இ- கேம்ஸ் மயக்கத்தில் மாணவர்கள் !!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இ கேம்ஸ் மயக்கத்தில் மாணவர்கள்


விழிப்புணர்வு

கொஞ்சம் கவனிங்க பேரன்ட்ஸ்..!


ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியார் பாட்டை புத்தகத்தில் படித்தால் பிள்ளைகள் ஏக்கப் பெருமூச்சுதான் விடுவார்கள். மாலை முழுதும் விளையாட்டு என்ற வரி அவர்களை கொலைவெறி கொள்ள வைத்துவிடும். காரணம் நிலைமை தலைகீழ். காலை எழுந்தவுடன் படிப்பு என்றில்லை. தூங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் ‘‘படி... படி..!’’மாலை முழுதும் விளையாட்டு..? அதுவும் கனவுதான். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ரெண்டு டியூஷன். ரெண்டு ஸ்பெஷல் கிளாஸ்.

சரி... விளையாட்டு ?இப்போதெல்லாம் விளையாட்டு ஓடியும் இல்லை...ஆடியும் இல்லை.பெட்டில் படுத்துக் கொண்டு....சேரில் உட்கார்ந்து கொண்டு தன்னந்தனியாக ஆன்ட்ராய்டு போனிலோ, லேப்டாபிலோதான். விளையாட்டு என்பதே சக மனிதர்களோடு பழக, போட்டிப்போட்டுக் கொண்டு விளையாட, அதில் சகஜமாய் விட்டுக் கொடுக்க... தோல்வியைத் தாங்கிக் கொள்ள, சகித்துக்கொள்ள என மனப்பக்குவங்களை பெறத்தான்.ஆனால் இன்று...

வீடியோகேம், மொபைல்கேம், கம்ப்யூட்டர் கேம்களில் குழந்தைகள் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு உடல் உழைப்பும் இல்லை. தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவமும் இல்லை. கேமில் தோற்பது போல தெரிந்தால் ‘ரீ ஸ்டார்ட்’ செய்து விளையாட்டை முதலில் இருந்து ஆரம்பித்து தோல்வியே வராமல்
பார்த்துக் கொள்கிறார்கள். உண்மையாக ஒரு தோல்வியைச் சந்திக்கும்போது சகிக்க முடியாமல் உடைந்து போகிறார்கள்.

இன்று சக மனிதர்களோடு தொடர்பு என்பது பூஜ்ஜியமாகி தொழில்நுட்பம் உருவாக்கிய கேரக்டர்களோடு நம் குழந்தைகள் சிநேகமாகிக் கிடக்கிறார்கள்.
‘அட உலகம் மாறிகிட்டு இருக்கு. இன்னைக்கு சின்னக் குழந்தை கூட ஈஸியா ஆன்ராய்டு போனை எடுத்து செல்ஃபி எடுக்குது’ என சிலாகித்துக் கொள்ளலாம். ஆனால், உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. குழந்தைகள் மொபைல்போன், டேப், நோட் என நவீன கருவிகளுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என அதிர்ச்சி தருகிறார், மனநல ஆராய்ச்சியாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி.

‘‘வீடியோகேம், சோஷியல் மீடியாக்கள், டேப், நோட், மொபைல்போன்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது அவர்களே அறியாமல் அதன்பால் ஈர்க்கப்பட்டு, மெல்ல மெல்ல அடிமையாகி விடுகிறார்கள்; இதுவும் ஒருவித போதைதான். பெரியவர்களிடம் ‘உனக்கு சினிமா வேண்டுமா? புத்தகம் வேண்டுமா?’ என்று கேட்டால் அதிகமானோர் சினிமாவைத்தான் தேர்வு செய்வார்கள், அதுபோலத் தான் குழந்தைகள் விளையாட்டை தேர்வு செய்கிறார்கள்.

இப்போதுள்ள ஸ்மார்ட் போன்களில் பல விஷயங்களை நாம் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். ஒரு நிமிஷம் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு, ஒரு செல்ஃபி எடுத்து அப்லோடு செய்துமுடித்து, கொஞ்சநேரத்தில் மெசெஞ்ஜருக்குத் தாவி ரெண்டு ஹாய் சொல்லிவிட்டு, மீண்டும் வாலுக்கு வந்து நண்பர்களின் ஸ்டேட்டசுக்கு லைக் போட்டுவிட்டு அப்படியே வாட்ஸ்க்கு அப் தாவி சாட் செய்து ஹாய் சொல்லிவிட்டு, டிவிட்டருக்குப் பறந்து ஒரு டிவிட் செய்யும் வேகம் நம் இளைய சமூகத்திடம் இருக்கிறது.

