உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#31
Re: உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொ&#29

[h=1]Facebook planning to add this WhatsApp feature after backlash on CEO Mark Zuckerberg's mail[/h]
here seems to be no end to Facebook's woes. However, the latest controversy over the social networking giant retracting CEO Mark Zuckerberg's messages from recipients' inboxes may mean 'good news' for Facebook users. As the company may reportedly soon introduce the 'unsend' button, similar to the one in the instant messaging app WhatsApp, in Facebook Messenger as well. The new feature is likely to work the same way as it works in Facebook-owned WhatsApp. This means it will allow users to recall sent messages.

Facebook told TechCrunch in a statement, “We have discussed this feature several times. And people using our secret message feature in the encrypted version of Messenger have the ability to set a timer — and have their messages automatically deleted. We will now be making a broader delete message feature available. This may take some time. And until this feature is ready, we will no longer be deleting any executives’ messages. We should have done this sooner — and we’re sorry that we did not.”

Earlier this week, Facebook came in another eye of storm after a report in TechCrunch that said that the company removed some old Zuckerberg's messages from recipient's inboxes. Quoting sources, the report said, "...old Facebook messages they received from Zuckerberg have disappeared from their Facebook inboxes, while their own replies to him conspicuously remain."

Explaining the disappearance of messages, Facebook had told TechCrunch in a statement that this was done for corporate security.
"After Sony Pictures’ emails were hacked in 2014 we made a number of changes to protect our executives’ communications. These included limiting the retention period for Mark’s messages in Messenger. We did so in full compliance with our legal obligations to preserve messages,” read the statement.

The company also said that till the 'Unsend' feature is rolled out for everyone, Facebook will not be retracting any more of CEO Zuckerberg's messages.

Facebook is facing one of the biggest scandal in its corporate history over Cambridge Analytica data breach. The scandal has seen the company's market valuation tumble by billions. It recently said that the data of some 87 million users was improperly used in the breach. The number is higher than what was earlier claimed.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#32
Re: உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொ&#29

[h=2]ஃபேஸ்புக்கில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி[/h]

கோப்பு படம்

ஃபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.


குறைந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை மார்க் சூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதையும் அழிக்கப்பட மாட்டாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது.


மேலும் இந்த வசதியை மெசன்ஜர் செயலியின் என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால் சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும். குறுந்தகவல்களை அழிக்கும் வசதி அனைவருக்கும் வழங்குவோம். எனினும் இதற்கு சில காலம் தேவைப்படும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


ஃபேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்படும் ரகிய அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு குறைந்தபட்சம் ஐந்து நொடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எவ்வாறு வேலை செய்யும் என்பது உறுதி செய்யப்படவில்லை.


இதுவரை தனது சேவைகளில குறுந்தகவல்களை திரும்ப பெற இருவித அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அவற்றை அழிக்க வேண்டும். எனினும் அழிக்கப்பட்ட குறுந்தகவல் உங்களின் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டது (Your message has been deleted) என்ற வார்த்தையாக மாற்றப்படும். இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் குறுந்தகவலை பயனர் பார்க்காத வரை அழிக்க முடியும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#33
Re: உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொ&#29

[h=2]தகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழு விசாரணை[/h]


தகவல்கள் திருட்டு தொடர்பாக பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இன்றும், நாளையும் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ எனப்படும் இங்கிலாந்தை சேர்ந்த தேர்தல் பகுப்பாய்வு மையம் வேலை பார்த்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு செய்திருந்த தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இந்த புகாரை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், சுமார் 8.70 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அறிவித்தார். இதற்காக மன்னிப்பு கோரிய அவர், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பல தகவல் பகுப்பாய்வு மையங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்து வருகிறது.

இந்த தகவல்கள் திருட்டு தொடர்பாக மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) செனட் பிரதிநிதிகள் முன்பும், நாளை பிரதிநிதிகள் சபை முன்பும் ஆஜராக உள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கடுமையான தகவல் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்க அரசும் பரிசீலனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#34
ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?

1524536813870.png

ஃபேஸ்புக் மெசன்ஜரில் பிரீபெயிட் ரீசார்ஜ் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஃபேஸ்புக் செயலியில் இருந்தபடியே மொபைல் நம்பர்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது.

