபடி அருகில் வந்தவனை கண்டு பின்வாங்கியவள், "வேண்டாம் சித்து.. கிட்டே வராதீங்க... எல்லாரும் கீழே நமக்காக காத்துகிட்டு இருகாங்க.. நான் போறேன் போங்க.." என்றபடி அறையை விட்டு வேகமாக செல்ல போனவளை இழுத்தவன்,"நீ அங்கே தனியா போகக்கூடாது.. நான் ரெடியாகிட்டு வரேன்.. சேர்ந்தே போகலாம்.." என்று கண்களில் தீர்க்கமாகவும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்தும் பேசியவன் அடுத்த நொடி குளியலறைக்குள் சென்று மறைந்தான். ஆனால் அவளோ, "திடீர்ன்னு என்னவானது இவனுக்கு.." என்று தன்னுள் குழம்பியபடி நின்று இருந்தாள்.


அடுத்த பத்து நிமிடத்தில் வெள்ளை ஷர்ட்டும் ப்ளூ ஜீன்ஸ்ம் அணிந்து கம்பீரமாய் வெளிவந்தவனை அப்போது தான் அவளே கவனித்தாள். அவன் கன்னத்தில் தெரிந்த காயத்தை கண்டு பதறியவள் சட்டென அவன் கை பிடித்து இழுத்து ட்ரெஸிங் டேபிள் முன்னாடி கொண்டு சென்று நிறுத்தினாள். அவளிடமிருந்த மேக்கப் செட்டில் உள்ள ஃபவுன்டேஷன் கிரீமை எடுத்து அவன் முகத்தில் தெரிந்த காயத்தில் வைத்து பூசியவளின் முகம் நாணத்தால் இரத்த நிறத்தில் சிவந்து இருந்தது. அவனோ உதட்டில் தவழ்ந்த குறும்புன்னகையுடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். தன் மார்பளவு இருந்தவளின் இடையில் கை கோர்த்து இழுத்தவன் மனைவியின் சிவந்த முகத்தை ரசித்தவாறு, குனிந்து அவள் காதில் ரகசியம் பேச அதில் பாவையவள் இன்னமும் செங்கொழுத்தாய் மாறி போனாள். இடையில் கோர்த்திருந்த அவனது கையை உயர்த்தி, "ம்ம்ம்ம்... காயத்தை யாருக்கும் தெரியாம மறைச்சிடலாம்..ஆனால், காயத்தை ஏற்படுத்துன்ன இதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?.." என்று ரெட்லிப்கிளாஸ் போட்டு மினுமினுத்து கொண்டிருந்த அவளின் உதட்டை பெருவிரலால் வருடியவன் அவள் முகம் நோக்கி குனிய, "ம்ப்ச்.. போதும் பாவா.. ரொம்ப லேட் ஆகிடுச்சு.. அத்தைம்மா காத்துட்டு இருப்பாங்க.. போலாம் வாங்க.." என்றபடி அவனை இழுத்து கொண்டு சென்றாள். ஒருவேளை கீழே ஷாலினி வந்திருப்பதை தெரிந்தால் இவள் சென்று இருக்க மாட்டாளோ?..


ஒருவழியாக கீழே இருப்பவர்களின் பொறுமையை சோதித்து அவர்களை காக்க வைத்த பின்னரே பிரபா தன் மனைவியோடு கீழ் இறங்கி வந்தான். வசந்தியும், கீர்த்தியும் காலை உணவுக்காக தயார் செய்து கொண்டிருந்தனர். கீர்த்திக்கு இவர்களை பற்றி ஏதும் தெரியாததால் எப்போதும் போலவே இருந்தாள். ஆனால் வசந்தி தான் உள்ளுக்குள் படபடப்பாக இருந்தாலும் வெளியில் சாதாரணமாக இருக்க முயன்றார். இப்போது தான் மகனின் வாழ்க்கை நல்லபடியாக ஆரம்பித்திருக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தவரை கெடுக்கும் விதமாக இருந்தது இவர்களின் வருகை. என்ன தான் சொந்த அண்ணனாக இருந்தாலும் தன் மகனுக்கு அவர்கள் செய்ததை வசந்தியால் இன்னும் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. கடந்த ஒரு வருடமாக தன் மகன் அனுபவித்த வேதனையை நேரில் பார்த்தவராயிற்றே..