இது பல விஷயங்களை ஒரே நேரத்தில் பார்க்கும் திறமை என்று நீங்கள் நினைத்தால் அய்யோ பாவம். இது கவனச் சிதறலை உண்டாக்கும். மனம் குவிந்து ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்யும் பழக்கத்தைச் சிதைத்துவிடும். இந்த பாதிப்பு படிப்பிலும் தொடரும். மனிதனுடைய மூளையும் இதயமும் ‘ஆடிட்டரி’ நரம்பால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நரம்பு மனிதன் எழுப்பும் சத்தத்தால் தூண்டப்படும். அவ்வாறு தூண்டும்போது அந்த நரம்பு பலவித உணர்ச்சிகளை ஏற்படுத்தும். ஆனால், இப்போது நம் குழந்தைகள் போன்களில் விளையாடுகிறார்கள்.

அந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒலியானது, ‘ஹை ஃப்ரிக்வென்சி’ கொண்டது. இது ‘ஆடிட்டரி’ நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி உணர்வுகளையும் கட்டிப்போடும். இவர்கள் சக மனிதர்களோடு சேராமல் தொழில்நுட்ப கருவிகளோடு மட்டுமே உரையாடுவதால், உணர்ச்சிகள் மரத்து போன குழந்தைகளாகத்தான் வளர்வார்கள். ஸ்மார்ட் போன்களின் பிடியில்தான் அவர்களின் உணர்வுகள் இருக்கின்றன.

பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப்பில் ஷேர் ஆகும் வீடியோவில் ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்த்து வருந்தும் பிள்ளைகள் நிஜ வாழ்வில் தம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தால் வருந்துவதில்லை. இது கசப்பான உண்மை. ஆன்ராய்டில்தான் வருந்துகிறார்கள்.டோடா என்று ஒரு கேம். இதை தொடர்ந்து 22 நாட்கள் விளையாடிய சிறுவன், மரணமடைந்துள்ளான். காரணம் ஒரே விளையாட்டை விளையாடியதால் அவனுடைய மூளை உறைந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.

இதுபோன்ற விளையாட்டுகள் பல லெவல்களைக் கொண்டது. ஒவ்வொரு லெவலை தாண்டும்போதும் கேமின் பாராட்டு மழையில் நனையும் குழந்தைகள் இயல்பாகவே அடுத்த லெவலைத் தாண்டுவதில் மோகம் கொண்டு, மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். பொறியியல் படிக்கும் ஒரு மாணவன் வீடியோகேமிற்கு அடிமையாகி 23 பாடங்களில் அரியர் வைத்த உதாரணமெல்லாம் இங்கு உண்டு.

உண்மையில் தகவல் தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துவதில்தான் அதன் நன்மை தீமைகள் இருக்கிறது. குழந்தைகள் வீடியோ கேம்களில் உள்ள புதிர்களை கண்டுபிடிக்கும்போது மூளை ஆக்டிவாக இருக்கும். கேமில் உள்ள யுத்த தந்திரங்கள் குழந்தைகளை புத்திசாலியாக மாற்றும். இதன் மூலம் அவர்கள் எந்த ஒரு பிரச்னையும் லாவகமாக கையாளுவார்கள். இப்படி விளையாட்டில் நல்லதும் இருக்கத்தான் செய்கிறது. அளவுக்கு மிஞ்சும் போதுதான் ஆபத்தாகிறது.

இதைத் தடுக்க பெற்றோர்கள் வீட்டில் அதிக நேரத்தை குழந்தைகளோடு செலவு செய்ய வேண்டும். அக்கம் பக்கம் உள்ள பிள்ளைகளுடன் விளையாட அனுப்பி வைக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று சகஜமாக பேச வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். பாட்டு, நடனம் என குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதும் அவசியம். இதன் மூலம் வீடியோகேம் மீதுள்ள மோகம் குறையும். வீடியோ கேம்கள் நல்லதில்லை என்று சொல்லி நீங்கள் அதிரடியாக திடீர் தடைபோட்டால் குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். படிப்படியாகக் குறைத்து தினமும் அரை மணி நேரம் என்கிற கட்டத்துக்கு கொண்டுவருவது ஆரோக்கியம்’’ என்றார் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி.