முதற்கட்டமாக ரீசார்ஜ் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு ஃபேஸ்புக் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த சிலகாலம் காத்திருக்க வேண்டும். புதிய அம்சம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் மொபைல் டாப் அப் ஆப்ஷன் காணப்படுகிறது.

ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?
- ஃபேஸ்புக்கில் மொபைல் டாப் அப் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்

- இனி மொபைல் நம்பர் மற்றும் ரீசார்ஜ் தொகையை தேர்வு செய்ய வேண்டும். இங்கு குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்கும் சிறப்பு சலுகைகளை பார்த்து அவற்றை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

- ரீசார்ஜ் தொகையை கட்டணம் செலுத்துவதற்கான பக்கத்தில் சென்று பண பரிமாற்ற முறையை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். இங்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மொபைல் ரீசார்ஜ் அம்சத்தில் தற்சமயம் வரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படும் நிலையில், யுபிஐ அல்லது மற்ற மொபைல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவில்லை.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#35
ஃபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்
1525261752882.png

ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதுமட்டுமின்றி ஃபேஸ்புக் சொந்தமாக வைத்திருக்கும் சமூக வலைத்தளங்களில் மக்களை புதிய வழிகளில் மக்களை ஒன்றிணைப்பது குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் அனைத்து தளங்களில் வழங்கப்பட இருக்கும் புதிய வசதிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில் F8 2018 நிகழ்வின் முதல் நாள் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஷேரிங் டூ ஸ்டோரீஸ்


இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரீக்களை ஷேர் செய்ய புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளில் நீங்கள் விரும்பும் தகவல்களை ஷேர் பட்டன் மூலம் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கில் லாக்-இன் (Login) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

க்ரூப்ஸ் (Group)

புதிய க்ரூப்ஸ் டேப் உங்களது க்ரூப்களுக்கு நேவிகேட் செய்யும் பணியை எளிமையாக்குகிறது. இந்த ஆண்டின் பிற்பாதியில் புதிய க்ரூப்களை கண்டறிந்து, இணைந்து கொள்ள ஏதுவாக புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

க்ளியர் ஹிஸ்ட்ரி


இந்த அம்சம் பயன்படுத்தி பிரவுசிங் ஹி்ஸ்ட்ரியை நீக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் தகவல்களை பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை உங்களால் பார்க்க முடியும். இனி இந்த அம்சத்தை உங்களால் அழிக்க முடியும். இந்த அம்சம் குக்கீக்களை அழிப்பதை போன்றே வேலை செய்கிறது.டேட்டிங்


ஃபேஸ்புக் செயலியை கொண்டு டேட்டிங் மற்றும் உறவுமுறைகளை வளர்த்து கொள்ள புதிய வசதியை ஃபேஸ்புக் உருவாக்கி வருகிறது. இதை கொண்டு ஃபேஸ்புக் ப்ரோஃபைல் கொண்டு டேட்டிங் செய்ய தனி ப்ரோஃபைலை உருவாக்க முடியும். இவை டேட்டிங் பரிந்துரைகளுக்கு ஏற்ப வேலை செய்யும்.

க்ரைசிஸ் ரெஸ்பான்ஸ்


இந்த அம்சம் ஆபத்துக்களில் சிக்கியிருப்போருக்கு தேவையான அனைத்து வித முதற்கட்ட தகவல்களையும் ஃபேஸ்புக் வழங்கும். அனைத்து தகவல்களும் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த தானம்


இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள ரத்த தான முகாம்களை அறிந்து கொள்ள முடியும்.

இன்ஸ்டாகிராம்ஏஆர் கேமரா எஃபெக்ட்

ஏஆர் கேமரா தளம் ஃபேஸ்புக்கில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்படுகிறது. ஏஆர் ஸ்டூடியோ அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் பிரத்யேக இன்டராக்டிவ் கேமரா அனுபவங்களை பெற முடியும். வித்தியாசமான ஃபேஸ் ஃபில்ட்டர்கள், எஃபெக்ட்கள் என பல்வேறு வசதிகளை பெற முடியும்.

வீடியோ சாட்


இன்ஸ்டாகிராம் டைரக்ட்-இல் மிக விரைவில் வீடியோ சாட் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வீடியோ சாட் வசதியை வழங்கும் மூன்று செயலிகளை ஃபேஸ்புக் வைத்திருக்கும். ஃபேஸ்புக் மெசன்ஜர், வாட்ஸ்அப் மற்றும் மிக விரைவில் இன்ஸ்டாகிராம். இந்த அம்சம் க்ரூப் சாட்களையும் சப்போர்ட் செய்யும்.