மனைவியோடு சேர்ந்து கீழ் இறங்கிய பிரபாவை பார்த்து ராம்கிருஷ்ணன் இரத்தம் அழுத்தம் எகிற பார்த்தார் என்றால் ஷாலினியோ தன் முகத்தை சாதாரணமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். ஏனெனில் அவளுக்கு பிரபாவை பற்றி நன்கு தெரியும். ஒருவரின் முகத்தை வைத்தே அவர்களின் மனதை படிப்பவன். அதனால் வரவழைத்த புன்னகையுடன் அவர்களை பார்த்து சிரித்து வைத்தாள். மௌனிக்கு அங்கிருந்த மற்றவர்களை தெரியாவிட்டாலும் ஷாலினியை பார்த்ததும் அதுவரை அவள் மனதில் இருந்த சந்தோஷம் எல்லாம் மறைந்து மனதில் வெறுமை படர்ந்தது. தன்னை பற்றிய உண்மை நிதர்சனம் புரிந்து கணவனின் கையில் இருந்த தன் கையை உருவினாள். அவளின் முயற்சியை உணர்ந்த பிரபா அவள் கையை விடுவித்து அடுத்த நொடி அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.


அதற்குள் வசந்தி அங்கு வரவும் மௌனி கணவனை விட்டு பிரிந்து வசந்தி, கீர்த்தியின் அருகில் போய் நின்று கொண்டாள். மௌனியை முறைத்தபடி அங்குள்ள சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்த பிரபா, "சொல்லுங்க..என்ன விஷயமா வந்துருக்கீங்க?.."என்று அலட்சியமாய் கேட்டபடி போனை நோண்டி கொண்டிருந்தான்.


"என்ன மாப்பிளை இப்பிடி சொல்லிட்டீங்க.. என் தங்கச்சி மகனுக்கு கல்யாணம் நடந்து இருக்கு.. தாய் மாமா நான் வரணுமில்லையா?.. நமக்குள்ள என்ன தான் மனஸ்தாபம் இருந்தாலும் சொந்தபந்தம் இந்த மாதிரி விசேஷத்துல ஒண்ணு சேந்தரனும்.. ஏன் சொல்றேன்னா நாலு பேர் நம்மள பத்தி தப்பா பேசிடக்கூடாது இல்லையா
மாப்பிளை.. "என்றவரை கண்டு கேலியாய் சிரித்தவன், "இந்த மாதிரி செண்டிமெண்ட் டைலாக் பேச தான் வந்தீங்கன்னா நீங்க போகலாம்.. எனக்கு நிறைய ஒர்க் இருக்கு.." என்றவன் மொபைலில் அதி தீவிரமாய் பப்ஜி கேம்யை விளையாடி கொண்டிருந்தான்.


பிரபாவின் அலட்சியத்தில் அவருக்கு முகம் கருத்து இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியது. இருந்தும் அவனது தயவு இப்போதைக்கு தேவை என்பதால் முகத்தை ஈயென்று இளித்து வைத்து, "மாப்பிளை இன்னும் பழசை மறக்கல போல.."என்று மேலே பேச போனவரை "அப்பா... " என்ற ஷாலினியின் குரல் தடுத்து நிறுத்தியது.


