இரும்புச்சத்தும் ஆரோக்கியமும்!

chan

Well-Known Member
#1
இரும்புச்சத்தும் ஆரோக்கியமும்!ம் உடல் ஆரோக்கியமாகச் செயல்பட இரும்புச்சத்து மிகவும் அவசியம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டுக்கும் அவசியமானது. ரத்தத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

ஏன் தேவை?

ஹீமோகுளோபின் (ரத்த சிவப்பு அணுக்கள்) உருவாக்கத்துக்கு

தசைகளின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு

உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க

உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல

ரத்தசோகை ஏற்படாமல் இருக்க

மூளை, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு

உடல் ஆற்றலுக்கு

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட

செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டுக்கு

தூக்கமின்மைப் பிரச்னையைத் தவிர்க்க


எப்படிக் கண்டறிவது?


ரத்தப் பரிசோதனை மூலம் இரும்புச்சத்து குறைபாட்டைக் கண்டறியலாம். இதற்கு, ‘சீரம் அயர்ன்’ பரிசோதனை என்று பெயர். பரிசோதனையில், இரும்புச்சத்து அளவு 60 முதல் 170 மை.கி /டெ.லி என்ற அளவில் இருக்க வேண்டும். டி.ஐ.பி.சி (Total iron binding capacity (TIBC)) 240 முதல் 450 மை.கி /டெ.லி என்ற அளவில் இருக்க வேண்டும்.