எக்ஸ்ப்ளோர் பகுதி


முற்றிலும் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோர் அம்சம் கொண்டு ஒவ்வொருத்தர் விரும்பும் தகவல்களை தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இதனால் இன்ஸ்டாகிராமில் பிரவுசிங் செய்வது மேலும் எளிமையாக்கப்படுகிறது.

வாட்ஸ்அப்


வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் மற்றும் புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகின்றன. விரைவில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் செய்யக் கோரும் புதிய வசதி மற்றும் இதுவரை இல்லாத ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன.

ஃபேஸ்புக் மெசன்ஜர்ஏஆர் ஃபார் மெசன்ஜர் (AR for Messenger)

பிரான்டுகளுக்கு ஃபேஸ்புக் மெசன்ஜரில் உள்ள ஏஆர் கேமரா எஃபெக்ட்களை ஃபேஸ்புக் வழங்குகிறது.


எம் டிரான்ஸ்லேஷன்ஸ்
இந்த வசதியை கொண்டு ஃபேஸ்புக் மார்கெட் பிளேஸ் வெவ்வேறு மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்து புதிய எம் சஜெஷன்களை (M Suggestion) வழங்குகிறது.

ஆகுலஸ் கோ

ஆகுலஸ் இன் முதல் ஸ்டான்ட் அலோன் விஆர் ஹெட்செட் ஆகுலஸ் கோ என அழைக்கப்பட்டு, தற்சமயம் உலகம் முழுக்க விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,272) முதல் துவங்குகிறது.

புதிய செயலிகள்

ஆகுலஸ் தளத்தை நண்பர்களுடன் இணைந்து பயன்படுத்தும் புதிய வசதிகளை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் ஆகுலஸ் வென்யூஸ் எனும் புதிய செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்கிறது. இவை உங்களை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விஆர் முறையில் நேரலையில் அழைத்து செல்லும்.

ஆகுலஸ் ரூம்களில் போர்டு கேம்களை விளையாடுவது, திரைப்படங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை நண்பர்களுடன் இணைந்து அனுபவிக்க வழி செய்யும். ஆகுலஸ் டிவி வழங்கும் விர்ச்சுவல் ஸ்கிரீன்களை கொண்டு திரைப்படங்களை நண்பர்களுடன் பார்த்து ரசிக்க முடியும்.

ஷேர் செய்ய புதிய வழிகள்

ஃபேஸ்புக்கில் புதிய 3D போஸ்ட்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது> இதை கொண்டு நியூஸ் ஃபீடில் உள்ள ஃபேஸ்புக் கேமரா ஏஆர் அம்சங்களை ஒரே க்ளிக் மூலம் பயன்படுத்த முடியும். இத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கும் 3D போட்டோஸ் அம்சம் மூலம் ஸ்மார்ட்போன் கொண்டு நிகழ்வுகளை 3D முறையில் படமாக்க முடியும். 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#36
அட... நம்ம மார்க்கும் ஃபேஸ்புக்லதான் லவ் பண்ணிருக்காரு! #HBDMarkZuckerberg

மோடியால் இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆள முடியும்; ட்ரம்ப்பால் அமெரிக்கா போன்ற மிகப்பெரிய வல்லரசை ஆள முடியும்; ஆனால், அரசியல்வாதி அல்லாத ஒருவரால் உலகத்தையே ஆள முடியும் என்றால் நம்ப முடிகிறதா? முடியும் என்பதுதான் நிதர்சனம். மார்க் சக்கர்பெர்க் எனும் 34 வயது இளைஞன்தான், இன்று 220 கோடி மக்கள் வாழும் ஃபேஸ்புக் எனும் உலகின் முடிசூடா மன்னன். எல்லைகளைக் கடந்து இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே செல்கிறது மார்க்கின் விர்ச்சுவல் சாம்ராஜ்யம்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் மற்ற மாணவர்களுடன் தொடர்புகொள்ள மார்க் ஆரம்பிக்க நினைத்ததுதான் ஃபேஸ்புக். ஆனால், அது ஒரு முழுக்க முழுக்க கல்லூரி அரட்டைகளுக்கானதாகதான் மார்க்கின் மனதில் இருந்தது.