அதுவரை மொபைலில் பார்வையை பதித்திருந்த பிரபா நிமிர்ந்து ஷாலினியை பார்த்தான். அதற்காக காத்திருந்தவள் போல், "பாவா.. நான் நேராவே விஷயத்துக்கு வரேன்..நாங்க எதுக்காக இங்கே வந்துருக்கோம்ன்னு உங்களுக்கே தெரியும்.. இருந்தாலும் நானே சொல்றேன்.. அப்பாக்கு பிஸ்னஸ்ல ஹெவி லாஸ் ஆகிடுச்சு.. எங்களுக்கு வேற வழி தெரியல.. நாங்க அமௌண்ட்டை உடனே செட்டில் பண்ணனும்னு கோர்ட்ல நோட்டீஸ் வந்துருக்கு.." என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே எப்போதும் போல் கையில் கார் சாவியை சுழற்றியபடி கார்த்திக் உள்ளே நுழைந்தான்.


அங்குள்ளவர்களை கண்டதும் கார்த்திக்குமே கொஞ்சம் அதிர்ந்து தான் போனான். 'இப்போ இவங்க எதுக்கு வந்தாங்க..' என்று யோசித்தபடி நின்றுகொண்டிருந்தவனை,


"வா மச்சான்.. என்ன அங்கேயே நின்னுட்ட.." என்று பிரபாவின் அழைப்பை ஏற்று அவன் அருகில் சென்றமர்ந்தான்.


ஒரு சின்ன அமைதிக்கு பிறகு பிரபா ஷாலினியிடம், "உனக்கு இப்போ எவ்வளவு அமௌண்ட் தேவைப்படுது.." என்றவன் கையில் செக்புக்கை எடுக்க..


"இல்லை பாவா..பணம் வேண்டாம்.." என்ற ஷாலினியை கூர்மையாக பார்த்தான்.


"அது..எஸ்.வி. ப்ரோடக்ஷன் ஓனர் நீங்க தான்னு கேள்வி பட்டேன்.. நீங்க ப்ரோடீயூஸ் பண்ணற படத்துல சான்ஸ் கொடுத்தா ஹெல்ப்பா இருக்கும்.." என்று தான் வந்த விஷயத்தை ஒருவாறு சொல்லி முடித்தாள்.


தாடையில் கை வைத்து சில நிமிடம் யோசித்தவன், "சினி ஃபீல்ட்ல நான் இன்வால் ஆகுறது இல்லை.. ஐ யம் ஜஸ்ட் ஒன்லி இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர் தான்.. என் பிரண்ட் விஜய் தான் எல்லாம் ஹாண்டில் பன்றான்.. நான் அவன்கிட்ட சொல்றேன் நீங்க போய் பாருங்க.. ஸ்டோரிக்கு நீங்க சூட்டபிள்ளா இருந்தா மத்த டீடெயில்ஸ் பாத்துக்கோங்க.." என்று அவன் சொல்லி முடித்ததும்,


"தேங்க்..தேங்க் யூ சோ மச் பாவா.. அது பாவா.. எனக்கு நீங்க.." என்று சந்தோஷத்தில் ஏதோ பேச போன ஷாலினியை கை நீட்டி தடுத்தவன், "நீங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சுன்னு நினைக்குறேன்.. இப்போ நீங்க போகலாம்.. "என்றபடி வாசலை நோக்கி கை நீட்டினான்.


அதில் ஷாலினி முகம் கருத்து போனது. அவளின் பெற்றோருக்கோ அவமானம் பட்டாலும் வந்த வேலை முடிந்த திருப்தியோடு வசந்தியிடம் போலியான ஒருசில நலம் விசாரிப்புகளுடன் கிளம்பி சென்றனர். செல்லும் போது மௌனியிடம் வந்த ஷாலினி அவளை யோசனையாக பார்த்தவள்,"உன்னை.. நான் எங்கேயோ பார்த்துருக்கேனே!.." என்றவளை கண்டு திடுக்கிட்ட மௌனி,"இல்..இல்லை நான் உங்களைஇதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை.. " என்று உளறியவள் கீர்த்தியிடம் பேசுவது போல் நகர்ந்து கொண்டாள். மௌனியின் தடுமாற்றதை கண்டு ஷாலினியின் முகம் யோசனையை தத்தெடுத்து.


