உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன &

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

தன் கையே தனக்கு உதவி என்பார்கள். உங்கள் கை தான் உங்கள் உடல் நிலையை தீர்மானிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? நம் உடலில் இருக்கும் அத்தனை மண்டலங்களையும் அடக்கும் கட்டுப்பாட்டு கருவி தான் நமது கைகள். அதனால் தான் நமது கைகளை என்றும் பத்திரமாக பார்த்துக் கொள்ள நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

தியானம் செய்யும் போது நாம் உபயோகப்படுத்தும் விரல் முத்திரைகள் எல்லாம் ஒருவகை உடல் கட்டுப்பாட்டு பயிற்சி, அது நமது உடல்நலத்தை பேணிக்காக்க உதவுகிறது. ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு பயன் தருபவை. அதனால் தான் நமது முன்னோர்கள் தினசரி யோகா செய்வதை பின்பற்றி வந்திருக்கின்றனர். 10 அடிப்படை யோக முத்திரைகளும்...

அவைகளின் உடல் நல பயன்களும்... இதை எல்லாம் நாம் வெகு நாட்களுக்கு முன்னரே மறந்துவிட்டோம். அதனால் தான் அன்றாடம் மருந்துகள் சாப்பிடுவதும், மருத்துவமனைக்கு விஜயம் செய்து வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். மருத்துவ செலவுகள் அவ்வளவு செய்கிறேன், இவ்வளவு செய்கிறேன் என்பது பெருமைக்குள்ளான விஷயமாகிவிட்டது இன்றைய நாட்களில்.

உங்கள் கைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே உங்களுக்கு என்ன விதமான உடல்நலக் கோளாறு ஏற்படவிருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியும். அதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்&#298

கை நடுக்கம் உங்களுக்கு கை நடுக்கம் அதிகமாக ஏற்பட்டால் முதலில் பதட்டமடைவதை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகமாக காப்ஃபைன் எடுத்துக் கொள்வதன் காரணமாக கூட உங்களுக்கு கை நடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. மற்றும் நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் அதிலிருக்கும் போதை கலப்புகளும் உங்களுக்கு கை நடுக்கத்தை ஏற்படுத்தும் .இதுப்போன்ற காரணங்கள் இன்றியும் உங்களுக்கு கை நடுக்கம் அதிகமாக ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மிகவும் அரிய வாய்ப்பாக இது பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்க வாதம் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.வலுவில்லாத நகங்கள் உங்கள் நகங்களில் வலுவில்லாது இருப்பது
, உங்கள் உடலில் ஜிங்க்குறைப்பாடு இருப்பதை வெளிக்காட்டுகிறது. ஜிங்க் சத்துகள் தான் உங்களது உடலில்புதிய சரும செல்கள் உருவாக பயனளிக்கிறது. எனவே, இதன் மூலமாக நீங்கள் உங்கள் உடலில் ஜிங்க் சத்து குறைப்பாடுஇருப்பதை கண்டுணரலாம்தோல் உரிதல் உங்கள் கைகளில் தோல் உரிதல் ஏற்படுகிறது எனில், உங்கள் உடலில் வைட்டமின் பி குறைப்பாடு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்துக் கொள்ளலாம். அதுவும் முக்கியமாக பி3 மற்றும் பி 7 வைட்டமின் சத்துகள் குறைந்தால் தான் தோல் உரிதல் பிரச்சனைகள் ஏற்படும்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்&#298

தோல் வறட்சி, அரிப்பு உங்கள் தோல் மிகவும் வறட்சியாகவும், சொர சொரப்பாகவும் இருக்கிறது எனில், உங்களுக்கு சொறி, சிரங்கு பிரச்சனைகளாகஇருக்கலாம். எனவே, நீங்கள் உடனடியாக தோல் நோய் நிபுணரை கண்டு சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது
நகத்தில் ஏற்படும் வெள்ளை புள்ளிகள் உங்கள் நகத்தில் ஏற்படும் வெள்ளைபுள்ளிகளின் மூலம் உங்கள் உடலில் சிகப்பு இரத்த அணுக்கள் வலிமையின்றி இருப்பதைதெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு ஏற்படும் போது நீங்கள் இரத்த பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டிருக்கிறதா இல்லையா எனதெரிந்துக் கொள்ளலாம்நகத்தின் நிறம் மாறுதல் உங்கள் விரல் நக நுனியின் நிறம் சிகப்பாகவோ அல்லது நீலநிறமாகவோ மாறுகிறது எனில் உங்களுக்கு ரேநொவ்ட்ஸ் சென்றோம் (Raynaud's Syndromedisease) எனும் நோய் கூறு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதனால் உங்கள்விரல்களில் வலி, கூச்சம் மற்றும் உணர்வின்மை ஏற்படலாம்

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்&#298

நகங்கள் வளைந்து காணப்படுவது உங்களது உடலில் கால்சியம் மற்றும் புரதச்சத்தின் குறைப்பாடு ஏற்படும் போது தான், இதுப்போல நகங்கள் வளைந்து காணப்படும். பால் உணவுகள் மற்றும் கீரை உணவுகளை நீங்கள் உட்கொள்வதனால் இந்த பிரச்சனையை சரி செய்துவிடலாம்.


பழுப்பு நிற புள்ளிகள் புற ஊதா கதிர்வீச்சின் காரணங்களினால் ஏற்படும் கோளாறுதான் பழுப்பு நிற புள்ளிகள் வர காரணம். அதிகப்படியாக நீங்கள் வெயிலில் அலைந்தால் இதுப்போல ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.
நகத்தில் கருமையான கீற்று தோன்றுவது உங்கள் நகத்தில் கருமையான கீற்று போல தென்படுகிறது எனில் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். இது மெலனோமா எனும் பிரச்சனைக்கான முதன்மை அறிகுறியாக கருதப்படுகிறது. இது ஒரு வகையான தோல் புற்றுநோய் ஆகும்.

 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
Re: உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்&#298

good sharing...
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.