ஆனால், அப்போது சீனியர்கள் சிலருக்கு மார்க்தான் கோடிங் குரு. சீனியர்களின் ஐடியாவில் மார்க்கின் ஃபேஸ்புக் கோடிங் சேர்ந்துதான் அது பெரிய சமூக வலைதளமாக உருவானது. மார்க் சீனியர்களை ஏமாற்றிவிட்டார் என்பது எப்போதும் மார்க்கை சுற்றும் ஹார்வர்டு சர்ச்சை. ஆனால், அதையெல்லாம் சட்டரீதியாக உடைத்துதான் மார்க் ஃபேஸ்புக்கை ஆரம்பித்தார்.


ஃபேஸ்புக் ஆரம்பிக்கும்போது, அது வெறும் நண்பர்களை இணைக்கும் தளம்தான். ஆனால், இன்று உலகையே ஒற்றைக் குடையின்கீழ் இணைக்கும் தளம். மார்க் சக்கர்பெர்க் வெறும் சமூக வலைதளம் மூலம் மக்களை இணைக்கவில்லை. மக்களின் சமூகத்தையும், உலகின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார்.

பூகம்பமோ, இயற்கை சீற்றமோ, கலவரமோ மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதையும் இன்று மார்க் சொன்னால் சரியாக இருக்கும் என்று கூற வைத்திருக்கிறார்.

சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மார்க் சக்கர்பெர்க்குக்கு பட்டம் வழங்கியது அதில் பேசிய மார்க். ''நான் உங்களுடன் இன்று இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் செய்த சிலவற்றை என்னால் செய்ய முடியவில்லை. இன்று இந்த உரையை நான் வெற்றிகரமாக முடித்தால் ஹார்வர்டில் நான் ஒரு விஷயத்தை ஒழுங்காக முடித்திருக்கிறேன் என்று சொல்லலாம். நான் கேலி இணையதளமான ஃபேஸ்மேஷை ஹார்வர்டில் தான் வடிவமைத்தேன். பல்கலைக்கழக நிர்வாகம் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியது. நான் வெளியேற்றப்படுவேன் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்.


அந்த சமயம், என் நண்பர்கள் என்னை பார்ட்டிக்கு அழைக்கிறார்கள். அது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்; அந்த பார்ட்டியில்தான் பிரிசில்லாவை சந்தித்தேன். முதலில் பாத்ரூமுக்குச் செல்லும் வரிசையில் பிரிசில்லாவைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் கூறியது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. மூன்று நாள்களில் என்னை கல்லூரியைவிட்டு அனுப்பிவிடுவார்கள். நாம் உடனடியாக டேட்டிங் செல்வோம் என்று கூறினேன்.

இப்போது யார் வேண்டுமானாலும் இங்கு அந்த வரிகளைப் பயன்படுத்தலாம். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கெல்லாம்? ஃபேஸ்மேஷ்தான் ஃபேஸ்புக் சாம்ராஜ்யம் உருவாகக் காரணம். ஃபேஸ்மேஷ் இல்லாமல் பிரிசில்லாவை கண்டுபிடித்திருக்க மாட்டேன். பிரிசில்லா என் வாழ்வில் மிகவும் முக்கியமானவள். இங்கு என் நாள்களை கட்டமைத்ததில் அவளது பங்கு அதிகம்'' என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். தன் சாதனைகள் அத்தனைக்கும் காதலையே காரணமாகவும் சொன்னார்.

ஒரு பக்கம் இப்படி எமோஷனாலாக இருந்தாலும். இன்னோரு பக்கம் மார்க் கோபக்காரர். 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்றதும், "என்னங்க சார் உங்க சட்டம்?"னு ட்ரம்பை நேரடியாகத் தாக்கினார். சிரியாவில் அமெரிக்கா ஆயுதத் தாக்குதல் நடத்தியபோது, "இன்றுதான் முதல் உலகப்போர் துவங்கியது" என நினைவுகூர்ந்து இனி போரில்லா உலகம் படைப்போம் என்றும் ட்ரம்பை விளாசினார். ஒரு கட்டத்தில் ட்ரம்ப் கோபத்தின் உச்சத்துக்கே சென்று ஆன்டி - ட்ரம்ப் மனநிலையில் இருந்து மாறுங்கள் என்று மார்க்கை தாக்கினார்.

