உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொர&

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#41
பயனர் நலம் காக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்யும் ஃபேஸ்புக்

1529993315816.png

ஃபேஸ்புக் சேவையில் பயனர்கள் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது. யுவர் டைம் (Your Time) என அழைக்கப்படும் புதிய அம்சம் ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஃபேஸ்புக் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்தினர் என்பதை பார்க்க முடியும்.

புதிய வசதியை கொண்டு ஒவ்வொரு ஏழு நாட்களிலும், தினமும் சராசரியாக ஃபேஸ்புக் பயன்படுத்திய நேரத்தை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்த குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, நீங்கள் செட் செய்த நேரத்தில் ஃபேஸ்புக் உங்களுக்கு நினைவூட்டும்.

“ஃபேஸ்புக்கில் பயனர் செலவழிக்கும் நேரம் சிறப்பானதாக இருக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.” என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர் ஃபேஸ்புக் சேவையை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.கூகுள், ஆப்பிள் போன்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சொந்த ஸ்கிரீன் டைம் மானிட்டரிங் செய்யும் டேஷ்போர்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இவற்றை கொண்டு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஒவ்வொரு செயலியில் அவர்கள் செலவிடும் நேரம் குறித்த விவரத்தை வழங்குகிறது.

மேலும் செயலிகளை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தினால் போதும் என ரிமைன்டர் செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் நிறைவுற்றதும், செயலி தானாக க்ளோஸ் ஆகிவிடும். இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளது. இன்ஸ்டாவில இந்த அம்சம் டைம் ஸ்பென்ட் (time spent) என அழைக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் தரம் குறைந்த வைரல் வீடியோக்கள் தோன்றுவதை குறைக்கும் படி அல்காரிதம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இதனால் 2017 நான்காவது காலாண்டில் வடஅமெரிக்க பகுதியில் ஃபேஸ்புக் பயன்பாடு தினசரி அடிப்படையில் 7,00,000 வரை குறைந்தது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#42
பயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை

ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம்.

ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் காப்புரிமையில் அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துக்கு உரிமை கோரியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயனர்களின் சாதனங்களை பயன்படுத்தி, அவர்களின் அருகில் உள்ள ஆடியோக்களை பதிவு செய்யும் - இவற்றில் நீங்கள் மற்றவர்களுடன் உரையாடுவது - அல்லது உங்களின் படுக்கை அறையில் உள்ள ஒலி - உள்ளிட்டவற்றை பதிவு செய்து அவற்றை நிறுவனத்துக்கு அனுப்பும்.

ஜூன் 14-ம் தேதி காப்புரிமை விண்ணப்பம் சார்ந்த விவரங்களை மெட்ரோ பதிவிட்டு இருந்தது. இதில் ஃபேஸ்புக் எவ்வாறு உங்களின் மொபைல் போன் மைக்-ஐ தானாக ஆன் செய்து பதிவு செய்கிறது என்ற விவரங்கள் பதிவிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஃபேஸ்புக் அதிக பிட்ச் கொண்ட ஆடியோ சிக்னல்களை பிராட்கேஸ்ட் தரவுகளில் எம்பெட் செய்யும், இந்த ஒலி மனிதர்களுக்கு கேட்காது. என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிக்னல் உங்களின் மொபைலில் ஆடியோவை பதிவிட்டு, அவற்றை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பும்.இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஃபேஸ்புக், இந்த தொழில்நுட்பம் பயனர்களிடத்தில் அமல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேவையில்லாத பட்சத்தில் ஏன் இதற்கான காப்புரிமையை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன பொது ஆலோசகர் ஆலென் லொ மேஷபிள் தளத்துக்கு அளித்திருக்கும் அறிக்கையில், “சில புதிய தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமைகளை மற்ற நிறுவனங்களுக்கு முன் பதிவு செய்வது வழக்கமான நடைமுறை தான். இதுபோன்ற காப்புரிமைகள் எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதோடு, இவை மற்ற நிறுவனங்களால் வணிக மயமாக்க முடியும்," என தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் தற்சமயம் ஃபேஸ்புக் மற்ற நிறுவனங்கள் உங்களின் அழைப்புகள் மற்றும் ஆடியோக்களை பதிவு செய்ய விடாமல் தடுத்து இருக்கிறது.