செல்லும் ஷாலினியின் மனதில் நிச்சயம் மௌனியை எங்கோ பார்த்தது போல் தான் இருந்தது. அதிலும் தன்னிடம் பேசும் போது அவளின் தடுமாற்றம் அதுவே மௌனியின் மீது ஷாலினிக்கு சந்தேகத்தை தூண்டியது. விதி தன் விளையாட்டை அழகாக கொண்டு சென்றது.


அவர்கள் சென்றதும் வீட்டில் ஒரு அமைதியான சூழலே நிலவியது. பின் வசந்தி எல்லோரையும் சாப்பிட அழைக்க வழக்கமான கார்த்திக்கின் கிண்டல் பேச்சுக்களில் எல்லார் மனமும் கொஞ்சம் லேசானது. கீர்த்தியும், மௌனியும் பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். பிரபா முதல் வாய் எடுத்து வைக்கும் போது அவன் கை ஒரு நொடி தேங்கி பின் எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தான். அதை கவனித்த மௌனியின் முகத்தில் விரக்தி புன்னகை தோன்றியது. இருவரும் மனமும் அவர்கள் வாழ்ந்த அந்த காட்டு வாழ்க்கை நினைவில் நிலைத்தது. சில நாட்களே ஆனாலும் இனிமையான நினைவுகள் அல்லவா..


கார்த்திக்கின் தட்டில் பதார்த்தங்கள் குறையவும் அதை பார்த்த கீர்த்தி, பரிமாற போனவளை கை நீட்டி தடுத்தவன், "போதும்.. "என்ற ஒற்றை சொல்லோடு கைகழுவச் சென்றான். அவனின் புறக்கணிப்பில் கீர்த்திக்கு வலித்தது. தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று மருகியவள் கலங்கிய கண்ணை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டாள். வசந்தி சாப்பிட்டதும் கீர்த்தி, மௌனி இருவரையும் அமர வைத்து அவரே பரிமாறினார்.


வெளியே கிளம்பிய பிரபாவிடம் வசந்தி, "கண்ணா இன்னைக்கு மௌனி வீட்டுக்கு போகணும்.. அங்கே மருதம் உங்களுக்காக காத்துட்டு இருப்பாங்கப்பா.." என்றவரின் வார்த்தையை மறுக்க முடியாமல்
கிளம்புவதற்கு தயாரானான். கார்த்திக்கும் பிரபாவிடம் தொழில் சம்மந்தமாக கொஞ்சம் நேரம் பேசி விட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டான்.


பிரபா, மௌனி, கீர்த்தி மூவருமே மௌனியின் வீட்டிற்கு கிளம்பிச் சென்றனர். அங்கு மருதம் மற்றும் அந்த வீட்டில் குடியிருப்போர்கள் அனைவருமே அவர்களை அன்போடு வரவேற்றனர். கீர்த்தியின் தங்கைகள் இருவரும் ஆரத்தி எடுத்து அவர்களை கிண்டலும், கேலியுமாக வரவேற்றனர். பிரபாவும் எல்லாவற்றையும் மறந்து அவர்களோடு ஒருவனாய் மாறி போனான். ஒரே பயனாக வளர்ந்ததனாலோ என்னவோ அங்கு குடும்பம் சகிதமாய் இருந்தவர்களை அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.மருதம் அவர்கள் முறைப்படி சம்பர்தாயம், மாமியார் வீட்டில் மாப்பிளைக்கு சுகபோக விருந்து என்று அவரால் முடிந்த அளவு செய்தார். மௌனியும் அவருக்கு ஒரு பொண்ணு மாதிரி தானே. அதனால் எந்த குறையும் இல்லாதவாறு பார்த்து கொண்டார். வரும்போது மௌனி கீர்த்தியின் தம்பி, தங்கைகளுக்காக வாங்கிய டிரஸ், ஜுவல்ஸ் என்று அவர்கள் மறுக்கமறுக்க கட்டாயப்படுத்தி கொடுத்தாள்.