வருடாவருடம் இவர் எடுக்கும் நியூ இயர் ரெசல்யூசன் எல்லாம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக்கியுள்ளன. 2015-ல் கல்விக்கு `இயர் ஆஃப் புக்ஸ்' என்றால், 2016-ல் ஆரோக்கியத்துக்கு `இயர் ஆஃப் ரன்னிங்'கை கையில் எடுத்தார் மார்க்.

`ஒரு வருடத்தில் 365 மைல் ஓடுவேன்' எனச் சபதம் எடுத்து ஓடி முடித்தார். அவர் ஓடியது வெறும் அமெரிக்க வீதிகளில் மட்டும் அல்ல, உலகம் எங்கும் ஓடினார். இந்தியா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் எனத் தொழில்நுட்பரீதியாக வளர்ந்த நாடுகளில் மார்க் கால்கள் பதிந்தன. சிரியா போன்ற மக்கள் ஆதரவின்றித் தவிக்கும் நாடுகளிலும் ஓடினார். இது அமெரிக்கர்கள் மத்தியில் மார்க்கின் பிம்பத்தை ஓர் அக்கறையான நல்ல இளைஞனாகப் பதிவுசெய்தது. 2017-ல் அமெரிக்காவின் 30 மாகாணங்களுக்கும் சென்று மக்கள் குறை கேட்பேன் என்றார். ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் மார்க் பயணம் செய்து மக்கள் பிரச்னைகளைப் பேசினார். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அறிவிக்கப்படாத அதிபராகவே செயல்பட்டார்.

இத்தனை ஆண்டுகளும் வசந்தம் வந்துவீசிய மார்க்கின் வாழ்க்கை மீது யார் கண் பட்டதோ... தெரியவில்லை. இந்த ஆண்டு அடுக்கடுக்கான பிரச்னைகளைச் சந்தித்தது ஃபேஸ்புக். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை, அமெரிக்க தேர்தலுக்காகப் பயன்படுத்தியது வெளியே தெரியவே உலகெங்கும் உருண்டது மார்க்கின் தலை. அரசியல் சார்ந்த பிரச்னை என்பதால், மார்க்கே நேரில் சென்று விளக்கமளிக்க வேண்டிய அளவுக்கு விஷயம் சீரியஸானது. அமெரிக்க செனட் சபை சரமாரி கேள்விகளால் மார்க்கை துளைத்தெடுத்தது. அதில் ஒரு கேள்வி மார்க்கின் சாம்ராஜ்ஜியத்தை லேசாக ஆட்டம் காணவைத்தது.
நேற்று இரவு உங்கள் மெசஞ்சரில் உங்கள் நண்பரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பதை கூற முடியுமா என்று செனட் சபை கேட்டது.

இல்லை... என்று சிரித்துக்கொண்டே பதில் தந்தார் மார்க்.
"நீங்கள் பாதுகாக்கும் ப்ரைவஸியை ஃபேஸ்புக் பயன்பட்டாளர்களுக்கு நீங்கள் தரவில்லையே? உங்கள் வர்த்தகத்துக்காக அவர்கள் ப்ரைவஸியை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கிறீர்களே?" என்றனர்.
எல்லா கேள்விகளும் இப்படியே செல்ல கொஞ்சம் ஆடிப்போனார் மார்க்.

மகளுக்கு பிறந்தாள் கடிதம் எழுதுகிறார். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார். உணர்வுகளைப் பிரதிபலிக்க வைக்கிறார். ஆனால், இது எல்லாவற்றிலும் வர்த்தகம் பார்க்கிறார் மார்க் என்பது தற்போதுள்ள சூழல். மக்களின் டேட்டா, அவர்களின் பிரைவசி எல்லாவற்றையும் காசாக்குவதுதான் ஃபேஸ்புக்கின் பிசினஸ் மாடல் என்றால், அறம் என்ற ஒன்றுக்கே அங்கே இடம் கிடையாதா என்பதுதான், உலகின் ஒட்டுமொத்த ஃபேஸ்புக் பயனாளர்களின் கேள்வி. பிரச்னைகள் எல்லாம் கூடிய விரைவில் சரியாகிவிடும் எனச் சொல்லியிருக்கிறார் மார்க்.