“இந்த தொழில்நுட்பம் ஃபேஸ்புக்கின் எவ்வித சாதனங்கள் மற்றும் சேவைகளிலும் இதுவரை சேர்க்கப்படவும் இல்லை, சேர்க்கப்படாது" என ஆலென் லொ தெரிவித்திருக்கிறார்.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,790
Likes
659
Location
chennai
#43
மனித குரல்களை புரிந்து கொள்ள ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கும் ஃபேஸ்புக்

1530708688997.png

லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. (Bloomsbury AI) நிறுவனத்தை கைப்பற்றுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் ஃபேஸ்புக்கின் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை ஃபேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. ஃபேஸ்புக்கின் சொந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அல்லது FAIR அமைப்பு டீப் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்து அதிநவீன சென்சார்கள், இயற்கை குரல் செயலாக்கம் மற்றும் இதர துணை பிரிவுகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த பிரிவுக்கென ஃபேஸ்புக் அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வார்த்தைகளை மிக துல்லியமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது. இதை கொண்டு சமூக வலைத்தளம் மற்றும் அதன் இதர பண்புகளை மொத்தமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.தற்சமயம் ஃபேஸ்புக் தரவுகளை கூர்ந்து கவனிக்க பல்வேறு பணியாளர்களை வெளிநாடுகளில் ஃபேஸ்புக் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த பணியாளர்கள் ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச தரவுகள் என பயனர்கள் குறிப்பிடும் தகவல்கள் அனைத்தையும் ஆய்வு செய்கின்றனர். மேலும் அவை ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறுகிறதா என்ற வகையிலும் தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்காலத்தில் அல்காரிதம்களை பயன்படுத்த ஃபேஸ்புக் தி்ட்டமிட்டுள்ளது. எனினும், இதனை வெற்றிகரமாக செயல்படுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளும் மென்பொருளை ஃபேஸ்புக் கண்டறிய வேண்டும். இந்த மென்பொருள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு கொண்டிருப்பதோடு மிகவும் சிக்கலான பிரச்சனைகளையும் கண்டறியும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#44
போலி கணக்குகளை போட்டுக் கொடுக்கும் ஃபேஸ்புக் மெசன்ஜர்


ஃபேஸ்புக்-இன் மெசன்ஜர் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செயய்ப்படுவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய அம்சம் ஃபேஸ்புக் மெசன்ஜர் இன்பாக்ஸ்-இல் வரும் குறுந்தகவல்களில் அறிமுகமில்லாத கான்டாக்ட், சமீபத்தில் உருவாக்கப்பட்ட அக்கவுன்ட், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறாரா அல்லது போன் நம்பர் மூலம் மெசன்ஜரை பயன்படுத்துகிறாரா, வசிக்கும் நாடு அல்லது பகுதி என்பது போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வழி செய்கிறது. இதுகுறித்து மதர்போர்டு சார்பில் வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அனுப்பியவர் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.

இத்துடன் கூடுதல் விவரங்களில் குறுந்தகவலை அனுப்பியவர் மெசன்ஜர் செயலியை தனது மொபைல் எண் ரஷ்யாவில் இருந்து உருவாக்கியிருப்பதாகவும், இந்த அக்கவுன்ட் சமீபத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.

தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டத்தை எதிர்த்து ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. #Facebook #socialmedia
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#45
இந்திய முத்தம், இங்கிலாந்து இதயம், ஆஸி சிரிப்பு! - ஃபேஸ்புக்கின் எமோஜி காதல்

உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள் தவிர சில நேரங்களில் சிறப்பு எமோஜிக்களும் வெளியிடப்படுகின்றன. மெர்சல் திரைப்படம் வெளியான போதும், கபாலி படத்துக்கும், விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது
எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, என்ன மொழி பேசும் மக்களாக இருந்தாலும் சரி... எளிதாகப் பேசும் மொழியாக 20 நூற்றாண்டுக்கு முன்னால் சைகை மொழி இருந்தது. தொழில்நுட்பமும், உணர்வுகளும் இதை ஒரு படி மேம்படுத்தியுள்ளன. இன்று நாம் பேச ஒரு புது மொழி இருக்கிறது. பாரிஸில் இருக்கும் காதலிக்கு இந்தியக் காதலனால் காதலை மொழியில்லாமல் வெளிப்படுத்த முடியும். இலங்கையில் அவதிக்குள்ளாகும் தமிழனின் கண்ணீரை இங்கிலாந்தில் உள்ளவரால் புரிந்துகொள்ள முடியும். இதனை எமோஜிக்கள் சாத்தியமாக்கியுள்ளன.

வெறும் லைக்குகள் மட்டுமே பிரதானம் என்றிருந்த ஃபேஸ்புக் மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த 6 எமோஜிக்களை அறிமுகம் செய்தது. குரேஷியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றாலும் இதயங்களை பறக்க விடுகிறது உலகம். அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரை யார் தவறு செய்தாலும் ஆங்கிரி எமோஜிக்கள் மூலம் எதிர்ப்பை காட்ட முடிகிறது. நெய்மரின் ரோலிங்குக்கு ஹஹா, சிரியாவின் சோகத்துக்கு சோகம். பேரன்பு மம்முட்டிக்கு வாவ். என தினமும் ஃபேஸ்புக் மூலம் மக்கள் எமோஜிக்களை பறக்க விடுகின்றனர்.ஃபேஸ்புக்கில் மட்டும் ஒரு நாளைக்கு 6 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகிறதாம். அதேபோல ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 500 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கிட்டத்தட்ட 80% உலக மக்கள் தொகைக்கு சமம். ஃபேஸ்புக் மெஸெஞ்சரில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜிகளின் பட்டியலை ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

1. கண்ணீர் வருமளவுக்குச் சிரிப்பது போன்ற எமோஜி
2. காதல்
3. முத்தம்
4. இதயங்கள்
5. இதயம்
6. அதிக மகிழ்ச்சி
7. கண்ணடிப்பது
8. வெட்கம்
9. அழுகை
10. வெறுப்பு


அதேபோல எந்த நாடுகளில் எந்த எமோஜி அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. மெஸெஞ்சரில் இந்தியா அதிகமாக முத்த எமோஜியைப் பயன்படுத்துகிறது. கனடா, தாய்லாந்து, இங்கிலாந்து நாடுகள் இதய எமோஜியும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் சிரிப்பு எமோஜியையும் பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

ஒரு ஃபேஸ்புக் பக்கத்துக்கு லைக் தவிர சராசரியாக 100 ரியாக்‌ஷன்கள் வந்தால் அதில் 28 ஹார்ட், 27 ஆங்க்ரி 18 ஹஹா, 15 சோகம், 12 வாவ் எமோஜிக்கள் கிடைக்கின்றன. அதேபோல ஒரு ஃபேஸ்புக் பதிவுக்கு சராசரியாக 3.2 ஹார்ட், 3.2 ஹஹா, 3 வாவ், 1.9 சோகம், 1.8 ஆங்க்ரி, 1 லைக் எமோஜிக்கள் கிடைக்கிறதாம்.


2014ம் ஆண்டிலிருந்துதான் இந்த எமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த எமோஜி தினத்தில் ஆப்பிள், ஆண்ட்ராய்டு நிறுவனங்களும், சமூக வலைதள நிறுவனங்களும் புதிய எமோஜிகளை அறிமுகம் செய்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தும் எமோஜிக்கள் தவிர சில நேரங்களில் சிறப்பு எமோஜிக்களும் வெளியிடப்படுகின்றன. மெர்சல் திரைப்படம் வெளியான போதும், கபாலி படத்துக்கும், விஜய் மற்றும் ரஜினியின் எமோஜிக்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது. திரைப்படங்கள், விளையாட்டு, காதல், நட்பு, சோகம் என மனிதனின் உற்ற நண்பனாய் மாறிவிட்டன இந்த எமோஜிக்கள். முன்பு ஒரு பொருளைப்பற்றி கருத்துக் கேட்க ரேட்டிங் முறை இருந்தது. அந்த இடங்களை இன்று எமோஜிக்கள் பிடித்துவிட்டன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#46
'பேஸ்புக்'கில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும்: மார்க் ஜூகர்பெர்க்

