இரும்புச் சத்து - Iron Nutrition

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இரும்புச் சத்து


உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும். அடிப்படையான ஆரேர்ககியத்திற்கும் இரும்புச் சத்து மிகவும் அவசியம். உயிர் உடலில் தங்குவதற்கு ஆதாரமான பிராண வாயுவை ஏற்றிச் செல்லும் வேலை இரத்த சிவப்பணுகளுக்கு உரியது.

இந்த சிவப்பணுக்களின் ஜீவனாக விளங்குவது „ஹ_மோகுளோபின்… என்ற இரும்புச்சத்து அடங்கிய சேர்மானமாகும். உடலில் 2ஃ3 பகுதி இரும்புச்சத்து „ஹ_மோகுளோபின்… ஆக இரத்த சிவப்பணுகளில் இருக்கிறது. இவை பிராண வாயுவை திசுக்களுக்கு எடுத்துச் செல்கிறது. அதே போல் தசைகளில் உள்ள „மயோகுளோபின்… என்பது பிராண வாயுவை தசைகளுக்கு எடுத்துச் செல்கிறது.

உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும், நோய் எதிர்ப்பாற்றலில் குறையும் ஏற்படுகிறது.

„இருப்பவன் இரும்பை தின்பான்‚… என்று சித்த மருத்துவத்தில் பழமொழி உண!டு. அதாவது ஆரோக்கிய வாழ்க்கை வாழ விரும்புவர் இரும்புச்சத்து உள்ள பொருட்களை நாடி உண!பர் என்பது இதன் பொருள்.

இரும்புச்சத்து சரியான அளவில் உடலில் இல்லையென்றால் உடல் வெளுத்து காணப்படும். சோம்பல், மூட்டு வலி, உடல் வலி, படபடப்பு, மூச்சு வாங்குதல், தலை சுற்றல் போன்ற பல அறிகுறிகள் தோன்றும். பெண!களுக்கு இத்தகைய அறிகுறிகள் அதிகம் காணப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்த இழப்பை சரிசெய்ய போதிய இரும்புச்சத்து கொண!ட ஆகாரங்களை உண!ண வேண!டும். அப்படி உட்கொள்ளாத பட்சத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனையே „இரத்த சோகை… என்று அழைக்கின்றனர்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் சுமார் 4-5 கிராம் இரும்புத்தாது உள்ளது. இதில் பெரும்பகுதி „ஹ_மோகுளோபினில்… உள்ளது. நாம் உண!ணும் உணவில் உள்ள இரும்புத்தாது குடலில் செரிமானம் ஆன பிறகு ‡பெரோஸ் நிலைக்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றம் நிகழ அஸ்கார்பிக் அமிலம் (வைட்டமின் „ஊ…) தான் காரணம்.

அதனால் இரும்புச்சத்து உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வோர் கண!டிப்பாக வைட்டமின் „ஊ… அதிகம் உள்ள பொருட்களையும் சேர்த்து உண!ண வேண!டும். அப்படி எடுத்தால் மட்டுமே குடலில் இரும்புத்தாது சரியான முறையில் உட்கிரகிக்கப்படும். இல்லையென்றால் இரும்புத்தாது வீணாக மலத்திலும், சிறுநீரிலும் வெளியேறிவிடும். இந்தக் காரணத்தால் தான் இரும்புச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டாலும் சில நேரங்களில் நாம் சாப்பிட்ட உணவின் இரும்புச்சத்து நம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இதே போல் நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் சில காய்கறிகளில் ‡பைடிக் அமிலம் உள்ளது. இது இரும்புத்தாது உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

பொதுவாக நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளப்படும் தானியங்களில் இருந்து அதிகளவு இரும்புச்சத்து கிடைக்கிறது. இவை தவிர பயறு வகைகள், பச்சை காய்கறிகள், வெல்லம் ஆகியவற்றில் இரும்புச்சத்து உள்ளது. கறி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுப் பொருட்களில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து எந்த வகை உணவில் எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் இங்கு காணலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: இரும்புச் சத்து - Iron Nutrition

கீழ்கண!டவற்றில் (தலா 100 கிராமில்) உள்ள இரும்புச்சத்தின் அளவு :-

தானியங்கள் - 2 - 8 மி.கி

சோளம் - 6.2 மி.கி

ராகி - 5.4 மி.கி

மூக்கடலை - 8.9 மி.கி

உளுந்து - 9.8 மி.கி

பச்சைபருப்பு - 8.4 மி.கி

எள்ளு - 15 மி.கி

வெல்லம் - 11.4 மி.கி

சோயாபீன்ஸ் - 11.3 மி.கி

பச்சை காய்கறிகள் - 3.9 - 21.4 மி.கி

கொத்தமல்லி - 10 மி.கி

புதினா - 15.6 மி.கி

பசலைக்கீரை - 5 மி.கி

முட்டை - 2.1 மி.கி

ஆட்டு ஈரல் - 6.3 மி.கி

ஆட்டு இறைச்சி - 2.5 மி.கி

கறி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளிலிருந்து பெறப்படும் இரும்புச்சத்தைக் காட்டிலும் தானியங்கள், பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்ற சைவ உணவுகளிலிருந்து பெறப்படும் இரும்புச்சத்து குறைவுதான்.

உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில் உலகில் 80 சதவிகித மக்கள் இரும்புச்சத்து குறைவாக கொண!டுள்ளனர் என்றும் அதில் 30 சதவிகித மக்கள் இரும்புச்சத்து குறைவால் வரும் இரத்த சோகை கொண!டவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது.

இரத்த சோகையை நீக்க இரும்புச்சத்து உள்ள உணவு வகைகளை உண!டு இரும்புச்சத்து குறையை சரிசெய்வோமாக.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.