அருகில் பிரபா இருந்ததனால் கீர்த்தியால் முறைக்க மட்டுமே முடிந்தது. ஏனெனில் அவளுக்கு இதெல்லாம் எப்போதுமே பிடிக்காது.வாழ்வில் அவள் பட்ட அடி இன்னும் ரணமாய் அவளுக்குள் கொதித்து கொண்டிருக்கிறது. ஒருவர் செய்யும் உதவி தன்னிடம் அவர் எதையோ எதிர் பார்த்து தான் செய்கிறார் என்ற ஒன்று அவள் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. ஆனால் எப்போதும் போல மௌனி என் தம்பி தங்கைகளுக்கு நான் வாங்கி கொடுப்பேன் என்று கீர்த்தியின் கோவத்தையெல்லாம் கரைத்து விடுவாள். அதையே இப்போதும் செய்தாள். அன்றைய நாள் முழுவதும் இருவரும் அங்கேயே இருந்தனர்.


இரவு உணவை முடித்த பின் கிளம்பும் போது மௌனி கீர்த்தியை அனைத்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். இதுவரை தனக்கு எல்லாமுமாய் இருந்தவள் அவள் தானே.


"நீயும் என்கூடவே வந்துடு கீர்த்தி.." என்று சிறு குழந்தை போல் அழுது கொண்டு தேம்பி தேம்பி சொன்னவளை பார்த்த கீர்த்திக்கும் அழுகை வந்தது. தன்னை சமாளித்த கீர்த்தி தோழியின் கண்ணீரை துடைத்து விட்டு, "இதோ பாரு மௌனி.. எல்லாரும் அவங்க வாழ்கைல ஒரு கட்டத்தை கடந்தாகணும்.. வாழ்க்கை முழுவதும் நாம்ம ஒண்ணா இருக்க முடியாதுடி.. இது தான் நியதியும் கூட.. முக்கியமா பெண்களுக்கு பிரிவு என்ற ஒன்று அவர்கள் வாழ்விலே விதிக்கப்பட்டு விட்டது.. ம்ம்ம்.. என் பிரண்ட் மௌனி எப்பவும் அழ மாட்டாள்.. மத்தவங்கள தான் அழ விடுவா.. சோ கீப் ஸ்மைல்.." என்று தோழியின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய கீர்த்தியை கண்டு மௌனிக்கும் சிரிப்பு வந்தது.


தோழியை கண்ணீரும் சிரிப்புமாய் பார்த்த கீர்த்தி, "நடப்பதெல்லாம் நன்மையாக நினைத்தால்.. "என்று பாதியோடு அவள் நிறுத்த பின் இருவரும் ஒருசேர குரலில், "எல்லாம் நல்லதாகவே
நடக்கும்.. " சொல்லி முடித்து ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர். யார் சொன்னது ஆண்களின் நட்பு தான் உயர்ந்தது என்று பெண்களின் அன்பு அதையும் தாண்டிய ஒன்று..


பின் நேரம் செல்வதை உணர்ந்த கீர்த்தி, மனதிற்குள் வருத்தமாக இருந்தாலும் முகத்தில் தவழ்ந்த புன்னகையோடு தோழியை வழி அனுப்பி வைத்தாள். வரும் வழியில் பிரபா கார் ஓட்ட மௌனி அமைதியாகவே வந்தாள். அவளின் மனம் புரிந்து பிரபாவும் எதுவும் கேட்கவில்லை.
இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தவர்களிடம் வசந்தி கொஞ்சம் நேரம் பேசிவிட்டு அறைக்கு சென்றார்.