பேஸ்புக்கில் பகிரப்படும் தவறான செய்திகள், தனி மனிதரை தாக்கி பகிரப்படும் தகவல்கள் ஆகியவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று பேஸ்புக் சி.இ.ஓ., மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:- "சமூக வலை தளங்கள் வன்முறையை துாண்டும் விதமாக மாறி வருகிறது. மியான்மர், இந்தியா, இலங்கை நாடுகளில் பேஸ் புக்கில் பகிரப்படும் தகவல்களால் வன்முறைகள் வெடிக்கின்றன.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ் அப்களில் பகிரப்படும் தவறான தகவல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

வாட்ஸ் அப்பில் பரவிய தவறான தகவல்களால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் பேர் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 2019ல் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில் பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.வரும் காலங்களில் பேஸ்புக்கை பயன்படுத்தி நடக்க இருக்கும் தவறுகளை குறைக்கவும், அவற்றை தவிர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இனி நடக்க இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் பேஸ்புக் தளம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.உலக அளவில் இரண்டு பில்லியன் பேர் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் சில நன்மைகளை அடைந்துள்ளனர், என்றார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
18,469
Likes
3,465
Location
India
#47
போலி அக்கவுன்ட்களை களையெடுக்க துவங்கிய ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 ப்ரோஃபைல்கள் மற்றும் 8 பக்கங்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் ஃபேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் ஃபேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

"போலி நடிகர்கள் ஃபேஸ்புக்கில் இயங்குவிடாமல் செய்திருக்கிறோம்," என ஃபேஸ்புக் மூத்த அலுவலர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார்.

"இதன் பின் யார் இயங்குகிறார்கள் என்பது குறித்து எங்களது ஆய்வின் இந்த சூழலில், எங்களிடம் போதுமான தொழில்நுட்ப ஆதாரம் இல்லை," ஃபேஸ்புக்கின் சைபர்செக்யூரிட்டி திட்டங்களுக்கான தலைவர் நதேனியல் லெய்ச்சர் தெரிவித்தார்.

17 ப்ரோஃபைல்கள், எட்டு பக்கங்கள் மற்றும் ஏழு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் அக்கவுன்ட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டும், சமீபத்திய அக்கவுன்ட் மே மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட்டதில் ஒரு பக்கங்களை சுமார் 2,90,000 அக்கவுன்ட்களை பின்தொடரப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,002
Likes
21,170
Location
Germany
#48
ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை துவங்கியது

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வு இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு அறிவிப்புகளுடன் ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், அறிவிப்பு வெளியான சில மாதங்களில் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் பணியாளர்கள் மத்தியில் முதற்கட்டமாக சோதனை செய்யப்படுவதாக ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன் அழிக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய சேவை சோதனை செய்யப்பட்டாலும் துன்புறுத்தலுக்கு எதிரான விதிமுறைகள் இந்த சேவைக்கு பொருந்தும் என எச்சரித்துள்ளது.புதிய சேவையின் சைன்-அப் பக்கத்தில் பாலினம், இருப்பிடம் மற்றும் நீங்கள் விரும்பும் பாலினம் சார்ந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். வொங் சைன்-அப் விவரங்களை பதிவு செய்திருந்தாலும், அவரது ப்ரோஃபைல் உருவாக்க முடியவில்லை. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றதும், வெளியிடப்படும் என்றும், பிடிக்காத பட்சத்தில் இந்த சேவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம் என ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.

ஃபேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் தங்களது ஃபேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும். பயனர் தேர்வு செய்யும் விருப்பத்திற்க்கு ஏற்ப ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தும். இவ்வாறு பொதுவாக இருக்கும் விவரங்கள், மியூச்சுவல் நண்பர்களின் ப்ரோஃபைல்கள் இடம்பெறும் நிலையில், க்ரூப் மற்றும் ஈவன்ட்களில் இருந்தும் ப்ரோஃபைல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.