இல்லத்தரசிகள் நேரத்தை மிச்சப்படுத்த 10 வ&#2996

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,766
Likes
3,187
Location
India
#1
[h=1]இல்லத்தரசிகள் நேரத்தை மிச்சப்படுத்த 10 வழிகள்![/h]


அலுவலகம் சென்று பணி புரிவதே பெரிய வேலையாக ஆண்கள் காட்டிக் கொள்வதுண்டு. இல்லத்தரசிகள் இடைவிடாது உழைத்தாலும் அவர்களது உழைப்பு எந்த இடத்திலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. வீட்டுக்கு வந்தவுடன் மற்ற அனைவரும் சோபாவில் செட்டிலாகி விடுகின்றனர். இல்லத்தரசியின் தோள்களிலேயே அத்தனை வேலையும் சுமத்தப்படுகின்றன.

மூச்சு விடக்கூட நேரமின்றி அவர்கள் வீட்டு வேலைகளைத் தொடர்கின்றனர். அவர்களது மொத்த நேரமும் வேலை செய்வதிலேயே கழிந்து விடுவதால், அவர்களின் விருப்பமான விஷயங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை.

இல்லத்தரசிகள் நேரத்தை மிச்சப்படுத்தப் பழகுவது அவர்களுக்கே லாபம். அந்த நேரத்தை தனக்கான நேரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டு, டான்ஸ் என அந்த நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதில் ஈடுபடலாம்.


இல்லத்தரசிகள் தங்களது நேரத்தை மிச்சப்படுத்த 10 வழிகள் உதவும்:* காலை முதல் மாலை வரை என்னென்ன வேலைகள் உள்ளன என்பதை முதல் நாளே திட்டமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை முடித்து விடுவது கடைசி நேர அவசரத்தில் வேலைகள் இழுத்தடிப்பதைத் தடுக்கலாம்.


* வீட்டிலுள்ள அத்தனை வேலைகளையும் பெண்ணே செய்ய வேண்டியதில்லை. கணவன் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த சிறு சிறு பணிகளைப் பிரித்துக் கொடுப்பதன் மூலம் வீட்டில் குறுகிய நேரத்தில் வேலைகளை முடித்து விட சாத்தியம் ஆகும்.


* காய்கறி மார்க்கெட்டுக்குச் செல்லும்போதே வெளியில் வாங்க வேண்டிய பொருள்களைத் திட்டமிட்டு அவற்றையும் வாங்கி வந்து விடலாம். அடிக்கடி வெளியில் செல்வதால் நேரம் வீணாவதைத் தவிர்க்க முடியும்.


* வேலைக்கு இடையில் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட் போன் திரையைப் பார்த்தால், அதில் அதிக நேரம் கரைந்து விடும். அதனால் வீட்டிலுள்ள மற்ற வேலைகள் நின்று விடும். டிவி மற்றும் ஸ்மார்ட் திரைக்கு என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் அவற்றை பயன்படுத்தவும். மற்ற நேரத்தில் வேலைகளை விரைந்து முடிப்பதில் கவனம் செலுத்தவும்.


* ஒவ்வொரு வாரத்துக்கு என்று வீட்டில் முடிக்க வேண்டிய பணிகளைத் திட்டமிடவும். தினந்தோறும் சமையல் செய்யப்போவதைப் பட்டியலிட்டு அதற்கான பொருள்கள் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் சமையலில் நேரம் மிச்சம் ஆகும்.


* பெரும்பாலான வீடுகளில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமல் விடுவதால் தேடுவதிலேயே பெரும்பாலான நேரம் வீணாகிடும். எந்தப் பொருள் எந்த இடத்தில் இருக்கும் என்பது வீட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டும்.


* ஷாப்பிங் என்று முடிவுசெய்து விட்டால் என்னென்ன வாங்கப் போகிறோம் என்ற லிஸ்ட் கையில் இருக்கட்டும். பார்ப்பதை எல்லாம் வாங்குவதை விட்டு பட்டியலில் இருப்பதை மட்டும் வாங்குவது பணம் நேரம் இரண்டையும் மிச்சப்படுத்த உதவும்.


* வார விடுமுறை நாளுக்கென்று ஒரு சில வேலைகளைச் சேர்த்து வைப்பதால் விடுமுறை நாள் சந்தோஷம் கெடுவதோடு கூடுதல் நேரம் செலவாகும். துவைக்க வேண்டிய துணிகள் மலைபோல் சேர்க்காமல் தினமும் துணிகளைத் துவைத்து விடுவது நல்லது. விடுமுறை நாளை என்ஜாய் பண்ண நேரம் கிடைக்கும்.


* இல்லத்தரசிகள் தினமும் கொஞ்சம் நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் வார இறுதி அல்லது மாத இறுதியில் வெளியிடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியில் சென்றாலும் எந்த டென்சனும் இன்றி மகிழ்ச்சியாக கழிக்கலாம்.


* பக்கத்து வீடுகளில் வெட்டி அரட்டை அடிப்பது, போனில் நேரம் போவது தெரியாமல் மற்றவர்களைப் பற்றிய வதந்திகளைப் பற்றி பேசுவதையும் தவிர்ப்பதால் நிறைய நேரத்தை இல்லத்தரசிகள் சேமிக்க முடியும்.

வீட்டு வேலைகளில் செலவாகும் நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் பெண்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அப்படி மிச்சமாகும் நேரத்தில் மேல்படிப்பைத் தொடர்வது, டெய்லரிங் மற்றும் பெயின்டிங் என்று ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொள்வது இப்படி நேரத்தைப் பெண்கள் தங்களுக்காகவும் பயன்படுத்த முடியும். தன்னை மேம்படுத்திக் கொள்ளும்போது பெண்ணுக்குக் கூடுதல் பலம் கிடைப்பதோடு அது வீட்டின் மகிழ்வையும் அதிகரிக்கும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,091
Likes
76,887
Location
Hosur
#2
Re: இல்லத்தரசிகள் நேரத்தை மிச்சப்படுத்த 10 வ&a

உபயோகமான பத்து வழிகள்... மிக்க நன்றி சார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.