இருதய பலத்தைக் கொடுக்கும் திராட்சை!

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#1
இருதய பலத்தைக் கொடுக்கும் திராட்சை! மெடபாலிக் சின்ட்ரோம் என்ற ஊன்ம ஆக்கச்சிதைவு நோய்க்குறியுள்ள ஆண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அழற்சியக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க திராட்சைப் பழங்கள் உதவுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலை ஆய்வாளர்கள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். திராட்சை பழந்தில் உள்ள இயற்கை சத்தான பாலிபினால் அதன் பயன் தரும் விளைவுகளுக்கு முதன்மை காரணமாக விளங்குகிறது. மெடபாலிக் சின்ட்ரோம் என்பது ரத்த அழுத்த அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அதிகப்படியான அளவு, அளவுக்கதிகமான கொழுப்பு சேர்தல் ஆகியவை கூட்டிணைந்து தொகுதியாக ஏற்படுவதாகும். ஆய்வுக்கு எடுத்து கொண்ட 30 முதல் 70 வயது வரையிலான் ஆண்களுக்கு இந்த மெடபாலிக் சின்ட்ரோம் இருந்தது. இவர்களுக்கு திராட்சை சத்து 4 வாரங்களுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு சில வாரங்களுக்கு திராட்சை கொடுக்கப்படாமல் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் திராட்சை எடுத்துக் கொண்ட போது இருந்த மெடபாலிக் சின்ட்ரோம் மற்றும் அது எடுத்துக் கொள்ளாதபோது நோயின் தீவிரம் ஒப்பு நோக்கப்பட்டது. இதில் திராட்சை சாப்பிட்ட காலக்கட்டங்களில் ரத்த அழுத்தம் குறைந்திருப்பதையும், ரத்த ஓட்டம் அதிகரித்திருப்பதும் தெரியவந்தது. இதன் மூலம் திராட்சை இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஆய்வு முடிவுகள் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியாகியுள்ளது.
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#2
useful info dear..thanks for sharing..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.