மௌனிக்கும் தூக்கம் கண்ணை சுழட்டினாலும் மூணு மாடி ஏறணுமா என்று யோசித்தவள், "பேசாமல் அத்தைம்மா ரூம்லயே இன்னைக்கு கட்டையை நீட்டிட வேண்டியது தான்.." என்றவள் வசந்தியின் அறையை நோக்கிச் செல்ல அடுத்த நொடி அவள் கால் அந்தரத்தில் தொங்கியது. பிரபா தான் அவளை முறைத்தபடி கையில் ஏந்தியிருந்தான்.அவளோ அசடு வழிய அவனை பார்த்தாலும் தன் கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்து அவனது நெஞ்சில் சுகமாய் சாய்ந்து கொண்டாள்.


அவளை தூக்கி கொண்டு கீழ் தளத்தின் கடைசியில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்ததும் தான் இறக்கி விட்டான். அங்கு அவள் கண்கள் வியப்பில் விரிந்தது. ஏனெனில் அந்த அறை லிஃப்ட் மட்டுமே வைத்து கட்டப்பட்டிருந்தது. அதை பார்த்ததுமே அவளுக்கு புரிந்தது சமீபத்தில் தான் எப்போதோ கட்டியிருக்கிறார்கள் என்று. கண்களில் வியப்போடு அவனை ஏறிட்டு பார்த்தாள்.


அவள் பார்வையை உணர்ந்தவன், "இது ரெண்டு வருஷம் முன்னாடி தான் கட்டினோம்.. நான் பெரும்பாலும் லிஃப்ட் யூஸ் பண்ண மாட்டேன்..அம்மாக்கு மூட்டு வலி சோ எப்பவாது மேலே வரணும்ன்னா அவங்க மட்டும் பயன்படுத்துவாங்க.. சோம்பேறி இனி நீயும் யூஸ் பண்ணிக்கோ.." என்றபடி அவள் தலையில் வலிக்காதவாறு குட்டியவன் லிப்ட்டில் நுழைந்தான். அவனை தொடர்ந்து அவளும் உள்ளே நுழைந்தவள், "உங்களை யாரு இவ்ளோ பெரிய வீடு கட்ட சொன்னாங்க.. இப்பிடி கட்டினாதான் நீங்க இன்ஜினியர்ன்னு நாங்க நம்புவோமாக்கும்.. "என்று சரிக்குசரி வாயடித்த படி அவனுடன் சென்றாள்.


அன்றைய இரவு கணவனின் மார்பில் தலை வைத்து படுத்தவளுக்கு மனதில் ஷாலினியின் நினைவுகளே வளம் வந்தது. நிச்சயம் கணவன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஆனால் அவள் பயம் எல்லாம் அவளின் நிலை பற்றி தான். ஷாலினிக்கும் தனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லையே. ஷாலினி செய்ததுக்கு கூட மன்னிப்பு உண்டு. ஆனால் என்னை பற்றி அவனுக்கு தெரியும் போது?... நினைக்கும் போதே அவள் இதயம் மறுபடியும் வலி எடுத்தது. கணவனின் அணைப்பில் இருந்து பிரிய மனம் இல்லாமல் பல்லை கடித்து வலியை பொறுத்துக்கொண்டாள்.


எதை ஏதும் அறியாத பிரபா தன் கையணைப்பில் இருந்தவளின் வயிற்றை மென்மையாய் வருடி கொண்டிருந்தான். கணவனின் செய்கையில் புன்னகையோடு இன்னும் அவன் கைகளுக்குள் பாந்தமாய் ஒன்றினாள்.. என்ன நடந்தாலும் தன்னவனோடு இருக்கு காலங்களில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாள். ஆனால் அங்கு ஷாலினியோ மௌனியை பற்றிய ஆராச்சியை தொடங்கியிருந்தாள். மனித வாழ்கை தான் எத்தனை குணங்களை கொண்டுள்ளது....

Pls share your comments:

https://www.penmai.com/community/threads/இரவும்-அவளும்-iravum-avalum-comments.136631/
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.