கல்வி ஆய்வாளர் ராஜராஜன் பார்வை கொஞ்சம் மாறுபட்டிருக்கிறது. ‘‘பள்ளிப் பாடங்கள் தொடர்பாக பல விஷயங்கள் ஒலிஒளியுடன் வீடியோவாகப் பார்க்கும் போது அது எளிதில் மனதில் பதியும். உதாரணமாக விண்வெளி பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் இருக்கிறது. ஆகவே தொழில்நுட்பம் மாணவர்களை சீர்குலைக்கிறது என்பது அப்படியே உண்மை இல்லை. ஆனால் எந்தெந்த வயதில் எந்தெந்த வசதிகளைக் குழந்தைகள் பெற வேண்டும் என்பதில் கவனம் தேவை.

பதினெட்டு வயது வந்தால்தான் வாகனம் ஓட்ட லைசென்ஸ் தருகிறார்கள். அதுபோல வயதுக்குத் தகுந்தது போல நவீன கருவிகளை வாங்கித் தரவேண்டும். பள்ளி மாணவர்களுக்கு குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்க மெசேஜ் அனுப்பும் பேசும் வசதிகொண்ட பேஸிக் மாடல் போனாக இருந்தால் போதும். பேஸ்புக் மற்றும் தேவையில்லாத இணையதளங்களை இயக்க முடியாத சிம் கார்டுகளை வாங்கித்தரலாம். மாணவர்ளோடு பெரும்பாலான நேரம் கூடவே இருப்பது ஆசிரியர்களும் பெற்றோரும்தான். எது நல்லது, கெட்டது என்பதைத் தோழமையோடு நாம் புரியவைத்தால் நிச்சயம் வழிதவற மாட்டார்கள்’’ என்கிறார் ராஜராஜன்.

பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப்பில் ஷேர் ஆகும் வீடியோவில் ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்த்து வருந்தும் பிள்ளைகள் நிஜவாழ்வில் தம் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தால் வருந்துவதில்லை
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
குழந்தைகளின் விளையாட்டு நேரம்

குழந்தைகளின் விளையாட்டு நேரம்..


25-30 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளின் தினசரி விளையாட்டு நேரம் அதிமாக இருந்தது.கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால் போன்று குழுவாக இணைந்து விளையாடுவது அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது, வீடியோகேம், கம்ப்யூட்டர், மொபைலில் விளையாட்டு அதிகரித்துவிட்டது. இதனால், வெளியே சென்று விளையாடும் நேரம் மிகமிகக் குறைந்துவிட்டது.


உடல் வளர்ச்சி

உடல் உழைப்பு இன்மை, ஜங்க் புஃட் காரணமாக நகர்ப்புற குழந்தைகளில் நான்கில் ஒருவர் உடல்பருமனாக உள்ளனர். அதுவும், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில், 26 சதவிகிதம் பேரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில், 4.5 சதவிகிதம் பேரும் உடல்பருமனாக உள்ளனர். குழந்தைகள் ஃபிட்டாக இருக்க விளையாட்டு பெரிதும் உதவுகிறது.

சமூக உறவுக்கு முக்கியத்துவம்
விளையாட்டு, கூட்டுறவு மற்றும் சமூகத்துடன் இணைந்து செயல்படும் திறனை வளர்க்க உதவுகிறது. இது, குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கவும், பிரச்னைகளைச் சமாளிக்கும் திறனை, முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. மற்றவர்களுடன் பேசி, பிரச்னையைத் தீர்க்கச் செய்யும் திறனை வளர்க்கவும் உதவுகிறது.

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

‘குழந்தைகள் விளையாடும்போதுதான் அவர்கள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கிறது’ என்கிறது ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ ஆய்வு. விளையாட்டு, குழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது, குறிப்பிட்ட விஷயத்தின் மீது கவனத்தைச் செலுத்த, பார்க்கும் திறன் அதிகரிக்க, கண், கை மற்றும் கால்களின் இயக்கத்திறனை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைப் பருவத்தில் விளையாட விடுவது, அவர்களின் மூளைத்திறனை மேம்படச் செய்து, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குகிறது.

பள்ளியில் விளையாட்டு...
“பள்ளிகளில் விளையாட்டு நேரம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. குறைந்தது 15 நிமிடங்களாவது குழந்தைகளை விளையாட அனுமதிக்கும்போதுதான் அவர்களது கல்வி கற்கும் திறன் மேம்படும்” என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
முற்றிலும் உண்மை .....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.