இது பிரச்னையை சரிசெய்யும் வழியா அல்லது பிரச்னையை மறைக்கும் வழியா என்பதுதான் நம் முன்னாள் இருக்கும் கேள்வி. விடை மார்க்கிற்கு மட்டுமே தெரியும்.

மார்க் சக்கர்பெர்க் என்ற நபர் ஃபேஸ்புக் என்ற ஒன்றை உருவாக்காவிட்டால் சிரியாவின் அய்லான் பெட்டிசெய்தியாகவே முடிந்திருக்கலாம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் இவ்வளவு வீரியம் பெற்றிருக்காது.

நெடுவாசலும், நியூட்ரினோவும் அந்தந்தப் பகுதி மக்களின் போராட்டங்களாகவே முடிந்திருக்கலாம்; இந்த நல்ல விஷயங்களுக்கெல்லாம் ஓர் ஊடகத்தை உருவாக்கியதற்காக மார்க்கை நிச்சயம் பாராட்டலாம்; அப்படியே, இன்று ஹேப்பி பர்த்டேவும் சொல்லலாம். ஃபேஸ்புக் பயனாளர்களின் பிரச்னைகளை எல்லாம் அடுத்த வருடத்திற்குள் முழுமையாகச் சரிசெய்துவிட்டால், மார்க்கிற்கு லைக் என்ன...? லவ்வே போடலாம்! #HBDMarkZuckerberg
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
#37
ஃபேஸ்புக்கின் டெராகிராஃப் நொடிக்கு 40 ஜிபி வேகத்தில் இன்டர்நெட் வசதியை வழங்கும்

1526969493213.png


உலகம் முழுக்க இன்டர்நெட் வசதியை கட்டமைக்க ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்த ஆய்வுகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெராகிராஃப் எனும் புதிய தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

ஃபேஸ்புக் அறிமுகம் செய்த டெராகிராஃப் தொழில்நுட்பம் மில்லிமிட்டர்-வேவ்லென்த் 60 ஜிகாஹெர்ட்ஸ் வயர்லெஸ் அமைப்பு ஆகும். இது வழக்கமான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை விட அதிவேக இணைய வசதியை பாய்ச்சும். இந்த தொழில்நுட்பம் நகர்ப்புற பகுதிகளில் கட்டிடங்களை கடந்தும் அதிவேக இணைய வசதியை சீராக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டெராகிராஃப் ப்ரோடோடைப்

அதிவேக இணைய வசதியை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை குவால்காம் நிறுவனம் தனது சிப்செட்களில் பொருத்த இருக்கிறது. இதன் மூலம் 60 ஜிகாஹெர்ட்ஸ் பிராட்காஸ்ட் உபகரணங்களை உற்பத்தியாளர்கள் உருவாக்க முடியும். ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து புதிய தொழில்நுட்பத்துக்கான சோதனைகளை 2019-ம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் நிறுவனங்களின் தொழில்நுட்பம் 802.11ay WLAN தரத்தில் 60 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வலையை பயன்படுத்தி அதிகபட்சம் 300 முதல் 500 மீட்டர் தூரம் வரை நொடிக்கு 20 முதல் 40 ஜிபி வரையிலான வேகத்தை வழங்கும். எனினும் பெரிய ஆன்டெனா, சேனல் பான்டிங் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இணைய பரப்பளவு மற்றும் வேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக் மற்றும் குவால்காம் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.


டெராகிராஃப் நெட்வொர்க்

புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் இருக்கும் இடையூறுகளை கடந்து அதிக பயனர்களுக்கு இணைய வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெராகிராஃப் சோதனை செய்யப்பட்ட இருக்கும் இடம் குறித்து இருநிறுவனங்கள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

எனினும் சான் ஜோஸ் நகரில் டெராகிராஃப் தொழில்நுட்பம் சோதனை செய்யப்படலாம் என ஃபேஸ்புக் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. ஃபைபர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் நகர்ப்புறங்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
#38
சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்க்கும் பேஸ்புக் நிறுவனம்

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் பௌத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையியே ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது. மேலும், வன்முறை ஏற்படவும் அது மேலும் பரவவும் பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட எரிச்சலூட்டும் வார்த்தைகள் முக்கிய காரணமாக அமைந்தன.

