இளமையாக வாழ என்றும் இதும் தேவை.

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இளமையாக வாழ என்றும் இதும் தேவை.





ஒவ்வொருவரும் தாம் ஆரோக்கியமாகவும். அதிக காலம் இளமைத்துடிப்போடும் வாழ வேண்டும் என்பதையே விரும்புவார்கள். ஆனால் ஒவ்வொருவர் ஆயுள் காலத்துக்கும் அழகிற்கும் தினசரி பழக்கவழக்கம் காரணமாக அமைகின்றது என்பதனை மறந்து விடுகின்றார்கள்.

உணவினை நம்பி வாழும் மனித ஜீவிகள் உணவு உண்ணும் முறையை மட்டும் கடைப்பிடிப்பது இல்லை. நம் மூதாதயர்கள் வீடுகளில் உணவு முறை பற்றி கூறும் போதும் அதை செவிமடுத்துவது கூட இல்லை இதனால் தான் இன்றய சந்ததி நோய்க்கு இரையாகின்றது.

குறித்த நேரத்தில் உண்ணவேண்டும். நாளுக்கு நாள் நேரம் மாறி உட் கொள்வதினை நிறுத்துங்கள். கை கால் வாய் கழுவிக்கொண்டு உண்ண ஆரம்பியுங்கள். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உண்ணத் தொடங்க வேண்டும். பேசிக்கொண்டும் படுத்துக் கொண்டும் படுத்துக்கொண்டும் உண்ணக்கூடாது. தெருக்கதவைச் சாத்தாமல் திறந்து வைத்துக்கொண்டு எதிரே அமர்ந்து உண்ணக்கூடாது.

காலணி அணிந்து கொண்டு உண்ணக்கூடாது. சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறைந்த நேரத்திலும் உண்பதினை தவிருங்கள்.

நிலவின் ஒளியில் உண்ணும் பழக்கத்தை தவிருங்கள். இருட்டிலோ நிழல் விழும் இடங்களிலோ சாப்பிடக்கூடாது. சாப்பிடும்போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து உண்ணக்கூடாது.

அதிக கவலை துக்கம் கோபம் ஆகிய உணர்ச்சிகளுடன் உண்ணுவதை நிறுத்த வேண்டும். உணவில் உப்பு புளி மிளகாய் அதிகம் சேர்க்கக் கூடாது. நின்று கொண்டு சாப்பிட்டால் பித்தக்கற்கள் உண்டாகும் எனவே உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.

நாம் உண்பவற்றை வேலைப்பளு காரனமாகவோ இல்லை பசி வந்தவுடன் பத்தும் மறந்தோ அவசர அவசரமாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று மெல்ல மெல்ல உண்ண வேண்டும். அது உமிழ் நீரோடு கலந்து விரைவில் சீரணத்திற்கு வழி வகுக்கின்றது.

இப்படி மென்று உண்பதால் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. வாய் தாடை கண் மூக்கு இவைகள் நன்கு வளர்ந்து முகத்திற்குப் பொலிவைத் தரும். நொறுங்கத் தின்றால் நூறு வயது தோற்றம்தான் கிடைக்கும்.

உணவில் முதலில் முதலில் இனிப்பு உண்ண ஆரம்பித்து தொடர்ந்து புளிப்பு உப்பு காரம் கசப்பு என்று உண்டு முடிவில் துவர்ப்பு உண்ண வேண்டும். எள்ளில் தயாரித்த உணவை இரவில் சாப்பிடக்கூடாது.

வாழை இலையில் சாப்பிட்டால் இளமை குன்றாமல் தோற்றம் அளிக்கலாம் இலையில் சாப்பிடுவதாயின் சுத்தமாக கழுவிய பின்னர் உண்பது சிறந்தது. முழுமையாக துடைத்து உண்ணக்கூடாது. உங்கள் வாழ்விலும் இதனை கடைப்பிடித்து பாருங்கள் முதுமையிலும் இளமையாக ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.