மேலும், சிங்கள மொழியில் சமூக விரோதிகள் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் எரிசலூட்டும் சிங்கள மொழி வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என ஒரு வார காலத்திற்கு பேஸ்புக்கை முடக்கி அந்நாட்டு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டது. வன்முறையில் இருந்து இலங்கை சுமூக நிலைக்கு திரும்பிய பின்னர் பேஸ்புக் நிறுவனம் நடந்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டது.

இந்நிலையில், இது போன்ற நிலை வருங்காலத்தில் மேலும் ஏற்படாமல் தடுக்க அந்நாட்டில் இயங்கி வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பேஸ்புக்கில் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகிறது
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#39
பயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்

உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை அந்நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபேஸ்புக்கின் புதிய பிழை (பக்) அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பதிவிட்டிருக்கிறது. இந்த பிழை ஃபேஸ்புக் போஸ்ட் பிதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப்பாடுகளை செட் செய்திருந்தாலும், அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது.

“தற்சமயம் நடைபெற்றிருக்கும் பிழைக்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்,” என ஃபேஸ்புக் நிறுவன தனியுரிமை பிரிவு தலைவர் எரின் எகன் தெரிவித்துள்ளார்.


கோப்பு படம்

புதிய பிழை மூலம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தகவல் அவர்களின் நியூஸ் ஃபீடில் தெரிவிக்கப்படும். “ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்வோருக்கு போஸ்ட்களை பொதுவாக போஸ்ட் செய்யக்கோரும் பரிந்துரைகள் தானாக செயல்படுவது தெரியவந்துள்ளது.” என எகன் தெரிவித்துள்ளார்.

“இந்த பிழை சரிசெய்யப்பட்டு விட்டது, இன்று முதல் இந்த பிழை மூலம் பாதிக்கப்போட்டுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பிழையில் ஏற்கனவே பயனர்கள் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.

மேலும் பயனர்கள் முன்பை போன்று தங்களது போஸ்ட்களை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும். இந்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.


கோப்பு படம்

இந்த பிழை என்ன செய்யும்?


ஃபேஸ்புக்கில் பயனர்கள் போஸ்ட் செய்யும் போது, குறிப்பிட்ட போஸ்ட்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யக்கோரும் மெனு தெரியும். இதில் பயனர் பப்ளிக் என தேர்வு செய்யும் பட்சத்தில் போஸ்ட்-ஐ அனைவரையும் பார்க்க முடியும். மற்ற ஆப்ஷன்கள் பயனர் தேர்வு செய்வதற்கு ஏற்ப போஸ்ட்-ஐ பார்ப்போர் பிரிக்கப்படுவர்.

எனினும் மே 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அதிகம் பேர் பார்க்கக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்ட போஸ்ட்களையும் ஃபேஸ்புக் தானாக மற்றவர்கள் பார்க்கும் படி செய்துள்ளது. செட்டிங் மாற்றப்பட்டு இருப்பதை பயனர்கள் கவனிக்காத பட்சத்தில், அவர்களின் போஸ்ட் அதிகம் பேருக்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

ஃபேஸ்புக்கின் புதிய பிழை 1.4 கோடி பயனர்களை பாதித்து இருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட போஸ்ட்களுக்கான செட்டிங் மாற்றப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோப்பு படம்

ஃபேஸ்புக்கின் சமீபத்திய சொதப்பல்கள்


முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடனான விவகாரம் ஃபேஸ்புக் தளம் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, உலக நாடுகளின் எச்சரிக்கைக்கு ஆளானது. இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகள் மற்றும் நிறுவனர் இன்று வரை பதில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டதாக அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அந்த வகையில் ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டது.

பயனர் தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவகாரத்தில், ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை சேகரிக்கவோ, சேமிக்கவோ இல்லை என்றும், ஃபேஸ்புக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் சேவையை மேம்படுத்தும் நோக்கில் போடப்பட்டது என தெரிவித்தது
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
549
Location
chennai
#40
ஃபேஸ்புக் தளத்தில் புதிய வசதி அறிமுகம்

1528809435912.png


ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும்.

ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது.

அந்த வகையில் ஆன் திஸ் டே அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய மெமரீஸ் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட தேதியில் கடந்த ஆண்டுகளில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட்கள், புகைப்படங்களை பார்க்க முடியும். இத்துடன் மெமரீஸ் பகுதியில் கடந்த வாரம் நீங்கள் தவற விட்ட போஸ்ட்களை உங்களுக்கு பட்டியலிடும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.